@chandra2eqo@thiruja2009 அட நாயே அது உன் கேள்வி மக்களுக்கு தெரியும் அவர் எங்கே இருந்தார் என்று அனகாபுத்தூர் போராட்டத்தில் நின்றார் கவின் ஆணவ படுகொலைக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கி சண்டை போட்டார் இன்னும் பல போராட்டங்கள் இருக்கு நீ விசில் அடிக்க போயிருப்பா இப்போ வந்து பேசிக்கிட்டு இருக்க நாயே...
பொட்டலூரணி மக்கள் தொடர்ந்து 520 நாட்களாக தமது பகுதியில் இயங்கிவரும் மீன்கழிவு தொழிற்சாலை மாசுபாட்டுற்��ு எதிராக போராடி வருகிறார்கள். அரசாங்கமே செய்ய வேண்டிய பணியை மக்கள் போராடி நினைவூட்ட வேண்டியுள்ளது. அதுவும் 520 நாட்களாக போராடியும் நிறைவேற்றாமல் தவிர்க்கின்றனர்.
தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலிருந்து தமது ஊருக்கான சாலை (விலக்கில்) பேரூந்துகள் நின்று செல்ல வேண்டுமெனும் கோரிக்கை உட்பட பலவேறு கோரிக்கைகளை நீண்டநாட்களாக முன்வைத்து குரல் எழுப்பியும் வருகின்றனர். இன்று காலை சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை வழக்கம் போல காவல்துறையை வைத்து மாவட்ட நிர்வாகம் கையாண்ட��ு. வெகுமக்கள் கோரிக்கைகளை கூட சட்ட-ஒழுங்கு சிக்கலாக சித்தரித்து கைது நடவடிக்கையை மேற்கொண்டது காவல்துறை. அதிகாரிகள் என்பவர்கள் மகாராஜாக்களைப் போல நடந்து கொள்கிறார்கள். அனைத்து கோரிக்கைகளையும் காவல்துறையை வைத்தே அடக்கி ஒடுக்குகின்றனர். இந்த அதிகாரிகளை மேலும் வளர்த்துவிட்டுள்ளது திமுக அரசு.
இதுபோன்ற கோரிக்கைகள் கொள்கை-மக்கள் நலன் சார்ந்தவை. இவற்றை சட்டமன்ற உறுப்பினரால், அமைச்சர்களால் பேசி தீர்த்திருக்க முடியும். ஆயினும் திமுக புறக்கணிக்கிறது. 520 நாட்கள் போராட்டம் என்பது மிக நீண்ட அமைதிவழி எதிர்ப்பு போராட்டம். இத்தனை நாட்களாக இக்கோரிக்கையை தீர்க்க இயலாதா திமுக அரசிற்கு?
இன்று காலை பொட்டலூரணி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு, அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றபோது வலிந்து கைது செய்யப்பட்டனர். பேச்சுவார்த்தைகள் உரிய அதிகாரிகளுடன் நடத்தப்படவில்லை. ���ோராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருக்கும் தோழர் சங்கரநாராயணனை கைது செய்து தனியே கொண்டு சென்றிருக்கிறது காவல்துறை. வெகுமக்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள ம��்டபத்திற்குள் அவரை அடைக்கவில்லை. அவரது இருப்பிடம் தெரியவில்லையென போராட்ட குழு தோழர்கள் தேடியவண்ணம் உள்ளனர். காவல்துறையின் இந்த போக்கு மிக மோசமானது, வன்முறையானது, மக்கள் விரோதமானது. தூத்துக்குடி காவல்துறை இதேபோன்றே ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுதும் போராட்ட குழுவினரை கொண்டு சென்று துப்பாக்கி சுடும் மைதானத்தருகில் அடைத்து வைத்தனர். நீதிமன்றத்தின் உத்திரவின் பெயரில் அன்ற��� தீர்வு கிடைத்தன. சுதந்திரம் கிடைத்ததாக 77 ஆண்டுக்கு முன் அறிவித்த போதிலும், வெள்ளைக்காரன் காலத்து காவல்துறையை போல பொதுமக்களை எதிரிகளாக எண்ணி, வன்முறையாக நடந்துகொள்ளும் வன்முறை போக்கை இன்றளவும் கடைபிடித்து வருகிறது.
