பாரதத்தின் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்படுள்ள மகாராஷ்டிரா மேதகு ஆளுநர் திரு. @CPRGuv ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே அதிகப்படியான பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மரணங்களையும், அதிகப்படியான ரவுடிச மரணங்களையும் உருவாக்க காரணமாக இருந்த டம்மி முதலமைச்சரே தமிழகத்தை விட்டு வெளியேறு!.
#GetOutStalin
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்கும் அன்பு தம்பி ஆற்றல்மிகு தலைவர் திரு.R.சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். @annamalai_k @Murugan_MoS @MenonArvindBJP@apmbjp@ReddySudhakar21
நாளை, 27.12.2024: சாட்டையால் அடித்துக் கொள்ளும் கவன ஈர்ப்புப் போராட்டம்.
தமிழக மக்கள் மிகவும் பண்பானவர்கள். அமைதியானவர்கள். பொறுமை மிக்கவர்கள். கடந்த நான்கு ஆண்டுக்கால திமுக ஆட்சியில், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாகி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பெண் காவலர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள், பெண்கள், குழந்தைகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
பெரும்பாலான குற்றங்களில், திமுகவினருக்குத் தொடர்பிருப்பதால், ஊடகங்களின் துணை கொண்டு, திமுக அரசால் அவை பொதுமக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தாங்கள் படும் இன்னல்களுக்குத் தீர்வு கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
குற்றவாளிகளுக்கு அமைச்சர்கள் வரையிலான தொடர்புகளும், நெருக்கமும் இருப்பதால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. தங்கள் பாதிப்புகளுக்குத் தீர்வு கிடைக்காமல், குற்றவாளிகள் தங்கள் கண்முன்னே சுதந்திரமாகச் சுற்றி வருவதைப் பார்த்து, தமிழக மக்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும், தமிழக பாஜக சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற பிறகே, திமுக குற்றவாளிகளைக் கைது செய்கிறது காவல்துறை. பல நேரங்களில், பொதுமக்கள் தங்கள் பாதிப்புகளுக்கு உரியத் தீர்வு கிடைக்காமல், ஆளுங்கட்சியினரால் காவல் நிலையங்களில் வைத்தே மிரட்டி அனுப்பப்படுவதும் நடைபெறுகிறது. இந்தக் குற்றங்கள் வெளியே தெரிவதும் இல்லை.
திமுகவினர் என்பதால், நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே அவதூறு பரப்பும் வகையிலும், அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலில் தமிழகம் இருக்கிறது. இனியும் இதனை அனுமதித்தால், நம் சகோதர, சகோதரிகள், குழந்தைகள் எதிர்காலத்தில் இருள் சூழ்ந்து விடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக மக்களை இன்னலுக்குள்ளாக்கி இருக்கும் திமுக அரசைக் கண்டித்து ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த, திமுக அரசு அனுமதிப்பதில்லை. எங்களைக் கைது செய்து, பொதுமக்கள் கவனத்தைத் திசை திருப்பிவிடலாம் என்று செயல்படுகிறது.
எனவே, திசைமாறிப் போன திமுக அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன்.
தமிழகம் முழுவதும் உள்ள பாஜக சகோதர சகோதரிகள், அவரவர் இல்லத்திற்கு முன்பு நின்று, திமுக அரசுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை மட்டும் பதிவு செய்வார்கள்.
சட்டம் ஒழுங்கு மீட்கப்பட்டு, மீண்டும் அனைவருக்கும் பாதுகாப்பான மாநிலமாக, குறிப்பாக நமது சகோதரிகள் அச்சமின்றி வாழும் மாநிலமாகத் தமிழகம் மாறும் வரை, தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்.