கடினமான பாதையை உறுதியான கால்களால் தான் கடக்க முடியும்!
படையை பெருக்கி தடையே நொறுக்கி! பலத்தை திரட்டி!!
அரசியல் அதிகாரத்தை நமதாக்குவோம்..!!
தேசத்தை பொதுவாக்குவோம்!!!
ஜூன் 21,2021
அனைவருக்கும் SDPI தின வாழ்த்துக்கள்
#June21#SDPIFormationDay#sdpiitwingtn
இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பில், உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘#ஹபீபி’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்று வாழ்வியலை மிகத் துல்லியமாகப் பதிவு செய்யும் ஒரு முக்கியப் படைப்பாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் குரலைத் திரையில் ஒலிக்கும் இத்தகைய முயற்சிகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
-முகம்மது முபாரக்
தலைவர், SDPI கட்சி, தமிழ்நாடு.
#habeebithetamilmovie
#habeebi
Meera Kathiravan
#ஹபீபி
அரசுப் பள்ளியில் மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லா சீருடைகள், தரமற்ற புத்தகப் பைகள் மற்றும் காலணிகள் வழங்கல்!
தரமான கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஏழை, எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் பல நூறு கோடி ரூபாய்களைச் செலவிட்டு வருகிறது. பள்ளி திறக்கும் முதல் நாளே இவையனைத்தும் மாணவர்களின் கைகளில் கிடைப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், தற்பொழுது வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு ஆகியவை மிகவும் மோசமான நிலையில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசு வழங்கும் பாடப்புத்தகங்களைத் தவிர்த்து, சீருடைகள், காலணிகள் மற்றும் புத்தகப் பைகள் ஆகியவை மிக மோசமான தரத்திலும், தவறான அளவுகளிலும் உள்ளதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. மாணவர்களின் உடலமைப்பிற்குப் பொருத்தமில்லாமல், ஏற்ற இறக்கங்களுடனும், அளவுகள் மாறியும் சீருடைகள் உள்ளன. ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் 'ஏனோ தானோ' என்ற மனோபாவத்துடன் தரமற்ற துணிகளையும், புத்தகப் பைகளையும் வழங்குவதால் அவை சில மாதங்கள்கூடத் தாங்குவதில்லை. "அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்" என்ற அதிகாரிகளின் அலட்சியப் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாணவர்களின் நலன் காக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக, சீருடைகளைத் தைக்கும் பணியைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாக வழங்கக் கூடாது. மாறாக, கோடை விடுமுறைக்கு முன்பாகவே மாணவர்களிடம் சரியான அளவுகளை எடுத்து, அந்தந்தப் பள்ளிகளைச் சுற்றியுள்ள உள்ளூர் தையல்காரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டும். இதற்கான தரமான துணிகளை அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்குச் சரியான அளவில் சீருடைகள் கிடைப்பதுடன், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் பெருமளவில் உறுதி செய்யப்படும்.
அதேபோல், புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் அளவு மற்றும் தரத்தை அதிகாரிகள் தீவிரமாகச் சரிபார்க்க வேண்டும். தரம் குறைந்த அல்லது அளவில் குறைபாடுள்ள பொருட்களை, ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்களிடமே உடனடியாகத் திருப்பி அனுப்பி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் வகையில் தரமற்ற பொருட்களை வழங்குவதை நிறுத்தி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அவர்களும் பெருமிதத்துடன் பள்ளிக்குச் செல்லும் வகையில் தரமான கல்வி உபகரணங்களை வழங்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்கள், ஏழை மாணவர்களின் கல்விச் சூழலோடு விளையாடும் இந்த முறைகேடுகளைக் களைந்து, இந்த நிதியாண்டிலேயே உரிய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Chief Minister of Tamil Nadu
தமிழ்நாட்டின் புதிய முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
புதிய அரசின் முதல் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதி இடம்பெறாதது கவலையளிக்கிறது!
- முகம்மது முபாரக், மாநிலத் தலைவர், SDPI கட்சி.
@actorvijay@TVKVijayHQ@CMOTamilnadu@TVKpartyHQ
சென்னையில் இன்று காலை மரணமடைந்த மூத்த பொதுவுடைமைவாதி, சுதந்திரப் போராட்ட வீரர், தகைசால் தமிழர் ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் உடல் சென்னை CPI அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சென்று அவர்களின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளிடம் ஆறுதலை தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் ரசாக், பொதுச்செயலாளர் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
#RIPNallakannu #LegendaryLeader
#Nallakannu #நல்லகண்ணு
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாக்க, 'இந்தியா' கூட்டணியைச் சரியான திசையில் வழிநடத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமை மிக அவசியமானது. சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையின் முகமாக விளங்கும் அவர், தேசிய அளவில் ஒரு வலுவான ஒருங்கிணைப்பாளராகத் திகழ்கிறார்.
தனது கொள்கைகளில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதிமிக்க தலைமை, பாஜக-வின் ஆதிக்கத்தை வீழ்த்தத் தேவையான வலிமையை வழங்கும். தெற்கிலிருந்து கிளம்பும் அவரது இந்தத் தலைமைப் பண்பு, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு புதிய விடியலைத் தரும் என்பதில் ஐயமில்லை.
- நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.
@mkstalin@arivalayam@CMOTamilnadu@Udhaystalin@DMKITwing
#MKStalin | #INDIAAlliance | #SecularIndia | #StateRights | #Federalism | #StrongLeader | #StrongLeaderStalin | #StalinForIndia
வெறும் வெற்று அதிகாரத்திற்காக அரசியல் செய்யாமல்
அதிகாரம் பாதிக்கப்பட்டவர்களின் கையில் சேர வேண்டும் என்பதற்காக அரசியல் செய்யும் MK ஃபைஜி ஆயிரம் வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
நாம் அதிகாரத்தைப் பெற்று பிழைப்பு வாத அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்
அதிகாரம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் போராடி சிறை சென்ற எம்கே பைஜி அவர்களே வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
SDPI என்பது வெறும் அரசியல் கட்சி அல்ல.
இது அடக்குமுறைக்கு எதிரான குரல்,
அநீதிக்கு எதிரான போராட்டம்,
சாதாரண மக்களின் உரிமைகளுக்கான இயக்கம்.அதன் தலைமைக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
தலைவன் மக்களை பயத்தால் அல்ல, நம்பிக்கையால் வழிநடத்த வேண்டும்.பயத்தில் இருந்து விடுதலை என்ற முழக்கத்தை இந்திய வீதிகளில் வளர்த்தெடுக்க வரும் வீரத் தளபதிகளே வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia
சமூக நீதி, சமத்துவம், சம வாய்ப்பு அரசியல் அதிகாரத்தின் மூலம் கிடைக்கப்படும் ஒற்றை சொல் என்பதை நடைமுறைப் படுத்த
மக்கள் வாழ்க்கையை மாற்ற பதவியேற்றிருக்கும் மாசற்ற அரசியல் தலைமைக்கு வாழ்த்துக்கள்.
#OurLeadersOurPride#SDPIForIndia#MKFaizyForIndia