சிபிஐ ஆபிசிலிருந்து சிரித்து கொண்டே வெளியே வந்தார் விஜய். கரூர் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும் சார்ஜ்சீட் கூட சிபிஐ தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கை கண்காணிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவையும் காணவில்லை.
கே.என்.நேரு மீது FIR போட உச்சநீதிமன்றம் வரை சென்று அழுத்தம் கொடுத்தது ED, செந்தில் பாலாஜியை ஒருவருடம் வரை சிறையில் அடைத்து வைத்தது ED. ஆனால் 41 பேர் இறந்து போய் ஒருவருடம் ஆகியும், ஒரு சார்ஜ்சீட் கூட பதிவு செய்யவில்லை சிபிஐ. பாஜக ஆதரவு இருந்தால் எவ்ளோ பெரிய வழக்காக இருந்தாலும் தப்பிக்கலாம் என்பதற்கு கரூர் கேஸ் ஒரு உதாரணம்.
பகிர்வு
தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் !
ஜெய்காளி
ஓம்காளி
விஜய் ஒரு ஓடுகாலி !
#karurstampede
No Quality.,🙆
No Trust.,🤧
That's Tharkuri &Co,😆
கடந்த 75 ஆண்டில் ,👋
ஆட்சி வந்த 4 மாசத்தில் , மக்களே ஆட்சியை கவுக்க சொன்ன முதல் சம்பவம் இது தான் 😜👌😜
தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!
#PeriyarForever#Periyar#SocialJusticeDay
தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
‘ஆணவக் கொலை’ ‘காதல் விவகாரக் கொலை’ ஆகிவிட்டது. நீலக்கோஷ்டிகள் ‘சொல்லாமலே’ லிவிங்ஸ்டன் போல நாக்கை அறுத்துக்கொண்டன!
திமுக தொண்டன் பஜ்ஜிக்கு காசு கொடுக்கவில்லை என்றாலும் “திமுக பிரமுகர் அராஜகம்” என செய்தி வரும். ஆனால், இப்போது தவெககாரன் கொலை செய்தால் “பிரதான கட்சியைச் சேர்ந்தவர் கொலை செய்தார்” என செய்தி வருகிறது.
குழந்தைகளின் ஆதர்ச முதல்வர் வாயில் வந்துரும் எனச் சொல்லும் ஆபாச முதல்வராக இருக்கிறார்.
சட்டசபையில் ரீல்ஸ் கண்டண்ட் ஷூட்டிங் நடக்கிறது. முதல்வர் தன் படத்தின் டைட்டில் காட்சிக்கு சட்டசபையில் நடிக்கிறார்.
ஊழலா? ஜோஸ் ஆலுக்கா, மகிந்திரா கார், 1 நிமிட டெண்டர் புண்ணியத்தில் அது த*கொ*லையே செய்துவிட்டது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை “மக்கள் ஒழுக்கம்சார் சிக்கல்” ஆகிவிட்டது. அதுக்கும் அரசுக்கும் சம்பந்தமே இல்லை.
உதயநிதி சொல்லாத ஒன்றுக்கு சிறப்பு நிகழ்ச்சி, சிறப்பு விவாதம் போட்டு ஒப்பாரி வைத்த ஊடகவிய பெண்ணிய போராளிகள் எல்லாம் நயினாரையும், நாஞ்சில் சம்பத்தையும் “மலே நல்லாருக்கியா மலே” என கொஞ்சுகிறார்கள்.
பரந்தூர் விமான நிலையம் கேன்சல். தொழில்கள் எல்லாம் ஆந்திராவுக்குப் பார்சல்.
டீ மட்டும் கொடுத்த வடமாநிலத் தொழிலாளர்கள், இப்போது பஸ்ஸில் டிக்கெட்டே கொடுக்கிறார்கள்.
