Mr . Praveen Chakravarthi, … post her complete speech .
This was DMK and M.P Kanimozhi’s demand .
https://t.co/pU4x78Pib9
Withdraw these three bills immediately and refer them to a joint parliamentary committee that includes representation from all states and all parties..
Convene a constitutional conference of all state chief ministers to deliberate on the delimitation framework before any legislation is enacted..
its amendment must be guided by principle, anchored by fairness, restraint, and fidelity to the republic's enduring integrity
- M.P Kanimozhi
@pravchak don’t behave like a political pimp by altering her speech.
கேவலம் @manickamtagore
காங் கட்சி @RahulGandhi பேசும் முன்பே திமுகவின் @mkstalin தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தை 05.03.2025 கூட்டி தெளிவாக தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18% குறைக்க கூடாது என்று அறிவித்தார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து இம்மியளவும் இன்றும் திமுக மாறவில்லை
கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்த மசோதாவில் மக்கள் தொகை அடிப்படையில் Delimitation என்பதால் திமுக எதிர்த்து வாக்களித்தது
இப்போது வரை Draft Bill வரவில்லை. ஒருவேளை அதிலும் மக்கள்தொகை அடிப்படையில் எனில் திமுக எதிர்க்கும்.
ஆனால் 7.18% உறுதி செய்தால் திமுக மசோதாவை ஆதரிக்கும்
இந்திய அளவில் பாஜகவை எதிர்க்க வக்கற்று நிற்கும் காங் கட்சியின் கேடுகெட்ட அரசியல் விளையாட்டு கூட்டத்துக்கு எல்லாம் திமுக வர வேண்டிய அவசியம் இல்லை
முடிந்தால் உங்கள் கூட்டணி கட்சித் தலைவர் @TVKVijayHQ பாஜகவை எதிர்த்து 7.18% பிரதிநிதித்துவம் உறுதிசெய்ய வேண்டும் என்று பேச சொல்லுங்கள் பார்ப்போம்.
Delimitation isn’t just about Tamil Nadu—it affects all of South India. A democratic process should not penalise states that have successfully managed population growth, led in development, and made significant contributions to national progress. We need a fair, transparent, and equitable approach that upholds true federalism.
#FairDelimitationForTN
காவிரி விவகாரத்தில் இருந்து திசைதிருப்ப #Delimitation பிரச்சனையை கையிலெடுத்து இருக்கிறது Take Diversion அரசு!
#FairDelimitation-க்காக இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தது திமுக. அப்போது ‘விசில் கோலம்’ போட்டுக்கொண்டு இருந்தவர்கள், இப்போது திமுகவிற்கு ‘மாநில உரிமை’ பாடம் எடுக்க வேண்டாம்!
@mkstalin@arivalayam
Several Christian dignitaries called on me at my residence today and expressed their appreciation for the efforts being undertaken by the DMK in opposing the #FCRA Amendment Bill.
கிறித்துவ சமயப் பெரியோர்கள் பலர் இன்று எனது இல்லத்தில் என்னைச் சந்தித்து, #FCRA திருத்த மசோதாவை எதிர்த்து தி.மு.க. மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; இதில் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை! நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது!
மேகதாது அணைக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் M.P.க்களுடன் இணைந்து ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வருவார்களா?
- கழகத் துணைப் பொதுச் செயலாளர் திருமிகு கனிமொழி கருணாநிதி அறிக்கை.
தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களைஅழைத்து நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தையும் சென்னையில் நடத்திக் காட்டினார். ‘தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் எங்கள் கழகத் தலைவர் ஓரணியில் திரட்டிக் காட்டினார்.
அனைவரது எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டமுன்வரைவை பா.ஜ.க. கொண்டுவந்தபோது, சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்கு இடையிலும் இதனை எதிர்த்துப் போராடினார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக் கொடி ஏற்றி, சட்ட வரைவின் நகலைக் கொளுத்தினார். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாமல் தோல்வியடையச் செய்தார்.
தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் - அது இன்னும் கையில் கிடைக்கப்பெறாத நிலையில், இதில் புதிதாக விவாதிக்கவும் எதுவும் இல்லை. தமிழ்நாட்டின் நிபந்தனைகளை ஏற்கனவே நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் வாயிலாகத் தெரிவித்துவிட்டோம்:
➢ 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று ஒன்றிய அரசு உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
➢ மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
➢ தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது.
➢ தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
அந்த நிலைப்பாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் இப்போதும் உறுதியாக நிற்கிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இப்போதும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கும்போது இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அவர்களை மாற்றுவதற்குத்தான் இந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறதா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரான, நமது பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையிலான தொகுதி மறுவரையறையைத் தி.மு.க. நிச்சயம் எதிர்க்கும். அதில் எள்ளளவும் எங்களிடம் மாற்றம் இல்லை.
