அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நேற்றைய தினம் அண்ணன் சீமான் அவர்கள் ஏறத்தாழ 1.15 மணி நேரத்துக்கு மேல் உரையாற்றினார். அதில் ஆளுங்கட்சியான தவெக குறித்துப் பேசியது மிஞ்சிப் போனால் 5 - 8 நிமிடங்கள் இருக்கும். ஊடகங்கள் அந்தப் பேச்சை மட்டும்தான் செய்தி ஆக்கியிருக்கின்றன.
ஈழம் குறித்து, மாவீரர்கள் குறித்து, இனப்படுகொலை குறித்து, சிங்கள இனவாதம் குறித்து, பன்னாட்டுச்சூழல் குறித்து பேசியதை எல்லாம் செய்தி ஆக்கவில்லை. அது எங்களுடைய பிழை இல்லை; ஊடகங்களின் பிழை.
உண்மை இப்படியிருக்க, அண்ணன் சீமான் அவர்களின் பேச்சை முழுதாகக்கூட பார்க்காது, நுனிப்புல் மேய்வது போல, கருத்துசொல்கிறேன் பேர்வழி என அரைவேக்காட்டுத்தனமாக எதையாவது பேசி உளறிக் கொட்டுவது! ரீல்ஸ் பாத்துட்டு, அரசியல் பேசுவது!
அதுசரி சகோதரா! இவ்வளவு அரசியல் அறிவை வைத்துக் கொண்டு ஏன் X தளத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்குறீர்கள்? நீங்கள் ஏன் காட்சி ஊடகங்கள் நடத்தும் தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகராகப் பங்கெடுத்து, உங்கள் அரசியல் அறிவை தமிழ் கூறும் நல்லுலகுக்குக் கொடையாக அளிக்கக் கூடாது?
தவெகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்கள் பல நேரங்களில் விவாதங்களுக்கு வருவதில்லை. அந்த நேரம் அரசியல் விமர்சகர்கள்தான் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துப் பேசுகிறார்கள். அப்படி நீங்களும் அரசியல் விமர்சகராக ஏன் வரக்கூடாது? அங்கு வந்து எங்கள் மீதான விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் வையுங்கள். தவெகவையும் ஆதரித்துப் பேசுங்கள். உங்களின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கவும், உங்களின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றவும் காத்திருக்கிறோம். அங்கு உங்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் சகோதரா!
விஜய்யையே முதல்வராக ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு, உங்களை அரசியல் விமர்சகராக ஏற்றுக் கொள்ளாதா என்ன?
ஆகவே, தமிழ்நாட்டு காட்சி ஊடகங்களே! ஒரு அற்புதமான அரசியல் விமர்சகர் கிடைத்திருக்கிறார். இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விட்டுவிடாதீர்கள்.
அவராக முன்வந்து ஆதரவு கொடுத்தார் என வீடியோ வெளியிட்டு தூய சக்தி என தன்னை காட்டி கொள்ள முயற்சி செய்யும் TVK தரப்பிடம் காவல்துறை கேட்டுகும் கேள்வி
ஒரு கட்சி MLA விடம் இப்படி காருக்குள் வைத்து தான் எழுதி வாங்குவதா? அப்படி தான் கம்யூனிஸ்ட் கட்சி செய்தாகளா? இல்லை காங்கிரஸ் 5 MLA இப்படி தான் காருக்குள் வைத்து எழுதி வாங்கினீர்களா? பின் எதற்கு காருக்குள் வைத்து எழுதி யாருக்கும் தெரியாமல் எழுதி வாங்குகிறீர்? சரி அவர் கட்சி தலைமை முழு சம்மதத்தோடு என்றால் அவர்கள் கட்சி லெட்டர் பேடில் கட்சி ஒப்புதலோடு வாங்கலாமே? அது என்ன ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வாங்குகிறீர்?
ஆகவே வெள்ளை தாளில் யாருக்கும் தெரியாமல் காருக்குள் வைத்து எழுத சொல்லி அதை வீடியோ எடுத்து வாங்கியுள்ளீர்.. இது பெரிய பித்தலாட்டம். tvk மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
தஞ்சை TVK வெற்றி பெற்ற விஜய் சரவணன் மகிழ்ச்சியில் ஆடிய வீடியோ.. எதாவது பொறுப்பு உணர்வு என்று 1% இருந்தா இப்படி திரிவானா? வீட்டில் போய் அடிச்சு படு.. ஆனா பொது வெளியில் ஆட்டம் போடுவேன் என்றால் இவன் மன நிலை எப்படி பட்டதாக இருக்கும்?
இவர் மீது விஜய் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி.
ராஜா பேரான் promote பண்ண product பற்றி அவதூறு பரப்பி அவர்கிட்ட அடி வாங்கியிருக்கான் இந்த ஈத்தர அவதூறு டாய்லி @itsalden_offl
சாட்டை மீதும் அண்ணன் சீமான் மீதும் பரப்பிய அவதூறுக்கு ஆதாரம் கேட்டா அதை மடைமாற்ற ராஜா பேரானிடம் இதற்கு முன்னாடி நடந்த தனிப்பட்ட சண்டையை தூக்கிட்டு வர்ரான்!