இப்ப தான் உண்மை வெளி வருது. திமுக அதிமுக கூட்டணி என்கிற விஷயத்தை தேவையில்லாமல் பேசி சொதப்பி விட்டதே உதயசந்திரன் தான். இப்படி ஒரு முன்னெடுப்பு வந்த போது அதை திராவிடர்கழகம் முன்னெடுத்தது. அதை கையிலெடுத்த உதய சந்திரன் நடுதெருவுக்கு கொண்டுவந்து விட்டார் என்கிறார்கள் திமுகவை சேர்ந்தவர்கள்.ஆட்சியில் இருக்கும்போது விஜய் ஒரு ஆளே இல்லை என உளவுதுறை செந்தில் வேல் மூலம் graph போட்டு திமுகவை வீழ்த்தியதும் உதயசந்திரன் தான். தோற்ற பிறகு பொருந்தா கூட்டணி முயற்சி என்கிற அவபெயரை பெற்று தந்த்தும் உதயசந்திரன் தானாம். கூடா நட்பு கேடாய் முடியும்!
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் we will face the consequences என்று சொன்ன லோகநாதன் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜூன் 22 க்குள் தீப விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும்.. நடப்பது யார் ஆட்சி?
Dr J Loganathan IPS who said “We are not allowing, we will face the consequences” in Thiruparangundram Lamp issue.. was made to compulsory wait and now posted in Technical services..
Political games…
@TimonTheFire@DMKITwing
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
ஒரு திரைப்படம் வெற்றிபெற்றால் படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு கார் பரிசளிப்பது சமீபத்துல ஆரம்பிச்சதுனு நினைக்கலாம்.
1951 இல் “மணமகள்” திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதற்கு என். எஸ். கிருஷ்ணன் அவர்களால் கலைஞருக்கு பரிசளித்த காருடன் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்.
நம்மால் பலனடைந்தவர்கள் நம்மிடம் நன்றியோடு இருப்பார்கள் என எதிர்பார்க்க கூடாது என்பதே என் பொதுவாழ்வில் நான் கற்றுக் கொண்டது. 2016ம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் சொன்ன வார்த்தைகள் இவை. கலைஞரின் கடைசிப் பேட்டி அதுதான் என்று நினைக்கிறேன்.
நீண்ட பொதுவாழ்வில் யாருக்காக உழைத்தோமோ அவர்களில் பெரும்பான்மையானவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் இருந்த துர்பாக்கியம் கலைஞருக்கு வாய்த்திருந்தது. யாரிடமும் நன்றியை எதிர்பார்க்காத மனநிலை கலைஞருக்கு வாய்த்திருக்கலாம்.
கலைஞருக்கு நினைவு தப்பி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது கோபாலபுரத்திலும் காவேரி மருத்துவமனை வெளியிலும் கூடியிருந்தவர்களில் கட்சிக்காரர்களைத் தாண்டி அவரால், அவர் திட்டங்களால் பலனடைந்தவர்களும் இருந்தார்கள். பணி நிமித்தமாக இல்லாமல் கலங்கிய கண்களோடு வந்து நின்ற ஊடகவியலாளர்களை காவேரி மருத்துவமனை வெளியில் பார்த்திருக்கிறேன்.
கலைஞரின் கடைசி நாட்கள், அதிமுக தரப்பிலிருந்து பன்னீர்செல்வம், வேலுமணி எல்லாம் வந்து பார்த்து சென்ற இரவு. நேரம் நள்ளிரவைக் கடந்ததால் கோபாலபுரம் வீட்டு வாசலில் கூடியிருந்தவர்களை கு.க.செல்வமும், தமிழரசும் கலைந்து போகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுத்தவர்களில் ஒரு திருநங்கையின் குரல் மட்டும் தனித்து ஒலித்தது.
