கழகத் தலைவர் அவர்களின் அன்பிற்கினிய நண்பர், கழக இளைஞரணி மேனாள் மாநில துணைச் செயலாளர் அப்பா அன்பில் பொய்யாமொழி அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாள்.
திருச்சி அன்பு நகரில் உள்ள இல்லத்தில் அப்பாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
திருச்சி(தெ) மாவட்டக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்பா அன்பில் பொய்யாமொழி அவர்களின் திருவுருவப் படத்திற்கு, மாவட்டக் கழக உடன்பிறப்புகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
‘எனது கண்ணின் கருவிழி’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நெகிழ்ச்சியோடு போற்றப்பட்டவரும்; தமிழ்நாட்டின் குரலாக நாடாளுமன்றத்திலும், இந்தியாவின் குரலாக உலக அரங்கிலும் ஒலித்தவருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாள்!
திராவிட இயக்கத் தீரரான அவரது புகழ் ஓங்குக…
ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் UDISE+ 2025–2026 அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ள தரவுகள், கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பலனையும்; செயல்படுத்திய திட்டங்களின் தாக்கத்தையும் உணர்த்துகின்றன.
திராவிட மாடல் போட்டுக் கொடுத்த தடத்தில் பயணித்தால், இன்னும் சிறப்பான முன்னேற்றங்கள் பள்ளிக்கல்வியில் நிகழும் என்பதற்கு இதுவொரு முன்னுதாரணம்.
#education
திராவிட இயக்கத் தீரர் - தி.மு.கவின் தளகர்த்தர் புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பில் மாலை அணிவித்து வணங்கினோம்.
#Anbil
திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று முற்பகலில் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து எடுத்துரைத்து, செயற்குழு உறுப்பினர்களோடு கலந்துரையாடினோம்.
இந்தக் கூட்டத்தில்
🙏🏽 கழக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமித்த கழகத்தலைவர் அவர்களுக்கு நன்றி,
✊ கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தியுள்ளபடி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு விடுவித்திட வேண்டும்,
🤝 திருச்சி(தெ) மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பறை சட்டமன்ற தொகுதிகளில் கழக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி,
🙌 மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயல்படுவதை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன்னுடைய முதல் உரையிலேயே பல்வேறு கேள்விகளை எழுப்பி நிரூபித்திருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்... ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
மேலும், சிறப்புத் தீர்மானமாக "கழகத் தலைவர் அவர்கள், #திருச்சி_கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும்" என்றும் நிறைவேற்றி உள்ளோம்.
#Trichy_South_DMK
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
எனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாக புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த என் தாய்வீடான #திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை. எப்போதும்போல எனது தாய்வீட்டு மக்களை போற்றுவேன்; கொண்டாடுவேன். அவர்களில் ஒருவனாக அனைவரின் நலனுக்காக என்றும் குரல் கொடுப்பது என் பணி.
திராவிட மாடல் அரசில் திருவெறும்பூருக்கு நாம் கொண்டுவந்த தொகுதியின் புதிய அடையாளங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல துணை நிற்போம்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள எனது அரசியல் ஆசான் கழகத் தலைவர் அவர்களின் வழியில் மக்கள் பணி என்றும் தொடரும். 🖤❤️
உழைப்பு எனும் உன்னதத்தின் மூலம் உலகிற்கு வளம் சேர்க்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்…
வளர்ச்சியின் முதுகெலும்பாக திகழும் உழைப்பாளர்களை என்றென்றும் போற்றுவோம்; அவர்தம் உரிமைகளை நிலைநாட்டுவோம்.
#LabourDay#MayDay
உழைப்பாளர் நாள் வாழ்த்துகள்!
உழைப்பையும், உழைப்போரையும் கொண்டாடும் இந்த மே நாளில், திராவிட முன்னேற்றக் கழகம் தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக என்றென்றும் திகழ்ந்திடும் என்ற உறுதியையும், உழைக்கும் தோழர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது உழைப்பாளர் நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#MayDay