சொல்லொணா துயரம் கரூர் ..!
ஒரு கிராமத்தில் ஐந்துபேர் , ஒரு வீட்டில் இரண்டு பேரென தன் உறவுகளை இழந்து நிற்கின்றனர்..!
குழந்தைகளை இழந்த தாய் , தாயை இழந்த பிள்ளைகளென பெரும் துயர்..!
காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் எப்படி ஈடுசெய்ய முடியும் இந்த இழப்பை..!
த.வெ.க கூட்ட நெரிசலில் பலியான அப்பாவி மக்களின் துயரம் நம்மை உலுக்குகிறது. ஒரு தலைவராக திரு.விஜய் தன்னை சந்திக்கத் திரண்டவர்களின் துயரத்தில் பங்கெடுக்காமல் வெளியேறியது அதிர்ச்சியளிக்கிறது. மக்களோடு அவர் களத்தில் நின்றிருக்க வேண்டும். மருத்துவப்பணிகள், நிவாரணப்பணிகள் என அனைத்தையும் முன்னின்று கவனித்து தமது தொண்டர்களின் இன்னல்களில், துயரத்தில் பங்கெடுக்கும் பொறுப்பு அவருக்குண்டு. அரசியல் கூட்டங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாவதென்பது தமிழ்நாட்டில் நாம் காணாத பெருந்துயர்.
எட்டு பச்சிளம் குழந்தைகள் பலியான செய்தியறிந்த பின்னரும் எப்படி ஒரு தலைவனால் வெளியேற முடிந்தது?
தன்னை நேசித்தவர்கள் பலியானதை அறிந்தும் அம்மக்களை விட்டு எப்படி ஒரு தலைவன் விலகிச் செல்ல இயலும்?
இப்பெருந்துயரில் தொண்டர்களை கைகழுவி வெளியேறிச் சென்றது, தலைமைத்துவமல்ல, கோழைத்தனம். வன்மையான கண்டனத்திற்குரிய சந்தர்ப்பவாதம்.
எனதருமை தமிழினமே! தத்துவங்களில் தலைமையை காண்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மெரினாவில் குழுமினர். மதுரை-திருச்சி-கோவை என லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் திரளாத நகரங்கள் இல்லை. இங்கெல்லாம் நெருக்கடியோ, நெரிசல் சிக்கலோ நடிகர்கள் வந்த போதும் உருவாகவில்லை. இங்கே மக்களை ஒழுங்குபடுத்த போதுமான காவல்துறை இல்லை, கட்சி பொறுப்பாளர்களென எவரும் இல்லை. ஆயினும் ஒழுங்கு நேர்த்தி இருந்தன.
அரசியல் கோரிக்கைக்காக லட்சிய உறுதியுடன் மக்கள் திரளும் பெருங்கூட்டங்கள் அரசியல் மாற்றங்களை கொண்டு வருகின்றன. அன்றும் அரசியல் பேசினோம், ஆண்-பெண்-குழந்தைகள் என ஒன்றுகூடினோம். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், கலைஞர்கள் குழுமினார்கள். சாமானியருக்கான மரியாதையே அவர்களுக்கும் இருந்தது. மக்கள் நடிகர்கள் பின்னால் ஓடவில்லை, அவர்களை பொருட்படுத்தவுமில்லை. நானும், நடிகர் சிம்புவும், ராகவா லாரன்சும், இயக்குனர்கள் ராம், கார்த்திசுப்புராஜ் என ஒன்றாக மக்களிடத்தில் உரையாற்றியபோது லட்சக்கணக்கான மக்களில் ஒருவர் கூட முண்டியடித்து முன்னே வரவில்லை.
கொள்கை-கோரிக்கைகாக அணிதிரளும் பொழுதில், இதே சாமானிய மக்கள் இராணுவ ஒழுங்குடன், நெருக்கி துன்புறுத்தாத வகையில் திரள்கிறார்கள். திருட்டு, பாலியல் சீண்டல்கள், நசுக்குதல் என எவையுமில்லை. இதுபோல கிட்டதட்ட 7 நாட்களாக மக்கள் தம்மை ஒழுங்குபடுத்தினர். காவல்துறை, தலைவன் தேவைப்படவில்லை.