”ஏதேதோ பேர் சொல்லி எங்கள உலகம் அசிங்கப்படுத்துனப்போ திருநங்கைனு எங்களுக்கு மரியாதை கொடுத்தவர் தலைவர். அவர் இருக்குற இடத்துல நாங்களும் இருந்துக்குறோம்” என செல்வத்திடம் வாதிட்டுக் கொண்டிருந்தார்.
முறைசெய்து காப்பாற்றிய மன்னவனை இறையென்று பார்த்த தமிழ்நிலத்தின் நன்றியறிதல் அது. கலைஞரின் இறுதி நாட்களில் அவருக்காக கூடிய கூட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளும் அதிகமிருந்தனர்.
கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும்; சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் என்ற வார்த்தைகள் கவியரங்க மேடைக்கானவை மட்டுமல்ல. முந்தைய தலைமுறைகளுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உறுதிப்படுத்திய போர் முழக்கம்.
இன்று கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்துகிற பலரின் பதிவுகளில் கட்டை விரல்களைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம். நான் உட்பட பலரின் பெயருக்குப் பின்னால் போடப்படும் பட்டங்களுக்கு கலைஞரின் கட்டை விரல் போட்ட கையெழுத்துகள் காரணமாக இருந்திருக்கின்றன.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்
என்ற வள்ளுவன் வாக்கு தன் காலத்திற்கு பிறகு கலைஞர் இந்த சமூகத்தில் அடைந்த இடத்திற்கு சான்றாக இருக்கும்.
2021ல் செல்வி. ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவிற்கு வந்த அதிமுகவினர் சாரை சாரையாக கலைஞர் நினைவிடத்திற்கும் வந்தார்கள்.
அம்மாவைப் பார்க்க வந்தோம்; அப்படியே தலைவரையும் பாத்துட்டுப் போலாம்னு வந்தோம் சார் என அதிமுக கரைவேட்டியோடு ஊடகங்களிடம் அவர்கள் பேசிய வீடியோக்கள் இன்றும் உண்டு.
காங்கிரசின் பீட்டர் அல்போன்ஸும் பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரியும் தலைவர் என்று விளித்து கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
தலைவர் என்ற இடம் இந்த இனமும் நிலமும் அவருக்கு கொடுத்தது.
புறநானூற்று தமிழ் போல் நின் புகழ் வாழ்க!
கட்டை விரல் காத்து தலைமுறைகளைக் கரை சேர்த்த தலைவருக்கு புகழஞ்சலி
//
இணையதள நண்பர்களோடு அறிவாலயத்தில் தலைவர் அறையில் சந்தித்தபோது, “இன்னொரு அணியா? கழகத்துக்கு பிணியா மாறிடாதீங்க...” என்று அவருக்கே உரிய நக்கல் தொனியில் கமெண்ட் அடித்தார்.
//
Visionary 😍😍😍
தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை நீங்கள் முதன்முதலாக நேரில் கண்டது எப்போது?
80களின் மத்தியில் மடிப்பாக்கம் திமுக கிளைச்செயலராக இருந்த கோ.தெய்வசிகாமணி அவர்களது புதுமனைப் புகுவிழாவுக்கு தலைவர் வந்திருந்தார். அப்போதுதான் முதலில் பார்த்தேன். பின்னர் எத்தனையோ கூட்டங்கள், நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். கோபாலபுரம் இல்லத்தில் அவரது மாடியறையில் சந்திக்கும் வாய்ப்பெல்லாம் அமைந்தது வாழ்வின் பெரும்பேறு.
