நாம் தமிழர் கட்சியின் அரசியல் தேர்தல் வெற்றி, தோல்விகளுக்குள் முடங்குவதும் இல்லை; அரசியல் இலாப, நட்டக் கணக்குகளுக்குள் சுருங்குவதும் இல்லை. இனத்தின் வீழ்ச்சியில் பிறந்த நாங்கள், இனத்தின் நலனுக்காகவே சமரசம் செய்யாது இன்றளவும் நிற்கிறோம். கட்சிக்கான குறைந்தபட்ச ஆதாயம், குறுக்குவழியில் அதிகாரம் என்பதை எப்போதும் நாங்கள் வழியாய் கொள்வதில்லை. அதனால், விளைந்த தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டே மீண்டும் மீண்டும் களத்தில் பாய்கிறோம்.
தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்று மீட்சிக்கான எங்களின் அரசியலுக்கு அங்கீகாரத்தை மக்கள் இன்றைக்கு தராமல் போயிருக்கலாம். வெற்றிக்கோட்டை நாங்கள் தொடாமல் போயிருக்கலாம். அதற்காகக் களத்தைவிட்டு விலகப் போவதுமில்லை; தற்சோர்வு அடைந்து முடங்கப் போவதுமில்லை.
எங்கள் அரசியல் தமிழ்த்தேசிய இனத்தின் நலனுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காலக்கடமை; வரலாற்றுப்பணி! வெற்றி, தோல்வியை முதன்மையாகக் கொண்டு எங்கள் பாதையை அமைத்துக் கொள்ளாமல், நீதியையும், நியாயத்தையும் முதன்மையாக வைத்து முன்நகர்கிறோம்.
எல்லாத் தோல்விகளையும், வலிகளையும் தாங்கும் வல்லமையை, மனவலிமையை தலைவர் பிரபா*கரன் அவர்களிடமிருந்தே பெற்றிருக்கிறோம். 'விழ விழ எழுவோம்! ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்' எனப் போதித்த பிரபா*கரன் எனும் வரலாற்றுப் பெருந்தலைவனே எங்களின் ஆன்மப்பலம்! எங்கள் மனக்காயங்கள் யாவற்றுக்குமான மாமருந்து! எப்போதும் எங்களை முன்நோக்கித் தள்ளும் உந்துவிசை! நாங்கள் போற்றும் எம்மினத்தின் பெருந்தெய்வம்!
நாம் தமிழர் கட்சியும், அண்ணன் சீமானும் எடுத்துரைக்கும் அரசியல் எதிர்கால நலன்களுக்கானது. அந்த அரசியலின் தேவையையும், நியாயத்தையும் காலமும், களச்சூழலும் உறுதியாய் உணர்த்தும்.
அதுவரை, வெற்றிக்களிப்பில் ஏளனம் செய்வோரும், அதிகாரத்திமிரில் அங்கலாய்ப்போரும் எவ்வளவு வேண்டுமானாலும் ஆட்டம் போடட்டும்; பிதற்றித் திரியட்டும். குதிரைப்பேரம் நடத்தி, திரைப்பிம்பத்தை மூலதனமாக்கி வெற்றியைத் திருடியவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குதூகலிக்கட்டும்.
இக்கதாநாயகப் பிம்ப ஆட்சியால் பாதிப்படைந்து மக்கள் உறுதியாய் வீதிக்கு வருவார்கள்; கண்ணீர் சிந்திக் கதறுவார்கள்; மக்களுக்கானத் தலைவனைத் தேடுவார்கள். அன்றைக்கு உண்மையான மாற்று அரசியலுக்கானக் கதவு திறக்கும்!
அதுவரை அண்ணன் சீமானின் கரத்தை இன்னும் இன்னும் இறுகப் பற்றிக் கொள்ளுகிறேன். தலைவரையும், மாவீரர் தெய்வங்களையும் நெஞ்சிலேந்தி மனவலிமையை மென்மேலும் பெருக்கிக் கொள்கிறேன்.
சீமான் தோத்துட்டான் என்கிற சந்தோஷத்தில் பல பேர்..
ஆனால் இந்த மனுஷன் மட்டும் ஒருவேளை நம்பிக்கை இழந்துவிட்டால் இனி மக்கள் பிரச்னைங்களுக்காக, விலைவாசி உயர்வை எதிர்த்து கேக்க,மண்ணுக்காக, நிலமும் நீரும் நஞ்சாவதை குறித்து அக்கறை கொள்ள இனி ஒருத்தனும் வரமாட்டானே என்கிற கவலையில் என் போன்ற சிலர் 😥😥😥
நாதக சீமானைப் பாராட்டுகிறோம்...
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நாதக-வினரை மணிமுத்தாறு ஆற்றுப் பகுதியின் தூய்மைப்படுத்தும் பணியில் மட்டும் அரசு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்- ஐகோர்ட் கிளை அமர்வு.
#TVKGovt #Seeman #NTK #MaduraiHighCourt
இந்தியாவில் இருக்கின்ற கட்சிகளில், தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
இன்றும் திமுக கட்சி நிறுவனங்களிடம் இருந்து நிதி வாங்குகிறது.