ஆனால், காவிரிப் பிரச்சினைக்காகத் தமிழ்நாடு முழுவதும் தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. மேகதாது அணை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகிறார்கள். அனைவரும் கேட்கும் அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தாமல், அதுகுறித்து வாயும் திறக்காமல் த.வெ.க. அரசுகள்ள மவுனம் காக்கிறது. யாரும் கேட்காமலேயே அவசர அவசரமாகத் தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்தைத் த.வெ.க. அரசு தற்போது கூட்டியிருப்பது காவிரி பிரச்சினையில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் அரசியல் நாடகமேயன்றி வேறில்லை.
தொகுதி மறுவரையறைக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்க வேண்டுமென்றால் அதற்கு முன்பாக தமிழ்நாட்டின் உயிர்ப்பிரச்சினையான மேகதாது அணை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என நிபந்தனை விதித்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் நேற்று தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்திவிட்டார். எனவே, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நிராகரித்துள்ள த.வெ.க. அரசின் இன்றைய கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
தமிழ்நாட்டின் காவிரி உரிமையிலும் டெல்டா உழவர்கள் மீதும் இந்த அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்கிறதென்றால், மேகதாது அணைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கிடத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகளை அனுப்ப மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தயாரா?
#WATCH | “Delimitation Bill என்னவென்றே தெரியாமல் கூட்டத்தை கூட்டுவது கேலிக்கூத்து”
முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு
#SunNews | #Delimitation | #TVKVijay | @dmk_raja
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தொகுதி மறுவரையறை குறித்தும், காவிரி - மேகதாது அணை பிரச்சனையை திசைதிருப்ப தவெக செய்துவரும் அரசியல் நாடகம் குறித்தும் விளக்கிய போது.
மக்களோடு அமர்ந்து பயணம் செய்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தன் அருகில் கூட யாரும் அமரக்கூடாது என்று உத்தரவிட்டு, ரீல்ஸ் எடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு சீன் போடும் முதலமைச்சர் நம்ம #SofaModel CM சார்.
மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்த மின்துறை அமைச்சருக்கு திமுக முன்னாள் அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்கள்
இன்று தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நலிவடைந்து கிடந்த மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் எங்களின் கழக தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மின்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்கி சீரான மின் விநியோகத்திற்கு வித்திட்டார்.
கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வந்துள்ளன. அப்படி மின் தேவை அதிகரித்த போதும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையானது 2011-16 இல் 56,361 கோடி , 2016-21 இல் 58,534 கோடி ரூபாய். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது. 37% , 3.5% , 16% என அந்த கட்டண உயர்வு இருந்தது. அப்படி மின் கட்டணம் ஏற்றப்பட்ட போது கூட வருவாய் பற்றாக்குறை என்பது ரூ. 56,000 கோடி. அதற்கடுத்து ரூ58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த எங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் வருவாயானது ரூ 1,48,77, 856 உயர்ந்து ரூ.4,97,996 ஆக இருந்தது. வருவாய் பற்றாக்குறை ரூ 34,447 கோடியாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 58,000
வருவாய் அதிகரித்த போது செலவும் அதிகரித்துள்ளது பற்றி கூறும் மின்சாரத்துறை அமைச்சர் அந்த செலவுகள் எதற்காக செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டார். அதையும் வெளிப்படையாக மக்கள் முன் கூறி இருக்க வேண்டும் ஆனால் அதை தவெக அரசு மறைத்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 13.5% வட்டி க்கு பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் சீர் படுத்தி 9.5% வட்டி என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1200-1500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. அதேபோல பிளை ஆஸ் (fly ash) விற்பனை ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் என்றிருந்ததை ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் உயர்த்தப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மின் தேவை என்பது 94,947 மில்லியன் யுனிட் அதுவே 2020-21 இல் 93,344 , 2021-22 இல் 98,674 மில்லியன் யுனிட், 2022-23 இல் 1,03,546 மில்லியன் யுனிட், 2023-24 இல் 1,11,504 மில்லியன் யுனிட், 2024-25 இல் 1,16,813 மில்லியன் யுனிட் ஆக 94,947 மில்லியன் யுனிட் லிருந்து 1,16,813 மில்லியன் யுனிட் ஆக மின் தேவை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 25,000 மில்லியன் யுனிட் அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கும் போது அதற்கான கொள்முதலை அதிகரிக்க வேண்டும் , உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான செலவினம் என்பதும் அதிகரித்துள்ளது இதனை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருக்க வேண்டும்.
