தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
சொன்னா நம்புங்க... காய்ச்சலோட இருந்த பச்சைக் குழந்தையை, IPL பார்க்க கூட்டிட்டு போய் Thug Lifeன்னு status போட்டோம்.
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க தான், ATM card & 500ரூ நோட்டு எல்லாம்.. 🤡
வீடியோல குழந்தை இல்லையேன்னு கேட்காதீங்க... அந்த வீடியோவை எடுத்ததே, 6 மாச கைக்குழந்தை தான்
#WATCH | “திமுக ஆட்சியில் செய்த பல பணி நியமனங்கள் மீதம் இருக்கிறது. அதையும் நீங்க தான் செஞ்சீங்கன்னு ரீல்ஸ் மட்டும் போடாதிங்க..”
-முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
#SunNews | #TNEB | #DMK | #TVK
கொளுத்தூரில் வெற்றி பெற்றவர் சாதாரன தவெக தொண்டர் மட்டுமல்ல…
மக்கள் பணியை தொடர்ந்து செய்து வருபவர்…
அவர் செய்ய விரும்பும் உதவியை மக்கள் மறுத்தாலும் வீட்டுற்கே தூக்கி வந்து அவர்களுக்கு பணிவுடை செய்பவர்…
🔥🔥🔥
*இடைத்தேர்தல் .....!*
*கவர்ச்சி அரசியலால் இப்போது பெற்ற தோல்வியை விட மிக பெரிய தோல்வியை 1991- ல் பெற்றவர்கள் திமுகவினர்.*
*ஒரே ஒரு இடத்தில் மட்டுமே திமுக வென்றது. அத்தனை சோதனைகள் மத்தியிலும் அதில் வென்று வெற்றி கொடி நாட்டிய அந்த ஒரே நபர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மட்டுமே.*
*அதற்காக திமுக ஒன்றும் சோர்ந்து போகவில்லை.*
*தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தானைத் தலைவர் கலைஞர் அவர்கள்.*
*திமுகவின் ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட இல்லாத மன்றத்தில் ஆணவமும் , அகங்காரமும் தலைவிரித்து ஆடியது.*
*கலைஞரின் ராஜினாமா செய்த துறைமுகம் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழும்பூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.*
*எதையும் சிங்க பார்வையில் எதிர்கொள்ளும் தானைத் தலைவர் கலைஞர் அவர்கள் அதையும் எதிர்கொள்ள தயாராக இருந்தார்.*
*திமுக சார்பில் எழும்பூர் தொகுதியில் பரிதி இளம் வழுதி அவர்களும் , துறைமுகம் தொகுதியில் செல்வராஜ் அவர்களும் போட்டியிட்டனர்.*
*நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.*
*அந்த வெற்றி என்பது தமிழ்நாடு சட்டமன்றத்தேயே திமுக அலரவிட்டது என்பதை யாரும் இன்றுவரை மறக்கமாட்டார்கள்.*
*அப்படியான வரலாறு கொண்ட திமுகவுக்கு இப்போது நடைபெறும் ஆட்சியின் அவலத்தை சுக்குநூறாக துடைத்தெறிய வேண்டிய நேரம் இதுவல்லவா ?*
*சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை முதல் கொலை , போதைபொருள் , சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாக மக்களிடம் பேச திராணி அற்றவன் , தோழியுடன் இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா ?*
*ஆம் , வர போகிறது இடைத்தேர்தல்.*
*முதலமைச்சர் தேடிய அப்பாவை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டாமா ?*
*கலைஞர் உரிமைத் தொகை , மகளிர் விடியல் பயணம் , நான் முதல்வன் , புதுமைப்பெண் திட்டங்களை வகுத்தவரை தற்குறி முதலமைச்சர் பார்க்க வேண்டாமா ?*
*1991ஆண்டு இடைத்தேர்தல் வெற்றியை போல் , 2026 ஆண்டு இடைதேர்தலிலும் வெற்றி பெற்று தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு முகம் திமுக என்பதை மீண்டும் பதிவு செய்வோம்.*
*மீண்டு வருவோம் , மீண்டும் வருவோம்.*
*வணக்கம்...*
- *பி.எஸ்.பி.செல்வின் சதீஷ் குமார்.பிஇ*
24.06.2026
பாரம்பரிய திமுக குடும்பத்தை சார்ந்த திரு. அரியப்பன் அவர்களின் மகன்,
இளைஞர் அன்பானந்தன் அரியப்பன் @Anbanantham_A அவர்களை,
நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து காவல்துறையின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
முதலீடுகளை ஈர்ப்பதில்
திமுக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டது..!
