I don't know how many can understand the psyche behind this scene and another scene in climax. She screams loudly repeatedly. Both these scenes are my favourite in this film which I can relate myself. It reflects her emotional outburst which she's holding for so long. She can't even express or speak anything with their family members. What a helpless person can do is loosing out of control at some point..
Before asking for better facilities for yourselves, experience the reality of the people you represent. You are ministers because of the people—not above them.
#TamilNadu#Taxpayers#PublicService
Ministers must remember one simple fact: the facilities they use are funded by the taxpayers.
If even the basic travel and accommodation used by ordinary people across Tamil Nadu feels difficult or inadequate for you, how can you truly understand the everyday struggles they face?
எனக்கு இந்தத் திரைப்படத்தில் ஏகப்பட்ட சீன்கள் கனெக்ட் ஆகும்.
அதில் சாம்பிளாக சில சொல்லலாம் ���ன்றால்...
நடைபாதைக் கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏதோ மயக்கங்கள் பிறக்கும்
பாடல் வரிகள்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்..
பாடல் வரிகள்..
வியாபார நஷ்டம் காரணமாக தாங்கள் இருந்த இடத்திலிருந்து அதற்கு கீழ் இருக்கும் பொருளாதார வகுப்பில் வந்து இருக்கும் ஒரு குடும்பம். என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும், தங்களுடைய சின்ன சின்ன மகிழ்ச்சியாக, விலை உயர்ந்த மேல் உள்ளாடை வாங்��ியதை மகிழ்வாக தன் மகளிடம் அந்த அம்மா பகிர்ந்து கொள்ளும் ஒரு தருணம்.
வாழ்க்கை என்பதை இரண்டு விதமாக அணுகலாம். யானையை வீழ்த்தும் அளவு ஒரு பெரிய வெற்றியாக அது இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். அதைத் தான் எல்லோரும் சிலாகிப்பார்கள்.
சிறு சிறு மகிழ்ச்சி பூக்களின் மாலையாகவும் வாழ்க்கை அம��யலாம். மற்றவர்கள் சிலாகிப்பதற்கோ பாராட்டுவதற்கோ எதுவும் இருக்காது. ஆனாலும் அந்த தனி மனிதன் அதிகமான மகிழ்ச்சி தருணங்களை தன் வாழ்வில் கொண்டிருப்பான்.
உலக வாழ்க்கையிலேயே கடினமான இடம் இந்த பேலன்ஸிங்தான். வாழ்வில் மிகப்பெரிய வெற்றியும் வேண்டும். வாழ்வு முழுவதும் சின்ன சின்ன மகிழ்ச்சி தருணங்கள் இருந்து கொண்டேயும் இருக்க வேண்டும்.
ஆனால் அது எல்லோருக்கும் அமையாது. நம்மால் சின���ன சின்ன மகிழ்ச்சி தருணங்களை நமக்கான தருணங்களை வாழ்வு முழுவதும் அமைத்துக் கொள்ள முடியும். அட்லீஸ்ட் அதையாவது நாம் செய்து கொள்ள வேண்டும். வாழ்வின் அந்திம காலத்தில் சின்ன சின்ன சந்தோசங்கள் குறித்தான regretகள் இல்லாமல் இருந்துவிட்டால் போதும்.
வாழ்வில் உருப்படாமல் போய்விடுவானோ என அஞ்சி அவனை எப்படியாவது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டிக் கொண்டே இருக்கும் ஒரு தந்தை. அவனுக்கு ஒரு வேலை கிடைத்து விடுகிறது. அதை பகிர்ந்து கொள்கிறான். அவருக்கு உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி. ஆனால் அதை வெளிக்காட்டி விட்டாலோ, இந்த வேலை பணத்துக்காக தான் இப்படி இதுவரை நடந்து கொண்டாரோ என்று ��வன் மனதில் தோற்றுவிடுமே என்று அதை மறைத்து எப்போதும் போலவே நடந்து கொள்ளும் தந்தை..
