முடியாது என்பது சோம்பேறிகளின்
வீண் வார்த்தைகள்.
இந்த உலகில் முடியாது
என்று சொல்வதற்கு
ஒன்றும் இல்லை..
நீ முடியாது என்று
சொல்வது எவனாவது
ஒருவன் அதை
கண்டிப்பாக பிற்காலத்தில்
நடத்தியே காட்டுவான்..
சில மனிதர்கள் என்னவோ
நமக்கு மட்டும் தான்
துன்பங்கள்
வகிருகிறது என்று
இந்த அழகான வாழ்க்கையை
சலிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்...
அவர்களுக்கு தெரியாது..
இதே உலகில் தான்
கை கால்களை இழந்தவர்களும்
சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று.. !
உன்னை பற்றி நீயே
சொல்லி கொண்டு
பெருமைப்படக்கூடாது
அடுத்தவர் உன்னை பற்றி
பிறரிடம் பெருமைப்படுத்தி
பேசும்படி நீ உன் வாழ்க்கையில்
வாழ்ந்து காட்ட வேண்டும்..
சிவப்பாக இருக்கும் மனிதனுக்கு இரத்தம் என்பது சிவப்பு தான்..
கருப்பாக இருக்கும் மனிதனுக்கும்
இரத்தம் என்பது சிவப்பு தான்..
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை..
அவரவர் எண்ணங்களில் இருக்கிறது வாழ்க்கை...
இறைவன் நம்மிடம்
எதிர் பார்ப்பது எல்லாம்
மனத்தூய்மையும்..,
உண்மையான கருணை உள்ளத்தையும் தான்.. !
உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நேசிக்கும் இதயத்திற்குள் தான்
இறைவன் இருக்கிறான்... !
காலை வணக்கம் நட்புக்களே...