முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்ப��்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார்.
மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
5 ஆண்டுக்கால திராவிட மாடல் அரசின் திட்டங்களால், கல்வி - வேலைவாய்ப்பு… மூலம் #வெல்லும்_தமிழ்_பெண்கள்-ஐ உருவாக்கிய நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, வரும் 2026-லும் வெல்லவைக்க தமிழ்நாட்டு மகளிர் தயாராகிவிட்டனர்.
டெல்டாவில் ஓங்கி ஒலித்த, மகளிரின் ஆதரவுக்குரல், தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும். மகளிர் நலத்திட்டங்கள் #திராவிடமாடல் 2.o-விலும் தொடரட்டும்!
சமத்துவம் - சமூக நீதி - மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாதிகளையும், அவர்களுக்குத் துணைபோகும் அடிமைகளையும் 2026 தேர்தல் களத்தில் வீழ்த்தி, தமிழ்நாட்டின் சமத்துவத்தைப் பாதுகாப்போம்!
கடலோர கிராமத்திருந்து, கழகப் பற்றுடன் கிளம்பிய உடன் பிறப்புகளில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் தம்பி ஆ.மெர்வின். இத்தகைய எளியவர்கள்தான், இந்தப் பேரியக்கத்தின் இமைகள். கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உரை கேட்க விருதுநகர் நோக்கி வந்த ஒரு லட்சம் நிர்வாகிகளில் தம்பி மெர்வினின் பயணம் இது!
#Youth4DMK2026 @dmk_youthwing
��மிழ் - தமிழர்கள் - தமிழ்நாட்டுக்கு எதிரான ஆதிக்கவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, 2026 - ல் மீண்டும் திராவிட மாடல் அரசே ஆட்சிப்பொறுப்புக்கு வர, பொங்கல் புதுநாளில் உறுதியேற்போம்!
வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 29 கழக மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரமாண்ட சந்திப்பு, வரும் 14-12-2025 ஞாயிறு மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெற இருக்கிறது. கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
திருவண்ணாமலையில் ஒன்ற��� கூடுவோம், 2026-ல் மீண்டும் வெல்வோம், வரலாறு படைப்போம்!
@dmk_youthwing
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் @mathiazhagan_cm அவர்களின் தந்தையும், ஒருங்கிணைந்த ஓட்டப்பிடாரம் ஒன்றிய முன்னாள் அவைத் தலைவருமான, திரு. சி.முத்து அவர்களின் மறைவுக்கு கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
அறம்-பொருள்-இன்பம் எனத் தமிழர் வாழ்வியல் நெறியுரைத்த வள்ளுவத்திற்கு, குறளோவியம் கண்ட தலைவர் கலைஞர் எழுப்பிய ‘வள்ளுவர் கோட்ட’த்தில், கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் வழிநின்று செயல்படும் தமிழர்களின் தனிப்பெரும் தலைமை இயக்கமாம் @arivalayam-த்தின் #திமுக75_அறிவுத்திருவிழா!
நம் கழகத்தின் பவள விழா நிறைவையொட்டி, கழகத்தலைவர் - மாண்பு���ிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டலில்,
தமிழ்நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்கள் குறித்து, கழக இளைஞரணி சார்பில் @muthamilarignar பதிப்பகம் வெளியிடும் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு, `இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெறும் ‘முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிக��்வுகளை @dmk_youthwing `அறிவுத்திருவிழா’வாகக் கொண்டாடவிருக்கிறது.
🗓️நவம்பர் 8 அன்று கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் `காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, இருநாள் கருத்தரங்கத்தையும் முற்போக்குப் புத்தகக் காட்சியையும் தொடங்கிவைக்கிறார்.
🗓️நவம்பர் 8 மற்றும் 9-ல் நடைபெறும் இருநாள் கருத்தரங்கத்தில், கழக முன்னோடிகளும் தமிழின் முக்கியச் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கருத்துரை வழங்குகின்றனர்.
🗓️நவம்பர் 8 முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் நாள்தோறும் கலைநிகழ்ச்சிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சும் நடைபெறவுள்ளன.
