#JustNow || சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.. திருப்புகழ் குழுவை அமைத்த தி.மு.க அரசே அறிக்கையை வெளியிடவில்லை..! அறிக்கையில் அப்படி என்ன ரகசியம் உள்ளது..? - அன்புமணி
#PMK | #Anbumani | #Chennai | #Rain | #Flood | #PolimerNews
புதுச்சேரி - வில்லியனூரில் நடைபெற்ற, எங்களின் உறவினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.கோ.தனராசு அவர்களின் சகோதரர், கோ.சண்முகம் - புனிதவதி தம்பதியரின் மகன் ச.ஹென்றி ஹரிகரன் - தே.ரீத்தா இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
*சென்னையின்* *தலைமகன்*
*சென்னப்ப நாயக்கர்*
சென்னப்ப நாயகர் பட்டினம்
−−−−−−−−−−−−−−−−−−−−
1. *1639 ஆகஸ்ட் 22.*
பிரான்சிஸ் டே எனும் ஆங்கிலேய முகவருக்கு தாமல் வேங்கடப்பநாயக்கர் வணிகதளம் அமைத்துக் கொள்ள கொடுத்த நாள். அவர் கொடுத்த இடத்தில் உருவான வணிகப்பட்டினம் அவருடைய தந்தையின் பெயரால் சென்னப்ப நாயக்கர் பட்டினம் என அழைக்கப்பட்டது
2. கூவம் நதி இரண்டாக பிரிந்து கடலில் கலக்கிறது. வடக்கு பக்கம் உள்ள கூவம் கிளைக்கு அருகே பழைய பல்லவர்கால மாதரசன்பட்டினம் எனும் துறைமுகப் பட்டினம் இருந்த இடத்தில் ஆங்கிலேயர்களின் வணிகதளம் அமைந்தது
3. ஏற்கனவே பிரளயகாவேரி எனும் பழவேற்காட்டில் உள்ள ஆறுமுகத்தில்( துர்க்கராசு பட்டினம்) ஒரு வணிகதளம் இருந்தது அங்கு டச்சுக்காரர்களின் ஏமாற்று வணிக போட்டிகளால் பருத்தி துணிகளின் நியாயமற்ற விலையேற்றத்தால் ஆங்கிலேயர் வணிகம் செய்ய முடியாமல் வெறுத்து போயிருந்த நேரத்தில் வெங்கடப்ப நாயக்கர் வணிகத்திற்கு இடம் கொடுத்து உதவியது ஆங்கிலேயருக்கு மிகுந்த ஆதரவாக இருந்தது.
4. வெங்கடப்பநாயகரின் தந்தையான தாமல் சென்னப்ப நாயகர் எனும் வன்னிய பாளையக்காரர் மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறார். பாலாற்றிலிருந்து கால்வாய் வெட்டி சித்திரமேக தடாகம் எனும் நரசமங்கல ஏரிக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்த கல்வெட்டு இன்னும் உள்ளது.
5. மாமண்டூர் ஏரியின் மீன்பிடி வருவாயைக் கொண்டு கரைகளில் பனைமரம் வைக்க உத்தரவிட்ட கல்வெட்டும் உண்டு
6. திருக்கழுக்குன்றத்திலும் சென்னப்பநாயக்கரின் கொடையை பேசும் இரண்டு கல்வெட்டுகள் உண்டு
7. சென்னப்பநாயகரின் மகன்கள் மூவர். வெங்கடப்ப நாயகர் வந்தவாசியிலிருந்தும் ஐயப்பநாயகர் பூந்தமல்லியிலிருந்தும் திம்மநாயக்கர் அவர்களுக்கு உதவியாகவும் பாளையப்பட்டு ஆட்சியில்
இருந்திருக்கிறார்கள்
8. ஆங்கிலேயர் வணிகதளம் அமைக்க முன்வந்தாலும் வணிக தளத்தை நிர்மாணிக்கவும் அதை நிர்வகிக்கவும் உள்ளூர் பாளையக்காரர்களின் ஆதரவு தேவைபட்டது. வெங்கடப்ப நாயக்கர் பூந்தமல்லி ஐய்யப்பன் நாயக்கர் போன்றவர்கள் ஆதரவு கொடுத்தனர்
9. பெத்தநாயக்கன் பாளையம் பாளையக்காரரான பெத்தநாயக்கர் கோட்டைக்காவல் வரிவசூல் போன்றவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் மகன் அங்கப்ப நாயக்கரும் ஆங்கிலேயர் வணிகத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் அங்கப்பநாயக்கன் தெரு என தனியே அவர் பெயரில் ஒரு தெருவே இருந்தது.
