இரு நாட்டு பகையை பேசி தீர்க்கின்றனர்.அதே போல் பேசி தீர்க்கலாம் என்று நினைத்தேன்.
அண்ணே கோர்ட்க்கு போகணும்.டைம் ஆச்சு..
என்ன கேசு?
உங்க டைவர்ஸ் கேசுதான்.
எனக்கு ஒரு விசயம் புரியல.
இந்த கட்சிதான் எனக்கு வேணும் இந்த எம்.எல்.ஏ தான் எனக்கு வேணும்னு ஒவ்வொரு குடிமகனும் பார்த்து பார்த்து ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தா இவங்க என்னம்மோ அவங்க அப்பன் வீட்டு சொத்து மாதிரி ஆதரவு ந்னு கொண்டு போய் கொடுக்கிறாங்க.
தவெக க்கு போன காங்5+கம்யூ2+ விசிக2+ ஐ யூ எம் எல் 2 எல்லாம் தவெகவை வேண்டாம்ன்னு சொன்ன மக்களோட ஓட்டு தானே.
அதிமுக ல இன்னிக்கு 30 வேட்பாளர்கள் தவெக போறாங்கன்னா அவங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தவெக வேண்டாம்ன்னு ஓட்டு போட்டவங்க தானே.
இப்படி மக்களை ஏமாற்றலாமா? யார் தலைக்கு யார் விலை வைப்பது? ஒவ்வொரு ஓட்டா வித்தா அது தேர்தல் முறைகேடு ஒட்டுமொத்தமா கொண்டு போய் கொட்டுனா அது நியாயமா? இங்க மக்களின் குரலுக்கு மரியாதையே இல்லையா?.
என்ன சட்டம்? என்ன நியாயம்?
-Zabinath K
நல்ல ஃபில்டர் காஃபி தயாரிப்பது எப்படி என்று நண்பரொருவர் கேட்டிருந்தார்.
இப்போதெல்லாம் முக்கூட்டுக்கு முக்கூட்டு ஃபில்டர் காஃபிக் கடை என்று போட்டு அங்கே பெரும்பாலும் இன்ஸ்டண்ட் காஃபியைத் தந்துத் தொலைக்கிறார்கள்.
அதையும் மீறி சில கடைக���ில் நிஜமாகவே ஆளுயர ஃபில்டரெல்லாம் வைத்து அதில் காஃபித்தூளையும், வெந்நீரையும் ஊற்றி அவசர அவசரமாக அதில் கிடைக்கும் டிகாக்���ஷனை வைத்து காபி என்ற பெயரில் ஒரு கண்ராவியைக் கொடுக்கிறார்கள்.
வேறு சில கடைகளில் இந்தப் பிரச்னையே வேண்டாம் என்று சர்க்கரையை அள்ளித் தெளித்து காஃபி தருவார்கள். பாயசம் அளவிற்கு இல்லையென்றாலும் அதை விட அரை ஸ்பூன் கம்மியாக இருக்கும் சர்க்கரையின் தித்திப்பு அந்த காஃபியைக் கெடுத்து விடும்.
நல்லதொரு ஃபில்டர் காஃபி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
ஆவி பறக்க டபரா, டம்ப்ளரில் காஃ��ியை நுரை ததும்ப தரும் போது லேசாக ஒரு ஆற்று ஆற்றி டபராவிலிருந்து.. கவனிக்க.. டபராவிலிருந்து எடுத்து முதலில் நாக்கின் நடுவில் ஊற்ற வேண்டும். ரொம்பவும் கொதிக்கக் கூடாது. ரொம்பவும் ஆறி விடவும் கூடாது. அந்தச் சூடு சுரீரென்று நாக்கில் பட்டு மூளையில் சுருக்கென அடிக்க வேண்டும். அதற்கடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக டம்ப்ளரில் இருந்து காஃபியைக் குடிக்க வேண்டும்.
சிலருக்கு டம்பளரில் உதட��� வைத்துச் சீப்பிக் குடிக்கப் பிடிக்கும். சிலருக்கு டம்ப்ளரைத் தூக்கி வாயில் படாமல் ஊற்றிக் குடிக்கப் பிடிக்கும். இரண்டுமே இரண்டு வித ருசியைத் தரும். அந்தக் காலத்தில் வாயில் படும்படி வைத்துக் குடித்தால் திட்டு விழும். இப்போதெல்லாம் தூக்கிக் குடித்தால் ஏதோ வேற்று கிரக ஜந்துவைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள்.
