கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி!
அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!
தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.
அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க!
#முரசொலி85 #Murasoli
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
“கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை: தமிழ்நாடு முதலமைச்சர் தனது முடிவை மறுபரிசீலனை செய்திட வேண்டும்”
- கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அறிக்கை
காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது. 1960-களில் தொடங்கி 1990 வரை பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஆட்சிக்காலத்தில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதன்பிறகும் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை வழங்குவதில் அநீதி இழைத்து வந்தது கர்நாடக மாநில அரசு.
கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற யோசனை சொல்லப்பட்டபோதெல்லாம், அதனை உறுதியாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிராகரித்தது. ஏனென்றால், பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே கர்நாடக மாநில அரசு செயல்படும். உரிமையை நிலைநாட்டுவதாக இல்லாமல் பிரச்சினையை இழுப்பதாகவே அப்பேச்சுவார்த்தைகள் அமையும்.
அதிலும் குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தமிழ்நாட்டின் உரிமையை முற்றிலுமாக நிராகரிப்பதாகும். எனவே, இதுகுறித்து கர்நாடக அரசுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்துவதால் பயனில்லை என்பதே நமது நிலைப்பாடாகும்.
மேகதாது குறித்து பேசுவதற்காக, கர்நாடக முதல்வர் திரு. எடியூரப்பா அவர்கள் அழைப்பு விடுத்தபோது, முதலமைச்சராக இருந்த நான், “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” என மறுத்தேன். அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த அண்ணன் துரைமுருகன் அவர்களும், “பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” எனத் திட்டவட்டமாக அறிவித்தார். முற்றிலும் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் உழவர் பெருமக்களுக்கும் விரோதமானது அந்தத் திட்டம். அதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்பதே ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம்.
இந்நிலையில், கர்நாடகம் சென்று அம்மாநில முதலமைச்சர் அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கர்நாடக அரசிடம், தமிழ்நாடு பணிந்து போகும் நிலையாகும்.
மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்றும், அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்றும், யார் எதிர்த்தாலும் கட்டியே தீருவோம் என்றும் கர்நாடக மாநில அரசு வெளிப்படையாக, தொடர்ச்சியாகச் சொல்லும் போது, அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது? அவர்களது பிடிவாதக் குணத்தை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறோமா?
காவிரி நீர் திறக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே ஒரு “ஸ்கீம்” உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்து வெளியிடப்பட்டு விட்டது. அதைச் செயல்படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது தமிழ்நாடு அரசின் 30 ஆண்டுகாலச் சட்டப் போராட்டத்தைச் சிதைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகம் செல்வது, தமிழ்நாட்டின் நிலையைக் குறைப்பதாகவும் அமைந்துவிடும்.
ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க “பேச்சுவார்த்தை” எனக் கர்நாடகம் தற்போது விரித்திருக்கும் சதிவலையில் வலியச் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் சிக்குவது ஏன்? தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக முதலமைச்சர் செய்யும் இந்தச் செயலைப் பார்த்துக் காவிரி டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி அரசாகும். தமிழ்நாடு அரசிலும் காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. எனவே கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. 'நாங்கள் நேரிலேயே போய்ப் பேச்சுவார்த்தை நடத்தினோமே' என்று கணக்குக் காட்டுவதற்கு வேண்டுமானால் இது பயன்படலாமே தவிர, வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவது இல்லை.
காவிரி நீர் உரிமைப் பங்கீட்டுப் போராட்டம் நீண்ட நெடியது. தமிழ்நாட்டின் காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்ட ஒன்று. காவிரி நீர் உரிமையின் ஆழ அகலங்களைப் புரிந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் தரக் கர்நாடகம் மறுத்தால், அது நீதிமன்ற அவமதிப்பு; சட்ட மீறல்! மேகதாது அணை கட்ட முயற்சிப்பது உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவது. காவிரி போன்ற தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையையும் - விவசாயச் சங்கங்களின் கருத்துகளையும் பெற்ற பின்பே செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காவிரி உரிமை தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்குக் கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை மாண்புமிகு முதலமைச்சர் கைவிட வேண்டும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாகவும் - தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
புதுவை மாநிலத்திற்கு வருகை தந்த திராவிட மாடல் நாயகர் கழக தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மரக்காணம் பூமிஸ்வரன் திருக்கோவில் அருகில் சிறப்பான வரவேற்பு அளித்தோம்.
