சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்த அமைச்சர் வன்னியரசுவின் விளக்கம் – தனிப்பட்ட விருப்பத்தை அரசியலாக்குவது கண்டிக்கத்தக்கது!
சமூக நீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து “பரிசீலிப்போம்” என்றுதான் அமைச்சர் வன்னியரசு கூறியதாகவும், தனது தனிப்பட்ட விருப்பம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நான் அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, “என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை நான் எங்கும் கூறவில்லை. விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலிப்போம் என்றுதான் கூறினேன். இறுதி முடிவை அரசு தான் எடுக்கும்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
அமைச்சரின் விளக்கத்தைப் பெறுவதற்கு முன்பு, அவரது கருத்து குறித்து நானும் கண்டனத்தை பதிவு செய்திருந்தேன். ஆனால் அவரிடம் நேரடியாகப் பேசியபோது, அவர் கூறிய கருத்தின் பின்னணி வேறுபட்டது என்பது தெளிவாகியது.
ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதை சில அரசியல் தரப்பினர் விரும்பவில்லை என்ற அடிப்படையில் அவரது ஒவ்வொரு கருத்தையும் அரசியல் சர்ச்சையாக மாற்றுவது ஜனநாயக அரசியலுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல.
மாட்டிறைச்சி விவகாரத்தில் அமைச்சர் கூறியதாக வெளியான கருத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதும், சில அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டங்களை அறிவிப்பதும், உண்மையான விளக்கத்தைப் பெறாமல் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் ஒரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பத்தை அவருடைய கருத்தாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது.
#vanniarasu