வளர்ந்திருக்கும் ஒரே தொழில்துறை இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் தொழில்துறை. தமிழ்நாடு தாண்டி வடஇந்தியாவிலும் சக்கைபோடு போடுகிறது விஜய் ஃபேக் நியூஸ் ஃபாக்டரி.
ஆரம்பத்தில் இருந்தே ஃபேர் டிலிமிடேஷன் கேட்கும் திமுக பாஜகவுடன் மறைமுகக் கூட்டு மறைமுகக் கூட்டு என இல்லாததைக் கூவிக்கொண்டே இருந்தவர்கள் “டிலிமிடேஷனை ஏற்க மாட்டோம் என சட்டசபையில் திமுக ஆதரவோடு தீர்மானம் போட்ட முதலமைச்சர், அமித்ஷா முன் ‘ஃபேர் டிமிலிடேஷனை ஏற்போம்’” என பல்டி அடித்ததை ஒருபயல் கேட்கவில்லை.
கர்நாடகாவில் மேகதாதுக்கும் பேச மாட்டேன், மூனு தமிழர்களைச் சுட்டாலும் பேச மாட்டேன் என வாயில்லா ஜீவனாகவே மாறிப்போன இந்தச் சுயமரியாதை மண்ணின் போய்விட்ட மானம் பற்றி யாருக்குமே கவலை இல்லை.
மேயர் பிரியா, துர்கா ஸ்டாலின் அம்மா முதல் இணையத்தில் திமுகவை ஆதரித்துப் பேசும் முகம் தெரியா பல திமுக பெண்களை ஆபாச வாரியர்கள் அவ்வளவு கேவலாகப் பேசும்போதெல்லாம் யாருமே கேட்பதில்லை. அப்போதெல்லாம் பெண்ணியப் போராளிகளே அவர்களுடன் சேர்ந்துகொண்டு பேசுகிறார்கள்.
இதையெல்லாம் தட்டிக்கேட்பவன் யார்?
கடைக்கோடி திமுககாரன்.
இதைக் கண்டு கொதிப்பவன் எல்லாம் யார்?
முகம் தெரியா திமுககாரன்.
கைது செய்தாலும் பண்ணிக்க, நான் பேசுவதை நிறுத்தமாட்டேன் என எதிர்த்து நிற்பவன் யார்?
உங்கள் அடைப்புக் குறிகளுக்குள் அடங்காத ஆன்லைன் திமுககாரன். உங்கள் பணிநீக்கம் செய்ய முடியாத திமுககாரன்.
தொழில் போனாலும் பரவாயில்லை, வேலை போனாலும் பரவாயில்லை, பலரைப் பகைத்தாலும் பரவாயில்லை, குடும்பப் பெண்களை ஆன்லைன் ஆபாச வாரியர் மாஃபியா அசிங்கமாகப் பேசினாலும் பரவாயில்லை என இந்த விஷக்-கோமாளி அரசின் அநியாயங்களைப் பற்றிப் பேசுவது யார்?
ஒரு கவுன்சிலர் கூட ஆகாத, ஆகவும் ஆசைப்படாத திமுக கடைக்கோடி தொண்டன்.
ஒரு மாநில முதல்வர் விஜய்யிடம் எதிர்பார்க்காத நாகரீகத்தை, ஒரு கட்சியின் தலைவர் நயினாரிடம் எதிர்பார்க்காத நாகரீகத்தை, ஒரு மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் எதிர்பார்க்காத நாகரீகத்தை இந்தச் சமூகம் ஒரு திமுக கடைக்கோடி தொண்டனிடம் மட்டும் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
முதலில் அவனைக் கண்டிக்க நீங்கள் யார்?
திமுக மீதான ஈழத் துரோக முத்திரையை எதிர்த்து சண்டையிட்டது யார்?
2ஜி புரட்டை நிர்மூலம் ஆக்கியது யார்?
இப்போது தமிழ்நாட்டை பிடித்திருக்கும் இந்த அவலத்தை எதிர்த்துச் சண்டையிட்டுக் கொண்டிருப்பது யார்?
