@airtelindia@Airtel_Presence@airtelnews@airtelbank Our SR No. 10338240920 for Xstream Fiber ID 04460378872_tn has been closed without resolving.Internet not working from 25th. No one bothered to attend, called CCare everyday, escalation done. Hate Airtel Team, Hopeless!
நீர்நிலைகள் சிரமைக்கும் என் பயணத்தில் இன்று மிக முக்கியமான நாளாக கருதுகிறேன்.
உலக நாகரிகங்களின் வரலாற்றை தாங்��ி ஓடும் உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடமான உகாண்டாவின் ஜின்ஜாவில் நிற்பது பெருமையும், நெகிழ்ச்சியும் அளிக்கிறது.
ஒவ்வொரு நதிக்கும் ஒரு பிறப்பிடம் உண்டு;
அதை நேரில் காணும் இந்த தருணம், இயற்கையின் மகத்துவத்தை மீண்டும் உணர்த்துகிறது. 💙🌍
#SourceOfTheNile #Jinja #Uganda #SaveWater #WaterConservation
சென்ற மாதத்தில் நடைபெற்ற சில திருமணங்களின் செலவைப் பார்த்த போது தலை சுற்றியது.
மூன்று வேளையும் 21 அயிட்டங்கள் கொண்ட மெனு (முதல் நாள் இரவு நிச்சயம் - 800 பேர், காலை முகூர்த்தம் -500, மதியம் -200 பேர்)
ஸ்டேஜ் டெக்கரேஷன்
டிசைனர் தட்டு செட்
பியூட்டிஷியன் (குடும்பத்திற்கே)
டான்ஸ் ஸ்டுடியோ அரேஞ்மென்ட்
வீடியோ கிராபி
9 ஸ்டால்கள் (ஐஸ்கிரீம், ஜிலேபி, பீ���ா...)
உறவினர்களுக்கு
செட் சேலை செட் பேண்ட் சர்ட்
மண்டப வாடகை, புரோகிதர், வாகன அரேஞ்ச்மெண்ட்)
என செலவு ஐட்டங்கள் ஒவ்வொன்றாக கூடிக் கொண்டே போகின்றன.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும்
அழகர் கோவிலிலும்
தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும்
மீனாட்சியம்மன் கோயிலிலும்
கூடலழகர் பெருமாள் கோவிலிலும்
திருமணம் நடத்தி அருகில் உள்ள ஹோட்டல்களில் சாப்பாடு டோக்கன் வாங்கி கொடுத்த காலம் மீண்டும் எப்போது வரும்?
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள், மதி! 🎂
சில வாரங்களுக்கு முன்பு மதி போனில் பேசும்போதும் வைதேகி அதே செல்லக் குற்றச்சாட்டை முன்வைத்தார். “ஏய் மதி, என்னால்தான் உனக்கு தரனைத் தெரியும். ஆனால் நீ அவன்கூடத்தான் அதிக நேரம் பேசுகிற���ய், என்கூடக் கொஞ்ச நேரம்தான் பேசுகிறாய்,” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இப்போது வயது நாற்பது.
1986இல் வைதேகியின் அலுவலக நண்பராக எங்களுக்கு அறிமுகமானவர் மதி. வாசிப்பு, நாடகம், இசை எனப் பல தளங்களில் இணைந்து எங்களுடைய மிக நெருங்கிய நண்பராக மாறிவிட்டார். 😍
சமீபத்தில் சென்னையில் சந்தித்தபோதும் நாங்கள் அன்று அறிமுகமான புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றி அவர் நினைவுகூர்ந்தார். ‘குட்டி இளவரசன்’ நாடகத்தின் விமானியாகத் தொடங்கி, ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரை’ நாடகத்தில் மந்திரியாக, ‘நிரபராதிகளின் காலம்’ நாடகத்தில் விசாரணைக் கைதியாக எனத் தொடர்ந்து மேடையில் ��ின்னியவர் அவர். நாங்கள் எப்போது சந்தித்தாலும் “மதி, இரண்டு பாட்டு பாடு,” என்று அன்போடு கேட்டுவிடுவோம். 🎶
மதிக்கு எங்கள் நண்பர்கள் குழுவில் ஒரு பட்டப்பெயர் இருக்கிறது. அது ‘டீசண்ட்’. அதற்கு ஒரு சுவாரசியமான காரணம் இருக்கிறது. நாங்கள் பாலகுமாரனின் ‘சேவல் பண்ணை’ நாவலை நாடகமாக்கியபோது நடந்த ஒரு உரையாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு திருநெல்வேலி அண்ணாச்சி பாத்திரம். ரகளைய���ன, இங்கிதம் பற்றிக் கவலைப்படாத ஒரு ஆள். மதிக்கு வாழ்வை மலரின் நறுமணமாக நுகரும் நாசூக்கான ஒரு இளம் காதலன் பாத்திரம். மதி அப்போது நிஜமாகவே ஆண்களுக்கான தங்கும் விடுதியில் (Lodge) இருந்தார். பாத்திரங்களைப் பற்றிப் பேசும்போது அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.
