சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, சேலம் மாவட்டம் சங்ககிரியில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு சின்னம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் நாளை சுதந்திரபோராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை மணிமண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது