இராமச்சந்திர கவிராயர் வறுமையின் காரணமாக மனிதன் பலரிடம் பல்லை இளித்து வாழ வேண்டிய நெருக்கடி ஏற்படுவதை மனம் வருந்திப் பாடியிருப்பார். ஒரு மனிதனின் உடலசைவை அவனுடைய பொருளாதாரம் நிர்ணயிப்பது உண்டு. "பணமிருப்பவன் பூஞ்சையாக இருந்தாலும் அவனிடம் ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது".
'கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா இல்லைத்தான் பொன்னைத்தானெனக்குத்தான்
கொடுத்துத்தா னிரட்சித் தானா அல்லைத்தான் சொல்லித்தானாரைத்தா ணனுவத்தா னையோவெங்கும் பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே'..
தவெக வேட்பாளர்களை மக்கள் விரட்டுகிறார்கள் போன்ற செய்திகளுக்கு சில்லறை சிதற விடப்போவதில்லை . ஏனென்றால் இதற்கு முன் இப்படி விரட்டப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றது தான் அதிகம் . சமகால அரசியலை புரிந்துகொள்வது ஒரு உளவியல் ஆராய்ச்சி தான் . ஒரு சமூகத்துக்கோ , ஒரு ஊருக்கோ கல்வி , வேலைவாய்ப்பு , உதவித்தொகை போன்றவை கிடைக்கும் போது நம்ம ஊரில் , நம்ம சமூகத்தில் தம்மோடு இருக்கும் தனிமனிதர்கள் பயன்பெற்று வளரும் போது அங்குள்ள அனைவரும் அதை பாராட்டி ஆதரிப்பார்கள் என்பது பொதுவான பார்வை . சமீபத்திய வாக்களிக்கும் தன்மை அவ்வாறு இல்லை என்பதே எனக்குக் கிடைத்த பாடம் . ஒரு தெருவில் 4 பேர் பலன் பெற்று அடுத்த நிலைக்கு சென்றால் மகிழ்வதற்கு பதிலாக சுற்றியிருக்கும் 10 பேர் எரிச்சலும் பொறாமையும் கொள்கிறார்கள் என்பதே யதார்த்த நிலையாக உள்ளது . குடும்பங்களிலேயே அதிகரித்துள்ள இந்த பொறாமையும் எரிச்சலும் சமூகத்திலும் பிரதிபலிப்பது ஆச்சரியம் இல்லை . எதையும் பொதுவாக பார்க்கும் தன்மை குறைத்து வருவது சமூக வீழ்ச்சி என்றே கொள்ள வேண்டும் ।
Vijay's Politics of Distraction - A thread.
Chief Minister Vijay is not really in the business of politics or ideology. What he seems to know well is showmanship at any cost, and he continues to play only to this strength of his. 1/16
இதை Reversibility and flexibility வைத்து புரிந்து கொள்ளலாம். 90, 2000 வரை பிடித்த பாடல் கேட்க வேண்டும் என்றால் அப்பாடல் ஒளியும் ஒளியும் நிகழ்ச்சியிலோ, கல்யாண மண்டபத்திலோ, ரேடியோவிலோ அவர்களாக போடும் வரை காத்திருக்க வேண்டும். அப்படியே போட்டாலும் அதை pause செய்ய முடியாது. மீண்டும் ரீப்ளே கேட்க முடியாது. ஒரு பயணம் செல்ல வேண்டும் என்றால் பேருந்து வரும் நேரத்திற்கு முன்னதாக சென்று பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டும். அந்தப் பேருந்தை தவறவிட்டால் அடுத்த பேருந்தில் தான் செல்ல முடியும். ஜவுளிக்கடை, மளிகை கடையில் பொருள் வாங்கினால் கட்டிக் கொடுப்பார்கள், பிடிக்கவில்லை என்று ரிடர்ன் போடும் வழக்கம் இல்லை. இதுபோல reversibility and flexibility இல்லாத சூழலில் வளரும் போது மனம் அதற்கு ஏற்றது போல் condition ஆகிவிடுகிறது. விளைவுகள் எப்படி இருக்கும் என யோசித்து முடிவு எடுக்க முடிகிறது.