178 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக நிறுவனங்களிடம் இருந்து தவெக வாங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களிடம் வெளிப்படையாகத் திரள் நிதி பெற்று கட்சி நடத்துகிறது.
#ntk
#seeman
#tvk
#DMK
"குறுகிய காலத்தில் ராஜினாமா செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்; அல்லது அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்கிறார்கள் என்றால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தச் செலவாகும் 50 கோடி ரூபாயைச் செலுத்திவிட்டுத்தான் டெபாசிட் கட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்." - சீமான்
#Seeman | #NTK
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்நாட்டில் தற்போது தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.
வழக்கம்போல இந்தத் தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களத்தில் எதிர்கொள்கிறது. தேர்தல் களத்தை விட்டு வெளியேறுவது எங்களுடைய அரசியல் அல்ல. தேர்தல் தோல்விகளை நாங்கள் நிரந்தரத் தோல்வியாகப் பார்ப்பதில்லை; தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே பார்க்கிறோம். எப்போதும்போல எமது மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பற்றும் கொண்டு இம்முறையும் தனித்துக் களத்தில் போட்டியிடுகிறோம்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தம்பி கோ.ஜானகிராமன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அன்புத்தங்கை மு.கார்த்திகா, புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதியில் அன்புத்தங்கை ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களம் காண்கிறார்கள்.
எங்களிடம் படை இருக்கிறது; கருத்து இருக்கிறது; களத்தில் நின்று உழைப்பதற்கான வலிமை இருக்கிறது. எல்லாம் இருந்தும் எங்களுக்கிருக்கிற ஒரே பின்னடைவு பொருளாதார வலிமைதான்.
எப்போதுமே எமது மக்கள்தான் சிறுகச் சிறுக நிதிப் பங்களிப்பை அளித்து எங்களை வலிமைப்படுத்தி, அரசியல் களத்தில் பணியாற்ற வைத்திருக்கிறார்கள். இம்முறையும் எமது மக்கள் அதனைச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மக்கள் இயக்கத்திற்கு இனமாகவும், பணமாகவும், வளமாகவும், வலிமையாகவும் மக்கள்தான் துணை நிற்க வேண்டும். ஏனெனில், மக்களிடமிருந்தே மக்களுக்காக வந்த அரசியல் இயக்கம்தான் நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரோ, வெறும் அடையாளமோ அல்ல. அது நாம் பிறந்த பெருமைமிக்க தமிழினத்தின் அடையாளம்.
ஒரு இனத்தின், நிலத்தின் அரசியல் என்பது மொழி, இனம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம் ஆகியவற்றைப் பேசாமல் இருக்க முடியாது. இந்நிலத்தில் மொழி என்றும், இனம் என்றும், இனத்தின் நலம் என்றும், நிலம் என்றும், வளம் என்றும் தொடர்ந்து பேசுகின்ற அரசியல் இயக்கமாக நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது.
எமது மக்கள் பன்னெடுங்காலமாக அனுபவித்து வரும் துன்பங்களையும் துயரங்களையும் எடுத்துப் பேசி, அவற்றிற்கான விடிவையும் முடிவையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு இருக்கிறது.
இந்தத் தேர்தலை ஒரு சாதாரண இடைத்தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் எதற்காக வந்தது என்பதை மக்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பதவியை விட்டு விலகுகிறார்கள். அதன் பிறகு வேறொரு கட்சியில், குறிப்பாக ஆளும் கட்சியில் இணைந்து, மீண்டும் அதே சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.
அப்படியானால் அவர்களுக்கு மக்களுக்கான சேவை முதன்மையா? அல்லது தங்களுக்கான தேவை முதன்மையா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
அதே பதவி! அதே சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு! ஆனால் கட்சியை மட்டும் மாற்றிக்கொண்டு மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடுவது எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிவார்ந்த எமது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவரின் பதவி விலகலால் மீண்டும் ஒரு தேர்தல் மக்கள்மீது திணிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலை நடத்த பல கோடி ரூபாய் மக்கள் பணம் செலவிடப்படுகிறது. நேரமும் காலமும் செலவாகிறது. அதிகாரிகள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. தொடர்புடைய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.
மக்கள் பணம் இப்படித் தேவையில்லாமல் செலவிடப்படுவதற்கு காரணமானவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா?
“ஆளும் கட்சியில் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்” என்று கூறினால், எதிர்க்கட்சி எதற்காக? எதிர்க்கருத்து எதற்காக?
ஒரு சட்டமன்றத்திற்குள் எதிர்க்கருத்தே இல்லாமல் போனால் அது எத்தகைய ஜனநாயகம்?
மக்கள் மன்றத்திற்குள் மாற்றுக்கருத்தைப் பதிவு செய்ய உறுப்பினர்களே இல்லாமல் அனைவரும் ஆளும் கட்சியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலை உருவாவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
நாம் தமிழர் கட்சி முன்வைக்கின்ற அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்று.