ஸ்டெர்லைட் படுகொ*லையில் தண்டிக்கப்பட வேண்டிய அதிகாரிகள் குறித்து நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளி காவல்துறை, நிர்வாகத்துறை அதிகாரிகளை கைதுசெய்யாமல் பாதுகாக்கிறது திமுக அரசு. அதன் விளைவுகளே இன்று மக்கள்விரோத செயல்களில் அதிகாரிகள் இறங்கி செயல்படும் துணிச்சலை கொடுக்கிறது.
பொட்டலூரணி கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கைதானவர்கள் மீது வழக்கு தொடுக்காமல், விடுவிக்கப்பட வேண்டுமென மே17 இயக்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
திருமுருகன் காந்தி
@may17iyakkam
மே பதினேழு இயக்கம்
@CMOTamilnadu
காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மதுரையை சேர்ந்த பட்டியல் சமூக இளைஞர் மரணம்! திமுக அரசே, தினேஷ்குமார் மரணத்திற்கு காரணமான காவலர்களை கைதுசெய்! பணிநீக்கம் செய்!! வன்கொடுமை வழக்கை பதிவு செய்!!! ���ாவல்நிலைய மரணங்களுக்கு முடிவு கட்டாத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
- மே பதினேழு இயக்கம்
மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யாகப்பா நகர் சக்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியினரின் 30 வயது மகன் தினேஷ் குமார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த தினேஷ் குமார் சமீபத்தில் ஒரு தனியார் ஆலையில் பணிக்கு சேர்ந்து தொடர்ந்து பணிக்கு சென்று வந்துள்ளார். கடந்த 09-10-2025 வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து அண்ணா நகர் காவல் ஆய்வாளர் அவர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தினேஷ் குமார், பிற்பகல் 1:30 மணியளவில் இறந்தவிட்டதாக அவரது தாயாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இது லாக்கப் கொலையாக இருக்கக்கூடும் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதை மே17 இயக்கம் கவனப்படுத்துகிறது. இந்த அரச வன்முறையை, காவல்துறையில் தொடரும் சட்டவிரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறது.
அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா இரு காவலர்களோடு தினேஷ் குமாரை ஒரு விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர். உடன் செல்ல முயன்ற அவரது தந்தையை தடுத்து நிறுத்தி 9 மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்து அவரை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். தந்தை 10 மணியளவில் காவல் நிலையம் சென்று பார்த்த போது தினேஷ் குமார் அங்கு அழைத்து வரப்படவில்லை என்பதும், வழக்கறிஞர் ஒருவர் மூலம் விவரம் கேட்ட போது, '..காவல் நிலையத்திற்கு அழைத்து வருவார்கள் அங்கேயே காத்திருங்கள்..' என்று கூறியுள்ளனர். பின்னர் தினேஷ் குமாரின் தந்தைக்கு அழைத்து, வண்டியூர் சுங்கச்சாவடி அருகில் வழக்கறிஞர் ஒருவரோடு வருமாறு கூறியதாகவும், அங்கு அவர் சென்ற போது யாருமில்லை என்றும் தினேஷ் குமார் பெற்றோர் கூறுகின்றனர் 1:00 மணியளவில் உங்கள் மகன் குறித்து பேச வேண்டும் என்று தாயாரை காவல் நிலையத்திற்கு அழைத்து, தினேஷ் குமார் தப்பியோடி விட்டதாக ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா கூறியுள்ளார். சிறிது நேரத்தில் காவல் நிலையத்தின் வெளியே காத்திருந்த தாயாரை உதவி காவல் ஆ��ையர் சிவசக்தி உள்ளே அழைத்து, தினேஷ் குமார் தப்பியோடும் போது வண்டியூர் கால்வாயில் விழுந்து இறந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
தினேஷ் குமாரை அதிகாலை 4 மணிக்கு அழைத்து செல்லப்பட்டதும், அழைத்து செல்லப்பட்ட போதே தாக்கப்பட்டதாகவும், விசாரணை காவல் நிலையத்தில் நடத்தப்படாமல் இருந்ததும், காரணம் இல்லாமல் தப்பியோடியதாக கூறியதும், ஆறடி உயரமுள்ளவர் முழங்கால் அளவு ஆழமே கொண்ட ���ால்வாயில் விழுந்து இறந்தாதாக கூறுவதும் தினேஷ் குமார் மரணம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. குறிப்பாக, தினேஷ் குமார் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், காவல்துறையினர் அத்துமீறி செயல்பட்டிருக்க வேண்டும் என கருதுகிறோம். மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள், வண்டியூர் கால்வாய் அருகிலுள்ள சிசிடிவி பதிவுகள் நீக்கப்பட்டதாகவும், தினேஷ்குமாருக��கு நீச்சல் தெரியுமா என அவரது தந்தையிடம் காவல்துறையினர் கேட்டுள்ளதும் ஏன் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். தற்போது தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல் மரணம் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
காவல் நிலைய மரணங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாக உள்ளது. இதன்மீது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததும் கண்டனத்திற்குரியதாக உள்ளது. காவல்துறை மேற்கொள்ளும் சட்டவி��ோத நடவடிக்கைகள், காவல்நிலைய மரணங்கள் குறித்து கடுமையான நடவடிக்கை��ை திமுக அரசு மேற்கொள்ளாததே, இதுபோன்ற அத்துமீறல்களுக்கு அடிப்படையான காரணமாகும்.
