அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ் அவர்களின் தலைமையில் திருவாரூர் மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. (1/2)
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனர் அன்புச் சகோதரர் மறைந்த திரு. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷண் விருதினை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு எனது நன்றி.
இதேபோன்று, பத்ம விபூஷண் விருதினைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திருமதி வைஜயந்திமாலா பாலி, திருமதி பத்மா சுப்ரமணியம், பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுள்ள வள்ளி ஒயில் கும்மி ஆட்ட கலைஞர் திரு. பத்திரப்பன், குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, எழுத்தாளர் திரு. ஜோடி குரூஸ், மருத்துவர் நாச்சியார், நாதஸ்வர இசைக் கலைஞர் திரு. சேஷம்பட்டி டி. சிவலிங்கம் ஆகியோருக்கு எனது நல்வாழ்த்துகள்.
அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் கண்டு களிக்க ஏதுவாக அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில தொழில் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்க தி.மு.க. அரசை வலியுறுத்தல்!
தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் இணைந்து அளித்த உற்சாக வரவேற்பு.(1/3)
மலரும் ஆங்கிலப் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், அனைவருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். #NewYear2024
தேனி மாவட்ட அதிமுக சார்பில் முல்லைபெரியார் அணையிலிருந்து 18ஆம் கால்வாய் P.T.R கால்வாய், தந்தைபெரியார் கால்வாய்மூலம் விவசாய பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS ஆணைக்கிணங்க
விடியா திமுக அரசை கண்டித்து நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியலிலும், ஆன்மீகத்திலும், தங்கள் பயணம் தொய்வின்றி தொடர, நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும் தந்து அருள்புரிய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஆன்மீகச் செம்மல், ஆருயிர் அண்ணன் திரு @VPJayapradeep அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது... #தேவர்ஜெயந்தி
இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமைக்குரிய மாபெரும் தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் 116-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையினை முன்னிட்டு, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
இந்தியத் திருநாட்டிலிருந்து ஆங்கிலேயர்களை வெளியேற்ற முதல் போர்ப் பிரகடனம் அறிவித்து, மத நல்லிணக்கத்திற்கு
எடுத்துக்காட்டாக விளங்கிய மருது சகோதரர்களின் 222-வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார் கோவிலில் இன்று மருது சகோதரர்களின் நினைவிடத்தில் எனது வீர வணக்கத்தை செலுத்தினேன்.
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.