அரசியல்நெறி இல்லாமல், ரசிகத்தன்மையை முதன்மையாக்கும் பொழுது, அணிதிரட்சியில்லாமல் கும்பலாக சகமனிதர் மீதான அக்கறையில்லாமல் இதே சாமானியர்கள் திரள்கிறார்கள். அரசியலாக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல், event managers கொண்டு நடத்தப்படும் வணிக கச்சேரிகளாக மக்கள் சந்திப்புகள் நடக்கின்றன. ரசிகர் மனநிலையை வளர்த்த, சிறு-சிறு அசைவையும் ஹீரோயிசமாக ஊடகம் காட்சிப்படுத்தி வர்ணிக்கிறது.
ஆனால், ஜல்லிக்கட்டில் நாம் உரை நிகழ்த்தியபோது, இதே ஊடகங்கள் 'தீவிரவாதிகள் ஊடுறுவல்' என செய்தியாக்கினார்கள். இன்று விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் சினிமாத்தனமான செய்திகளாக்குகிறார்கள். வளர்த்தப்படுவது அரசியல் அல்ல, ரசிகத்தன்மையும், ஹீரோயிசமும். இதை கவனமாக செய்கிறார்கள்.
கரூர் துயரத்திற்கு யார் காரணமெனும் விசாரணை சுதந்திரமாக நடத்தப்படுதல் அவசியம். தவெக கட்சி பொறுப்பாளர்களின் அனுபவமின்மை-பொறுப்பின்மையா, அல்லது திமுக அரசின் அலட்சியபோக்கா என்பதெல்லாம் கள ஆய்வுகளாக, முறையான விசாரணை மூலம் உண்மை வெளியாகட்டும்.
தவெக கட்சியினருக்கு, திமுக அரசை எதிர்க்க பலவழிகள் உண்டு, திமுக தவறுகளை எதிர்கொள்ள போராட்ட வழி உண்டு. அதன்வழி, கட்சியை அரசியலாக வலுபடுத்தி அரசியலாக்கப்பட்ட 2ம்கட்ட தலைமைகள் வளர்த்தெடுக்கப்படாமல், மாநிலம் தழுவி அரசியல்பயிற்சிகள் அளிக்கப்படாமல் திமுகவை எப்படி எதிர்கொள்வார்கள்? அரசியலாக தொண்டரை வளர்க்காமல் எவ்வகையில் திமுக-அதிமுக-பாஜக போன்ற கட்சிகளை வீழ்த்துவார்கள்? கொள்கை-அரசியல் பயிற்சி, மக்கள் திரளை அரசியல் நெறிப்படுத்தி வளர்க்காமல் அதிகாரத்திலிருக்கும் கட்சிகளை வெல்ல இயலாது என்பது அடிப்படை அரசியல். பிறகு ஏன் ரசிக-ஹீரோயிச வகை அரசியல் வளர்த்தப்படுகிறது?
கொள்கை தெளிவில்லாமல் ரசிக-ஹீரோயிச மனப்பாங்குடன் ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்தால், ஜல்லிக்கட்டு போன்ற அரசியல் உணர்வு மிக்க, ஒழுங்கமைக்கப்பட்ட எழுச்சியை தமிழர்களால் உருவாக்க இயலாது. 2009ல் நடந்த இனஅழிப்பால் உந்தப்பட்டவர்கள், அரசியல் உணர்வு பெறாமல், ஹீரோயிசம், கும்பல் மனப்பான்மையோடு சீமானால் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். ஈழ போராட்டத்தினை-இந்திய அரசின் சூழ்ச்சிகளை பற்றி எவ்விதமான அரசியல் கல்வியை அளிக்காமல், போலியாக, மேலோட்டமாக, கடமையுணர்வில்லாமல் சினிமா-ஹீரோயிச கதைகளை கொண்டு கட்சியை வளர்த்தார்கள்.
ஈழ அரசியல் உண்டாக்கிய தமிழ்த்தேசிய எழுச்சி ஒரு சினிமா-வசன-கதாசிரியனால் முடக்கப்பட்டது. 16 ஆண்டாக இவ்வெழுச்சியை அடக்கி சிதைத்த பின், அடுத்த போலி அலையை உருவாக்குகிறார்கள்.
பாஜக போன்ற மதவெறி கட்சியை, திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளை, நாதக, தவெக போன்ற ரசிகர் கட்சிகளால் வெல்லமுடியாது.
புரட்சி நிகழவேண்டுமெனில், மக்களை அணிதிரட்டும் இயக்கங்களே அதை சாத்தியப்படுத்தும். மக்கள் இயக்கங்களே, நிரந்தர மாற்றங்களை கொண்டுவரும். ஜல்லிக்கட்டு எழுச்சி பாஜகவை படுகுழிக்குள் தள்ளியது, அதிமுகவை அன்னியப்படுத்தியது. இதை சாதித்தவர்கள் அரசியல் உணர்வு கொண்ட சாமானிய தமிழர்கள்.