எந்த ‘விங்கும்’ இல்லாத திமுக தொண்டன்!
கோபத்தில் நாலு வார்த்தைகளை விடுவதும், பதிலுக்குப் பதில் பேசுவதும் மனித இயல்பு. ஆனால் ஒருநாளும் திமுக தொண்டன் தமிழ்நாட்டை அழித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவனைப் பார்த்து மாமன் மச்சான் உறவு கொண்டாட மாட்டான். உண்மையில் சொந்த மாமன் மச்சான்களையே பகைத்துக் கொண்டுதான் அவன் அரசியல் பேசுகிறான்.
நான் யாருக்காகவும் பேசவில்லை. என்னைப் போல் யாரோ ஒருவன் கோபத்தில் செய்யும் செயல்களைக் கண்டிக்கும் முன் இந்த நாட்டை, மீடியாவைக் கண் திறந்து பாருங்கள்.
நான் இறுதியாகச் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.
“திமுக மீது திட்டமிட்டு வீசப்படும் அயோக்கியத்தனத்திற்கு பதிலாக திட்டமிடாத கோபத்தை ஒரு தொண்டன் வீசுவது ஒன்றும் கொலைக்குற்றம் இல்லை.”
அது குற்றமே என்றாலும் அதைக் கண்டிக்கும் தார்மீக உரிமை, தகுதி எதிரணியில் எவனுக்கும் இல்லை. அக்மார்க் அயோக்கியர்களான ‘அவர்களைக்’ குளிர்ப்படுத்துகிறேன் என நாமே நம் ஆட்களைப் பொதுவெளியில் திட்டுவது தற்கொலைக்குச் சமம், துரோகமும் கூட.
இன்றைய அளவில் திமுகவில் இருந்து பதவி மட்டுமல்ல, ஒரு பைசா கூட எதிர்பார்க்காத திமுககாரனின் மேல் உரிமை உண்டு என்றால் அது ரெண்டே பேருக்குதான். ஒன்று MKS, ஒன்று உதயநிதி.
இந்த மண்ணுக்காக உண்மையாகச் சண்டை செய்யும் தலைவர்கள் கிடைத்திருக்கும் திமுகவில், தன் தலைவர்களுக்காகவும் அவர்கள் காக்க நினைக்கும் இந்த மண்ணுக்காகவும் உண்மையாகச் சண்டை செய்யும் தொண்டர்கள் கோடி பேர் இருக்கிறார்கள். அவர்கள் கோபத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யாதீர்கள். அவர்களைச் சோர்வடையச் செய்யாதீர்கள்.
ஒழியட்டும் முதுகெலும்பில்லா ’போன்லெஸ்’ அரசு.
வெல்லட்டும் திமுக.
மீளட்டும் தமிழ்நாடு.
-டான் அசோக்
24-08-2026
அடுத்து என்ன?
மஞ்சள் காமாலைக்கு சூடு போடும் திட்டமா?
அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய அரசு, பொது சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் நடைமுறைகளை மக்கள் வரிப்பணத்தில் ஊக்குவிப்பதைப் பார்த்தால், எங்கே போய் சுவரில் முட்டிக்கொள்வதென்றே தெரியவில்லை!
அம்மை போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள நவீன மருத்துவக் கண்காணிப்பு, உரிய தனிமைப்படுத்தல், தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி போன்ற அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நோய் பாதித்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் நடைமுறைக்கு அரசே ஆதரவளிப்பது தொற்று கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது.
உரிய மருத்துவ மற்றும் தொற்று தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், இது சமூகப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.
மக்களின் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு அரசின் கொள்கைகளும் திட்டங்களும் பொது சுகாதாரத்தைப் பல தசாப்தங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது
பொது சுகாதாரத்தை அறிவியல்பூர்வமாக அணுகத் தவறிய அரசின் இந்த ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.