அதிகார துஷ்பிரயோகத்துக்கு மற்றும் ஓர் சான்றாக நடந்து முடிந்திருக்கும் கன்னியாகுமரி மாவட்ட சுசீந்திரம் அருகிலுள்ள ஈத்தங்காடு பகுதியில் வாழ்ந்து வந்த சபரிவர்மன் அவர்களின் சமீபத்திய மரணம்.
எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத மரணம். துளியும் நியாயமில்லாத மரணம். மகனை கணவரை தந்தையை அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பலமாக இருந்து வந்த சபரி வர்மனின் இல்லத்து உறவுகளை இன்று நேரில் சந்தித்து ஆறுதலாவது வழங்க முடியுமா என்று முயன்று வந்தோம். குட்கா வியாபாரம் செய்தார் என்ற வழக்கு விசாரணைக்காக அவரை அலைகழித்து, விசாரணை கைதியாக சிறை எடுத்து அவசியமே இல்லாமல் சிறையில் அவரது உயிர் பிரிந்தது என்ற இந்த துயர அறிவிப்பை பொறுப்பற்றத்தனமாக குடும்ப உறவுகளுக்கு கடத்த முயன்ற சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு எங்களது வன்மையான கண்டனங்கள்.
ஆரம்பம் முதலே தெற்குதாமரைகுளம் காவல் நிலையத்தில் இருந்து அவரை சிறை எடுத்து, நாகர்கோவில் சிறையில் அவரை விசாரணைக்கு சிறைப்படுத்தி, பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவருடைய இறந்த உடலை காவல்துறையினர் கையாண்ட விதத்தை புரிகையில் காவல்துறை மீது நமக்கு இருந்த நம்பிக்கைக்கும் நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்படும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக சிறை துறை இந்த சம்பவத்தில் நடந்து கொண்ட விதம் மற்றும் எடுத்துக்கொண்ட அதீத அதிகாரத்தின் விளைவு அவசியமில்லாமல் ஒரு உயிரை பறித்து இருக்கிறது.
விசாரணைக்கு எடுத்த காவல் துறைக்கு சபரி வர்மனிடமிருந்து ஏதேனும் சாட்சிகளோ தகவல்களோ கிடைக்கப் பெற்றதா? அந்த தகவல்கள் வெளியேறி விடக்கூடாது என்று அவரை கடுமையாக தாக்கி உயிர் கொலை செய்துள்ளனரா? அப்படி என்றால் அவர்கள் மறைக்க முயன்ற தகவல்கள் மற்றும் நபர்கள் யார் யார் என்னும் கோணத்திலும் இந்த சம்பவத்தின் முழு உண்மையை ஆரம்பம் முதல் இறுதி வரை மாவட்ட கண்காணிப்பாளர் சரியாக விசாரித்து கைது செய்யப்பட்டிருக்கும் மற்றும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கும் அனைத்து சிறை துறை அதிகாரிகளுக்கும், நபர்களுக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும், சபரிவர்மனை இழந்து வாடும் குடும்பத்தின் நிரந்தர பாதுகாப்பிற்கு அவரது மனைவிக்கு நிரந்தரமான அரசு பணி ஒன்றை அரசு ஆணை மூலமாக உடனடியாக வழங்கியும், குறைந்தது 25 லட்சம் ரூபாய் இழப்பு நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.
மக்களையும் மக்கள் நலனையும் பாதுகாக்கவே அனைத்து அரசு துறைகளும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்னும் அடிப்படையை உணர்ந்து, இனிமேலும் இவ்வாறான தவறுகள் நடைபெறாமல் இருக்க கடுமையான வழிமுறைகளை தாவெக அரசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
கடும் அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் சிக்கி தவிக்கும் குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதிப்படுத்தி அரசின் நடவடிக்கைக்காக அவர்களோடு காத்திருக்கிறோம்.
இலங்கை நீர்க் கொழும்பு சிறைச்சாலையில் பெரும் கலவரம் ஏற்பட்டு முப்பதுக்கு மேற்பட்டோர் இறந்து போனதை நாம் அனைவரும் அறியலாம்
அதற்கு அருகிலேயே வெளிக்கடை சிறைச்சாலை உள்ளது.
அங்கே இருவதுக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்
அவர்களை மீட்க நாம் தமிழர் கட்சி பாசறை வழக்கு
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்!
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து
இலவச மதிய உணவு கொடுத்து
தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின்
கல்விக்கண் திறந்த கடவுள்..!
மணிமுத்தாறு, சாத்தனூர், அமராவதி,
வைகை, நெய்யாறு, பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய அணைகளையும் கட்டியதோடு
33,000 நீர்நிலைகளைச் சீரமைத்து
வேளாண்மை செழிக்க வழி செய்த
ஆகச்சிறந்த ஆட்சியாளர்..!
ஆவடி கனரக ஆலை,
சேலம் உருக்கு ஆலை,
நெய்வேலி நிலக்கரி அனல்மின் நிலையம், பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை,
திருச்சி பெல் தொழிற்சாலை என 18க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொடங்கச்செய்து தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட
புரட்சியாளர்..!
இத்தனை சாதனைகளும் செய்த
9 ஆண்டுகால ஆட்சியில்,
மதுவினை விற்று அரசை நடத்தவில்லை. இலவசம் கொடுத்து
மக்களை ஏமாற்றவில்லை.
6 முறை கைது செய்யப்பட்டு
9 ஆண்டுகள் சிறைவாசம்,
15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்,
14 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசு தலைவர்,
9 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சர்,
8 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்,
3 ஆண்டுகள் அகில இந்திய
காங்கிரசு கட்சி தலைவர்,
2 பிரதமர்களை உருவாக்கிய
ஒற்றைப் பெருந்தலைவர்!
பதவிகள் பல வகித்தபோதும்
ஓர் ஊழல் முறைகேடு புகார் இல்லை..!
கோடி கோடியாக
சொத்து சேர்க்கவில்லை..!
குடும்பத்து வாரிசுகளுக்குப்
பதவி கொடுக்கவில்லை..!
உண்மையும் நேர்மையுமான
ஒப்பற்ற தூய ஆட்சி தந்து
தமிழ்நாட்டினை முன்னேற்றிய
தன்னிகரில்லாத் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காகப் போராடி
3000க்கும் மேற்பட்ட நாட்கள் சிறையில் வதைபட்ட நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களினுடைய பெரும்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், வழிவழியே
வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய
நாம் அவரைப் போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் தொண்டாற்றுவோம் என்கிற உறுதியை ஏற்போம்!
எழுத்தறிவித்த இறைவன்!
நம்முடைய தாத்தா
பெருந்தலைவர்
காமராசர் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!
தவெக செய்வது கேவலமான அரசியல்!
விஜய்க்கு தைரியம் இருக்கா?
நாம் தமிழர் கட்சி
மருத்துவர் கார்த்திகேயன் அவர்களின் சிறப்பு நேர்காணல்
https://t.co/S3oSB1TBQ6
#Karthikeyan#NTK#TVKVijay#Karur#EngalDesamOfficial
செங்கல்பட்டு மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி லஞ்சம் வாங்கும் தூய காட்சி !
தூயசக்தி முதல்வர் கண்ணில் பட்டால் விடவே மாட்டார் .
தொடவும் மாட்டேன்
தொடவும் விட மாட்டேன்
தொட்டவனையும் விடமாட்டேன் .
என்ன பண்ணுவீங்கன்னு இப்ப நாங்க பாக்கனும் மு தல்வரே …
@TVKVijayHQ