சாமானிய அன்பிற்கினிய தமிழர்களே! நமக்கென போராட்ட பாரம்பரியம் உண்டு. நமக்கென புரட்சிகர உணர்வுண்டு. அதை எந்த தலைவனிடத்திலும் தேடாதீர்கள். கட்சி அரசியலை கடந்து வாருங்கள்.
இழப்பை தவிர்ப்போம், இழந்ததை மீட்போம்.
*திருமுருகன் காந்தி*
மே பதினேழு இயக்கம்
29-09-2025
படங்கள்: ஜல்லிக்கட்டு எழுச்சியில் திரண்ட தமிழர்கள்.
தமிழினத்திற்காக வாழ்நாள் முழுதும் உழைத்த, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற தமிழ்த்தேசிய உணர்வை தமிழர்களுக்கு ஊட்டிய தந்தை பெரியார் அவர்களுக்கு, அவரது 147-வது பிறந்த நாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்தி போற்றுகிறது!
#Periyar#Periyar147#periyarbirthday
வரலாற்றில் முதன்முறையாக அரசியல் அதிகாரத்தை ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் கொண்டு வர முயன்ற ஆரிய-பார்ப்பனிய ஆதிக்க அரசியலை நேருக்குநேர் நின்று எதிர்கொண்ட போர்மரபை உருவாக்கியதாலேயே அவரை 'தந்தை' என்றார்கள். ஆரியத்தின் பன்முக ஆதிக்கத்தை, ஒவ்வொரு முனையிலும் வீழ்த்த மக்களை அணி திரட்டியதால் அவரை 'பெரியார்' என்றார்கள்.
தமது பாரம்பரிய பெருமை என்பதை வைத்து நாட்டு விடுதலையை கேட்டுக்கொண்டிருந்த காலத்தில், மதவாத-சாதியவாத ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற 'சுதந்திர தமிழ்நாடே' ஒரே தீர்வு என இறுதி மூச்சுவரை முழங்கியதால் 'தமிழர் தலைவர்' எனப்பட்டார். தமிழினத்தின் முழுமையான விடுதலையை சிந்தித்து, மக்களை அரசியல்படுத்தி திரட்டியதால் அவர் 'தமிழ்த்தேசிய தலைவர்' என அறியப்படுகிறார்.
இன்று மாலை 'சென்னை-ஜாபர்கான்பேட்டை' பொதுக்கூட்டத்தில் சந்திப்போம், தந்தை பெரியாரை மென்மேலும் அறிந்துகொள்வோம்.
வெல்க
'தந்தை பெரியார்'
தமிழ்நாடு தமிழருக்கே!
#Periyar147 #பெரியார்
To prove your theory, you need lives of million innocents. And you waited till million lives lost to pronounce your judgement.
You did the same to Rwanda.
You did the same to Timor.
You did the same to Tamils.
You did the same to Rohingya.
Now you are doing to Palestine.
This is atrocious.
UN lost the credibility & capability to save innocents.
பட்டினியால் தினந்தினம் கொல்லப்படும் மக்களைக் கண்டு எப்படி நமக்கு உறக்கம் வரும்?
பச்சிளம் குழந்தைகள் மீது பலமாடி கட்டிட இடிபாடுகளை குவிக்கும் காட்சிகளை கண்டு எப்படி நமக்கு நிம்மதி வரும்?
நொடிப்பொழுதில் நூற்றுக்கணக்கான மக்களை சாம்பலாக்கும் குண்டுகளைக் கண்டு நம்மால் எப்படி அமைதி காக்க இயலும்?
6,50,000 பால..ஸ்..தீன மக்கள் படுகொ*லையாகி உள்ளனர். வழக்கம் போல இரண்டாண்டுக்கு பின்னர் தற்போதுதான் ஐ.நா விழிக்க ஆரம்பித்திருக்கிறது. இசுரேல் செய்வது ஒரு இன.ப்.ப.டு.கொ*லை என தயங்கி தயங்கி பேசுகிறது ஐ.நா.
16 ஆண்டுகளுக்கு முன் இதேபோல நாமும் துன்பப்பட்டோம், போராடினோம். தற்போது தூரத்தில் மேற்குப்பகுதியில் நடக்கும் அநீதிக்கு எதிராக உலகெங்கும் லட்சக்கணக்கில் மக்கள் வீதியில் திரள்கிறார்கள்.
