தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன்
முருகப்பெருமான்
வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
பழங்குடியின மக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களுக்கு புகழ் வணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Seeman#EngalDesam#StanSwamy
உயிரையே ஆயுதமாக ஏந்தி உலகையே திரும்பிப்பார்க்க வைத்த மாவீரர்களுக்கு கரும்புலிகள் நாளில் வீரவணக்கம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#Seeman#கரும்புலிகள்#EngalDesam
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
தனித்தமிழ்நாடு கோரிக்கையைப் பிரிவினைவாதம் எனவும், தேச விரோதம் எனவும் கூறுவதை ஏற்க முடியாதெனினும், இந்தியப் பார்வையில் இருந்து வெளிப்படும் எதிர்ப்புணர்வு என அதனைப் புரிந்துகொள்ளலாம்.
மாறாக, தனித்தமிழ்நாடு கேட்பதை மனநலச்சிக்கல் என்பது தேசிய இனத்தின் பிரிந்துபோகும் தன்னுரிமைப் பற்றிய புரிதல் இல்லாது, அவற்றிற்காகப் போராடிய போராளிகளையும், செயல்பாட்டாளர்களையும் மலினப்படுத்தும் செயல்.
ஒரு நாட்டுக்குள் வாழும் ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தாயகத்தை தனி நாடாக அறிவிக்கக் கோருவதே மனநலச் சிக்கல் என்றால், வெவ்வேறு நாடுகளாக இருக்கும் நிலப்பகுதிகளை ஒரே நாடாக்கி, 'அகண்டப் பாரதம்' என அமைக்கக் கோருவதற்குப் பெயர் என்ன நீதிமான்களே?
#நேற்று அயோத்தி
#இன்று பத்ரிநாத்
இந்த கோயில் கொள்ளையில் முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ கடவுள் மறுப்பாளர்களோ ஈடுபடவில்லை..
சாட்சாத் ஆர்எஸ்எஸ் பாஜக பின்னணி கொண்ட பாசிசவாதிகளே இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்..
இவர்களின் கடவுள் பக்தி அரசியலுக்காக மட்டுமே..
இந்தியாவை தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று!
- பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்_
=============================
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.50 கோடி; பிரிட்டன் மக்கள் தொகை 6.99 கோடி; பிரான்சு மக்கள் தொகை 6.91 கோடி; செர்மன் மக்கள் தொகை 8.35 கோடி!
ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் உலகில் நூற்றுக்கும் மேல் உள்ளன. நார்வே மக்கள் தொகை 56,33,770; டென்மார்க் மக்கள் தொகை 60,23,520. இவ்வாறு பல நாடுகள் ஒரு கோடிக்கும் கீழ் மக்கள் தொகை கொண்டுள்ளன.
தமிழீழத்தில் நம் இனத் தமிழர்களை இலட்சக் கணக்கில் குவியல் குவியலாகக் கொன்றழித்த சிங்களர்களின் மக்கள் தொகை இலங்கையில் இரண்டு கோடிக்குக் கீழ் தான்! ஆனால் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8.50 கோடி!
தமிழ்நாடு, மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளைப்போல் தனி அரசு அமைக்காமல், இந்தியாவுக்குள் ஒரு சிறுபான்மை இன மாநிலமாகச் சுருங்கியது ஏன்?
அந்தத் துயரங்களையும் சுருக்கமாக நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஐரோப்பியர்கள், வணிக வேட்டைக்காக உலகெங்கும் கடல் வழியாக அலைந்தனர். அந்த வணிக வேட்டைக்காக முதல் முதலாக கேரளத்தில் உள்ள கோழிக்கோடு துறைமுகத்தில் 1498 ஆம் ஆண்டு வந்து இறங்கிய நபர்தான் வாஸ்கோடகாமா." அவரும் அவருடன் வந்தவர்களும் போர்ச்சுகலுக்குத் திரும்பும்போது இங்கிருந்து கொண்டு சென்ற சமையல் மற்றும் வாசனை நுகர்வுப் பொருட்கள், வந்த பயணச் செலவைவிட 60 மடங்கு அதிக இலாபம் தந்தன" என்கின்றன வரலாற்று நூல்கள்!
