பிப்ரவரி 20 - மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுத் திடலில், மாநாடு ஏற்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதுமிருந்து தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் வருகைப் புரிய தொடங்கியிருந்தார்கள். கனடாவிலிருந்து பிரான்சிலிருந்து சுவிசிலிருந்து ஆசுதிரேலியாவிலிருந்து என்று ஈழத்தமிழர்கள் பெருமளவில் வருகைப் புரிந்திருந்தார்கள். என்னிடமும் வந்து பேசினார்கள். அதுபோல, மலேசியாவிலிருந்து மலேசிய தமிழர் ஒருவரும் வந்து பேச்சுக்கொடுத்தார். நாங்கள் அண்ணனுடைய கொள்கைகளைப் பின்பற்றி மலேசியாவில் பெரிய அளவில் வேளாண்மை செய்து வருகிறோம். அதைப் பற்றிய காட்சிகள் இந்தப் செருகு பதிவி(Pen Drive)ல் இருக்கிறது என்று என்னிடம் ஒரு செருகு பதிவியையும் வழங்கினார். பார்த்துவிட்டுத் தொடர்பில் வாருங்கள் என்று சொல்லிவிட்டு என்னுடைய எண்ணை குறித்துக் கொண்டு போனார்கள். பல பைகள் மாறி எங்கோ ஒரு பையில் தங்கியிருந்தது அந்தச் செருகு பதிவி. இந்த வார இறுதியில் சில பைகளை எடுத்துத் தூய்மைச் செய்யும்பொழுது அந்தச் செருகு பதிவியைக் கவனித்தேன். ஐயோ இது மலேசியாவிலிருந்து வந்த நம் உறவு ஒருத்தர் கொடுத்ததாச்சே என்று உடனே மடிக்கணினியில் போட்டுப் பார்த்தேன். அதில் இருந்தது ஒரே காணொலி, இந்தக் காணொலி தான். அங்கு எப்படி வேளாண்மையைப் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அண்ணன் சீமான் சொல்வது போல வேளாண்மை என்பது தொழில் அல்ல, அது தமிழர்களின் பண்பாடு என்பதைச் சொல்லாக மட்டுமில்லாமல், செயலாகவும் செய்து அதைக் காட்சியாகவும் பதிந்து, அதில் நாம் தமிழர் முழக்கத்தையும் இணைத்து, அதை நேரில் கொண்டு வந்து நம்மிடமும் கொடுத்து விட்டுப் போகும் அளவிற்கு ஒரு உணர்வு எழுச்சியை நாம் தமிழர் கட்சியும் அண்ணன் சீமானும் ஏற்படுத்தி உள்ளார்கள்!
நாம் தமிழர் கட்சிக்கு முன்பு பல கட்சிகள் தோன்றிப் பெரிதாக வளர்ந்து, ஆட்சி அதிகாரத்தை அடைந்து பல்லாண்டுகள் ஆட்சியும் செய்துள்ளன. அதேபோல் நாம் தமிழர் கட்சிக்குப் பிறகு பிறந்து, இன்று ஆட்சி அதிகாரத்தை அடைந்த கட்சியும் உண்டு. அடைய துடித்துக் கொண்டிருக்கின்ற கட்சிகளும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து, இதில் எந்தக் கட்சியாலும் செய்ய முடியாத ஒன்று, உலகத் தமிழர்களை ஒரே குடைக்குள் கொண்டு வருவது. அத்தகைய தமிழ்த்தேசியம் என்னும் கோடைக்குள் உலகத்தமிழர்களை ஒன்றிணைத்துக் கொண்டு வந்த பெருமை, நாம் தமிழர் கட்சியையே சாரும், அண்ணன் சீமானையே சாரும்!
இவற்றையெல்லாம் பார்க்கும் போது தான், இந்த அற்ப தேர்தல் வெற்றி, தோல்வி எல்லாம் தமிழ்த்தேசியம் என்ற உயர்ந்த கொள்கையைப் பின்பற்றி நடக்கும் நம் போன்றவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! கடுமையாக உழைப்போம்! தமிழ்த்தேசியத்தை வெல்ல வைத்து, அரியணை ஏற்றுவோம்!
நாம் தமிழர் கட்சி உயிரோடு இல்லை என்று தினமும் ஆளுங்கட்சியில் உள்ள யாராவது ஒருவர் புலம்புவதில் தெரிகிறது நாம் தமிழர் கட்சியின் உயிரோட்டத்தின் உண்மை நிலை
இந்த மண்ணை விற்று வாழ்ந்து விட்டு சென்று விடலாம் என்று நினைக்கும் ஆளும் அரசுக்கு மண்ணின் காவலனாக அங்கு நிற்கிறார் அண்ணன்...
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வெ.குணசேகரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
நாம் தமிழர் கட்சி - அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி,மீமிசல் கோபால பட்டினத்தைச் சேர்ந்த செந்தமிழர் பாசறையின் சவுதி ரியாத் பகுதி பொறுப்பாளர் அன்புத்தம்பி கசாலி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அப்துல் முத்தலிப் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி கசாலி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அப்துல் முத்தலிப் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் பாசறையைச் சேர்ந்த அன்புத்தம்பி ச.அழகுசுந்தரம் அவர்களின் தாயார் அம்மா ச.முத்துராக்கு அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
அம்மா ச.முத்துராக்கு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
நாம் தமிழர் கட்சி - வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் அன்பு இளவல் நா.ஜெயவேல் மற்றும் நா.சிலம்பரசன் ஆகியோரின் அன்புத் தந்தையார் பெருந்தமிழர் ஆ.நாகராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்
ஐயா ஆ.நாகராஜன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
கட்சியில் இருந்த விலக வேண்டும் என்ற முடிவை எடுத்தப்பின் காரணங்கள் சொல்வது தான் செய்வதை நியாயப்படுத்துவதற்கான வேலையே தவிர்த்து வேறொன்றுமில்லை. முடிவு எடுப்பது தனிபட்ட உரிமை. அதற்காக உறுதியாக இருக்கும் கட்சியை உதாசினபடுத்தும் நோக்கத்தை விலகுபவர்கள் கைவிட வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலை நிரந்தரம் அல்ல.