மெரீனா கடற்கரையில் தேசிய முன்னணி தொடக்க விழாவில் அப்பாவின் தோள்மீது நின்று கலைஞரை கண்டேன். அதே கடற்கரையில் கேப்டன் விஜயகாந்த் தலைமையில் கலைஞருக்கு 1996 தேர்தலுக்கு முன்பாக திரையுலகம் நடத்திய பாராட்டுவிழாவை நண்பர்களோடு சென்று ரசித்தேன். 2001ல் கலைஞர் கைதுக்கான கண்டனக்கூட்டமும் மெரீனாவில்தான் நடந்தது. ஐஜி அலுவலகத்துக்குள் குண்டர்கள் புகுந்து, அலை அலையாய் வந்துக் கொண்டிருந்த தொண்டர்கள் மீது வன்முறையை ஏவினர். இரண்டு மூன்று பேர் ஸ்பாட்டிலேயே மரணித்துவிட, அவர்களது உடலை மேடைக்கு முன்பாக எடுத்து வந்து போட்டார்கள். கலங்கிப்போன கலைஞர், “நான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடக்கும் இந்த கூட்டம் வேண்டாம். நீங்களெல்லாம் அவரவர் இல்லங்களுக்கு பாதுகாப்பாக செல்வதுதான் இப்போது எனக்கு முக்கியம்” என்று கூறி கூட்டத்தை நிறுத்தி, எல்லோரையும் கலைந்துபோக சொன்னார்.
இணையதள நண்பர்களோடு அறிவாலயத்தில் தலைவர் அறையில் சந்தித்தபோது, “இன்னொரு அணியா? கழகத்துக்கு பிணியா மாறிடாதீங்க...” என்று அவருக்கே உரிய நக்கல் தொனியில் கமெண்ட் அடித்தார்.
“தினத்தந்தியே இணையத்துலே யூனிகோடுலே வருது, நம்ம முரசொலியும் யூனிகோடுலே வரணும்” என்று கோரிக்கை வைத்தபோது, புரியாமல் விழித்தார். “இணையத் தளத்திலே ஃபான்ட் டவுன்லோடு பண்ணாமலேயே படிக்கிற மாதிரி வசதி ஏற்படுத்தித் தரணும்” என்று சொன்னபோது, “ஸ்டாலின் கிட்டே சொன்னீங்கன்னா செஞ்சித் தருவாரு, அவருதான் இப்போ இதையெல்லாம் பார்த்துக்கிறாரு” என்று சொன்னவர், “ஸ்டாலின் இன்னிக்கு அறிவாலயம் வந்திருக்காரா?” என்று அலுவலக உதவியாளர்களிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, தளபதி அறைக்கு எங்களை அழைத்துச் செல்லுமாறு அனுப்பி வைத்தார்.
பொதுவாக தேர்தல் பிரச்சாரத்தை சைதை தொகுதியில்தான் சென்ட்டிமெண்ட்டாக ஆரம்பிப்பார். ஒருமுறை மறைமலை அடிகள் பாலம் அருகே, இன்னொரு முறை ஜோன்ஸ் ரோடு பொதுக்கூட்டம், இன்னுமொருமுறை ஜெய்கோபால் கரோடியா பள்ளி மைதானம் என்று தலைவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் போதெல்லாம் சரவெடியாக இருக்கும். 2004 பாராளுமன்றத் தேர்தலுக்கு தீவுத்திடலில் அன்னை சோனியா பங்கேற்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கூடினர். வைகோ பொடாவில் இருந்து வெளியே வந்தபோது, அவர் பங்கேற்கும் விதமாக மயிலை மாங்கொல்லையில் கூட்டம், 2006 தேர்தல் பிரச்சாரத்தை அடையாறு டெலிபோன் எக்சேஞ்ச் அருகில் தொடக்கிய கூட்டம் என்று கலைஞரை கண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். குறிப்பாக கலைஞர் பிறந்தநாள் மற்றும் முப்பெரும் விழாக்களை மறக்கவே முடியாது. என்னைப் போன்று சென்னையிலும், சென்னைக்கு அருகிலும் பிறந்து வளர்ந்தவர்கள் கலைஞரை நூற்றுக்கணக்கான முறை பார்த்திருப்பார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்துவின் சிறுகதைகள் வெளியீட்டு விழா, காமராஜர் அரங்கில் நடந்தபோது உடல்நலக்குறைவால் நலிந்திருந்த கலைஞர் பேசியது சரிவர புரியவில்லை. 1938ல் இருந்து தமிழ், தமிழர் உரிமைக்கு சங்கநாதமாய் முழங்கிய குரலுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அடுத்த சில நாட்களுக்கு உறக்கம்கூட வரவில்லை.