அந்தக் காலத்தில் எல்லாம் காஃபிக் கொட்டையை வாங்கி வந்து அதை வறுத்து, அவ்வப்போது கையால் அரைத்து அதில் டிகாக்ஷன் போட்டு காஃபி தயாரிப்பார்கள். அதற்கு ஈடு கட்டும் விதமாக வீட்டிலேயே மாடு வளர்த்து பாலும் க��ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படியா என்ன? கறந்த பால் கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதில் பாதி அளவு தண்ணீர்.
காஃபிக் கொட்டை வாங்கி அரைப்பதெல்லாமும் இப்போதெல்லாம் பெரும்பாலும் இல்லை. அட.. காஃபித் தூள் விற்பனை நிலையங்களில் கூட நம் கண்ணெதிரே காஃபிக் கொட்டையை எங்கே அரைத்துத் தருகிறார்கள்? ஏற்கனவே அரைத்து பாக்கெட் போட்டு வைத்து விடுகிறார்கள். நாமும் அத�� மொத்தமாக வாங்கி வந்து அப்படியே குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கிறோம்.
நான் பள்ளிக்கூடம் படித்த காலத்திலெல்லாம் மாயூரம் ரிலையன்ஸ், நரசூஸ் காஃபிக் கம்பெனிக் கடைகள் வழியாக நடந்து சென்றாலே காஃபி��்தூளின் வாசம் மூக்கைத் துளைக்கும். இப்போதெல்லாம் காஃபித் தூளை எடுத்து முகர்ந்து பார்த்தால் கூட.. ம்ஹும்!
ப்யூர் காஃபித் தூள்தான் அந்தக் காலத்தில் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அதாவது சிக்கரி கலக்காத காஃபித் தூள். அப்புறம் அது 90% காஃபித் தூள், 10% சிக்கரி என்றானது. அப்புறம் 80-20. இப்போது 70-30 என்று உபயோகித்தால் கூட டிகாக்ஷன் தண்ணீராகத்தான் இருக்கிறது. பெரும்பாலும் உணவகங்களில் 60-40 ���ல்லது 50-50 என்றுதான் உபயோகிப்பார்கள். சிக்கரி உபயோகிப்பது உடலுக்குக் கேடு என்று பல காலம் சொன்னது போய், இப்போது சிக்கரி நல்லது என்கிறார்கள்.
டிகாக்ஷனுக்குத் தேவையான ஃபில்டர் வாங்குவதும் ஒரு தனிக் கலை.
தினமும் இரண்டு பேருக்குக் காஃபி போடத் தேவை என்றால், ஒன்றரை லிட்டர் கொள்ளளவு ஃபில்டர் வாங்கி உபயோகிக்கக் கூடாது. மிகச் சிறிய அளவு ஃபில்டர் போதும். ஃபில்டரில் உள்ள ஓட்டையின் அளவ��� குண்டூசி முனையைப் போலத்தான் இருக்க வேண்டும். பல நாட்கள் புழக்கத்திற்குப் பிறகு சமயத்தில் அது அகலமாக ஆனால், மேலே போடும் காஃபித் தூள் அப்படியே தண்ணீருடன் கீழே கொட்டி விடும். அதில் காஃபிப் போட்டுக் குடித்தால் அவ்வளவுதான். ரணக் கொட��ரமாக இருக்கும்.
காஃபித் தூள் வகைகளில் பீபரி, ஏ, ஸ்பெஷல் என்றெல்லாம் நிறைய உள்ளன. பொதுவாக எங்கள் வீட்டில் பீபரிதான் பயன்படுத்துகிறோம். சமயத்தில் பாதி பீபரி, பாதி ஏ என்று கலவையும் பயன்படுத்துவது உண்டு. அதற்கெல்லாம் என்ன வித்தியாசம் என்றெல்லாம் நான் ஆராய்ச்சி செய்தததில்லை.
மொத்தமாக ஒரு கிலோ, ரெண்டு கிலோ என்று காஃபித்தூள் வாங்கி வைக்கும் ஆசாமி என்றால் சிக்கரியையும் கலக்கச் சொல��லி கால் கிலோ பாக்கெட்டுகளாகப் பிரித்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். 80-20 அளவு என்றால் 100 கிராமில் 80 கிராம் காஃபித்தூள், 20 கிராம் சிக்கரி. அதுவே ஒரு சிலர் 100 கிராம் காஃபித்தூள், 20 கிராம் சிக்கரி என்றும் வாங்குவர். அது 83-17 என்ற அளவில் வரும்.