கோவா, டையூ, டாமன் ஆகிய மூன்று பகுதிகளிலும் தங்கள் ஆட்சியை வைத்திருந்த போர்ச்சுகீசியர் 1947க்குப் பிறகும் அவற்றை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்தனர். கடைசியாக 1961 ஆம் ஆண்டுதான் அம்மூன்று பகுதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைத்தது போர்ச்சுகல்.
ஆசியா கண்டத்தில் தனது காலனிகளை நிறுவுவதற்காக நெதர்லாந்து அரசின் ஆதரவுடன் நிறுவப்பட்ட பன்னாட்டு வணிகவேட்டை நிறுவனத்தின் பெயர் "டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி". டச்சு மொழியில் "Vereenigde Oostivdiche Compagnie" என்பதுதான் ஆங்கிலத்தில் 'East India Company" - தமிழில் "கிழக்கிந்தியக் கம்பெனி!"
இப்போது புரிகிறதா, "இந்தியா" என்ற பெயர் எங்கிருந்து வந்தது என்று? ஐரோப்பிய வணிக வேட்டையாடிகள் சூட்டிய பெயர்தான் இந்தியா! "இந்தியா" என்ற பெயரில் நாடோ, இனமோ வரலாற்றில் இருந்ததில்லை.
ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) என்பது இங்கிலாந்து இராணி எலிசபெத்தால் ஏற்பிசைவு வழங்கப்பட்டு, கி.பி. 1600 டிசம்பர் 31 இல் இலண்டனில் பதிவு செய்யப்பட்ட பன்னாட்டு வணிக வேட்டை நிறுவனம் ஆகும்!
பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி (French East India Company) 1664 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அனுமதியுடன் 1668 ஆம் ஆண்டு பிரெஞ்சு வணிக வேட்டையாடிகள் சூரத்தில் தங்களின் முதல் தொழிற்சாலையைத் தொடங்கினர்.
தமிழர்களின் புதுச்சேரியை, பிரெஞ்சுக்காரர்கள் நம்மிடம் 1947 ஆகத்துக்குப் பின்னும் ஒப்படைக்க மறுத்தனர். புதுவைத் தமிழர்களின் போராட்டங்களே, 1962 ஆகத்து 16 அன்று புதுச்சேரியை விடுவித்து இந்தியாவிடம் இணைத்தது.
ஐரோப்பாவில் இருந்து வந்தேறிய இந்த வணிக வேட்டையாடிகளுக்கு இடையே, இந்திய மண்டலத்தைக் கைப்பற்ற போட்டியும் - போர்களும் நடந்தன. பெரும்பகுதி ஆங்கிலேயர் கையிலும்; புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் கையிலும்; கோவா, டையூ, டாமன் போர்ச்சுகீசியர் கையிலும் மிஞ்சின!
1947 ஆகத்து 15 விடுதலை, இந்தியாவின் அனைத்து இனத் தாயகங்களுக்கும் கிடைத்த விடுதலையா? இந்தி - குசராத்தி மண்டலத்திற்கு மட்டும் கிடைத்த விடுதலையா?
பல்லாயிரம் ஆண்டுகளாகத் தனித்தனி தாய்மொழி கொண்டு, தனித்தனி இனங்கள், தனித்தனி தாயகங்களில் வாழ்ந்து வந்தனர். "பதினைந்தாயிரம் (15,000) ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் துறைமுகத்தில் கப்பல்கள் பல நின்றுள்ளன. வெளிநாட்டுக் கடல் வணிகம் செய்துள்ளனர் தமிழர்கள்" என்று திருச்சி - பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சோம. இராமசாமி குழு கண்டறிந்துள்ளது. ஆங்கிலேய கடலியல் ஆய்வாளர் திரு. கிரகாம் ஆன்காக், '11,500 ஆண்டுகளுக்கு முன் பூம்புகார் கடலில் பெரிய துறைமுகம் இருந்துள்ளது. ஒரே நேரத்தில் 70 கப்பல்கள் நின்றுள்ளன. கடல் கடந்து வாணிகம் செய்துள்ளனர் தமிழர்கள்" என்கிறார்.