மக்கள் கொடுத்த பதவியிலிருந்து இடையில் விலகிவிட்டு கட்சி மாறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், அவருடைய பதவி விலகலால் ஏற்பட்ட இடைத்தேர்தலுக்கான செலவை முதலில் அவரிடமே வசூலிக்க வேண்டும்.
ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவாகிறது என்றால், தனிப்பட்ட அரசியல் விருப்பத்தால் அந்தத் தேர்தலை உருவாக்கியவர் அந்தச் செலவுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
மக்கள் பணத்தில் அந்தச் செலவைச் செய்யக்கூடாது.
அதன் பிறகே தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுத்தொகையைச் செலுத்த அனுமதிக்கும் விதியை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
அப்படியொரு அமைப்பு மாற்றம் வந்தால், மக்கள் கொடுத்த பதவியை எளிதில் யாரும் தூக்கி எறிய மாட்டார்கள். மக்கள் அளித்த பொறுப்பை மதித்து, அந்தப் பதவியில் இருந்து பணியாற்றுவார்கள்.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று, ஒரு நம்பிக்கையோடு வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அந்தப் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, வேறொரு கட்சியில் சேர்ந்துவிட்டு, மீண்டும் அதே பதவிக்கு வந்து வாக்குக் கேட்பது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும்.
“நாங்கள் எங்கு நின்றாலும், எதைச் செய்தாலும் மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்” என்ற மெத்தனப்போக்கோடு மக்களைக் குறைத்து மதிப்பிடுவது ஏற்புடையதல்ல.
இந்தக் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் இந்த இடைத்தேர்தல் களத்தை நாம் தமிழர் கட்சி பயன்படுத்தும்.
பல கட்சிகளுக்கும் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து போராடி வரும் நாம் தமிழர் கட்சிக்குச் சட்டமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை.
மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்றதால் என் மீது மட்டும் நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. எமது பிள்ளைகளும் பல்வேறு வழக்குகளையும் சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 15 ஆண்டுகளில் மக்களின் எந்தப் பிரச்சினையையும் நாம் தவிர்த்துவிட்டோம் என்று சொல்ல முடியாது.
மக்களோடு மக்களாக மழையிலும், பனியிலும், வெயிலிலும் நின்று, மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசி, உறக்கத்தைத் தொலைத்து, அவர்களுக்காகப் போராடியிருக்கிறோம்.
அப்படிப்பட்ட எங்களை இன்று ஆட்சியில் இருப்பவர்கள் “ஜீரோ” என்று சொல்கிறார்கள்.
ஆனால், இந்த ஜீரோவைப் பார்த்துத்தான் அந்த ஹீரோக்கள் பயப்படுகிறார்கள்!
எதுவுமே இல்லாதவர்கள், கட்டுத்தொகையைக்கூட பெற முடியாதவர்கள் என்று எங்களைப் பேசுபவர்கள், நாம் முன்வைத்த அரசியல் இன்று தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம் பேசிய அரசியலின் தேவை இன்று மக்களுக்குப் புரிகிறது!
குடிப்பதற்குத் தூய நீர் இல்லை. உணவு நஞ்சாகிறது. தூய காற்றைச் சுவாசிக்க முடியாத நிலை உருவாகிறது. புவி வெப்பமடைகிறது. பருவநிலை மாறுகிறது.
இவையெல்லாம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே இல்லாதவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த நிலையிலும் நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் தொடர்ந்து இந்த அரசியலை முன்னெடுத்து வருகின்றோம்.
எப்போதும்போல எமது மக்கள் வலிமையாகவும், வளமாகவும், இனமாகவும், பணமாகவும் எம்மோடு இணைந்து நின்று எங்கள் கைகளை வலிமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
நன்றி!
திரள்நிதி திரட்டல்: https://t.co/mO413e5BlI
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
விஜயின் சுயநல அரசியலுக்கு இதுவே உதாரணம்..
40 பேர் #வேலைக்காக நீதிமன்றம் சென்ற இடைக்கால தடை வாங்கிய விஜய்..
ஏன் 12000 பேரின் #வாழ்வாதாரத்திற்கு நீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்க வில்லை..?
நடிகன் எப்போதும் விளம்பர அரசியல்மட்டுமே செய்வான்..
#TVKVijayFails
தலைவன் மட்டும்தான் மக்களுக்கான அரசியல் செய்வான்.
#seeman4tn
காவிரி நதிநீர் உரிமை மீட்க
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு.
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கவிருக்கிறார்.
நாள்: ஆடி 31 ஞாயிற்றுக்கிழமை/16.08.2026 காலை 10 மணி முதல் கலந்தாய்வுக் கூட்டம் பிற்பகல் 12:30 மணி முதல் செய்தியாளர் சந்திப்பு.
இடம்:சென்னை - கிண்டி
லீ ராயல் மெரிடியன் (Le Royal Meridien) உண்டுறை விடுதி.
தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தி X வலைதளத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி மைக்கேல் என்பவரை நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.