காஃபித்தூளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள். குறிப்பாக தினசரி உபயோகத்திற்காக பிரித்து உபயோகப்படுத்தும் கால் கிலோவை தனியே ஒரு குடுவையில் வை��்து உபயோகப்படுத்தவும். காற்று புகுந்து விடக்கூடாது. தண்ணீர் பட்டு விடக்கூடாது.
அடுப்பைப் பற்ற வைத்து ஃபில்டரின் மேல் பாகத்தை எடுத்து லேசாகச் சூடு படுத்தவும். இது எதற்கு என்றால் முந்தைய உபயோகத்திற்குப் பிறகு தேய்த்து வைத்தும் சமயத்தில் அந்த ஓட்டைகளில் காஃபித்தூள் தேங்கி நிற்க வாய்ப்பு��்டு. அந்த மாதிரிச் சமயத்தில் டிகாக்ஷன் இறங்காது. இப்படிச் சூடு படுத்தினால் அது சரியாகி விடும்.
இரண்டு பேருக்கு நான்கு ஸ்பூன் காஃபித்தூளை எடுத்து ஃபில்டரில் போடவும். நான்கு ஸ்பூன் என்றால்.. முழுக்க குவிந்து நிற்பது போல நான்கு ஸ்பூன். அதில் தலைதட்டி எடுத்து போடக் கூடாது. டிகாக்ஷன் சற்று திக்காக இருக்க கால் ஸ்பூனிலிருந்து அரை ஸ்பூன் சர்க்கரையை காபித்தூளின் மேல் போட்டுக் கொள்ளலாம். ஃபில்டருடன் கூடுதலாக ஒரு பிடி வைத்த தட்டு போன்ற வஸ்துவும் கொடுத்திருப்பார்கள். அதை வைத்து காஃபித்தூளை லேசாக அழுத்தவும். வேகமாக அழுத்தி விட வேண்டாம். இது எதற்கென்றால் காஃபித்தூளை எடுத்துப் போட்ட போது உள்ளே காற்று இடைவெளி இருக்கும். அதைச் சரி செய்ய. ஆனால், கவனம்.. உங்கள் ஒட்டு மொத்த எடையையும் கொடுத்து அழுத்தி விட வேண்டாம். அப்புறம் டிகாக்ஷன் இறங்கவே இறங்காது.
தண்ணீரைக் ��ொதிக்க விடுங்கள். ஆவி பறக்க வேண்டும். இப்போது காஃபித் தூள் முழுதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி அதன் பிறகு இன்னும் முக்கால் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதாவது ஏற்கனவே ஃபில்டரில் காஃபித்தூள் அரை அளவு இருந்தால், தண்ணீர் ஊற்றுவது ஃபில்டரின் முக்கால் அளவைச் சற்றுத் தாண்டி வர வேண்டும். மூடி போட்டு மூடி விடுங்கள்.
சற்று பொறுமையாக காத்திருங்கள். யாராவது விருந்தினர் வந்திருக்க���ம் சமயத்தில் டிகாக்ஷன் சரியாக இறங்காது. உடனே மேல் மூடியை எடுத்து டக் டக்கென்று தட்டி வைக்காதீர்கள். பொடியும் இறங்கி விடும்.
டம்ப்ளரில் தேவையான அளவு சர்க்கரை போட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக ஒன்றரை ஸ்பூன் போடலாம். அதைத் தாண்ட வேண்டாம்.
பாலைச் சுட வைக்கும் போது அதி உட்சமான சூட்டில் கொதிக்க வைக்காதீர்கள். அதே போல டீ போடுவதற்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் பால் பாத்திரத்தை வைத்து சூடாக்குவது போலவும் கூடாது. பால் பொங்கி பாத்திரம் கர��கி விடவும் கூடாது. ஏற்கனவே சூடாக்கி, மீதி ஆற வைத்த பாலை மீண்டும் சூடாக்கி காஃபி போடுவதும் கூடாது.
