ஆட்சி வரும் போகும் நிலையல்ல, அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!
ஆட்சி இருப்பினும், இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம்; தமிழர் இனமானம் என்றும் காப்போம்!
#DMK4TN@Udhaystalin#EradicateSanatana
🖤❤️கழக வேட்பாளர் அண்ணி நித்யா சுகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் *தாமல்* கிராமத்தில் பாகம் எண் - *5* ல் மக்களின் பேராதரவோடு வாக்குகளை சேகரித்தோம் 🏴🚩
Preparedness cannot be outsourced to the people.
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?
#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
🗓️11/03/2026
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து,
⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்
⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்
- எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (https://t.co/iLujriPP2v)
🗓️12/03/2026
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (https://t.co/5yJehl0kYW)
🗓️14/03/2026
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு,
🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.
🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (https://t.co/5H0GZOFAHN)
அப்போதே கேட்டேன்:
மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
அப்போதும் பதில் இல்லை.
🗓️15/03/2026
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
10 இலட்சம் கழகத் தொண்டர்கள் ஒன்று கூடிய திருச்சி மாநில மாநாடு சொல்லும் செய்தி!
திராவிட நாயகரின் கூட்டணியே உறுதியானது. அவரின் பலமே வலுவானது!
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பாதையே தெளிவானது. தமிழ்நாடு அவரை பின் தொடர்கிறது!
#StalinWave2026#ஸ்டாலின்_தொடரட்டும்
வெல்லும் தமிழ் பெண்கள்: தமிழ்நாட்டின் விடியலுக்காக வீதிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டாலின் மகளிர் படை!
திண்ணைப் பிரச்சாரத்தில் தீவிரம்: இல்லம்தோறும் உதயசூரியனின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்களின் மனங்களை வெல்லும் எங்களது மகளிர் அணி
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
திமுக என்ற ஆலமரத்தின் வேர்களாக விளங்கும் BLA-2, BLC, BDA வாக்குச்சாவடிக் குழுவினருக்கான, 'என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி' தென் மண்டல பயிற்சி மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்!
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், மொடக்குறிச்சி, கவுண்டம்பாளையம், கரூர், நாகப்பட்டினம், திருமயம், சோழவந்தான் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…
#TNInterimBudget
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எழும்பூர், வேடசந்தூர், ஜெயங்கொண்டம், மதுரை தெற்கு, விக்கிரவாண்டி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கிப் பேசியும், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு செய்து வரும் வஞ்சகத்தை விளக்கியும், பாஜக-அதிமுக கூட்டணியின் துரோகத்தை மக்களிடையே எடுத்துரைத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” எனும் பரப்புரை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு , விழுப்புரம், ஆவடி, அம்பத்தூர் , ஸ்ரீபெரும்புதூர், சேலம் வடக்கு , அவினாசி, மண்ணச்சநல்லூர், குறிஞ்சிப்பாடி, பேராவூரணி, சிவகங்கை, திண்டிவனம், கோவை தெற்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது.
#தமிழ்நாடு_தலைகுனியாது