ஆளுநரின் அறிவுறுத்தலால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு முறையும், தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டு வரம்பு மீறப்பட்டிருக்கிறது. இது நம்மளுடைய territory. இதனை ஆளுநரிடம் கொடுக்கிற அளவிற்கு என்ன சமரசம் நடத்திருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.
- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவரகள்
#TNAssembly
இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
Route uruttu alert 🚨
- First set of AC Volvo buses for MTC were launched in 2007 by CM Dr. Kalaignar.
- In 2025, the AC bus fleet was expanded by CM @mkstalin.
- CM Stalin also launched TN’s first ever electric fleet of buses.
- In 2026, before elections the Dravida model Government also introduced app based ultra premium AC gold buses.
- CM Stalin also launched first ever fully Air conditioned bus terminus at Panjapur, Trichy and fully AC bus stops at Kolathur.
- CM Stalin also launched a bus pass for unlimited travel in all buses @ ₹2000 pm.
📖Let me tell you a kutti story also about how DMK built the state transport corporation:
🚍Till 1971, buses were largely private in TN. People were unable to afford many routes. Kalaignar as CM had a vision to take over transport & make it affordable. He passed the Tamil Nadu Fleet Operators Stage Carriages (Acquisition) Act, 1971, took over private buses and established the Pallavan Transport Corporation.
Now here’s the masterstroke: Till then other States were establishing their State corporations under a Union law - Road Transport Corporation Act of 1950. This Act provided for appointment of directors by the Union government & needed Union’s approval for rule making etc.
🌄For the first time, Kalaignar registered a state transport corporation under the Companies Act and ensured that there would be complete State control over the PTC. PTC was Tamil Nadu’s.
Bus-ல கூட Federalism பாதுகாத்தவர் Dr. Kalaignar! 🔥
இத GenZ-கு சொல்லுங்க!
@DMKITwing
#DMK #dmk_genz #SETC #TNSTC #ACBus
இன்று பத்திரிகையாளர் திரு. R.K. ராதாகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் உருவான "Faceless People – The Journey of Tamil Refugees in India" ஆவணப்படத்தை இன்று கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் பயணத்தை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ள இந்த ஆவணப்படம் மனதை நெகிழச் செய்கிறது. சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய இக்கதையை நேர்மையாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@RKRadhakrishn
#WATCH | சென்னை - சேப்பாக்கத்தில் அமைச்சர் ஆனந்த் பங்கேற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மின்சாரம் திருட்டு!
அந்த பகுதியில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் மூலம் சட்ட விரோதமாக மின்சாரத்தை திருடி நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் அதிர்ச்சி.
#SunNews | #TVKVijay | #BussyAnand
#அரசியல்_அறிவோம்
திமுக கூட்டணியில் இருந்து
காங்கிரஸ் விலகியது...
கம்யூனிஸ்ட்கள் விலகியது...
விசிக விலகியது...
IUML விலகியது...
மதிமுக விலகியது...
விலகிய கட்சிகள் அனைத்தும் தவெக கட்சியுடன் கூட்டணியில் இணைகிறது.
இதே தவெக, தேர்தலுக்கு முன்பு இந்த கட்சிகளை கூட்டணிக்கு அழைத்த போது, இந்தக் கட்சிகள் ஏன் செல்லவில்லை?
வெற்றி பெறுவோமா என்கிற பயம்... தனக்கு வெற்றி பெற திமுக தான் சரி என்று எண்ணி தவெக வை வாய்க்கு வந்தபடி திட்டிய கட்சிகள் தான் இன்று தவெக வை வாயார புகழ்கின்றன...
சரி... இந்தக் கட்சிகள்...
தவெக வெற்றிபெறவில்லை என்றால் என்ன பேசியிருக்கும்?
திமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
அதிமுக வெற்றி பெற்றிருந்தால் என்ன பேசி இருக்கும்?
பிரதான கட்சிகளாக தேர்தலை சந்தித்த கட்சிகளில்....
அதிமுக அன்றிலிருந்து இன்று வரை தனது தலைமையின் மீதான கேள்விக்குறிகளோடே தொடர்கிறது.
தவெக அன்றிலிருந்து இன்று வரை திமுக வை திட்டியே காரியத்தை சாதிக்கிறது. போதாக்குறைக்கு திட்டுவதற்கு ஆள் சேர்க்கும் குதிரை பேர கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் திணித்துள்ளது.
திமுக மட்டுமே தன்னிலை தாழாமல் அன்றும் இன்றும் மக்கள் நலன் என்ற ஒற்றை புள்ளியில் ஜனநாயக சக்தியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் யார் பச்சோந்திகள், யார் அரசியல் விபச்சாரிகள், யார் அரசியல் வியாபாரிகள் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத பேரன்பின் இருப்பிடம்... அப்பா!
விரல் பிடித்து நடக்கக் கற்றுக்கொடுப்பது முதல், பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகவும் அவர்களின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் இறுதிவரை தூணாய் நிற்கும் தியாக உள்ளம்தான் அப்பா.
அன்பின் இலக்கணமாய், அறிவின் இருப்பிடமாய், நம் வாழ்வின் வழிகாட்டியாய் இருக்கும் உலகிலுள்ள அனைத்து தந்தையருக்கும் நெஞ்சம் நிறைந்த தந்தையர் தின வாழ்த்துகள்!