"கழக உடன்பிறப்புகளின் பலமே தலைவரின் புண்ணகை தான்"
@Udhaystalin | @arivalayam
#BREAKING | ஸ்டாலின் தாத்தா... எப்பவுமே தமிழ்நாடு முஸ்லீம்கள் எல்லாருமே உங்க பக்கம்தான் தாத்தா.. உங்க பேரன் யூனுஸ், நான் இருக்கேன் தாத்தா...
- திருச்சி விமான நிலையத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்!
#DMKForever#dmk_genz#GenZDMK#MKStalin #KalaignarSeithigal
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#BanNEET
முன்னாள் அமைச்சர் - கழக விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் திரு. உ. மதிவாணன் அவர்களது இல்ல மணவிழாவில் பங்கேற்று மணமக்கள் மதி.கதிரவன் - மௌனிகா ஆகியோரின் இல்லறம் மகிழ்ச்சி நிரம்பிய நல்லறமாக விளங்கிட வாழ்த்தினோம்!
மாமதுரையிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி!
அமைதி - வளர்ச்சி - நல்லிணக்கம்: இதுதான் தமிழ்நாட்டின் DNA!
இதற்கு அப்படியே எதிராக, வன்முறை - வஞ்சகம் - கலவரம் என்பதுதான் NDA!
மெட்ரோ உள்ளிட்ட மதுரைக்கான திட்டங்களை நிராகரித்த NDA-வை, மதுரையும் பதிலுக்கு நிராகரிக்கும்!
தென்தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மதுரையை நிலைநிறுத்தப் பாடுபடும் #DravidianModel அரசுதான் தமிழ்நாட்டில் தொடரவேண்டும் எனச் சொல்லி ஆதரவு கேட்டேன்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் கோரிக்கைக்கு மதுரை மக்கள் Instant Approval கொடுத்து விட்டனர்! 🌄
#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!
✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்ட மேடை அமைந்தது.
✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி!
✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக!
#CuddaloreWithDMK #VoteForDMK
@ThirumaOfficial@PremallathaDMDK
#NDA-வின் Double Engine செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கு புதுமைகள் அற்ற புதுச்சேரியே சாட்சியாக உள்ளது.
இன்றைய தினம் புதுச்சேரியில் அண்ணா சிலை அருகே நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, காலாப்பட்டு , கதிர்காமம், ராஜ்பவன் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்களுக்கு ஏப்ரல் 9 அன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளைச் செலுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#SPAForPondy #VoteForDMK
தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
❓ தமிழ்மண்ணில் நின்று, "மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்" என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
❓ நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
❓ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
❓ இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
❓ கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!
குன்னம் வாக்காள பெருமக்கள் வழங்கிய வண்ணமயமான வரவேற்பு, உதயசூரியன் சின்னத்தின் வெற்றியை உறுதிபடுத்தியது.
மாண்புமிகு அமைச்சர்-குன்னம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @sivasankar1ss அவர்களுக்கு திராவிட மாடல் அரசின் ஐந்தாண்டு சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரித்தோம்.
சுயமரியாதை என்ற சொல்லுக்கு Spelling கூட தெரியாத மோடியின் முரட்டு அடிமைகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருநாளும் நிறைவேறாது என்று உரையாற்றினோம்!
தமிழ்நாடு தலைகுனியாது!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
புதுச்சேரி மரப்பாலம் அருகே வில்லியனூர், முதலியார்பேட்டை, உப்பளம் , பாகூர் , மங்கலம், திருபுவனை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கழகத்தின் சார்பில் களம் காணும் வெற்றி வேட்பாளர்களுக்கு இன்று காலை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் #திராவிடமாடல் அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரியிலும் செயல்படுத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
புதுச்சேரியிலும் கழகக் கூட்டணி வெல்லட்டும்!
#SPAForPondy #VoteForDMK