காதலன் காதலி, தனியே ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். நிகழ்வுகளின் நீட்சியில் காதலி இறந்து விடுகிறாள். காதலியின் கௌரவத்திற்கு ஏதும் பங்கம் நடந்து விடக்கூடாது என்று, காதலன், அவள் என்னை காதலிக்கவில்லை நான் வற்புறுத்தியதால் என்னிடமிருந்து தப்பிக்க சென்று விபத்தில் சிக்கி விட்டார் என்கிறான். காதலி���ின் தாய்க்கு கொஞ்சம் உண்மை தெரியும். தன் மகளின் கௌரவத்திற்காகத்தான் இதைச் சொல்கிறான் என்று உணர்ந்து அவன் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு செல்வார்.
காதலியின் இறுதி சடங்குகளை அவர் வீட்டார் செய்துவிட்டு அவர் பயன்படுத்தி இருந்த பாய் தலையணையை குப்பைத் தொட்டியில் வீசி இருப்பார்கள். காதலன், அதை பொக்கிஷமாக எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு ஓடி வருவான். ஆயிரம் வரிகள் கடத்தாத ஒரு உணர்வை அந்த ஒரு காட்சி கடத்தி விடும்.
ஒரு கைதேர்ந்த இசைக்கலைஞனின் சிம்பொனி போல
ஒரு கைதேர்ந்த ஓவியமும் உலகப் பு��ழ்பெற்ற போல ஓவியம் போல
இந்தத் திரைப்படம் செல்வராகவனின் மாஸ்டர் பீஸ். யுவன் சங்கர் ராஜா
நா முத்துக்குமாரையும் சேர்த்து.
வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜியின் வசனம் ஒன்று இருக்கும்.
எனக்கு மட்டும் வானத்தில் பறக்கும் சக்தி இருந்தால் நிலவையும் நட்சத்திரங்களையும் கொண்டு வந்து உன் மாளிகையை அலங்கரித்திருப்பேன் என்று.
எனக்கும் அப்படித்தான் இப்போது தோன்றுகிறது. எனக்கு மட��டும் காலத்தை மாற்றி வைக்கும் சக்தி கிடைத்தால் இந்த படத்திற்கு அத்தனை தேசிய விருதுகளை அள்ளிக் கொடுத்திருப்பேன்.
நினைத்து நினைத்துப் பார்த்தேன் பாடலை விடவா ஒரு காதல் காவிய சோகப்பாடல் அமைந்துவிடும்?
திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தார். ஒரு பழைய தி.மு.க காரனாக அதற்கான காரணத்தை கூறுகிறேன்.
1) உதயநிதியை துணை முதல்வராக ஆக்க காட்டிய அவசரம். கலைஞர் போல பொறுமையாக இருந்து இருக்கலாம்.
2) RED GIANT என்னும் பெயரில் சினிமாவை ஆட்சி செய்ய நினைத்தது.
3) RED GIANT நிறுவனத்தை இன்ப நிதியை நிர்வகிக்க செய்தது
4) G Square என்னும் பெயரில் மருமகனை வைத்து Pen ஆட்டம் போட��டது. அவரை பெரிய ராஜ தந்திரிமயாக காட்ட நினைத்தது.
5) அனுபவம் மிக்க அமைச்சர்கள் எல்லாம் செய்தியாளர்களிடமும், பொது மக்களிடமும் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது.
6) இந்து மதத்தில் இருக்கின்ற சாதி பேதங்களை எதிர்க்கிறோம் என்று கூறாமல் ஒத்துமொத்தமாக எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொண்டது!!
7) அதிமேதாவிகள் போல பேசும் செய்தி தொடர்பாளர்களை விவாதங்களில் பங்கேற்க வைத்தது
8)போதைபொருள் நடமாட்டத்தை சரிவரி தவிர்க்க தவறியது!!
