எர்ணாகுளம் மற்றும் திருச்சிராப்பள்ளியில் நாளை, மார்ச் 11 அன்று, நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கேரளம் மற்றும் தமிழ்நாட்டிற்கு செல்வதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன்.
கேரளம் சென்றதும், அகில கேரள தீவர சபையின் பொன்விழா கொண்டாட்டங்கள் முதல் நிகழ்ச்சியாக உள்ளது. மீனவர் நலனுக்காக இந்த அமைப்பு செய்து வரும் பணிகள் குறிப்பிடத்தக்கவை. அதன் பின், அடுத்தடுத்த நிகழ்ச்சியில், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் அல்லது நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் . இந்தப் பணிகள் எரிசக்தி, நெடுஞ்சாலைகள், கிராமப்புற உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவையாகும்.
https://t.co/vFjcsAyRqs