10. 17-18ம் நூற்றாண்டின் அரசியல் சூழல் நிலையற்றதாக இருந்தது நவாபுகள் மராத்தியர் படையெடுப்புகள் சந்திரகிரி அரசு வீழ்ச்சி ஆங்கிலேயர்-பிரென்ச்சுகாரர் சண்டைகள் என ஆதிக்கப்போட்டிகள் நிறைந்த காலம். தொண்டை மண்டல மக்களின் உற்பத்தி மற்றும் வணிகவளர்ச்சிக்காக சென்னைப்பட்டினத்து நாயக்கர்கள் ஆங்கிலேயருக்கு உறுதுணையாக இருந்தனர்.
இன்றைய பெருநகர சென்னையின் தொடக்கப்புள்ளியாக இருந்து இந்நகரத்தின் வளர்ச்சிக்கும் இப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கும் அரும்பாடு பட்ட பெருமக்களை இந்நாளில் நினைவு கூர்வோம்
நன்றி:
க.செந்தில்குமார்,
ரமேஷ்கோபால் கவுண்டர்.
@highlight
மதுரா செல்வராசு நாட்டார் மறைவுக்கு இரங்கல்.
பெரம்பலூர் மாவட்டம், செந்துறை வட்டம் மதுரா நகரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் மதுரா செல்வராசு நாட்டார் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
வன்னியர் சங்க காலம் தொடங்கி மருத்துவர் அய்யா அவர்களுடன் பயணித்த செல்வராசு நாட்டார் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத்தலைவராகவும் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டவர், இட ஒதுக்கீட்டுப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
மதுரா செல்வராசு நாட்டார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் காதல் விவகாரத்தில் இருவரும் பட்டியல் சமுதாயமாக இருந்த போதும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலனை வெட்டி கொன்ற பெண் வீட்டார்.
தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் பதட்டம்.
இது தொடர்பாக புரட்சியாளர்கள் வாய் திறப்பார்களா ? சட்ட பேரவையில் இதை பற்றி பேசுவார்களா ?
கொன்றவர் தவெக நிர்வாகியாம் இறந்தவர் விசிக நிர்வாகியாம் பார்ப்போம் புரட்சியாளர்கள் என்ன செய்யுறாங்கன்னு....📌
https://t.co/wYrXdrp9uI
"திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட தயக்கம் ஏன்? மக்கள் வரிப்பணத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்!"
- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை
-----------
சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் அடங்கிய திருப்புகழ் குழு அறிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தவெக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பேரிடரிலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான மிகவும் முக்கியமான ஓர் ஆவணம் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அரசு பதிலளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 41 மாதங்களாகியும் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படாததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரினார்.
அதற்கு பதிலளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘‘திருப்புகழ் குழுவின் அறிக்கையை திமுக அரசு வெளியிட்டிருக்க வேண்டும்; ஆனால், ஏன் அவர்கள் வெளியிடவில்லை என்று தெரியவில்லை. இதுதொடர்பாக பத்திரிகை செய்திகள் வந்ததை மட்டும் தான் பார்த்தோம். இப்போது வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வருவாய் நிர்வாக ஆணையர் முருகானந்தம் தலைமையில் 7 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார். மழை - வெள்ளத்திலிருந்து சென்னை மாநகரைப் பாதுகாப்பதற்கான திருப்புகழ் குழு அறிக்கையை திமுக அரசு வெளியிடாதது தவறு; அதை நாங்கள் உடனடியாக வெளியிடுவோம் என்பதாகத் தான் அமைச்சரின் பதில் இருந்திருக்க வேண்டும். அத்தகைய பதில் அரசிடமிருந்து வராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
2021-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழையும், அதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமும் மறக்க முடியாத கொடுமையான நிகழ்வுகள். அதைத் தொடர்ந்து சென்னையில் எத்தகைய வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழுவை திமுக அரசு அமைத்தது. அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை 2022-ம் ஆண்டு மே மாதத்திலும், இறுதி அறிக்கையை 2023- மார்ச் 14-ம் தேதியும் அரசிடம் தாக்கல் செய்தது.
நான் அறிந்தவரை திருப்புகழ் குழுவின் அறிக்கையில் 161 பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன; அவற்றை செயல்படுத்தியிருந்தாலே சென்னையில் எதிர்காலத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க முடியும். இத்தகைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் போது, அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், திருப்புகழ் குழுவை அமைத்த திமுக அரசே, ஏதோ காரணங்களுக்காக திருப்புகழ் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது. அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி பல தருணங்களில் வினா எழுப்பிய போது, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருப்புகழ் குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; மொத்தமுள்ள 161 பரிந்துரைகளில் 101 செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆனால், செயல்படுத்தப்பட்ட 101 பரிந்துரைகளும் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை.
என்னாலும், நகர்ப்புற வடிவமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வல்க்லுனர்களாலும் புரிந்து கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு, விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட திருப்புகழ் குழுவை வெளியிட முடியாத அளவுக்கு அதில் என்ன இரகசியம் இருக்கிறது என்பது தான்? மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கையை யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக திமுக அரசு கிடப்பில் போட்டது என்பது தான்?
திருப்புகழ் குழுவின் அறிக்கை என்பது கடையில் வாங்கப்பட்ட புத்தகம் அல்ல. 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட திருப்புகழ் குழு, 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 17 மாதங்களுக்கு பல்வேறு கள ஆய்வுகளையும், அதில் கிடைத்த தரவுகளின் மீதான பகுப்பாய்வுகளையும் மேற்கொண்டு தான் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அதற்காக கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கை எந்த வகையிலும் வீணடிக்கப்படக் கூடாது.
சென்னையில் இனி வரும் காலங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு திருப்புகழ் குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது தான். அந்த அறிக்கையை திமுக வெளியிடாமல் இருந்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், தவெக அரசுக்கு அத்தகைய காரணங்கள் எதுவும் இல்லை. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய முதலமைச்சர் விஜய் அவர்கள், எனது அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்று அறிவித்தார். அதை வெளிப்படுத்துவதற்கு சிறந்த வாய்ப்பு திருப்புகழ் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவது தான்.
திருப்புகழ் குழு அறிக்கையை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நகராட்சி நிர்வாகத்துறையை முதலமைச்சர் விஜய் அவர்கள் தான் நிர்வகித்து வருகிறார். அதனால், திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை முதலமைச்சர் அவர்களே மேற்கொள்ள வேண்டும். திமுக அரசின் தவறுகளை தமது அரசு திருத்தி வருவதாகக் கூறி வரும் முதலமைச்சர் அவர்கள், திமுகவின் இந்தத் தவறையும் திருத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 50 நாள்களே உள்ளன. அதனால், இனியும் தாமதிக்காமல் திருப்புகழ் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்; மீண்டும் ஒருமுறை சென்னையை வெள்ளத்தில் மிதக்க விடக்கூடாது என வலியுறுத்துகிறேன்.
#ChennaiFloods #AnbumaniRamadoss #ThiruppugazhPanel
சென்னையில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்காக திருப்புகழ் குழு அளித்த அறிக்கையை தவெக அரசு இனியும் தாமதிக்காமல் உடனடியாக வெளியிட்டு அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் -பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
#AnbumaniRamadoss#PMK#ThiruppugazhCommittee#ChennaiFloods #News18TamilNadu | https://t.co/1SaYcEmmws
“நாங்கள் எதிர்பார்த்தது இதுதான்?”
“எங்களுக்கு கார் வேண்டாம், தங்களிடம் வாகனம் உள்ளதால், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் தங்களது தொகுதியில் நெல் சேமிப்புக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும் எனக் கேட்க இருக்கிறோம்” – பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேட்டி
CM Vijay | TN Assembly 2026 | DMK | JCD prabhakar
#NewsTamil24x7 #SowmyaAnbumani
சட்டமன்றத்தில் நான் வைத்த கோரிக்கையினை உடனே பரிசீலித்து ஜெயங்கொண்டம்- மாவட்ட தலைமை மருத்துவமனையில் CT-ஸ்கேன் வசதி மற்றும் தாய்ப்பால் வங்கி உடனடியாக கொண்டுவரபப்படும் என அறிவித்த மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தேன்..