9) பெண்களுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க தவறியது
10) திமுகவினரை மதிக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களை நம்பி மதித்து முதல் மரியாதை கொடுத்தது
11) இறுதி மற்றும் முக்கியமான விஷயம், வைகோவை கூட்டணியில் சேர்த்தது.etc etc
@mkstalin @KanimozhiDMK
மதுரைக்காரர்கள் சாப்பிட���வதற்காக வாழ்பவர்கள்.
மற்றவர்கள்
வாழ்வதற்காக சாப்பிடுபவர்கள்.
நீரில் பிறக்கும் மீன் இயல்பாக நீந்துவது போல
மதுரையில் பிறக்கும் மனிதர்கள்
இயல்பிலேயே foodies தான்.
#Silk_Smitha
குமுதம் அரசு பதில்களில் , காந்திக்கும் சில்க்குக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்பார்கள்.
இருவரும் அரையாடை அணிந்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர்கள் என்று பதில் வரும்.
படப்பிடிப்பில் சில்க் கடித்து வைத்து விட்டுப்போன ஆப்பிள் விளையாட்டாக ஏலம் விடப்பட்டது. அதை ஒருவர் 350 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்கள். அப்போது அது ஒரு தமிழ்நாடு கெஜட்டட் ஆபிஸரின் மாத சம்பளம்.
1980 களின் மத்திவரை தமிழ்நாட்டில் ஒரு வாலிபன் தன் வீட்டு படியிறங்கி விடடால், சில்க் என்கிற பெயரை கேட்காமலோ, சில்க்கின் முகத்தை எந்த வடிவத்திலாவது பார்க்காமலோ மீண்டும் வீட்டிற்குள் திரும்ப முடியாது, அந்த அளவிற்கு ���மிழ்நாடடில் அங்கிங்கெனாதபடி வியாபித்திருந்தவர் சில்க் ஸ்மிதா.
தமிழ் சினிமாவை அலங்கரித்த நாயகிகளிலேயே இன்னும் பல நூற்றாண்டு கடந்தாலும் அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து டாப் 5 நாயகிகளை தேர்ந்தெடுக்கச் சொன்னாலும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் அந்த லிஸ்டில் இடம் பிடிக்கக் கூடியவர் சில்க் ஸ்மிதா.
இயற்பெயர் விஜயலட்சுமி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆண்டனி ஈஸ்ட்மேன் என்னும் இயக்குநரால் ஸ்மிதா என நாமகரணம் சூட்டப்பட்டு இணையைத் தேடி என்னும் படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் 1980 ல் வண்டிச்சக்கரம் படத்தில் ஸ்மிதா என்னும் பெயரில் தன் திரை வாழ்க்கையை துவங்கினார்.சிவகுமார், சரிதா நடித்த அந்தப்படத்தின் இயக்குநர் கே.விஜயன். படத்தின் கதை, வசனத்தை எழுதியவர் வினுசக்கரவர்த்தி. அவர்தான் அதற்கு முன்னர் ஓரிரு மலையாளத் திரைப்படங்களில் தலை காட்டி இருந்த ஸ்மிதாவை வண்டிச்சக்கரம் படத்தில் வரும் சாராயம் விற்கும் ப��ண் கேரக்டருக்கு தேர்வு செய்தார்.
அந்த படத்தில் அவரின் திரைப்பெயர் சில்க். அந்தப் பெயரை வைத்தவரும் வினுசக்கரவர்த்தி தான். பின்னர் அப்பாத்திரத்தின் பெயராலேயே சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார். வினு சக்கரவர்த்தி நடித்த அத்தனைப் படங்களின் கிரெடிட்டை தராசின் ஒரு தட்டில் வைத்து இன்னொரு தட்டில் சில்க் ஸ்மிதாவை தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்திய நிகழ்வை வைத்தால், சில்க் ஸ்மிதாவ�� அவர் இங்கு அறிமுகப்படுத்தியது தான் எடை கூடியதாக இருக்கும்.
