சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும்!
சென்னையில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ மழை பெய்திருக்கிறது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ, சென்னை சென்ட்ரலில் 27.45 செ.மீ, திருவொற்றியூரில் 22.41 செ.மீ, எண்ணூரில் 21.58 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பல இடங்களில் மேக வெடிப்புக்கு இணையான அளவில் மழை பெய்திருப்பது குறிப்பிடத்த்தக்கது.
சென்னையில் அதிக அளவில் மழை பெய்தது ஒரு புறமிருக்க, கத்திவாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ அளவுக்கும், மீனம்பாக்கம்ம், சாத்தங்காடு ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீட்டருக்கும் கூடுதலாகவும், பாரிமுனை, திருவொற்றியூர், எண்ணூர், கார்கில் நகர் ஆகிய இடங்களில் 10 செ.மீக்கு சற்று குறைவான அளவிலும் மழை பெய்திருக்கிறது. மேக வெடிப்பு ஏற்பட்டதைப் போல சென்னையில் மழை கொட்டித் தீர்த்திருப்பது எந்த வகையிலும் ஆச்சரியமளிக்கவில்லை.
காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் மேக வெடிப்பு போன்ற சூழல்கள் ஏற்படலாம் என்றும், அதை சமாளிக்கும் வகையில் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் தான் நேற்றை ய மழைப்பொழிவு அமைந்துள்ளது. நடப்பாண்டில் எல் -நினோ தாக்கமும் இருப்பதால் நிலைமை மோசமடையும் ஆபத்தும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
சென்னையில் நேற்றிரவு பெய்த மழைக்கு நகரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இனிவரும் காலங்களில் நேற்று பெய்ததை விட இன்னும் கூடுதலான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்ப்புகளை ஏற்படுத்தக் கூடும். அதை மனதில் கொண்டு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.
சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது பேரிடர் மேலாண்மை வல்லுனர் திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும்.2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.
ஆனால், அதன்பின் 43 மாதங்களாகியும் அந்த அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை. திருப்புகழ் குழு அறிக்கையில் மொத்தம் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முந்தைய திமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிக்கையில் இடம்பெற்றிருந்த 161 பரிந்துரைகள் என்னென்ன? செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகள் என்னவென்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை.
திமுக ஆட்சி முடிந்து தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அதே நிலை தான் தொடர்கிறது. சென்னை மாநகரம் இன்னொரு முறை வெள்ளத்தில் மிதக்கக் கூடாது. இதையும், சென்னையில் மேக வெடிப்பு போன்ற நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிட்டு அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் சென்னையின் வெள்ளத்தடுப்பு மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை அரசு மேம்படுத்த வேண்டும். @CMOTamilnadu
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் @NainarBJP அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து, நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்பு பணிகள் என்ற பெயரில், உலக வங்கிக் கடன் ரூ.21 கோடி செலவில், 3 கி.மீ நீளத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சதுப்பு நிலத்தை மீட்பதற்கு பதிலாக, அப்பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தி பேரழிவை உருவாக்கும் இத்திட்டம் நடைபெறும் பகுதியை பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்த போது.!
இடம்: சாய் கணேஷ், பள்ளிக்கரணை, சென்னை
#SavePallikaranaiWetland #Pallikaranai #PasumaiThaayagam #PMK
பணிப்பாதுகாப்பு, ஊதிய உயர்வு கோரி போராடிய செவிலியர்களை கைது செய்வதா? ஒரு மாதத்தில்
கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!
சென்னை எழும்பூரில் ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டம் நடத்திய தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு, கைது செய்திருக்கின்றனர். உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இடைநிலை சுகாதார பணியாளர்களான செவிலியர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் தான் வழங்கப்படுகிறது. பணி நிலைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக அவர்கள் பணியாற்றி வரும் போதிலும் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.
ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவோம் என்று த்வெக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தான் செவிலியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நீதியல்ல.
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து நவம்பர் 3-ஆம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். அதற்குள்ளாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அவர்கள் மீண்டும் ஒருமுறை போராட்டம் நடத்தும் நிலையை அரசு ஏற்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
திருநெல்வேலி - தாமிரபரணி படித்துறையில் கழிவுநீர் கலக்கப்படுவதை, நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்தபோது.
இந்நிகழ்ச்சியில் சென்னைவாழ் நெல்லை மக்கள் நல சங்கத் தலைவர் M.சைமன் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் C.சங்கர்மணி, எழுத்தாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.!
#thamirabarani #Thirunelveli #PMK #sowmiyaanbumani
திருநெல்வேலி - தாமிரபரணி படித்துறையில் கழிவுநீர் கலக்கப்படுவதை, நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து செய்தியாளர்களை சந்தித்தபோது.
இந்நிகழ்ச்சியில் சென்னைவாழ் நெல்லை மக்கள் நல சங்கத் தலைவர் M.சைமன் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் C.சங்கர்மணி, எழுத்தாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு அவர்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாமக நிர்வாகிகள் பங்கேற்றனர்.!
#thamirabarani #Thirunelveli #PMK #sowmiyaanbumani