சமீபத்தில் அஜீத் குமார் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கி கொலை செய்த காணொளி அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், தற்போது தினேஷ் குமாரின் காவல் மரணம் நிகழ்ந்துள்ளது காவல் மரணங்கள் தடுப்பு நடவடிக்கைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜெயராஜ் & பென்னிக்சின் காவல் மரணங்கள் ம���கப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கிய பின்பு, காவல் மரணங்களை தடுக்க காவல்துறைனருக்கு பல்வேறு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. இருந்தும், காவல்துறையினர் அவற்றை முறையாக பின்பற்றாததும், தொடர்ந்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது அத்துமீறி உயிர் போகும் அளவிற்கு தாக்குதல் நடத்தப்படும், அதிலும் குறிப்பாக, பட்டியல் சமூகத்தவர் என்றால் அதிகார அத்துமீறலில் எவ்வித தயக்கமின்றி ஈடுபடுவதும் தொடர் நடைமுறையாக உள்ளது. தினேஷ்குமார் மரணமும் இப்படியான காவல்துறையினரின் அத்துமீறலில் (தொடர்ச்சி அடுத்த இழையில்)
��ழக்கம் போல 'மாமா-மாமி'க்கள் ஊடகமான 'தி இந்து' நாளிதழ் தெருவோர கடைகளை அப்புறப்படுத்தவும் என செய்திவெளியிட்டுள்ளது. பள்ளிக்கரணை பகுதியில், பெருங்குடி டோல்கேட் அருகில், அண்ணாநகர் ஜி-ப்ளாக் என பல பகுதிகளில் தெருவோர கடைகளால் வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி வருகிறதென எழுதியுள்ளது. இந்த புகார்களை யார் தெரிவித்தார்கள் என தேடினால் மடிப்பாக்கம் சாமிநாதனில் ஆரம்பிக்கும்.
நடைபாதையில் சிறு கடைகளை போட்டு அன்றாடம் காய்ச்சிகளாக வாழ்பவர்களுக்கு எதிராக அவ்வப்போது 'தி இந்து' நாளிதழ் 'சோ-கால்டு கம்யுனிஸ்டு' என்.ராம் காலத்திலிருந்தே எழுதி வருவது வழக்கம். இதே போலவே நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீன் நாத்தமடிக்கிறது என ஒப்பாறி வைத்த கதையும் நாம் மறக்க இயலாது. பெசண்ட் நகர் கடற்கரையில் மூலையில் மீன் விற்பனை வைத்துக்கொள்ளுங்கள், மெரினா கடற்கரையில் முகம் சுழிக்க வைக்காதீர்கள் என எழுதியவர்களும் இவர்கள் தான்.
மெரினா கடற்கரை கடைகளை குறித்து தொடர்ந்து எழுதி அவற்றை நீக்கவைத்தது 'தி இந்து'. கோயம்பேடு சந்தையில் கருவாடு தொக்கு, மீன்களை அதன் வாயிலில், கடைகளின் ஓரத்தில் வைத்து விற்றுக்கொண்டி��ுந்த ஏழை பெண்களின் கூடைகளையும், தெருவில் போடப்படும் கடைகளையும் 'அப்புறப்படுத்தியது' என்பது 'தி இந்து'வில் வெளியான கட்டுரையால் நடந்தது. பாண்டிபஜாரில் செழிந்திருந்த தெருவோர கடைகளை அப்புறப்படுத்தி, ஒட்டுமொத்தமாக அப்பகுதி வணிகத்திற்கு மூடுவிழா நடத்தினார்கள்.
சிறு தெருவோர உணவுக்கடைகளால் அண்ணாநகரில் இருக்கும் பெரிய ஓட்டல்களுக்கு வணிகம் குறைகிறதென புகார் சொல்லி அக்கடைகளை அப்புறப்படுத்தினார்கள்.
