@imrajmohan மதுராந்தகம் தொகுதி பூத் நம்பர் 69 மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பழுதடைந்த நிலையில் உள்ளன கடந்த திமுக ஆட்சியில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை @CMOTamilnadu#TVKVijay#CMVijay
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்ப���் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi
“போதைப் பொருள் பயன்படுத்தியது போல்”
என்றால் என்ன ‘போல்’ தி.மு.க. தலைவர் அவர்களே?.
அப்படியெனில் அது பொய்யென்று நீங்களும் சொல்ல வருகிறீர்கள்தானே ‘போல்’ கொளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. அவர்களே?.
‘விமர்சித்தத��ல் கைதா?.’ வேடிக்கையாகப் பேசுவதில் நீங்கள் வல்லவர்தான் ஸ்டாலின் சார். செய்த வினைகளால் சிக்கி வரும்
உங்கள் அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் அனைவரையும்
விமர்சன வல்லுநர் ‘போல்' ஆக்குவதில் ஆகச்சிறந்த ‘போல்' அரசியல்வாதி நீங்கள்தான் ஸ்டாலின் சார்.
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதில் வல்லவர் நீங்கள்தான். எதிர்க்கட்சிகளை மட்டுமா?.கூட்டணிக் கட்சிகளையும் கொடியேற்றக்கூட விடாமல் நீங்கள் செய்ததெல்லாம் ‘போல்' நல்ல அரசியலா ஸ்டாலின் சார்?.
எல்லோருக்கும் S.O.P என்றிருந்தபோது எங்கள் வெற்றித் தலைவருக்கு மட்டும் Stalin sir Operating Procedure போட்டவர்தானே நீங்கள் சார்?.
ஜனநாயக உரிமையான விமர்சனங்களை வரவேற்பவரே எங்கள் வெற்ற���த் தலைவர்.
லஞ்ச ஊழலை ஒழித்து நல்லாட்சியான மனசாட்சி உள்ள மக்களாட்சியைத் தரும் எங்கள் வெற்றித் தலைவர் அவர்கள், உங்களைப் போல ‘போல்' தலைவராக ஒருநாளும் இருக்க மாட்டார் என்பது மக்களுக்கே நன்கு தெரியும்.
இடைத்தேர்தலுக்காக மீண்டும் நல்லோர் வேடம் பூணத்துடிக்கும்
உங்களின் ‘போல்' அரசியலான போலி அரசியல் முகமூடி எல்லாம் விரைவிலேயே கழன்று விழத்தான் போகிறது.
முட்டுச்சந்தில் சிக்கிக்க���ண்ட தி.மு.க விற்கு டேக் டைவர்ஷனுக்கு இனி வழியே இல்லை என்பது தெரிந்தும் டேக் ஆஃப் ஆகாத உங்கள் அரசியலைக் கண்டு நீங்களே ஃபீல் செய்து ரீல்ஸ் போட்டு மகிழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
கோட்டையிலேயே ரீல்ஸ் போட்டவர்தானே நீங்கள்?. உங்களுக்குத் தெரியாத ரீல்ஸா?.
ரியாலிட்டி புரியாமல் ரீல் விடும் 'போல்' தி.மு.க. தலைவர் அவர்களே.