நன்கு கொதி வந்து பால் பொங்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விட்டு கரண்டியால் அதை எடுத்து டம்ப்ளரில் ஊற்ற வேண்டும்.இடுக்கியால் பால் பாத்திரத்தை எடுத்து அப்படியே டம்ப்ளரில் பாலைக் கவிழ்க்காதீர்கள். அதன் பிறகு டிகாக்ஷனை எடுத்து ஊற்றி விட்டு டபராவில் அப்படியே காஃபியை ஆற்றவும��. சற்று மேலே தூக்கி ஆற்றினால் சர்க்கரை + சூடான பால் + சூடான டிகாக்ஷன் அப்படியே நுரை பொங்க வரும். இரண்டு தடவைக்கு மேல் ஆற்றி விட வேண்டாம். அதே போல டிகாக்ஷன் அளவும் ரொம்பவும் அதிகமாக்கி விட வேண்டாம். தங்க நிறத்தில் காஃபி மின்னுவது போல இருக்க வேண்டும். காஃபி ஆறித் தொலைத்து விடும். அதன் பிறகு நுரையின் மீதும் கொஞ்சம் டிகாக்ஷனை ஊற்றுங்கள். இது நாக்குக்கு அல்ல.. மூக்குக்கு! ஆமாம்.. இதுத��ன் காஃபி குடிக்க ஆரம்பிப்பதற்கு ��ுன்பே வாசனையை உள்ளே அனுப்பி தூங்கிக் கிடக்கும் ருசி நரம்புகளைத் தூண்டி விட்டு தில்லானா பாட வைக்கும்.
என்ன.. அருமையான காஃபி குடித்து விட்டீர்களா? ஒரு நல்ல காஃபி குடித்தால் அது டீ குடித்தது போலவோ அல்லது குளிர்பானம் குடித்தது போலவோ இருக்கக் கூடாது. மாறாக ஏதோ ஒரு சூடான திட வஸ்துவை பல்லால் அழுந்தக் கடித்து அப்படியே மென்று தின்ற உணர்வையும், அந்தச் சூடு அப்படியே தொண்டையில் இறங்கிச�� சென்றதையும் அடுத்த கால் மணி நேரத்துக்காவது உணர வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதனால் காஃபி குடித்து விட்டு ஓடிப் போய் வாயைக் கழுவித் தொலைக்காதீர்கள். டிஃபன் சாப்பிட்டு விட்டு காஃபி குடிப்பவர்கள், டிஃபன் சாப்பிட்டக் கையோடு வாயைக் கழுவி விட்டு வந்து காஃபியைக் குடித்து விட்டு அடுத்த 15 நிமிடங்களுக்கு அந்த சுகானுபவத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதுதான் நல்ல காஃபிக்கு நீங்கள��� கொடுக்கும் மரியாதை!
டபரா, டம்ப்ளரில் காஃபி கொடுக்கும் போது காஃபியை ஆற்றி விட்டு டம்ப்ளரை அப்படியே அதே டபராவில் வைத்துக் கொடுத்து விட வேண்டாம். பெரும்பாலான உணவகங்களில் அப்படித்தான் செய்து தொலைக்கிறார்கள். டம்ப்ளரில் ஒட்டிக் கொண்டிருக்கும் காஃபி மேலே சிந்தி விடும். பிசுபிசுக்கும்.
புகைப்படத்தில் நுரை பொங்க காஃபி ��பராவிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக அப்படி எடுத்திருக்கிறேன்.
அப்புறம்.. இரண்டாவது தடவையும் அதே காஃபித்தூளில் தண்ணீர் ஊற்றி இரண்டாவது டிகாக்ஷன் என்று சிலர் உபயோகப்படுத்துவார்கள். அது அந்தளவு டேஸ்ட் இருக்காது. இரண்டாவது தடவை, மூன்றாவது தடவை என்று காஃபிக் குடிக்கும் ஆசாமிகள் வேண்டுமானால் அப்படி இரண்டாவது டிகாக்ஷனை உபயோகப்படுத்தி காசை மிச்சப்படுத்தலாம்.
அப்புறம் இன்னொரு விஷயம்.. காஃபி ஒரு மடக்.. வடையை ஒரு கடி.. அல்லது பிஸ்கட்டைத் தோய்த்துச் சாப்பிடுவது என்றெல்லாம் காஃபியை அவமானப்படுத்தாதீர்கள். அதையெல்லாம் தின்று தீர்த்து விட்டு கடைசியாக காஃபிக் குடித்து அன்றைய காலை / மாலைப் பொழுதை இனிமையாக்கி மகிழுங்கள்.
- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்
#மீள்பதிவு
வீட்டில் wifi இணைய இணைப்புக் கொடுத்திருப்பீர்கள்.
வீட்டினுள் நுழையும் இடத்தில் ஹாலில் டிவிக்கு அருகில் மோடம் / ரெளட்டர் வைத்திருப்பார்கள். அதன் wifi பக்கத்தில் இருக்கும் அறைக்குச் சென்ற��� கதவை மூடினால் பெரும்பாலும் கிடைக்காது. அல்லது இணைய வேகம் மிகக் குறைவாகத்தான் கிடைக்கும்.