மானுடத்தை நேசித்த தமிழர்களால், அநீதி கண்டு எவ்வாறு அமைதிகாக்க இயலும்?
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வருகின்ற செப்19ம் தேதி சென்னை புதுப்பேட்டையில் பாலஸ்tine மக்களின் விடுதலைக்கான பேரணியை அறிவித்திருக்கிறது.
இப்பேரணிக்கு தோழமை இயக்க தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்க நேரில் சந்தித்தோம். திராவிடர் கழகத்தின் தலைவர் அய்யா வீரமணி அவர்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர்
தோழர் மு.வீரபாண்டியன் மற்றும் தோழர் முத்தரசன் அவர்களையும், மரு.ரவீந்திரநாத் அவர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் சண்முகம் அவர்களையும், தோழர் சாமுவேல்ராஜ் அவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம்.
முன்னதாக தோழர் திருமா அவர்களையும், தோழர் ஜவாஹிருல்லா அவர்களையும், தோழர் நெல்லை முபாரக் அவர்களையும் சந்தித்து அவரது பங்கேற்பு ஒப்புதலையும் பெற்றோம். இதர அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறோம். வாய்ப்புள்ள அனைவரும் இந்நிகழ்வில் பங்கெடுக்க பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாகவும், மே17 இயக்கம் சார்பாகவும் அழைக்கிறோம்.
பேரணி தொடங்குமிடம் : சென்னை, புதுப்பேட்டை பாலம் அருகில்.
பேரணி நிறைவுறும் இடம்: சிந்தாதிரிப்பேட்டை பாலம்.
நாள் : 19 செப் 2025.
நேரம்: மாலை 3:00 மணி
ஒருங்கிணைப்பு:
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.
@OnlinePalEng@palestine@PalestineCenter@pmofa
மே பதினேழு இயக்கத்தின் தொடர் அரசியல் செயல்பாடுகள் - நிதிப் பங்களிப்பு கோருகிறோம்
தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமியற்ற வலியுறுத்தியும், பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளை பரப்பவும் தெருமுனைக்கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கம் என தொடர் அரசியல் செயல்பாட்டில் மே பதினேழு இயக்கம் ஈடுபட்டு வருகிறது. சென்னை ஜாபர்கான்பேட்டையில் செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கான பரப்புரையும் முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதன் பொருட்செலவினை சந்திக்க நிதி பங்களிப்பினை உரிமையுடன் கோருகிறோம்.
மே பதினேழு இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளில் உடன்பாடு கொண்ட தோழர்கள் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அல்லது ஜிபே எண்ணில் நிதிப் பங்களிப்பினை செலுத்தலாம்.
A/C Number: 99980118853691
A/C Name: PUGAZHENTHI
A/C Type: Savings
Bank: Federal Bank
Branch: Panruti
IFSC: FDRL0001968
Google Pay (GPay): 8098111543
or
Open upi://pay?pa=useupsidedown-1@okhdfcbank&tn=May17Periyar
Name: Pugazhenthi
பின்குறிப்பு: ஈழத் தமிழர்களிடம் நிதி உதவி பெறுவதை அறம் சார்ந்து மறுக்கிறோம். வெளிநாட்டு வாழ் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக அனுப்பி வைக்கலாம்.
-
மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010
[email protected]
16/09/2025
கடவுள் கல்லூரி கட்டவேண்டாமென சொன்னதா? அல்லது
கல்வி என்பது பக்தர்களுக்கு எதிரானதா? அல்லது கோயில் பணம் என்பது கடவுள்கள் மேலே இருந்து அனுப்பியதா?
அரசுப்பணம் என்பதும் மக்கள் பணம் தான், கோயில் பணம் என்பதும் மக்கள் பணம் தான். கோயில் பணத்தில் முருகப்பெருவிழா நடத்துவதைவிட, உயரமான சாமி சிலை கட்டுவதை விட, கல்லூரி கட்டுவது பக்தர்களுக்கு பயனுள்ளதே.
'நீட் தேர்வு ரத்து' எனும் தமிழ்நாட்டின் உரிமையை தனது கூட்டணி கட்சியான பாஜகவிடமிருந்து பெற்றுத்தர அதிமுக முயல்வது நல்லது. மருத்து கல்விக்கான தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவின் தலைமை, தமிழர்களின் உரிமையை வெல்வதற்கு முயற்சி செய்வதை விடுத்து, இதுபோன்ற அறிவிப்புகள் பயனளிக்காது.