அதேநேரம் நினைத்த உடன் டூவீலர், காரை எடுத்து கிளம்பலாம், நினைத்த உடன் பாடல் கேட்கலாம், நினைத்த உடன் பொருளை வாங்கலாம், பிடிக்கவில்லை என்றால் ரிடர்ன் போடலாம் எனும் வாழ்க்கைமுறை ஒரு சுதந்திரத்தை கொடுக்கிறது. செய்வோம், தவறாகப் போனால் ரிடர்ன் போடுவோம் எனும் flexibility and reversibility சூழலுக்கு பழக்கப்பட்ட மனம், முடிவெடுப்பதில் இருக்கும் கட்டுப்பாட்டை தளர்த்துகிறது. வீடியோ கேம் போல ஸ்டார்ட் ஓவர் கொடுத்து மீண்டும் விளையாடலாம் எனும் எண்ணத்தை அளிக்கிறது. சரியான முடிவு- தவறான முடிவு எனும் கான்செப்ட் மாறி சரியான முடிவு - சரி செய்துகொள்ள முடிகின்ற முடிவு எனும் நிலை ஏற்பட்டுவிட்டது.
என் நண்பனுக்கு நடந்தத சொல்றேன்.
2011 ல நாங்க 3 பேரு இருந்த கம்பெனில இருந்து வேலைய விட்டுட்டு ஒரு பிசினஸ் start பண்ணுனோம் construction line ல. அதை பொறுப்பா பண்ணி இருந்தா கண்டிப்பா பெரிய ஆளா வந்து இருப்போம்.
ஆனா எங்களுக்கு வயசு 23 தான் அப்போ.
Cont..
எங்கெல்லாம் அதிகாலையிலேயே வேலைக்கு கிளம்பும்படி இருக்கிறதோ அங்கெல்லாம் இது போன்ற கேசரி, வடை தூக்குவாளியில் டீ காபி என்பது கட்டாயம்.
பெரியகுளம் மற்றும் சுற்றியுள்ள மேல் மங்கலம் ஜெயமங்கலம் போன்ற பகுதிகளில் எல்லாம் அதி காலையிலேயே சேமியா கேசரி வடை என தூள் பறக்கும்.
காரணம் அங்கே மாங்காய் பறிக்க செல்பவர்கள் விடிந்து விடியாமலேயே கிளம்ப வேண்டும். அவர்களுக்கான காலை உணவு.
அது தவிர அவர்கள் மதிய சாப்பாட்டிற்கு பெரும்பாலும் பழைய சோறு அல்லது காலையில் வடித்த சோறு எடுத்து செல்வார்கள்.
பெரும்பாலும் தண்ணீர் ஊற்றியோ தயிர் ஊற்றியோ சாப்பிடுவார்கள் அதற்கு வடை சைட் டிஷ் நிச்சய தேவை. எனவே காலையிலேயே வடை போட்டால் அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள்.
அருப்புக்கோட்டையிலும் இப்படித்தான். இங்கே தறி நெய்பவர்கள் அதிகம். அதுபோல அங்கே நிறைய மில்களும் உண்டு. அவர்கள் காலையிலேயே வேலை ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிக்கும் பொழுது டிபன் செய்கிறேன் டீ செய்கிறேன் என்று சட்டி பானை உருட்டி கொண்டு இருந்தால் ஆகாது. எனவே பார்சல் வாங்கி விடுவது உத்தமம்.
சிவகாசியிலும் கூட குடும்பத்தோடு வேலை பார்ப்பதால் சாம்பார் காய்கறிகள் என்று இரவு நேரங்களில் வைக்க கஷ்டப்படுவார்கள்.
அதனால் அவர்கள் சோறு மட்டும் வடிப்பார்கள். இரவில் மீது பால் ஊற்றி பக்கோடா வாங்கி வைத்து சாப்பிடுவார்கள்
பால் சோறு பக்கோடா என்பது சிவகாசியின் முக்கிய இரவு உணவு.
அதன்பின்னர் புரோட்டா கடைகள் அதிகம் வந்த பின்னர் எல்லோரும் வேலை முடித்து புரோட்டா பார்சல் வாங்கி சாப்பிட ஆரம்பித்தார்கள்.