அதற்கு wifi extender பலரும் உபயோகப்படுத்துவோம். இதுவும் wired / wireless என்று உள்ளன. தரைத்தளத்தில் wifi router வைத்து விட்டு, மேல் தளத்தில் தேவை என்றால் wired wifi extender உபயோகிக்கலாம். wireless-ஐ விட wired நல்ல வேகம் தரும்.
அது ஏற்கனவே உள்ள ரெளட்டரிலிருந்து கிடைக்கும் இணைய இணைப்பை உள் வாங்கி அடுத்த அறையில் முழுதும் கொடுக்கும். ஆனால் அதிலும் என்ன பிரச்னை என்றால்.. அதுவும் முழு வேகத்தைத் தராது. தவிர இந்த wifi extender-க்கு தனி wifi name இருக்கும்.
இப்போதைய பெரும்பாலான மொபைல்களில் எந்த இணைய இணைப்பு நன்றாக, வேகமாக இருக்கிறதோ.. அதற்குத் தானாகவே மாறும் தன்மை உண்டு. ஆனால் சில காலத்துக்கு முந்தைய போன���களாக இருந்தால் அந்த வசதி கிடையாது. நீங்கள் ஹாலுக்குச் செல்லும் போது அங்குள்ள wifiயில் இணைத்து விட்டு, ரூமுக்குச் செல்லும் போது அங்குள்ள wifi extender-ல் இணைக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் இது இம்சையே!
இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் Mesh என்ற கருவி பயன்படுகிறது.
ஜியோவைப் பொறுத்தவரை அவர்களுடைய Fiber router ஒரு சிறு வீட்டுக்குள் அனைத்து அறைகளுக்கும் ஓரளவு வேகத்துடன் இணைப்பு தரும். அப்படி இல்லைய���ன்றால் அவர்களிடமே wifi mesh extender என்று இருக்கிறது. அதை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ரூ. 2,499-லிருந்து கிடைக்கிறது. ஏர்டெல் என்றால் மாதம் ரூ. 99 வாடகைக்கு இதைத் தருகிறார்கள். (ஜியோவில் இப்படி மாத வாடகைக்குத் தருகிறார்களா என்று தெரியவில்லை).
அமேஸான் போன்ற தளங்களில் TP-Link Mesh என்று தேடினால் பல கிடைக்கும். அவற்றையும் வாங்கிப் பயன்படுத்தலாம். இது குறித்து முன்பே சில தடவை நான் எழுதியிருக்கிறேன். நீங்களும் கூகுளிட்டுப் பாருங்கள்.
இந்த mesh இருந்தால் ஒவ்வொரு அறைக்கும் செல்லும் போது இணைய இணைப்பு பெரும்பாலும் ஒரே போலக் கிடைக்கும். அல்லது 20 முதல் 30% வரை மட்டுமே குறைவாகக் கிடைக்கும். முக்கியமா��� ஒவ்வொரு அறைக்குச் செல்லும் போதும் Wifi மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். ஒரே wifi-யிலேயே இணைந்தது போல வேலை செய்யும்.
தேவைப்படுவோர் வாங்கிப் பயனடையவும்.
இது விளம்பரப் பதிவல்ல. அனுபவப் பகிர்வு.
ஒவ்வொரு உடன்பிறப்பும் பகிர வேண்டிய மிக மிக முக்கியமான ஒரு வீடியோ.
எடப்பாடி கூட்டணி வைத்துள்ள
BJP கடந்த 12 ஆண்டுகளாக எவ்வாறெல்லாம் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்பதை விவரிக்க ஒரு புத்தகமே போட வேண்டும்
25 துரோகங்கள் மட்டும் கீழே உள்ளது
#நலம்வாழDMK_நாசமாகNDA
🙏
@hstradeschool சில்வர் ல நான் ஒரு 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளேன் அது இப்போது 20 சதவீத லாபத்தில் உள்ளது நான் இப்போது பிராஃபிட் புக் செய்ய வேண்டும் என்றால் மொத்த பங்குகளையும் வித்து 20% லாபத்தை எடுக்க வேண்டுமா அல்லது அந்த 20% லாபமான பெருமான பங்குகளை மட்டுமே விற்று அந்த பணத்தை எடுத்துக்கொண்டு மீத