ஏழைகள் வணிகம் செய்ய எந்த வழிவகையும் இல்லை. தெருவோர கடைகளுக்கான பாதுகாப்பும் இல்லை. தெருவோர கடைகள் சட்டவிரோத கடைகள் அல்ல. அது சாமானிய மக்களின் வாழ்வாதாரம். ஏழை-நடுத்தர மக்களுக்கான கடைகள்.
நடைபாதையை மறைக்கிறார்கள் எனும் குற்றச்சாட்டு மேலோட்டமாக பார்க்க நியாயமானதாக தோன்றும். நடைபாதையை பயன்படுத்துபவர்கள் தான் இந்தக் கடைகளில் பொருட்களை வாங்கவும் செய்���ிறார்கள். இக்கடைகள் நிரந்தரக் கடைகள் அல்ல. சில மணிநேரம் மட்டுமே இயங்கும் தற்காலிக கடைகள்.
தெருவோர கடைகளில் பெரும்பாலானவை பெண்களால் நடத்தப்படுபவை. இப்பெண்கள் குடும்பத்தை நடத்துபவர்கள். தம் கணவரின் வருமானத்தின் ப��்றாக்குறையை போக்க வணிகம் செய்பவர்கள். கணவரால் கைவிடப்பட்டவர்கள் அல்லது கைம்பெண்கள் என பலரையும் இக்கடைகளே காப்பாற்றுகின்றன.
25 ஆண்டுகளாக தொடர்ந்து வாசிப்பவன் எனும் முறையில் 'தி இந்து' எனும் நாளிதழ் இசுரேலிய ஜியோனிச மனநிலைக்கு ஒப்பான மனநிலை கொண்டவர்களால் நடத்தப்படும் இதழ் என்பதை உறுதியாக சொல்ல இயலும். ஒவ்வொரு வாரமும் சாமானிய-ஏழை மக்களுக்கு எதிராக கட்டுரைகளை சர்வசாதாரணமாக ���ந்த பத்திரிகையில் காணலாம்.
இன்றும் 'தி இந்து' நாளிதழ் அலுவலகத்தில் அசைவ உணவுகளை வீட்டிலிருந்து எடுத்துவந்து சாப்பிட அனுமதி கிடையாது. அந்த நிறுவனமே ஒரு 'குட்டி சனாதன சங்கரமடம்' தான்.
இந்த கட்டுரை வந்தவுடன் சென்னை மாநகராட்சின் ஊழல் அதிகாரிகள் உடனடியாக கடைகளை அப்புறப்படுத்துவார்கள். அல்லது நீதிபதிகள் சட்டத்தை நிலைநாட்ட உத்தரவிடுவார்கள். இப்படியாகத்தான் அனகாப்புத்தூரில் வீடுகளை இடிக்க ஒரு ஆங்கில நாளிதழ் செய்தியை மேற்கோள்காட்டி வீடுகளை 'அப்புரப்படுத்த' உத்தரவிட்டது நீதிமன்றம். அந்த பத்திரிக்கையில் 'காஸாக்ராண்ட்' விளம்பரங்கள் தொடர்ந்து வ���ளியாகி கொண்டிருந்ததை நீதிமன்றங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால், 'ஆக்கிரமிப்பு' கட்டுரைகளை வைத்து தீர்ப்புகளை தரவேண்டியதாயிற்று என நீங்கள் நம்பவேண்டும்.
ஆனால் இதே சென்னையின் அண்ணாசாலை, பாண்டிபஜார் வீதிகளில் ' ஹாப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்டம் நடக்கிறது, மெரினாவில் 'திரைப்படம் திரையிடலும், ஆடல்-பாடலும்' நடக்கிறது, பெசண்ட் நகரில் ஹாப்பி சண்டே விழாவும் நடக்கிறது. இச்சமயங��களில் போக்குவரத்து தடை செய்யப்படும், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படும். இந்த நிகழ்ச்சிகளை 'தி இந்து'வும், சென்னை மாநகராட்சியும் சேர்ந்து நடத்துகின்றன. இன்னும் பல கார்ப்பரேட்டுகள் நடத்துகின்றன.
சென்னை யாருக்கானது என நாம் முடிவு செய்யாததால், பணக்கார கூட்டம் சென்னையை ஆக்கிரமிக்கிறது. இந்த கும்பல்களை விரட்டும் வகையில் ஏழை மக்கள் எழுச்சி நடக்காமல் இருக்காது. மே17 இயக்கம் 'தி இந்து', ' டைம்ஸ் ஆப் இந்தியா' உள்ளிட்ட ஊடகங்களின் மக்கள் விரோத போக்குகளை தொடர்ந்து அம்பலப்படுத்து வருகிறது. பிற தோழமைகளும் கைகோர்த்தால் வரலாற்றை மாற்றலாம்.
