பரந்தூர் விமான நிலையத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தாலுகாவில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பின் மீதான ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 நாட்களையும் கடந்து போராடுகிறார்கள்.
மேலும், இந்த திட்டத்தால் பாதிப்படையப்போகும் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்த அறிவிக்கை வெளியிடுவது எப்படி சரியாகும்? எனில், திட்டம் அமலுக்கு வருவது உறுதியாகி விட்டதா?
போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் வரை நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடரக்கூடாது என்ற கோரிக்கைகள் எழத் துவங்கி உள்ளன.
என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?
என்ன செய்யப் போகிறது எதிர்க் கட்சிகள்?
சவுக்கு சங்கர், முட்டாளா? புத்திசாலியா?
காவல்துறை தேடுகிறது என்று தெரிந்தும் கஞ்சா வைத்திருந்தாராம்.
பெண் காவலர்களால் அழைத்து வரப்படுகிறோம் என்று தெரிந்தும் பெண் காவலரிடம் தொலைபேசி எண் கேட்டாராம்.
ஆண் காவலர்கள் புடைசூழ நடந்து வரும்போது, தனக்கு சிறையில் நடந்த கொடுமையை உலகுக்கு தெரிவிக்காமல் அமைதியாக மீண்டும் சென்று அடி வாங்க கூடியவரா?
கார்களை அவர் பெயரில் ரிஜிஸ்டர் செய்திருக்கிறார் என்றால் அவருடைய பெயரும் முகவரியும் புகைப்படமும் வெளியாகாது என்று நினைக்கக் கூடிய முட்டாளா?
60 வருடங்களுக்கு மேலாக பகுத்தறிவை வளர்ப்பவர்கள் பகுத்தாறாயாமல் அவசரகதியில் ஒரு திரைக்கதை எழுதியதால் தான் இப்படி முட்டுச் சந்தில் வந்து மாட்டிக்கிட்டாங்க.
உங்களில் பாதி பேர் முட்டாள் என்று சொல்லிவிட்டு அதையே அவர்களுக்கு உணர்த்துவதற்காக உங்களில் பாதி பேர் புத்திசாலி என்று வேறு விதத்தில் தளபதி விஜய் சர்க்கார் என்ற படத்தில் சொல்லி இருப்பார்.
அவர் கையாடிய வார்த்தைகள் தான் தவறு. ஆனால் அவர் சொல்ல வந்த கருத்து
காவல்துறையில் உள்ள பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதைத்தான்.
அதே காவல்துறையில் பணிபுரியும் பெண்களுக்காக அவர் பலமுறை ஆதரவாகவும், அவர்களுடைய தேவைகள் மற்றும் முன்னேற்றம் குறித்தும் பேசியுள்ளார்.
காவல்துறையின் நேர்மையான காவலர்களும் மேலதிகாரிகளும் அவர் மீது மரியாதை வைத்திருந்ததால் தான் அவரின் கைது பற்றியும் அவருக்கு சிறையில் நடக்கவிருக்கும் கொடுமைகள் பற்றியும் மிகத் தெளிவாக அவரிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தனர். அதையும், அவர் தனக்கே உரிய பாணியில் அரசியல் அரட்டை என்ற நிகழ்ச்சி மூலம் வெளியிட்டார்.
கடந்த இரண்டு வருடங்களாக அவரை பின்தொடர்பவன் என்பதாலும், அவரை நன்றாக படித்து வைத்திருக்கிறேன் என்ற முறையிலும் அவரை நான் நம்புகிறேன்.
நாளை விடுதலையாகி வெளிவந்த பிறகு, "ஏன் என்னை நம்புகிறாய் என்று" என்னிடமே சண்டைக்கு வரும் கேரக்டர் அவர்.
That is @SavukkuOfficial
#FelixGerald #SavukkuShankar
#SaveSavukkuShankar
#SaveFelixGerald
#SavePressFreedom
கேளுங்கள்.... மனிதர்கள், ஊர்கள் உங்கள் அறிவைப் பெருக்கி கொள்ள கேளுங்கள். அறிமுக படுத்திக் கொள்ளாத வரைக்கும்தான் மக்களும் ஊர்களும் நமக்கு அந்நியமாக தோன்றும்.
அது ஒரு கல் என்பதற்காகவே, இன்று, இப்பொழுது
கல்லாய் எனக்குத் தோற்றமளிப்பதற்காகவே நான் அதனை
நேசிக்கிறேன்.
From Sidhartha book-Hermann Hesse
Think about these lines.
அதை அவனிடம் கொடுத்துச் சொன்னான்: “இது ஒரு
கல். ஏதோ கால அளவில் இது ஒருவேளை மண்ணாகலாம்.
பின் அம்மண்ணிலிருந்து அது ஒரு தாவரமாகி, விலங்கு
அல்லது மனிதன் ஆகும். முன்பு நான் சொல்லியிருக்கக்
கூடியது என்னவென்றால் இந்தக் கல் ஒரு கல்லே தான்.
இப்பொழுது நான்
என்ன எண்ணுகிறேன் என்றால்: இந்தக் கல் ஒரு கல்தான்.
அது விலங்கும், கடவுளும், புத்தனும் கூடத்தான். அது ஒரு
பொருளாயிருந்து பிறிதொரு பொருளாய் ஆவதனால் அல்ல
நான் அதை மதிப்பதும், நேசிப்பதும்; அது ஏற்கெனவேயே
எப்பொருளுமாய் எப்பொழுதுமே இலகுவதனால்தான்.