இந்தப் படத்தைப் பார்த்து பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜனின் மனைவியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. படத்தின் போக்கஸ் முழுக்க முழுக்க கார்த்திக், ராதாவின் மீது தான் இருந்தது. பட��் முழுக்க பாந்தமாக சேலையில் வந்த சில்க் ஸ்மிதாவிற்கு வலுவான காட்சிகள் அமைக்கப்படாததால் அவர் யாரையும் பெரிதாக கவரவில்லை. அதற்கடுத்த ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த மூன்றாம் பிறையில் சொல்லிக் கொள்ளும் படியான வேடம். அந்தப் படம் பலருக்கும் திருப்பு முனையாக அமைந்தது. அதில் சில்க் ஸ்மிதாவும் ஒருவர்.
சில கலைப் பொருட்கள் இருக்கும். அதை ஏதாவது ஏலக்கடையில் ஓட்டை உடைசல் பொருட்களோடு போட்டு வைத்திருந்தால் அதன் மதிப்பு தெரியாது. அதைத் தனியே எடுத்து துடைத்து வைத்தாலே அதன் அழகு மனதை கொள்ளை கொள்ளும். அதை அழகாக லைட்டிங் செய்து, எந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என நிர்ணயித்து அதன்படி அதை அமைத்தால், இந்தப் பேரழகா மூலையில் கிடந்தது எனத் தோன்றும். அப்படி சில்க் ஸ்மிதாவைக் காட்டினார் கேமிரா கவிஞன் பாலு மகேந்திரா. பொன்மேனி உருகு��ே பாடலில் லைட்டிங்கும், கேமிரா கோணங்களும் சில்க் ஸ்மிதாவை சாதாரணப் பெண் இல்லை இவர், கிளியோபட்ரா மறு ஜென்மம் எடுத்துப் பிறந்து வந்திருக்கிறார் ��னத் தோன்ற வைத்தது.
அவ்வளவு தான்.அதில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு சில்க்கின் ராஜ்யம் தான் தமிழ் சினிமாவில். அதே ஆண்டு வெளியான சகல கலா வல்லவனில் கமலுடன் அவர் ஆடிய நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுடி யம்மா பாடல் தமிழக இளைஞர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தது. எல்லா பத்திரிக்கைகளிலும் கிண்டல் ஜோக்குகள், துணுக்குகள் அந்தப் பாடலை மையமாக வைத்து வந்தன. கங்கை அமரன் இயக்கிய முதல் படமான கோழி கூவுது திரைப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக வேடம் கிடைத்தது. அந்தப் படத்தில் வரும் பூவே இளைய பூவே பாடல் சில்க்கை ஒரு யட்சியாக்கியது.
அந்த மூன்று ஆண்டுகளில் வருடத்துக்கு 20 படங்களுக்கு மேல் நடித்தார் சில்க் ஸ்மிதா. சில இயக்குநர்கள் நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்களை சில்கிற்காக அமைத்தாலும் அவரை ஒரு ஐட்டம் டான்சராகவே தமிழ் சினிமா வியாபார வட்டமான தயாரிப்பாளர்களும், விநிய��கஸ்தர்கள் பார்த்தார்கள். தமிழர்கள் ஒரு விருந்து சாப்பாடை அணுகும் விதத்திலேயே தமிழ் சினிமாவையும் அணுகினார்கள். எல்லா சுவையும் விருந்தில் இருப்பது போல கதை, செண்டிமெண்ட��, நகைச்சுவை, பாடல்கள், கவர்ச்சி என எல்லாமும் ஒரு படத்தில் வேண்டும் என்றார்கள். ஒரு ஸ்வீட் நிச்சயம் விருந்தில் வைக்கப்பட வேண்டும் என்பது போல ஒரு கவர்ச்சி நடனம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஹோட்டல் முதலாளிகளான சினிமா தயாரிப்பாளர்களும் ஒரே ஸ்வீட் வைத்தால் அலுத்து விடும் என அவ்வப்போது ஸ்வீட்டை மாற்றுவார்கள். போலவே தமிழ் சினிமா ரசிகர்களும்.
