இந்த இளம் குரலைக் கேளுங்கள்.
தெளிவு. துணிவு. கொள்கையில் உறுதி. 🖤❤️
இலக்கில்லாமல், கொள்கையில்லாமல் ஆரவாரம் செய்யும் கோடி நபர்களின் கூட்டத்தின் தலைவன் என்பதைவிட, இப்படி கொள்கைப் பிடிப்போடு இருக்கும் ஒரு சில இளைஞர்களின் #உடன்பிறப்பு என்பதே பெருமை! 🌄
#திமுக-காரனாக இருப்பது அதிகாரத்தில் இருப்பதற்காக அல்ல.
அதிகாரம் மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவதற்காக!
மக்களை ஆள்வதற்காக அல்ல.
மக்களோடு மக்களாக நின்று, அனைவருக்கும் ஒரே உரிமை, ஒரே மரியாதை, ஒரே வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக!
மிகப்பெரிய கூட்டத்தில் ஒருவனாக இருப்பதற்காக அல்ல.
கோடிக்கணக்கானோருக்கு நடுவே தனித்து நின்று, மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை உருவாக்கும் ஒருவனாக இருப்பதற்காக!
ஆட்சி வரும்… போகும்.
அதிகாரமும் வரும்… போகும்.
#கொள்கை நிலைத்திருக்கும்!
அதனால்தான் பெருமையுடன் சொல்கிறோம்; நாங்கள் ‘கழகத்தின் #உடன்பிறப்புகள்’ என்று! 🖤❤️🌄
#DravidianModel #திமுக_காரன் #VoteForRisingSun🌄
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும்... 🔥🔥
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருக்கும்...🔥🔥
காலம் காத்திருந்து பதில் சொல்லும் 🤷🏻♀️🚶🏻♀️➡️
தவெக க்குள் உட்கட்சி பூசல் 🔥
இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில் தற்போது முதலில் யார் கட்சியை விட்டு வெளியேற போகிறார் என்று கேள்வி கட்சிக்குள் எழுந்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…🥴
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று அச்சிறுப்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
மதுராந்தகம் தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்தவருக்கும் - துரோகம் செய்ய தூண்டிய முதலமைச்சருக்கும் வாக்குரிமையின் மூலம் பதிலடி கொடுக்குமாறு திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினோம்!
@evvelu@thamoanbarasan@ksundarmla@AbdulmalikDmk
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டன���யைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழ���த்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்து���் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் ���ொள்கிறேன்.
நவோதயா பள்ளிகள் ஏன் வேண்டாம்..??
♦️ மொழித் திணிப்பு - Language imposition
♦️ நுழைவுத் தேர���வு - Entrance exam
♦️ பாகுபாடுள்ள பள்ளி - Discriminatory school
♦️ மாநில உரிமை/கல்விப் பட்டியல் - State autonomy/ Education list
#StopHindiImposition #தமிழ்_வாழ்க
1) தமிழ்நாட்டில்
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்;
தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!
#StopHindiImposition#��மிழ்_வாழ்க
தமிழ் அர்ச்சனைக்கும் தடை விதித்து உத்தரவு. கைம்பெண் என்பதைக் காரணமாகக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் பதவியிலிருந்து ஒருவரை நீக்குவது, இதுயெல்லாம் என்ன மாதிரியான அரசியல்.
இது சமூகநீதி ஆட்சி அல்ல; அப்பட்டமான RSS agenda-வை கொண்டே இந்த ஆட்சி நடக்கிறது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகவும் - கழகத்தலைவர் அவர்களின் அன்புக்குரியவராகவும் திகழ்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மறைந்த திரு.முரச��லி மாறன் அவர்களின் பிறந்த நாள் இன்று!
கழகத்தின் வளர்ச்சிக்காகவும் - திராவிட இயக்கக் கொள்கைகள் திக்கெட்டும் பரவிடவும் அயராது உழைத்தவர்.
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் உரிமைக்காக குரல் கொடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
திரு.முரசொலி மாறன் அவர்களின் பணிகள�� இந்நாளில் நினைவுகூர்வோம்.
அவர் புகழ் ஓங்கட்டும்!
#MurasoliMaran
இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் முதன்முதலாக 1998ல் Eve Teasing பெண்களை கேலி செய்தல் r பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதை தடுக்க சட்டம் இயற்றப்பட்டது..
அதனை கொண்டு வந்தவர் தலைவர் #கலைஞர்#dmk#dmk4tn