2009ல் இருந்துதான் கலைஞர் சக்கரநாற்காலியில் வலம் வரத் தொடங்கினார் என்று நினைவு. 2010ல் செம்மொழி மாநாட்டு மேடைக்கு ‘முத்தமிழே நீ வாழ்க’ பாடல் பின்னணியில் ஒலிக்க, அவரை சக்கரநாற்காலியில் பார்த்தபோது, கர்ச்சீப்பை முகத்தில் ஒற்றி விம்மி அழுதேன். பின்னர் கலைஞர் மரணத்துக்கு கூட நான் அழவில்லை. அது கல்யாண சாவு. அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வு கிடையாது. அரசியலோடு தன் வாழ்க்கையை பிணைத்துக் கொண்டவர். தன் வாழ்வில் அவர் பார்க்காத ஏற்றமும் இல்லை, தாழ்வும் இல்லை. எந்தவொரு மனிதருக்கும் கிட்டிராத அதிசய அனுபவங்களை கடந்து வந்தவர்.
கடந்தகால துயரங்களை திரும்பிப் பார்த்து சுயபச்சாதாபம் கொள்ளாமல், எதிர்காலத்தை நோக்கி மட்டுமே தன் நம்பிக்கைப் பார்வையை பதித்தவர். கலைஞர் அளவுக்கு ஸ்போர்ட்டிவ் ஆக காலத்தை எதிர்கொண்ட மனிதர்கள் வரலாற்றில் மிக மிக அரிதானவர்கள்.
இரண்டு செய்திகள்
1) 2016 இல் நடைபெற்ற தேர்தலில் அண்ணன் அப்பாவு வெற்றி பெற்றுள்ளதாக நீதிமன்றம் பத்தாண்டுகள் கழித்து இன்று
அறிவித்துள்ளது.
2) பக்ரீத் பண்டிகைக்கு தங்கள் இடங்களில் மாடு பலியிட தடை என்ற தீர்ப்பு அவசர அவசரமாக பக்ரீத்திற்கு முதல் நாள் வந்தது.
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
2022 Chess Olympiadயை வெற்றிகரமாக நடத்திகாட்டிய சென்னை, இம்முறை செஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தணும்ன்னு FIDE விரும்பியுள்ளது.
அப்டி ஒரு பெருமதிப்பை உலகளவில் தமிழ்நாட்டின் மீது கட்டி எழுப்பிருக்கிறது கழக அரசு.
இந்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டுருக்கிறது வக்கற்ற விஜய் அரசு.
வெறும் நான்கு மாதங்களில் 200 நாடுகள சேர்ந்த 2000 வீரர்கள் பங்குபெற்ற செஸ் ஒலிம்பியாடை
மிகசிறப்பாக நடத்தி முடித்தி உலகளவில் பெரும்பாராட்டை பெற்றது ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு
வெறும் நான்கு வீரர்கள் பங்குபெரும் போட்டியை கூட நடத்த துப்பில்லாததனம் தான் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம்
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது.
104 வாக்குகளில் அப்பாவு வெற்றி பெற்றதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவை அதும் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் & வைஷாலி செஸ் சாம்பியன்ஷிப் இரண்டிலும் போட்டியிடுகின்றனர்.
மே 31 தேதியுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடத்துவதற்கான காலகெடு முடிந்தது.
மாபெரும் வரலாற்று வாய்ப்பை தூக்கி எறிந்திருக்கிறது கையாலாகாத தவெக அரசு.