1970களின் பிற்பகுதியில் ஜோதிலட��சுமி, ஜெயமாலினி சகோதரிகள் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருவரை படத்தில் நுழைத்து போஸ்டரில் இடம் பெற வைத்துக் கொண்டிருந்தார்கள். அது தான் சராசரி சினிமா ரசிகனை தியேட்டருக்கு அழைத்து வரும் பொறி. இந்தக் காலகட்டத்தில் தான் தமிழ் திரையுலகில் நுழைந்தவர் சில்க் ஸ்மிதா. 20-20 மேட்சுகளில் துவக்க ஆட்டக்காரர் நன்றாக ஆடிக்கொண்டிருந்தாலும் அவரைக் காட்டிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ��ருவர் கிடைத்தால் யோசிக்காமல் ஆட்களை மாற்றுவது போல் ஜோதி லட்சுமி, ஜெயமாலினியை படியிறக்கம் செய்து விட்டு சில்க்கை மேலேற்றினார்கள்.
வண்டிச்சக்கரத்தில் அறிமுகமான சில்க் பல படங்கள் ஓட சக்கரமாய் இருந்தார். அந்தக் கால கட்டத்தில் இருந்த முக்கிய சினிமா பத்திரிக்கைகளான பேசும் படம், பிலிமாலயா, ஜெமினி ச��னிமா ஆகியவை குறைந்தது ஒரு சில்க் ஸ்மிதாவின் படத்தையாவது முழுப்பக்கத்தில் போட்டு விடுவார்கள்.சினிமா எக்ஸ்பிரஸ் மட்டும் கொஞ்சம் ஆச்சாரம். தினமணி குரூப். அவர்கள் பட்டும் படாமல் பேர் மட்டும் போடுவார்கள். இவர்களை விடுங்கள். சினிமா பத்திரிக்கைகள். குமுதம் பத்திரிக்கையில் அப்போது அந்தப் பத்திரிக்கை ஆசிரியர் பெயர் போடக்கூட மறப்பார்கள். சில்க் பெயரை போடாமல் ஒரு இஷ்யூ கூட வந்தது இ��்லை. அந்த அளவிற்கு ஒரு சக்கரவர்த்தினியாய் கோலோச்சினார் சில்க்.
கனவுக்கன்னி என்னும் பதமெல்லாம் அவருக்கு வழங்கப்பட்டது தமிழின் போதாமை தான். அவருக்கு அப்போது இருந்த கிரேஸை விவரிக்க தமிழில் மட்டுமல்ல எந்த மொழிகளிலும் வார்த்தை இல்லை. முக்கியமாக அவரது கண்ணின் அழகை. ஆயிரம் பிரம்மன்கள் சேர்ந்து இனி ஒரு பெண்ணைப் படைத்தாலும் சில்க்கின் கண்கள் மட்டும் அப்பெண்ணிற்கு அமையாது.
இப்போது யோசித்துப் பார்த்தால், சில்க்கிற்காக மற்றவர்களின் தேதிகள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளப்பட்டன. அவரின் நடனம் இருந்தால் மட்டுமே படத்தை வாங்குவோம் என வினியோகஸ்தர்கள் அடம் பிடித்தார்கள். இதெல்லாம் தான் ஞாபகம் வருக���றதே தவிர எத்தனை இயக்குநர்கள் அவருக்குள் இருந்த பொடென்சியலை வெளியே கொண்டு வந்தார்கள்?, எத்தனை விதமான வேடங்களை அவருக்கு கொடுத்தார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
1980களில் தமிழ்சினிமாவின் 95% படங்கள் ஒரே டெம்பிளேட்டில் அமைந்தவை. ஐந்து பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள், ஒரு நகைச்சுவை ட்ராக், உறுத்தலில்லா கதை இவ்வளவு தான். பெரிய எக்ஸ்பெரிமெண்டுகள் அரிதாகவே நடைபெற்றன. ���ந்த செட்டப்பில் சில்க் போன்ற உலக நடிகைகள்/ பேரழகிகளுடன் போட்டி போடக் கூடிய ஒருவருக்கு எந்த ஸ்கோப்பும் இல்லாமல் போயிற்று. சிவாஜி கணேசன் என்னும் சிங்கத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் தயிர் சாதம் தான் போட்டார்கள் என்பார்கள். சில்க் என்னும் புலிக்கு புளியோதரை தான் கொடுத்தது தமிழ் சினிமா.