உலகிலேயே ஒரு சதுர கிலோமீட்டரில் அதிக புரோட்டா கடைகள் இருக்கும் இடம் சிவகாசி தான்.
மதுரையிலும் கூட இரவு உணவு கடைகள் சாலையோர இரவு கடைகள் வர காரணமே,
மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சாயங்காலம் பறிக்கப்படும் பூ இரவு முழுவதும் வந்து கொண்டே இருக்கும். அதே போல பழங்கள் காய்கறிகள் என எல்லாமே சாயங்காலம் முடித்து சந்தைக்கு இரவு வந்து கொண்டே இருக்கும்.
அதனால் தான் நெல்பேட்டை சிந்தாமணி தியேட்டர் சித்தரகார தெரு போன்ற பகுதிகள் எல்லாவற்றிலும் இரவு நேர கடைகள் இருக்கும்.
அதனால்தான் மதுரைக்கு தூங்கா நகரம் என்கிற பெயரும் வந்தது.
அந்த காலகட்டத்தில் மதுரை கோட்ஸ் ஹார்வி மில் தியாகராஜா மில் என பெரிய மில்கள் ஒன்பது இருந்தன.
இந்த மில்களில் காலை ஷிப்ட் 7 மணிக்கு போகிறவர்கள் வீட்டில் இருந்து 6:30 மணிக்கு எல்லாம் கிளம்ப வேண்டும்.
அப்போது காலகட்டத்தில் விறகடுப்பு ரம்பத்துள் அடுப்புதான். இடமே அவர்களுக்கு ஒரு நாலு இட்லி தெரு கடையில் வாங்கி கொடுத்து விட்டால் போதும்.
தேவைதான் மனிதனின் சமூகத்தின் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
உணவு பழக்கவழக்கங்களையும் அதுதான் தீர்மானிக்கிறது
One observation:
I saw news reports that the Industries Minister has stated we would achieve 100% MoU conversion, unlike the previous government, which had achieved only 72% MoU conversion.
I have been repeating that our Industries Minister needs to take inputs from Guidance Tamil Nadu or outstanding officers like Vishnu Venugopal, who works directly under the Chief Minister.
Usually in India, the MoU conversion rate rarely exceeds 25%. Therefore, the 72% MoU conversion rate achieved by the previous Industries Minister is nothing short of phenomenal.
Talking about 100% MoU conversion is absolutely impractical and can never happen.
Since she is handling the most critical ministry of the state, such statements create unnecessary discomfort.
I hope she does her homework before making such statements.
I sincerely wish she delivers on par with the previous Industries Minister.
As a neurologist, it is now patently clear to me that the vast majority of people on the planet are suffering from neuroinflammation or brain damage (likely both)
The way people speak & behave has changed. Markedly so.
Whether irl, or via messaging/social media. It’s noticeable
To me, the DMK’s review feels like the usual, customary routine. I'm really not trying to be cynical, but you have to look at the brutal reality: a vast majority of the last three generations, basically those born from 1995 onward, simply aren't aligned with either of the dravidian parties anymore.
Think about it logically - that generational gap or disconnect is the foundational issue that actually needs a deep dive. If you just send the exact same set of people back into the field to do the assessing, they're going to use the same old lens that caused the blind spot in the first place.
You can't expect a real, significant breakthrough when the people diagnosing the problem are part of the system that created it.
500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்
// 1800க்குள்ள பில் வர்றவங்களுக்கு மட்டும் கூடுதலா 100 யூனிட் இலவச மின்சாரம்.
அப்ப பெருசா யாருக்கும் சம்மர்ல குறையப் போறதில்லை.
Welcome to The new Era.
இன்று தமிழ் நாட்டில் நாம் காணும் அரசியல் மாற்றம், ஏதோ தானாக விளைந்ததல்ல.அது ஒரு 'Narrative War.
இது 2018-ல் திரிபுராவில் மாணிக் சர்க்கார் என்ற 25 ஆண்டுகால கோட்டையை வீழ்த்த பா.ஜ.க பயன்படுத்திய அதே 'Information Warfare' உத்தியின் அச்சு அசலான மறுபதிப்பு!.