தமிழ்நாட்டு வணிகர்களின் நலனுக்காக வாழ்நாள் முழுதும் போராடிய மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ‘அருந்திறல் தமிழர்’ ஐயா வெள்ளையன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு வீரவணக்கத்தை செலுத்தி அவர் நினைவைப் போற்றுவோம்! - மே பதினேழு இயக்கம்
தமிழ்நாட�� முழுவதும் பல்வேறு பெயர்களின் சிதறிக் கிடந்த வணிகர்களின் வலிமையை அவர்களுக்கு உணர்த்துகின்ற வகையில், அவர்களை பெருந்திரளாக ஒரு வலிமைமிக்க அணியாக மாற்றி, அதன் மூலம் வணிகர்களின் உரிமையைப் பேசுகின்ற ஒரு மாபெரும் இயக்கத்தை கட்டி எழுப்பியவர் ஐயா வெள்ளையன் அவர்கள்.
வணிகர்களின் நலம் என்பது தனித்த ஒன்று அல்ல, அது சமூகத்தோடு இணைந்தது என்பதை நன்கு உணர்ந்த ஐயா வெள்ளையன் அவர்கள், சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், சமூகத்தின் உரிமைக்காகவும், தமிழர்களின் போராட்டத்திற்காகவும், தமிழ் தேசிய கோரிக்கைக்காகவும் பயிற்றுவித்து வணிகர்களை போராட்ட களத்தில் இணைத்தார்.
ஈழப் போராட்டம், ஏழு தமிழர் விடுதலைப் போராட்டம், மீத்தேனுக்கு எதிரான போராட்டம், முல்லைப் பெரியாறு அணை போராட்டம், ��்டெர்லைட் போராட்டம், கோகோ கோலா நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் எனப் பல போராட்டங்களோடு வால்மார்ட்டை தடுத்து நிறுத்திய மாபெரும் போராட்டத்தை நடத்தி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய வணிகர்களின் உரிமைகளையும் பாதுகாத்தவர் ஐயா வெள்ளையன் அவர்கள்.
போராட்டக் களத்தில் நிற்கக்கூடிய அனைத்து இடங்களிலும் ஐயா வெள்ளையன் அவர்களை மே பதினேழு இயக்கம் மறந்தது கிடையாது. தமிழீ�� விடுதலைப் போராட்டத்திற்காக தன்னுயிர் கொடுத்து போராட்டத்தை முன்னகர்த்திய மாவீரன் முத்துக்குமாரின் உடலை, கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் பாதுகாத்து, மாணவச் செல்வங்கள் எல்லாம் போராட்டக் களத்தில் அணியமாவதற்கு உறுதுணையாக நின்றவர் அவர்.
ஐயா த.வெள்ளையன் அவர்கள் தமிழ்ச்சமூகத்திற்கு ஆற்றிய அளப்பரிய பணிகளை கருத்தில் கொண்டு அவருக்கு 2025ம் ஆண்டு தமிழ்த்தேசியப் பெருவிழாவின் போது ‘அருந்திறல் தமிழர்’ என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி மே பதினேழு இயக்கம் சிறப்பித்தது.
தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமான ‘அருந்திறல் தமிழர்’ ஐயா த. வெள்ளையன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் வீரவணக்கத்தை செலுத்தி அவரை மே பதினேழு இயக்கம் பெருமையுடன் நினைவுகூருகிறது.
மே பதினேழு ��யக்கம்
9884864010
10/09/2025
33 years of Grit & Guts 🌋⚡💥🔥 With Unmatched hardwork & Ultimate Aura 😍🤩😎🙏❣️ VAATHIYAR #Ajithsir#AKSir ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 love you sir❤️❤️❤️❤️🙏🏻🙏🏻 #33YearsOfAJITHISM
A dream come true moment.. It still feels surreal..
Blown away by his aura, humility, humbleness and making sure guests are well taken care of..
Grateful to God for the moment! 🙏
#AK#Ajithkumar𓃵 #33YearsOfAJITHISM
33 years of phenomenal journey💥💥💥💥💥your a rare gem 💎 with unmatched hardwork❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻such a pure hearted soul❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 love you sir❤️❤️❤️❤️🙏🏻🙏🏻 #33YearsOfAJITHISM