பத்திரிகைச் செய்தி
18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் @SDPofIndia கட்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தி:
சிறுபான்மையினர் உரிமைகளுக்காகவும், சமூக அமைதி - சமூகநீதி - சம வாய்ப்பு - சமத்துவம், எளிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட மேலான கோட்பாடுகளை இலக்காகக் கொண்டு இயங்கி வரும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) 18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துகள்!
எஸ்டிபிஐ கட்சி, அரசியல் ரீதியாகப் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வளர்ந்து வந்திருக்கிறது. இதன் வளர்ச்சிக்கும், ஆக்கரீதியான அரசியல் பங்களிப்புக்கும் பாடுபட்டு வரும் எஸ்டிபிஐ கட்சியின் தேசியத் தலைவர் திரு. எம்.கே. ஃபைஜி அவர்கள், மாநிலத் தலைவர் திரு. @nellai_mubarak அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்று, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த போதிலும், நீண்டகாலம் தோழமையுடன் இருப்பதைப் போன்ற உணர்வுடன் @sdpitnhq கட்சியின் நிர்வாகிகளும், தோழர்களும் முழு மூச்சுடன் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைத்தனர். பரப்புரைக்காக நான் சென்ற இடங்களில் எல்லாம், எஸ்டிபிஐ கட்சியின் தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது ஆதரவையும், நல்லுணர்வையும் வெளிப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன்.
எஸ்டிபிஐ கட்சி எளிய மக்களின் மேம்பாட்டுக்காக என்றென்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து பாடுபட்டு வரவும், அரசியல்ரீதியாக அதன் பயணத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்வதோடு, சிறுபான்மை மக்கள் நலன் மீதான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அக்கறையும், ஆதரவும் என்றென்றும் தொடரும் என்பதையும் தோழமையுணர்வோடு இந்த நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓட்டமும் நடையுமாக போய்க்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், மனம் இளைப்பாற ஒரு மரத்தடி நிழலில் உங்களின் நினைவுகளுடனே அமர்கிறேன்.
காலை இளஞ்சூரியனைப் போல மாறாத புன்சிரிப்புடன் எச்சூழலிலும் மலர்ந்திருக்கும் உங்கள் முகத்தை நினைத்துவிட்டு, மீண்டும் தொடங்குகிறேன் எனது பயணத்தை!
தலைவராக, ஆசானாக, தோழனாக என்றும் என்னுடன் பயணிக்கும் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துகள்.
கண்ணீர் வருகிறது...
இன்று ஒரு சிறுமி மகிழ்ச்சியுடன் அணிந்திருக்கும் இந்தக் கண்ணாடி, வெறும் கண்ணாடி அல்ல...
அது ஒரு குழந்தையின் கல்விக்கான உரிமை.
அது ஒரு குடும்பத்தின் நிம்மதி.
அது ஒரு அரசின் மனிதநேயம்.
பள்ளி மாணவர்களின் பார்வைக் குறைபாட்டை கண்டறிந்து, அவர்கள் கல்வியில் பின்தங்காமல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டத்தின் பலன் இது.
இன்று இதைப் பார்த்து பலர் ஆச்சரியப்படுகிறார்கள்...
ஆனால் ஒரு குழந்தையின் கண்களில் ஒளியேற்றும் சிந்தனை ஒரே நாளில் பிறந்ததல்ல.
மக்களைப் பற்றி சிந்தித்த ஒரு தலைமையின் கனவு அது.
தோல்வியின் வலியைவிட, நாம் செய்த மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் போதுமான அளவு கொண்டு சேர்க்கத் தவறியதே அதிக வலி.
பெயர்களை மாற்றலாம்...
விளம்பரங்களை மாற்றலாம்...
ஆனால் மக்களின் வாழ்க்கையை மாற்றிய திட்டங்களின் வரலாற்றை மாற்ற முடியாது.
ஒரு குழந்தையின் புன்னகையில், ஒரு அரசின் சாதனை தெரிகிறது.
அதுதான் திராவிட மாடல்.
அதுதான் மக்கள் நல அரசியல். ❤️🖤
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் #திராவிடமாடல் #மக்கள்நலத்திட்டங்கள் #சமூகநீதி #தமிழகம் #MKStalin #DravidianModel #கண்ணொளிகாப்போம்
கடந்த திமுக ஆட்சியில் மின் வெட்டுகளே இல்லை..
உபரி மின்சாரம் 308 கோடி unitகள் விற்கப்பட்டு 535 கோடி வருமானம் ஈட்டியிருக்கிறது @TANGEDCO_Offcl.
இந்த விவரம் வெள்ளை அறிக்கையில் இல்லை என்றால் அது வெறும் அறிக்கை தான் என்றறிக!
தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாத காலத்தில், ஓர் ஆட்சிக்காலம் முழுதும், முன்பிருந்தவர்கள் எண்ணிக்கூட பார்த்திராத திட்டங்கள் அத்தனையும் இன்று செயல் வடிவத்தில்.
விளம்பரங்கள் இல்லை! படாடோபங்கள் இல்லை! எளிமை! எளிமை! எங்கெங்கும், எல்லாவற்றிலும்! தலைமுறைகளைத் தாண்டியும் நிற்கப்போகும் முற்போக்கு நடவடிக்கைகள்!
#DMK
#JustNow | "நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" -மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #MKStalin | #NaanMudhalvan | @mkstalin