திமுக அரசை எதிர்த்து மக்கள் கோரிக்கைகளுக்காக மாஞ்சோலை தொழிலாளர், ஒப்பந்த ஊழியர், மின்கட்டண உயர்வு, ஏழைகளின் வீடுகளை இடித்தல், மீனவரை கொலை செய்ததற்காக வழக்குகள், சாதிய வன்கொடுமைகள், ஒரத்தநாடு கூட்டுபாலியல் வன்முறை, காவல்துறை அத்துமீறல்கள் என பலவேறு போராட்டங்களை மே17 இயக்கம் முன்னெடுத்த போதெல்லாம் திமுகவிற்கு ஆதரவாக அமைதிகாத்தது அதிமுக.
தற்போதும் முக்கியமற்ற விடயங்களை-பாஜகவிற்கான அரசியலை முன்னிலைப்படுத்துகிறது அதிமுக என்பது பெருங்கொடுமை.
வி.ஜி.சந்தோசம் உரை | அறிஞர் அவையம்: 2ம் தமிழ் அறிவர் மாநாடு | தமிழ்த்தேசியப் பெருவிழா 2025
மே பதினேழு இயக்கம் கடந்த மார்ச், 2025ல் நடத்திய தமிழ்த்தேசியப் பெருவிழாவின் அறிஞர் அவையம் எனும் இரண்டாம் தமிழ் அறிவர் மாநாட்டில், விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரை.
யூடியூப் இணைப்பு:
https://t.co/V5q8RG4JJ4
மே பதினேழு இயக்கம்
9884864010
பரந்தூர் விமான நிலையம் வளர்ச்சியை தர இயலுமா? எனில் யாருடைய வளர்ச்சி என்பது அடுத்த கேள்வி. பரந்தூர் திட்டம் சூழலியல் கேட்டை கொண்டுவருமா எனில் நிச்சயம் கொண்டுவரும் என்பதற்கு ஏராளமான தரவுகள் இருப்பதை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. அதில் சிலவற்றையும், அதன் கட்டுரையையும் இணைக்கிறேன். அவசியம் வாசியுங்கள்.
----------------------
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்படவுள்ள 2172.73 எக்டர் நிலத்தில் 576.74 எக்டர் அதாவது 26.54% நீர்நிலையாகும். வேளாண் நிலங்களுடன் சேர்த்தால் மொத்த திட்டப்பகுதியில் 90% ஈர நிலமாகும்.
நீர்நிலைகளை அழித்து நகரத்தை விரிவாக்கிக் கட்டமைப்புகளை ஏற்படுத்தியதால்தான் ஸ்ரீபெரும்புதூரில் வெப்பநிலை அதிகரித்ததாக மாநிலத் திட்டக் குழுவின் அறிக்கை கூறுகிறது.
அதே ஸ்ரீபெரும்புதூரில்தான் பரந்தூர் விமான நிலையமும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், பூந்தமல்லி, மீஞ்சூர் ஆகிய பகுதிகள் முக்கியமான வெப்பக் குவிப்பு மண்டலங்களாக மாறியிருப்பதால் இப்பகுதிகளில் வெப்பத்தைக் குறைக்கத் தகவவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலத் திட்டக் குழுவின் ஆய்வு வலியுறுத்துகிறது .
தகவல் பதிவு :
'பூவுலகு' சுந்தர்ராஜன்
@SundarrajanG@poovulagu
முழு விவரம் 👇🏾
https://t.co/0kFPssljEk
கோ.விசுவநாதன் உரை | அறிஞர் அவையம்: 2ம் தமிழ் அறிவர் மாநாடு | தமிழ்த்தேசியப் பெருவிழா 2025
மே பதினேழு இயக்கம் கடந்த மார்ச், 2025ல் நடத்திய தமிழ்த்தேசியப் பெருவிழாவின் அறிஞர் அவையம் எனும் இரண்டாம் தமிழ் அறிவர் மாநாட்டில், வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
யூடியூப் இணைப்பு
https://t.co/U1QL0ntAXE
மே பதினேழு இயக்கம்
9884864010
புரட்சியாளர்கள் ஒவ்வொருவராக ஆங்கிலேயரால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் மருதுபாண்டியர்கள் ஒரு பிரகடனத்தை திருச்சியில் வெளியிடுகிறார்கள்.