யோசித்துப் பாருங்கள். பாகுபலி போன்ற பிரமாண்ட புனை கதை படங்களில் ஒரு அரசியாக சில்க் நடித்தி��ுந்தால் உலகின் கவனத்தையே அந்தப் படம் திருப்பியிருக்கும். அது போன்ற ராயல் ரோல்கள் கொடுக்காமல் வழக்கமான ஒரு ஆணுக்கு ஏங்கும் கதாபாத்திரத்தையே கொடுத்து அவரை நோக வைத்தது தமிழ் சினிமா. இயக்குநர்களும் அவரை ஒரு ஐட்டம் டான்சர் என்ற கோணத்திலேயே பார்த்தது தமிழர்களுக்கு இழப்பு.
தன்னுடைய கண்ணாலேயே அத்தனை பாவங்களையும் காட்டிவிடக் கூடிய வல்லவர் சில்க் ஸ்மிதா. அவரின் உடல் அமைப்பை விடுங்கள். அவர் கண்ணே யாரையும் புரட்டிப் போட்டு விடும் வல்லமை கொண்டது. அதை ஒரு படத்தில் கூட சரியாக உபயோகப் படுத்தவில்லை தமிழ் சினிமா.
சூரக் கோட்டை சிங்கக் குட்டி பட���்தில் காளிதாசன் கண்ணதாசன் என்ற பாடலில் ஒரு ராணி கெட்டப்பில் வருவார். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும். அதற்கடுத்து அவரின் எழிலை நன்கு காட்சிப்படுத்தியவர் பிரதாப் போத்தன். ஜீவா திரைப்படத்தில் ஒரு போட்டோ ஷூட்டாக வரும் பாடல் காட்சியின் ஸ்டில்கள் சில்க்கின் காலம் வரை அவரின் பெஸ்டாக இருந்தன. உண்மையில் உலகப் புகழ் பெற்ற போட்டோகிராபர்கள் ஷூட் செய்து சர்வதேச பத்திரிக்கைகளில் இடம் பெற்றிருக்க வேண்டியவர் சில்க் ஸ்மிதா.
ஒரு கவர்ச்சி நடிகையாகவே தமிழ் சினிமாவில் முத்திரை குத்தப்பட்டதால், வலுவான வேடங்கள் அமையாததால் அவரின் கிரேஸ் மெல்ல மெல்ல குறையலாயிற்று. அந்த தொடர் ஜோதியை வாங்கிக் கொள்ள அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்றோர் வந்தார்கள். வேறு வழியில்லாமல் ஜோதியை கைமாற்ற வேண்டியதாயிற்று.
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு,கன்னடம், இந்தி என எல்லா மொழிப் படங்களிலும் நடித்தவர் சில்க். தெலுங்கில் அவர் நாயகியாய் நடித்த சில்க் சில்க் சில்க், போலீஸ் போலீஸ் போன்ற படங்கள் எல்லா தென்னிந்திய மொழிகளில் எல்லாம் டப் செய்யப்பட்டு சி செண்டர்களில் பிரமாதமாய் ஓடியது. எல்லா மொழி திரை உலகங்களும் அவரை ஒரு கவர்ச்சி பண்டமாகவே பார்த்து அந்த ரீதியிலேயே வேடங்களைக் கொடுத்தார்கள்.