ஐரோப்பிய வணிக வேட்டையாடிகள் தங்கள் சுரண்டலுக்காக - அரசு ஆதிக்கத்திற்காக குருதி வெள்ளத்தில் உருவாக்கிக் கொண்ட "செயற்கை நாடு தான் இந்தியா!" அந்த இந்தியாவிற்குள் தமிழ்நாடும் பலியாக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பின் (1947 க்குப் பின்) ஐரோப்பிய வேட்டையாடிகளான வெள்ளையர்கள் கொடுத்திருந்த மாநில உரிமைகளைக் கூட விடுதலை பெற்ற இந்திய அரசு தொடர்ந்து பறித்து வருவது ஏன்?
வெள்ளையன் ஆட்சியில், விற்பனை வரி வசூல் உரிமை மாநில அரசுக்கு இருந்தது. அவர்கள் ஆட்சியில் கல்வி, மருத்துவம், காவல்துறை மூன்றும் மாநில அதிகாரத்தில் இருந்தன. இவற்றைப் பறித்து, புது தில்லி - மைய அரசின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு சென்று விட்டார்கள்!
உலகக் கூட்டாட்சி நாடுகள் (Federal States) எதிலும் இல்லாத, மைய (இந்திய) அரசின் ஆதிக்கத்தின் கீழ் மாநில - மைய அரசுகளின் பொதுப் பட்டியல் (Concurrent List) என்ற புதுவகை மாநில ஆக்கிரமிப்புப் பட்டியலை உருவாக்கி உள்ளார்கள். இதன்கீழ் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்ட முன்வரைவுகள் (Bills), இந்தியக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டால் தான் சட்டமாகும்.
உலகத்திலுள்ள கூட்டாட்சி நாடுகளான அமெரிக்கா (U.S.A.) , கனடா, சுவிட்சர்லாந்து, செர்மனி எதிலும் இல்லாத நியமிக்கப்படும் மாநில ஆளுநர் பதவி இந்தியாவில் ஏன்?
"மாநில சட்டமன்றங்களை ஆளுநரின் கையடக்க அமைப்பாக - அவர் நினைத்தால் ஆட்சியைக் கலைக்கலாம்" என்று சர்வாதிகாரம் கொடுத்திருப்பது ஏன்?
இத்துடன் இன்னொரு பேரபாயம் தமிழ்நாட்டைப் பிடித்து ஆட்டுகிறது. அன்றாடம் வெள்ளம்போல் இந்திக்காரர்களும் மற்ற மாநிலத்தாரும் தமிழ்நாட்டில் வந்து குவிந்து, இங்கேயே தங்கி விடுகின்றனர். 'தமிழ்நாடு', 'இன்னொரு இந்தி மாநிலம்' ஆகிவிடுமோ என்ற அச்சம் பிடித்து ஆட்டுகிறது.
இவை ஞாயமா? நீதியா? இந்திய விடுதலைக்காக உயிர்நீத்த, தூக்கில் தொங்கிய, சிறையில் செக்கிழுத்த, அந்தமான் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்த தமிழர்கள் - ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக இந்திக்காரர் ஏகாதிபத்தியம் கேட்டா ஈகம் செய்தார்கள்?
"இந்தியா ஓர் உண்மையான கூட்டரசாக அமையும். அப்படிப்பட்ட புதிய இந்தியாவில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொள்வார்கள்! தேசிய இனத் தாயகங்கள் விரும்பி சேர்ந்துள்ள ஒரு கூட்டரசாக இந்திய அரசு செயல்படும்" என்ற நம்பிக்கையில் தானே அயல் இன ஆங்கிலேயரை விரட்ட போராடினார்கள் - ஈகம் செய்தார்கள் தமிழர்கள்!
