பட்டியல் - பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் 'எவிடென்ஸ்' கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அவரது பணி சிறப்புறத் தொடர வாழ்த்துகிறேன்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, கும்பகோணம் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளி, பழவாத்தான்கட்டளை மதர்கிளாரா மெட்ரிகுலேசன் பள்ளி மற்றும் திருப்புறம்பியம் அரசு பள்ளி ஆகிய இடங்களில், 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான (1/3)
.@UN நிர்ணயித்திருக்கும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சாய்ராம் பள்ளி மாணவர் சர்வேஷ் குமரி வள்ளுவர் சிலையிலிருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கி.மீ. மாரத்தான் ஓடியிருக்கிறார்.
அவரைப் பாராட்டி, மாபெரும் தமிழ்க் கனவு புத்தகம் வழங்கினேன்.
கும்பகோணம் ஒன்றிய பகுதியில் 27.08.2021 காலை 10:00 மணி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்படும் இடங்கள்.
சட்டப்பேரவையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவித்து கோடான கோடி கழகத் தொண்டர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மிக்க நன்றி. (நினைவிடத்தின் மாதிரி படம்)
சேப்பாக்கம் பகுதி, 62 வது வட்டம், கலவை தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கழகத்தினர் - பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மருத்துவக்குழு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
@nchitrarasu@madhanmohandmk#Jegadeesan
திராவிடச் சிறுத்தை சகோதரர் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
கொள்கைக் குன்றாக உருவானவர்; கொள்கைத் தலைவராகச் செயல்பட்டு வருபவர். அவரது சிந்தனையும் செயலும் இன்னும் பல்லாண்டுகள் இந்த தமிழ்ச் சமூகத்துக்குப் பயன் தர வேண்டுமென வாழ்த்துகிறேன்!
தேசிய நூலக நாளான இன்று புத்தகங்களையும்-வாசிப்பையும் போற்றுவோம்.வாசிப்பின் மகத்துவம் உணர்ந்தே அண்ணா பெயரிலான நூலகத்தை கலைஞர் உருவாக்கினார். கலைஞர் நூலகத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உருவாக்கவுள்ளார்கள். பகட்டு தவிர்த்து புத்தகங்களால் அன்பை பரிமாறிக்கொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.