அன்று திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்த பா.ஜ.க கையில் எடுத்த ஆயுதம் மிகைப்படுத்தல். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் குற்றத்தை, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற ஒரு Perception.சமூக வலைதளங்கள் மூலம் கட்டமைத்தனர். "சலோ பல்டாய்" என்ற ஒற்றை வாசகத்தை மக்களின் ஆழ்மனதில் விதைத்தனர். அதே Formula தான் இங்கும்!
இதையே தான் தமிழ் நாட்டிலும் கட்டமைத்தனர்.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பில் முன்னணியில் இருக்கும் தமிழ் நாட்டை, ஏதோ ஒரு சில சம்பவங்களை வைத்து 'பாதுகாப்பற்ற மாநிலம்' என்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் இளைஞர் மனதில் பதிய வைத்தனர்.
ஒரு நீண்ட கால சமூகப் பிரச்சனையை, இப்போதைய நிர்வாகச் சீர்கேடு என்பது போல 24 மணிநேரமும் ஒரு 'Narrative' செட் செய்யப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளில் நாம் அடைந்த கல்வி, மருத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியைப் பற்றித் தெரியாத ஒரு தலைமுறையை (Gen-Z) குறிவைத்து, "எதுவுமே நடக்கவில்லை, எல்லாம் மோசம்" என்ற குருட்டுத்தனமான நம்பிக்கையை விதைத்தனர்.
இதற்கு இவர்கள் பயன்படுத்திய பிரதான தளம் இன்ஸ்டாகிராம். சினிமா இன்ஃப்ளூயன்சர்கள், லைஃப்ஸ்டைல் வீடியோ போடுபவர்கள் என ஒரு பெரும் கூட்டத்தையே இதற்காகத் தயார் செய்து, செய்திகளை விட 'வைரல் வீடியோக்கள்' மூலம் பரப்புரை செய்தனர். வரலாற்றுப் புரிதல் இல்லாத ஒரு தலைமுறையை, மிக எளிதாக ஒரு 'Digital Trap'-இல் விழ வைத்துவிட்டனர். இவர்களுக்கு ஆதாரப்பூர்வமான விவாதங்களை விட, 15 வினாடி 'BGM' போட்ட ரீல்ஸ்கள் தான் தேர்தல் அறிக்கையாகத் தெரிந்தது.
வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டே, வளர்ச்சி அடையவில்லை என்று நம்பும் ஒரு முரண்பாடான தலைமுறையை இந்த 'நாடக கும்பல்' உருவாக்கியிருக்கிறது. நிஜத்திற்கும் நிழலுக்குமான வித்தியாசம் தெரியாமல், இன்ஸ்டாகிராம் அல்காரிதத்தில் சிக்கி வாக்களித்திருக்கிறார்கள்.
பிம்பங்கள் ஆட்சியைக் கைப்பற்றலாம், ஆனால் அவை ஒருபோதும் வளர்ச்சியைத் தராது. திரிபுராவில் அன்று விதைக்கப்பட்ட 'மாற்றம்' இன்று எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்தால், நாளை தமிழ் நாட்டின் நிலை புரியும்!
#DigitalPolitics #TNPolitics #PerceptionWar
@arivalayam@mkstalin@Udhaystalin@TRBRajaa@DMKITwing
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடவேண்டும் என போராடிய மாநிலம் தமிழ்நாடு
எத்தனையோ அழுத்தங்களுக்கு பிறகும் அதை விடாமல் இதுவரை கடைபிடித்து வந்தது
இப்போது #TVK அரசு தனது முதல் நாளிலேயே அந்த நடைமுறையை மாற்றி தமிழ் தாய் வாழ்த்தை கடைசியாக பாட வைத்து வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
தவெக அரசு எப்படி இயங்கும் என்பதற்கான சிறு குறிப்பு இது
தமிழ்நாடு அதன் பாரம்பரியம் கலாச்சாரம் நம்முடைய நிலைப்பாடு என எதுவும் தெரியாத ஒரு அரசாக இந்த அரசு அமைந்து விட கூடாது என்பது தான் கவலை
சட்டமன்றத்திலாவது தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வழக்கத்தை மாற்றாமல் இருக்கவேண்டும்