அவர்களின் வாரிசுகளாகிய இக்காலத் தமிழர்கள், இந்திய அரசிடம் பின்வரும் இலட்சியக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோருகிறோம்!
இந்திய அரசே!
1. மாநில ஆளுநர் பதவியை நீக்கு!
2. மாநில ஆட்சியைக் கலைக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 356 ஐ நீக்கு!
3. படைத்துறை, இந்தியப் பாதுகாப்பு, பண அச்சடிப்பு, வெளிநாட்டு உறவு, விண்வெளி ஆய்வு போன்ற துறைகள் மட்டுமே இந்திய அரசிடம் இருக்க வேண்டும். எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்!
4. வரி வசூல் அனைத்தும் மாநிலங்களிடம் இருக்க வேண்டும். மாநிலங்கள் வசூலித்த வரியில் குறிப்பிட்ட விகிதம் மைய ஆட்சிக்கு வழங்க வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட வேண்டும்!
5. இந்தியாவை இறையாண்மை உள்ள தேசிய இனங்களின் கூட்டரசாக மாற்று!
6. வட மாநிலத்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாக வந்து குவிந்து தமிழர் தாயகத்தை கலப்பின மாநிலமாக்கும் அபாயத்தைத் தடுக்க நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மாநில அரசுகளுக்கு இருக்கும் வெளியார் உள் நுழைவு அனுமதி (Inner Line Permit) அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு வேண்டும்.
7. இந்தியக் கூட்டரசு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், மக்கள் தொகை விகிதம் பார்க்காமல், சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
8. மேற்கண்ட புதிய முன்மொழிவுகளை முன்வைத்து இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க, புதிய அரசமைப்பு ஆய்வுக் குழு அமைக்க வேண்டும். அதில் எல்லா மாநிலங்களிலும் சம எண்ணிக்கையில் அரசியல் மற்றும் ஆய்வுத் துறை சார்ந்தோர் இடம்பெற வேண்டும்.
9. தமிழினத் தற்சார்பு, தாயகக் காப்பு, தாய்மொழிக் காப்பு ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் மாற்றங்களை தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உரையாடி - ஏற்று - செயல்பட வேண்டும்.
பரப்புரை - மக்கள்திரள் இயக்கம்
--------------------------------------------
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு தழுவிய விரிவான பரப்புரையும் மக்கள்திரள் இயக்கமும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 98408 48594, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
===============================
எதற்காக அரசு வேலை?
சுதந்திர போராட்டத்தில் பங்கேடுத்தார்களா?
மக்கள் நலனுக்காக போராடி செத்தார்களா? முந்தைய அரசு சார்பிலும், தவெக கட்சியின் சார்பிலும் துயர்துடைப்புத் தொகை கொடுத்துவிட்டப் பிறகு, எதற்கு அரசு வேலை? என் மகன் செத்தாலும் பரவாயில்லை; விஜய்யைப் பார்த்ததே போதும் எனக் கூறியதற்கா? இல்லை! இடைத்தேர்தலில் வாக்குப்பிச்சை எடுக்கவா?
பாக்கியராசன்.சே
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
@PackiaSe
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு
அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் சார்பில்
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
இன்று
பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு
அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டம் நடத்தும்
மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
நாள்:
20 சனிக்கிழமை | 04-07-2026 மாலை 05 மணி
இடம்: பரங்கிப்பேட்டை
பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். முதல்வரிடம் பிரச்சினைகளை எடுத்துக் கூறி, அரசுடன் இணைந்துத் தீர்வு காண்பேன்.
- ஆளுநர் அர்லேகர்
மக்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், தலைமைச் செயலகம் இருக்க எதுக்கு ஆளுநர் மாளிகை?