வட இந்திய ஆய்வாளர்களால் இன்றளவும் புறக்கணிக்கப்பட்ட இந்த பிரகடனமே, இந்திய அளவில் வெகுமக்களை புரட்சிக்கு அழைத்த முதல் அறிவிப்பு. அரசர்கள் மக்களை தமது உத்தரவுகளால் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், மக்களை அணிதிரள கோரிக்கை வைத்த பிரகடனம் இது.
பொது எதிரியாக ஆங்கிலேயரையும், புரட்சிகர ஆற்றலாக வெகுமக்களையும் அடையாளப்படுத்திய இந்த பிரகடனம் 'ஜம்பு தீபகற்ப பிரகடனம்' என அழைக்கப்படுகிறது. ஜம்பு தீபகற்பம் எனும் நிலப்பரப்பு தென்னிந்தியாவையும், மிகக்குறிப்பாக தமிழர்களின் நிலப்பரப்பையும் அடையாளப்படுத்தும். இந்த நிலப்பரப்பை விடுதலை செய்ய வேண்டுமென மருதுபாண்டியர் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் எவ்வித அரசர்களின் ஆட்சிப்பரப்பை அடையாளப்படுத்தவில்லை என்பது தனிக்கவனத்திற்குரியதாக மே17 இயக்கம் பார்க்கிறது. மேலும், மிக முக்கியமாக சாதி-மத வேறுபாடுகள் இல்லாமல் தமிழர்கள் ஒன்றுபட அறைகூவல் விடுத்தது இந்த அறிக்கை. திருச்சி மலைக்கோட்டை, திருவரங்க கோவில் சுவரில் பதியப்பட்ட அறிக்கையில் ஆங்கிலேயரை ஆதரிப்பவர்கள் கடுமையாக சாடப்பட்டனர்.
224 ஆண்டுகளுக்கு முன்பாக சாதி-மத வேறுபாடு கடக்கவும், மக்கள் புரட்சி செய்யவும், அந்நியர் ஆட்சியை அகற்றி தமிழர் நிலத்தை மீட்டிடவும் அறைகூவல் விடுக்கும் சனநாயக முழக்கத்தை மருதுபாண்டியர்கள் எங்கிருந்து கற்றறிந்தார்கள்? எதனால் இக்கோரிக்கைதை தமது இறுதிக்காலத்தில் முன்வைத்தார்கள்? ஏன் இந்த பிரகடனம் அனைத்து தமிழர்களாலும் போற்றப்பட வேண்டும்? ஏன் தமிழ்நிலம் மீட்கப்பட வேண்டுமென குறிப்பாக மருதுபாண்டியர் தெரிவித்தனர்? திருச்சியில் இப்பிரகடனம் ஏன் வெளியிடப்பட்டது? என பல வரலாற்றுக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில்
'தமிழ் நிலமீட்பு -ஜம்புத்தீவு பிரகடனம்' எனும் புரட்சி முழக்கத்தை கொண்டாடும் வகையில் திருச்சியில் மாபெரும் மக்கள்திரள் கூட்டத்தை மே17 இயக்கம் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
6 ஆண்டுகளாக திட்டமிட்டு நடத்த இயலாது போன வரலாற்று நிகழ்வை இந்த ஆண்டு ஒருங்கிணைத்திருக்கிறோம். உங்களது ஒத்துழைப்பும், பங்களிப்பும், பங்கேற்பும் இருக்குமாயின் மருதுபாண்டியர் உள்ளிட்ட புரட்சியாளர்களாக எழுந்து தமிழ் மண்ணுக்காக குருதி சிந்திய பாளையக்காரர்களின் ஈகத்தை கொண்டாடும் பெருநிகழ்வாக மாற்றிடலாம்.
கட்சி, இயக்கம் கடந்து தமிழின ஓர்மையை கொண்டாட வாருங்கள். சனநாயகக்குரல் எழுப்பிய பிரகடனத்தை முழங்கிட திரண்டு வாருங்கள் என அறைகூவல் விடுக்கிறோம்.
224 ஆண்டுகளுக்கு முன் தமிழன் கண்ட கனவை, நினைவு கூறுவோம். புரட்சியாளர்களைக் கொண்டாடிடுவோம்.
12 ஜூலை 2025
சனிக்கிழமை
மாலை 5:00 மணி.
மலைக்கோட்டை
திருச்சி.
நாம் வெல்வோம்
மே பதினேழு இயக்கம்.