🎥📷📽️தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் சாதிய வட்டத்திற்குள் 🇹🇩பாட்டாளி மக்கள் கட்சியை மட்டும் 😡திட்டமிட்டு சாதிய கட்சி, வன்முறையாளர் கட்சி
என்று சித்தரிப்பது ஏன்?
😡அப்போது ஜாதி வெறியர்கள் யார்? என்பதை மக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் 🤔🤔🤔
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை
சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்!
இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த கணக்கெடுப்பில் பொதுமக்களின் சாதி விவரங்களையும் சேர்ப்பது குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாகவும், ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மனமாற்றம் வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல பத்தாண்டுகளாக நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்கான பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட முன்னெடுப்புகளும், அதன் பயனாக கடந்த காலங்களில் ஆட்சியாளர்களிடமிருந்து பெற்ற உத்தரவாதங்களும் குறிப்பிடத்தக்கவை.
2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை; எந்தத் தடையும் இல்லை. வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்புகாக திரட்டப்படும் புள்ளிவிவரங்களுடன் சாதி என்ற ஒரே ஒரு பிரிவை சேர்த்தால் மட்டும் போதுமானது. இதற்காக எந்த கூடுதல் செலவும் ஏற்படாது. மாறாக, சாதிவாரி விவரங்கள் திரட்டப்படுவதால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் கிடைக்கும் பயன்கள் எல்லையில்லாதவை. சமூகநீதியை வழங்குவதில் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உச்சவரம்பை உடைக்க இந்த விவரங்கள் உதவும்.
எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி விவரங்களை திரட்டுவது குறித்து விவாதித்து வரும் மத்திய அரசு, அதில் சமூகநீதிக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை ( கேஸ்ட் சர்வே) எடுக்க வேண்டும் என்பதால் அதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
#CasteCensus #CasteSurvey
#SocialJustice
ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படாததால்
3 லட்சம் குடும்பங்கள் அவதி: நியாயவிலைக்கடை
ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்கவேண்டும்!
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்கான ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் பேருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அவை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆதாருக்கு அடுத்தபடியாக மிக முக்கிய ஆவணமான குடும்ப அட்டைகளை வழங்குவதில் தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் காலதாமதம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் பன்முக பயன்பாடு கொண்டவை ஆகும். நியாயவிலைக்கடைகளில் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் அவை பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும். இவற்றுக்கெல்லாம் மேலாக மாதம் ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கும் குடும்ப அட்டை கட்டாயம். ஆனால், புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் லட்சக்கணக்கான மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளையும், உரிமைகளையும் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவிப்பை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்குவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆதாரை அடிப்படையாக வைத்து தான் புதிய குடும்ப அட்டை கோருவோரின் விவரங்களை மிகவும் எளிதாக சரிபார்த்து வழங்கி விட முடியும். 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு குடும்ப அட்டை எண்ணும் வழங்கப்பட்டு விட்டது. அதற்குப் பிறகும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்காமல் தமிழக அரசு காலதாமதம் செய்வது ஏன்? என்பது தான் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் தலைவிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதைப் பெறும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கும் கூடுதலானவர்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கான மாத உரிமைத் தொகைக்கு அதிக எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவே புதிய குடும்ப அட்டைகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இது பெரும் தவறாகும்.
ஸ்மார்ட் குடும்ப அட்டைகளைப் பெறுவது தமிழ்நாட்டு மக்களின் உரிமை ஆகும். எந்தக் காரணத்தைக் கூறியும் அதை தமிழக அரசு தட்டிக்கழிக்க முடியாது. எனவே, புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
@CMOTamilnadu
"புளுகு மூட்டை மு.க. ஸ்டாலினுக்கு மூளை குழம்பிவிட்டதா?"
சமூகநீதியின் எதிரியான மு.க. ஸ்டாலின், "பீகார் அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது" என ஒரு அண்டப்புளுகு செய்தியை சட்டசபையிலேயே கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான கட்டுக்கதை. பீகார் மாநிலத்தின் சாதி வாரி கணக்கெடுப்பிற்கு தடை ஏதும் இல்லை.
உயர்நீதிமன்றம் சாதிவாரி கணக்கெடுப்பை ரத்து செய்யவில்லை. பீகார் மாநில இடஒதுக்கீடு 50% அளவுக்கு மேல் சென்றதைதான் ரத்து செய்துள்ளது. இந்த உண்மையை நம்பிக்கைத் துரோகி முதலமைச்சருக்கு யாராவது எடுத்து சொல்லுங்கள்...
குறிப்பு: தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 50% அளவுக்கு மேலாக, ஏற்கனவே 69% இருக்கிறது. அதற்கான வழக்கிலும் கூட உச்சநீதிமன்றம் சாதிவாரி புள்ளிவிவரங்களை தான் கேட்டுள்ளது.
#VanniyarReservation #CasteCensus #Vanniyars
மருத்துவர் அய்யா,மருத்துவர் சின்ன அய்யா ஆகியோர் ஆணைக்கிணங்க.
நாளை(08.10.2023) காலை 10.00 மணியளவில் நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்ட ஆயத்தப் பணியில்...
--
அக்.07.2023
பெரம்பலூர்
'விருதுகள் கிடக்கட்டும். அன்புமணி அண்ணனின் தம்பியாக இருப்பதில் எனக்குப் பெருமை.'
மாவீரனின் தளபதி அண்ணன் வைத்தி அவர்களின் இல்ல புதுமண விழா நிகழ்வில் தலைவர் அன்புமணி அண்ணனை சந்தித்த மகிழ்வின் தருணம்.
நீ பேசிய ஒரு ஒரு வார்த்தைக்கும் நீயே தான் பொறுப்பு.. காலம் சுழன்று திருப்பி அடிக்கும் ஒரு நாள்.. அதுவரை காத்திரு பகையே.. காத்திரு.. புத்தியின் கூர்மை, சக்தியின் அருமை.. விரைவில் புரிய வைக்கும்.. மீண்டும் புலம்ப காத்திரு...
வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ANTI BIKILI
வீர வணக்கம்
சமூக நீதிக்காக, சமூக நல்லிணக்கத்திற்காக, தமிழின மேம்பாட்டிற்காக பாடுபட்ட மாவீரன் ஜெ. குரு அவர்களின் பிறந்தநாளில் - மருத்துவர் அய்யா அவர்கள் வழியில் #மாவீரன் ஜெ. குரு அவர்கள் முன்னெடுத்துச்சென்ற உன்னத லட்சியங்களை வென்றெடுக்க உறுதி ஏற்போம்...
#PMK#Maaveeran