ஆளுநரின் இந்த அத்துமீறல் போக்கைக் கண்டிக்க முன்வருவாரா முதல்வர் விஜய்?
மாட்டுக்கு மாநாடா ❓
தண்ணிக்கு மாநாடா ❓
மரங்களுக்கு மாநாடா ❓
நாம் தமிழர் கட்சியை பார்த்து சிரிச்சி கேளி செய்த தற்குறி தவெக கூட்டமே
இப்ப என்னடா சொல்ல போறிங்க.
முதலில் ம*துபானம் போன்ற நிறத்தில் இருக்கும் ஒரு ஜூஸை வேண்டுமென்றே ஊற்றி, "விஜய் பொதுவெளியில் ம*து குடிக்கிறார்" என்று எல்லோரையும் விமர்சிக்க வைப்பார்கள். பிறகு, சரியாக மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண ஜூஸ் பாட்டில்தான் என்ற உண்மையான வீடியோவை வெளியிட்டு, "பார்த்தீர்களா, விஜய்யை திட்டமிட்டு பொய்யாகப் பழிவாங்குகிறார்கள்" என்ற அனுதாப அலை பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவார்கள்.
இதன் மூலம் விஜய்யைக் கேள்வி கேட்ட, விமர்சித்த அனைவரையும் பொய்யர்கள் என்றும், விஜய் மட்டும்தான் உண்மையானவர், யோக்கியர் என்றும் மக்கள் குருட்டுத்தனமாக நம்பும்படி ஒரு மாயை கட்டமைக்கப்படும்.
இந்தச் சாதகமான அலையைப் பயன்படுத்திக்கொண்டு, முன்பு உண்மையாகவே விஜய் காரில் ம*துபாட்டிலுடன் சென்ற அசல் வீடியோவையும், தற்போது அமைச்சர் 'கில்லி' சரத் ஸ்டேடியத்தில் பவுடர் நுணுக்கியதாக வெளியான அந்த வைரல் வீடியோவையும் கூட, "அன்று விஜய் விஷயத்தில் பொய் சொன்னது போலத்தான், இன்று இதிலும் பொய் சொல்கிறார்கள்" என்று மிக சாதாரணமாக நியாயப்படுத்தி, அவர்கள் இருவரையும் உத்தமர்களாகக் காட்டத் துணிவார்கள்.
அதாவது, ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் தாங்களே திட்டமிட்டு பரப்பி, பிறகு அதைத் தாங்களே ஆதாரத்தோடு மறுத்து, அதன் மூலம் தாங்கள் செய்த பழைய உண்மையான தப்புகளையும், தற்போதைய பெரிய குற்றங்களையும் கூட மொத்தமாகப் பொய்யென மக்களை நம்ப வைக்கும் இந்த ஆபத்தான அரசியல் தந்திரத்திற்குப் பெயர்தான் 'ரூட் மாஃபியா'
#RouteMafia
கரூர் மரணங்கள் தொடர்பான வழக்கில் ஆதவ் அர்ஜுனா ஒரு
Accused !
A2 வான ஆதவ் அர்ஜுனா வாய்ச்சவடால் எனும் பெயரில் வாய்க்கு வந்ததை எல்லாம் மேடையில் உளறிக் கொட்டுவது அபத்தம்!
பரப்புரை வாகனத்தை 50 மீட்டருக்கு முன்னால் காவல்துறையினர் நிறுத்தச் சொன்னபோது, அதனைக் கேட்க மறுத்து, கொழுப்பெடுத்து வாகனத்தை உள்ளே செலுத்தி நெரிசலை உருவாக்கிவிட்டு, இப்போது காவல்துறையினர்தான் காரணமெனக் கூறி, 41 பேர் மரணத்துக்கானத் தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழித்து, கட்டுக்கதையைக் கட்டவிழ்த்து விடுவது பச்சை அயோக்கியத்தனம்!