------------
சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்
👇👇👇👇👇
"தொழில் முதலீடுகள்
தமிழகத்தில் இருந்து வெளியேறியதற்கு,
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இருந்த
காலதாமதம், ஊழல்
போன்றவைதான் காரணம்."
என்று தமிழக தொழில்துறை அமைச்சர்
கீர்த்தனா கூறி இருந்தார்.
இந்நிலையில் @IndianExpress நிகழ்ச்சியில்
தான் பேசியது பற்றி
தெலுங்கு தேசம் கட்சியின்
தேசிய செயல் தலைவரும்,
ஆந்திர தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான
நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள பதிவு :
“அரசியல், சில சமயங்களில்
இரக்கமற்றதாக இருக்கக்கூடும்
என்பது குறித்து
அந்த நிகழ்ச்சியில் நான் பேசினேன்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில்
மிகவும் மும்முரமாக செயல்பட்ட
முந்தைய திமுக அரசுடன்
நாங்கள் கடும் போட்டியை
எதிர்கொண்டோம்.
அதில் சிலவற்றில் வென்றோம்,
சிலவற்றில் தோல்வி அடைந்தோம்.
ஆனால்,
திமுக அரசு பணம் கேட்டதான புகார்களை முதலீட்டாளர்கள் யாரிடமாவது
நான் ஒருபோதும் கேட்டதில்லை.
பாராட்ட வேண்டிய விஷயத்தை
நாம் பாராட்டத்தான் வேண்டும்.
திமுக அரசு
முதலீடுகளை ஈர்க்கும் செயல்முறையை
மிக நேர்மையாகவும்
தொழில்முறை அணுகுமுறையுடனும் கையாண்டது.
அது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது.”
திமுக தலைவர் மு க ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி உங்க அப்பாவை காணோம் என உதயநிதி ஸ்டாலினை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கிண்டலாக பேசியிருந்தார்
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாடு மொத்தமும் அறியும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்
Fight getting grip now!
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததில்லை. ரூட் நிறுவனத்தை நடத்திவரும் ஜெகதீஷ் பழனிச்சாமி முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும்போது தன்னைத் தானே முதலமைச்சரின் தனிச்செயலராக அறிவித்துக்கொண்டார். அப்படியொரு அறிவிப்பு அதுவரை வெளியாகவில்லை.
அதற்குப் பின் பழைய தேதி குறிப்பிட்டு முன்னாலேயே அவரை முதலமைச்சரின் தனிச்செயலராக்கிவிட்டது போல் அவசரம் அவசரமாக ஓர் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.
முதலமைச்சரின் தனிப்பட்ட ஜோசியருக்கு அரசுப் பதவி தந்து கடும் எதிர்ப்பு வந்தபின் அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது தனிப்பட்ட விளம்பர வேலைகளைச் செய்யும் ஜெகதீஷ்க்கு அரசுப் பதவி. அதை ஏன் அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தது அரசு? அவர் தானாக அறிவித்துக்கொண்டபின் ஆணை வந்திருக்கிறது.
அரசுப் பதவி என்ன அப்பன் வீட்டுச் சொத்தா? முதலமைச்சரின் வார்த்தைகளில் சொல்வதானால் 'ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க'
யார் வீட்டுக் காசு? மக்களின் வரிப்பணம் அது முதலமைச்சர் அவர்களே!
இதற்குப் பெயரும் ஊழல்தான்.
பதிவு: @jkavinmalar
இதன்பிறகு தான் Live நிறுத்தப்பட்டது. முதல்வரென்றும் பாராமல் கலாய்த்தால் அவர்களும் என்ன செய்வார்கள்? ச்ச்சோ பாவம்ல..🤣
எங்களுக்கு கிடைக்க வேண்டிய மீம் கண்டெட்டை ஸ்டாப் செய்த திமுகவுக்கு கன்மையான வண்டனங்கள்..🤡
#TNAssmebly2026