தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி சமூக நீதிக்கொள்கைகளின் தாய்வீடாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
#DMK
பெரியார், அண்ணா, கலைஞரின் கொள்கை வழி நின்று திராவிட இயக்கத்தை வழிநடத்தும் கழகத் தலைவர் @mkstalin அவர்கள், தி.மு.கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் இன்று!
@arivalayam#DMK4TN#MKStalin
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக 'திராவிடமணி' இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வட்ட மேசை மாநாட்டில் ஓங்கி ஒலித்த இலண்டனில் இருந்து அவரது பிறந்தநாளில் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நம் மண்ணில் தீண்டத்தகாதவர்களென ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உணர்த்துவதற்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்த அவரது துணிச்சலை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடிய போராளியான தாத்தா இரட்டைமலையாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட ஓட்டேரி மயானபூமி அமைந்துள்ள பிரிக்ளின் சாலைக்கு “இரட்டைமலை சீனிவாசன் சாலை” என #DravidianModel ஆட்சியில் பெயர் சூட்டித் திறந்து வைத்ததையும் பெருமையோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
#WATCH | "தவெக அரசுக்கு நன்றி"
காலை உணவுத் திட்டம் நீட்டிப்பு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பணம் வரவு வைத்ததை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
#SunNews | #TNAssembly2026 | #UdhaynidhiStalin | #TVKVijay
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
#BREAKING | "புதிய அரசுக்கு திமுக தொந்தரவாக இருக்காது.. ஆனால் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம்.."
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
#SunNews | #CMVijay | #MKStalin
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்துள்ள கழகத்தலைவர் @mkstalin அவர்களை, பேரவைக்குச் செல்லும் முன்பு இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். நன்றி தெரிவித்தோம்.