அண்ணன் @duraivaikooffl அவர்களை பதவி விலக சொன்ன @U2Brutus_off@DrSharmila15 கவனத்திற்குமறைந்த Dr.கலைஞரின் நெருக்க தோழர் ஆழ்வார் என அழைக்கப்படும் அய்யா @ஜெகத்ரட்சகன் பதவி விலக வேண்டுமா என்பதை கூறவும்
#Watch | "விளையாட போயி இன்னொரு கையும் உடைச்சுக்க போறியானு கேட்டாங்க.. அதுக்கு எங்க அப்பா ஒரு பதில் சொன்னாரு.."
வெல்லும் தமிழ்ப் பெண்கள் விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேச்சு
#SunNews | #VellumTamilPengal
நேற்று (10.12.2025) மாலை 8 மணியளவில் மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து,
மிக முக்கியமான G-கார்னர் உள்ளிட்ட எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் நீண்டகால இரயில்வே கோரிக்கைகள் குறித்த நான்கு கடிதங்களை வழங்கி, ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துரைத்தேன்.
இதில், திருச்சி மக்களின் 16 ஆண்டுகாலமாக முக்கிய கோரிக்கையாக உள்ள, திருச்சி NH-38இல், G-கார்னர் சந்திப்பில் கட்டப்பட வேண்டிய உயர்மட்ட சுழல் மேம்பாலம் குறித்து முன்பே சில முறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்ததை நினைவூட்டி, மீண்டும் விளக்கினே.
அப்பணியின் இன்றை தொய்வு நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தேன்.
இந்த G-கார்னர் சந்திப்பு பொன்மலை இரயில்வே தொழிற்சாலை (Golden Rock Workshop) நுழைவாயிலாகவும், ஆயிரக்கணக்கான இரயில்வே ஊழியர்களும் பொதுமக்களும் தினசரி பயன்படுத்தும் இடமாகவும் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக இரயில்வே ஊழியர்களே பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு நிரந்தர தீர்வாக உயர்மட்ட சுழல் மேம்பாலம் (elevated rotary) அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தயாராக உள்ளது.
இதற்கான தொழில்நுட்ப விளக்கக்காட்சி கடந்த 14.07.2025 ஆம் தேதி திருச்சி DRM அலுவலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்தான முடிவை இரயில்வே அமைச்சகம் அல்லது இரயில்வே வாரியம் தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை, அமைச்சர் அவர்களிடம் சுட்டிக்காட்டி, தாங்கள் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.
இந்த பகுதி தொடர் விபத்துகள் நடக்கும் ஒரு கருப்பு பகுதி (black spot) என்பதால், உடனடியாக தாங்கள் தலையிட்டு, நில ஒதுக்கீட்டுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன்.
இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அமைச்சர் அவர்கள், நல்லவிதமாக பதிலளித்தார்.
அத்துடன், மற்ற கோரிக்கைகளான, திருச்சி – திருப்பதி இடையே பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் சேவை ஏற்படுத்த, ஏற்கனவே அமைச்சர் உறுதியளித்தது குறித்த நினைவூட்டி அப்பணியை விரைவு படுத்த கேட்டுக்கொண்டேன்.
அடுத்ததாக,
திருச்சி வழியாக, செங்கோட்டை – சென்னை சிலம்பு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸை (20681/20682) வாரத்தில் மூன்று நாட்களில் இருந்து தினசரி இரயிலாக மாற்றுவது குறித்தும்,
திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190/06191) ஐ நிரந்தர இரயிலாக மாற்றுவது குறித்தும் விரிவாக எழுதி கோரிக்கை கடிதங்களாக வழங்கினேன், அதுகுறித்தும் எடுத்துரைத்தேன்.
அமைச்சர் அவர்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். திருச்சி மக்களின் நலனுக்காக இந்த முயற்சிகள் விரைவில் பலனளிக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
11.12.2025
புதுடெல்லி
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #aswinivaishnav #ministryofrailways
கழகப் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களுடன் இணைந்து மாநாட்டு நடைபெறும் இடத்தை பார்வையிட்டேன்..!
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாள் விழாவை திருச்சி சிறுகனூரில் மாபெரும் எழுச்சி மாநாடாக நடத்துவதற்கு முடிவெடுத்து அதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கி விடும் வகையில் மண்டல வாரியாக கழகம் செயல்வீரர் கூட்டங்களை நடத்தி வருகின்றது.
மறுமலர்ச்சி திமுக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக இம்மாநாடு அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மாநாட்டு பணிகளை கவனிக்கின்ற வகையில், இன்று மாலை 5 மணியளவில் திருச்சி அருகே சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்தை தலைவர் வைகோ அவர்களுடன் இணைந்து பார்வையிட்டேன். மாநாடு நடைபெறும் இடத்தின் உரிமையாளருக்கு தலைவரும், நானும் நன்றி தெரிவித்தோம்.
மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக அமைய இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கினார். மாநாட்டு திட்டமிடல் குறித்து எனது ஆலோசனைகளையும் கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தேன்.
இந்நிகழ்வில், கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்டச் செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, புதுக்கோட்டை எஸ்.கே.கலியமூர்த்தி, திருச்சி தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு டி.டி.சி.சேரன், பெரம்பலூர் எஸ்.ஜெயசீலன், அரியலூர் க.ராமநாதன், அணிச் செயலாளர்கள் வரணவாசி கி.இராசேந்திரன், ஆ.பாஸ்கரசேதுபதி, பால.சசிகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அன்புடன்,
துரை வைகோ எம்பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
12.07.2025
#DuraiVaiko #trichymp #MDMK #Vaiko