சில்க் கதாநாயகியாய் நடித்து ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய அன்று பெய்த மழையில் என்னும் படத்திலும், தம்பிக்கு ஒரு பாட்டு என்னும் படத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அது போன்ற வேடங்களை மற்ற இயக்குநர்கள் அவருக்குத் தரவில்லை.
சில்க்கிற்கு குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக அமையவில்லை. ஏறத்தாழ 400 படங்களுக்கு மேல் எல்லா மொழியிலும் நடித்திருந்தாலும் தன் முப்பத்தைந்து வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரையும் தாடிக்காரர் என்ற ஒரு கேரக்டரையும் இணைத்து அந்தக் காலகட்டத்தில் பரவலாக கிசுகிசுக்கள் வரும். அவர் பெயர் ராதா கிருஷ்ணன் என்பார்கள். அவர் புகைப்படமும் அரிதாகவே வெளியான���ு .
சில்க் ஸ்மிதா இந்த காலகட்டத்தில் பிறந்திருந்தால் இன்னும் மேம்பட்ட வேடங்களில் நடித்திருப்பார். மர்லின் மன்றோவிற்கு நிகரான புகழ் பெற்றிருக்க வேண்டிய சில்க் தன் 38 வயதிலேயே வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
சில்க் ஸ்மிதா இறந்த செய்தி அன்றைய மாலை நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. பெரிதாக எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. அன்று இரவு சன் டிவியில் இரண்டு மணி நேரம் மிட்���ைட் மசாலாவில் அவர் பாடல்கள். அப்போதும் எந்தச் சலனமும் ஏற்படவில்லை.
ஏராள திறமைகள் இருந்தும் சூழ்நிலையால் பெரிதாக வர முடியாமல் போனவர்களின் மீதான அனுதாபம், அவர்களின் மனவோட்டம் எப்படியெல்லாம் இருந்திருக்கும் என அவர்களின் கோணத்தில் யோசிக்கத் தொடங்கிய நாளில் சில்க் ஸ்மிதாவின் மீது மிகுந்த அனுதாபமும் பழைய பாடல்களை இப்போது பார்க்கும் போது எப்படி இருந்திருக்க வேண்டியவர், ஒரு கவர்ச்சி நாயகியாய், இல் வாழ்வில் தோற்ற பெண்ணாய் வரலாறால் சுருக்கப்பட்டு விட்டார் என்ற வேதனையும் வந்தது. சரியான வழிகாட்டி இருந்து கவனமாக தன் திரைப்படங்களைத் தேர்வு செய்திருந்தால் அவர் எங்கேயோ போயிருப்பார் என்ற வருத்தம் இன்னும் அகலவில்லை.
#parcel_tea
@NamChin_Name இதுல இன்னொரு விஷயம் கவனிக்கணும். அம்மாக்களுக்கு மகள் மீது மட்டும்தான் பிரியம் அதிகம். அதனால் உரிமையில் சொல்வார்கள். மாமியார் குற்றம் கண்டுபிடிக்க தான். அதனால் அதைக் கேட்கத் தேவையில்லை. அம்மாக்கள் மகனையே தன் மருமகளின் கணவன் என்ற எண்ணத்தில் தான் பார்க்கிறார்கள்.
@Vaigaitv_Chn Happieee Happieeee Happieeeeee Birthday Yuvan Kutty… Enjoy your First Birthday celebration with your favourite song Jolly oh Gymkhana - Beast 😻 @Vino_Nobita#bestie#son#Yuvaneshwar Have a blast 💥 Yuvan 😘😘😘😘😘
@Vaigaitv_Chn Happy Birthday to my Favourite Music channel..
Gandha kannazhagi - Namma veetu pillai. This is my first request in Vaigai TV. One fine day ☺️ So play the same song 🙂 More way to go Team 😍 Keep rocking.. ♥️