🖤❤💙 நவீன தமிழ்நாட்டைச் செதுக்கி, செழுமைப்படுத்திய முற்போக்கு இயக்கங்களின் அரசியலை அறியவும்; அரசியல் உணர்வு பெறவும் அறிவுத்திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறோம்! #DMK75
போராட்டங்கள், தியாகங்கள், சாதனைகளைக் கொண்ட பேரியக்கமாம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. பவளவிழாவை நிறைவுசெய்துள்ள நம் கழகம் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத���திய தாக்கங்கள் குறித்து ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்னும் கட்டுரைத்தொகுப்பு, @dmk_youthwing சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், பொருளாதார அறிஞர்கள், சமூகம் மற்றும் அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் என 80 கட்டுரையாளர்கள், தேசியக்கட்சிகளின் தலைவர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், கழகத்தலைவர் @mkstalin உள்ளிட்ட தலை��ைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் கட்டுரைகளுடன் 1120 பக்கங்கள் கொண்ட ஒரு மாபெரும் வரலாற்று ஆவணமாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.
'திராவிட மாடல்' பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், ‘முரசொலி’ பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், சட்டமன்றத் தொகுதிதோறும் கலைஞர் நூலகம், ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் இருநூறுக்கும் மே��்பட்ட இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்தது… என்று தொடரும் கழக இளைஞர் அணியின் கருத்தியல் பணிகளில் அடுத்த பாய்ச்சல்தான் இந்தப் புத்தகம்.
கழகத்தலைவர் கரங்களால் வெளியிடவிருக்கும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு‘ நூலின் அட்டைப்படத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.
#DMK75 #அறிவுத்திருவிழா
தென் சென்னையில் ஆதம்பாக்கம் பகுதியில் தேங்கு��் மழை நீரை வேளச்சேரி வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு கொண்டு சேர்ப்பதில் வீராங்கல் ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, ரூ.5.6 கோடி செல���ில் இந்த ஓடை தூர்வாரப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் 1.3 கி.மீ தூரத்துத்துக்கு தடுப்புச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன.
ஓடைக்குள் குப்பைகள் தேங்காமல் இருக்க, 1.6 மீட்டர் அளவுக்கு கம்பி வலைகளும் (Chain Link Mesh)அமைக்கப்பட்டுள்ளன.
தென் சென்னையில் வெள்ளத்தடுப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணி, நிறைவு பெற்றுள்ளதை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
எண்ணற்ற எதிரிகளையும் , நெருக்கடிகளையும் சந்தித்து - வென்று பவள விழா கண்ட பேரியக்கமாம் தி.மு.கழகம், ஏழாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றிட, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்யும் முதன்மை அண���யாய், கழக இளைஞர் அணி கடமையாற்றும்!
@dmk_youthwing
மதுரை ஜான்சி ராணி பூங்காவில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட இளைஞர் அணிக்கு நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள், ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிக் கிளைகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்த வகையில் இன்று சென்னை தென் மேற்கு மாவட்ட��்தில் உள்ள தியாகராய நகர், மயிலாப்பூர் மற்றும் சென்னை வட கிழக்கு மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இக்கொள்கைக் கூட்டத்தை இன்று மாலை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் சந்திக்க உள்ளோம். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்.
#க���க_இளைஞர்_அணி @SUDHARSANAM_S @mylaivelu71 @Joel_Dmk
@raja_anbazhagan @rdmadhankumar
கழகத்தின் முதன்மை அணியாம் நம் @dmk_youthwing -க்கு கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன், ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட விருகம்பாக்கம், மதுரவாயல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள கிளை, வார்டுகளிலும், பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் லட்சியங்களை மனதிலேந்தி கொள்கைப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88
கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது உத்தரவின் பேரில், தலைமைக்கழக ஒப்புதலுடன் , @dmk_youthwing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகி��ோம்.
அந்தவகையில், சென்னை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்!
தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கழகப் பணியாற்றிட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி வரவேற்கிறேன்!
@arivalayam @Subramanian_ma @Joel_Dmk @PrabhakarRaja88