“மதி, உங்க பாத்ரூமில் பாதி பயன்படுத்திய டூத்பேஸ்ட் குழாயைப் பின்பகுதியிலிருந்து சுருட்டி அழகாக வைப்பது யார்?”
“நான்தான்.”
“பக்கத்த���ப் படுக்கைக்காரன் அவசரமாக வேலைக்குப் போயிருந்தாலும் அவனுடைய பெட்ஷீட்டை ஒழுங்காக மடித்து வைப்பது யார்?”
“நான்தான்.”
“பக்கத்து அறையில் தூங்குவார்கள், சத்தமாகப் பேசாதீர்கள் என்று சொல்வது யார்?”
“அதுவும் நான்தான்.”
“அப்படியென்றால் அதுதான் உன் பாத்திரம். நீ தனியாக நடிக்கவே வேண்டாம். மேடைக்கு வந்து உன் வசனங்களை மட்டும் பேசிவிட்டுப் போ,” என்றோம்.
அதுதான் வாழ்வை மலரின் நறுமணமா�� நுகரும் நாசூக்கான, எங்கள் ‘டீசண்ட்’ மதி. 🫶
அவரின் திருமணத்திற்கு நாங்கள் எல்லோரும் பட்டுக்கோட்டை போனது, நாடகங்கள் நிகழ்த்த மதுரை, கோயம்பத்தூர், ஊட்டி என்று போனது, நாங்கள் கும்பகோணம், தஞ்சாவூர், தாராசுரம் என்று குடும்பச் சுற்றுலா போனபோது மதி எங்களுடன் சேர்ந்துகொண்டது என பல நினைவுகள் மனதில்.
மதியும் அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர் என்பதால், இன்று இளங்காலையில் காபி குடிக��கும்போது கும்பகோணத்தில் இருக்கும் மதியை தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன்.
பேசி முடிக்கும்போது, “வைதேகி இல்லையா?” என்றார் மதி.
“இன்னும் எழு��்துக்கவில்லை. எழுந்ததும் சொல்கிறேன், உன்னைக் கூப்பிடுவாள்,” என்றேன்.
“தரன் கிட்டே பேசினே, என் கிட்டே பேசலியான்னு திட்டப் போறா,” என்று சிரித்தார் மதி. 🥰
இந்த அன்பான பயத்துக்கும் வயது நாற்பது.
மனமார்ந்த வாழ்த்துகள், மதி!
#பிறந்தநாள்வாழ்த்துகள் #நாடகஉலகம் #நெருங்கியநண்பர்கள்
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
Dear world, the Disney princess with the Porcupine is from 🇱🇰Sri Lanka!
The video that has gone viral around the world with a little girl who is running in the background of a paddy field with a Porcupine following her is from 🇱🇰Sri Lanka.She speaks in Sinhala in the video.
For anyone travelling from Chennai to Trichy, Madurai or the southern districts, the next three months are going to be a nightmare.
Maintenance work on the Cauvery bridge near Odathurai, Trichy has brought traffic to a crawl. It now takes over an hour to cover just 2 km and that’s before even reaching the bridge.
The bigger question is why do highway authorities begin such massive maintenance works without planning proper alternate routes ? The public is paying the price for poor planning.