அதேபோல இந்த வெள்ளை அறிக்கையில் திமுக வின் திட்டங்களையே பட்டியலிட்டுள்ளனர்.
2021 இல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் 1,59,731கோடி இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே 75,000 கோடி கட்டி உள்ளோம். இதை கூறாமல் மறைத்துள்ளனர்
அதே போல அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜஸ்தான் மின் மாற்றி கொள்முதலோடு தமிழ்நாட்டை ஒப்பிடுவதே தவறானது. நமது டெண்டர் முறை வேறு அவர்களுடையது வேறு. நாம் 25 ஆண்டுகள் நிலைத்திருக்க கூடிய தரமான மின் மாற்றிகளை வாங்குகிறோம். ஆனால் அவர்களுடைய மின்மாற்றி வாழ் நாள் 16 ஆண்டுகள் தான். அதே போல ஐந்தாண்டுகள் மெயிண்டனன்ஸ் அந்நிறுவனங்களின் பொறுப்பு அதற்காக நாம் 5% நிதியை பிடித்தம் செய்து வைத்துள்ளோம். ஆனால் ராஜஸ்தான் அரசு மூன்று வருடங்கள் மெயிண்டனன்ஸ், 0.5% நிதி மட்டுமே பிடித்தம் செய்கிறார்கள். தரமான பொருளுக்கும் டூப்ளிகேட் பொருளுக்குமான விலை வேறு வேறு ஆக தான் இருக்கும். நாம் தரமான மின் மாற்றியை வாங்குகி உள்ளோம். அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக நடந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள தர அளவுகளை குறைக்காமல் , நிபந்தனைகளை மாற்றாமல் புதிய அரசு எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.
அதேபோல கடந்த ஆட்சியில் எந்த கட்டமைப்பும் செய்யவில்லை என சொல்கிறார் அமைச்சர் ஆனால் அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையிலேயே எங்களது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு நடவடிக்கைகளும், புதிய மின் உற்பத்தி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. 99,573 மின்மாற்றிகள் புதியதாக நிறுவப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கையிலேயே கூறியுள்ளார்கள். 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இப்படி வெள்ளை அறிக்கையிலேயே நாங்கள் செய்த திட்டங்கள் இடம் பெற்றிருந்தும் அதை திரித்து அமைச்சர் பேசி உள்ளார்.
வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 3 , உடன் குடி மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன.
எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் 75% நிறைவு பெற்றது.;
குண்டாறு மின் திட்ட பணிகள் 85% முடிந்துவிட்டது; கொல்லிமலை மின் திட்டம் 90% முடிந்துவிட்டது.
சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் tnpsc தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படி திமுக அரசு செய்த செயல்களுக்கு தங்களின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகின்றனர். ஏன் இதனை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்கவில்லை.
மேலும் கடந்த ஆட்சியில் மின்வாரியத்துறை தொடர்பாக எங்கள் தலைவரது
குடும்பத்தையோ, எதிர்க்கட்சி தலைவர் அவர்களின நண்பர்களையோ இணைத்து அவதூறு பரப்பினால் அவர்கள் மீீீது
வழக்கு தொடுக்கப்படும்.
இப்போது முதல்வரின் தனி செயலர் ஆக நியமிக்கப்பட்டுள்ள அவரது சினிமா pro வான ஜெகதீஷ் தான் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் பார்க்கிறார் என சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறார்களா.?
மின் வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதை தீர்க்க ஆய்வுக் கூட்டமே நடத்தவில்லை . அதை நான் எடுத்து சொல்லி கேள்வி கேட்டும் இன்று வரை பதில் இல்லை. தங்களின் நிர்வாகத் திறமை யின்மையை மூடி மறைக்க திமுக மீது ஆதாரமற்ற அவதூறுகளை கூறிக்கொண்டு இருக்காமல் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்த அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய கீதத்தை எத்தனை முறை போடுறீங்களோ அதை விட ஒரு முறை கூடுதலாக தமிழ்தாய் வாழ்த்தையும் பாட வேண்டும்னு ஆளுநர்கிட்ட உத்தரவு வாங்கிட்டு பாடுங்க இனி
- எதிர்க்கட்சித் தலைவர் 🔥🔥
திராவிட மாடல் ஆட்சி பொற்கால ஆட்சி!
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகள் பொற்கால ஆட்சியைத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சியைத் தமிழ்நாட்டில் செதுக்கினார்.
- அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பிறகு ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் பேட்டி!
#DMK #MKStalin #DravidianModel #Athiyaman #AathithamilarPeravai #Annaarivalayam #Tamilnadu #KalaignarSeithigal