குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை: தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன்?
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் கீழான கடைசி கல்வியாண்டு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு உருவாக்கி 2020-ஆம் ஆண்டில் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வி உள்ளிட்ட வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அது மாணவர்களின் இடை நிற்றலுக்கு வழி வகுக்கும் என்பதால் அதை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசு, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாறாக தமிழகத்தின் சூழலுக்கு பொருந்தும் வகையில் மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று 2022-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது; அதே ஆண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
நீதியரசர் முருகேசன் குழுவால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு நினைத்திருந்தால் உடனடியாக அதை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைக் கேட்டறிந்து மாநிலக் கல்விக் கொள்கையை இறுதி செய்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை. அதற்கான காரணம் என்னவென்றும் புரியவில்லை.
மாநிலக் கல்விக் கொள்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், அதன் மீது தமிழக அரசு எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை. திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையவுள்ளது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்படாவிட்டால், அதனால் எந்த பயனும் இல்லை; அதை குப்பையில் தான் போட்டாக வேண்டும். இதற்காகவா மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாயை செலவு செய்து மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு தயாரித்தது?
மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடாமல் இருக்க நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. அப்படியிருந்தும் மாநிலக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தாமதிக்கிறது என்றால், தேசியக் கல்விக் கொள்கை தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது என்று தான் கருத வேண்டியிருக்கும். இப்போதும் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது இந்த ஐயம் உறுதியாகிறது.
மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும். மாநிலக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தான் திமுக அரசின் நிலைப்பாடு என்றால், ஓராண்டாகியும் வரைவு அறிக்கையை வெளியிடாதது ஏன்? மாநிலக் கல்விக் கொள்கை எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு உடனடியாக விடையளிக்க வேண்டும்.
@CMOTamilnadu
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர், மாவீரன் ஜெ.குரு அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி, புகழஞ்சலி செலுத்திய போது. பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
இந்நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் உள்ளிட்ட பாட்டாளி சொந்தங்கள் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.!
திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலை சீரழித்து, அதில் 8.48 ஏக்கர் பரப்பளவில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திருவேற்காடு நகராட்சி தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் கூட இதை செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
விளையாட்டுத் திடலுக்கு அருகில் 169 ஏக்கர் பரப்பளவுள்ள கோலடி ஏரி அமைந்துள்ளது. திருவேற்காடு நகரத்தின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி தான் திகழ்கிறது. இந்த ஏரிக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் ஏரி மாசு படுவதுடன், நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படும். அங்குள்ள பள்ளிகள், மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான தொகுப்பு சமையல் கூடம், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். திருவேற்காடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகில், கூவம் நதிக்கரையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம். ஆனால், ஊருக்கு நடுவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க நகராட்சி துடிப்பது ஏன்?
ஒருபுறம் தொகுதிக்கு ஓர் விளையாட்டுத் திடல் என்று அறிவித்து அதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, இன்னொருபுறம் விளையாட்டுத் திடல்கள் அழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பது நகைமுரண். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, கோலடி விளையாட்டுத் திடலில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்; அங்குள்ள விளையாட்டுத்திடலை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.
@CMOTamilnadu@KN_NEHRU
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிங்களப் படையினரால் கைது: முடியாமல் தொடரும் அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும்!
வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மனிதநேய பிரச்சினையாகத்தான் பார்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப்பணிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நடத்திய பேச்சுக்களின் போது இதே நிலைப்பாடுதான் எடுக்கப்பட்டது. ஆனால், சிங்கள கடற்படையினர் இவற்றை மதிக்காமல், தமிழ்நாட்டு மீனவர்கள் ஏதோ எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டதைப் போன்று கைது செய்து சிறையில் அடைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படும் சவால் ஆகும்.
தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். இந்த நிலைப்பாடு தவறு. மத்திய அரசை வலியுறுத்தி மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசும் இந்த விவகாரத்தை இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதி, இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்தியா - இலங்கை மீனவர் நலனுக்கான கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை உடனடியாக மீண்டும் கூட்டி அதில் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அன்பு பாட்டாளி உறவுகளே நாளை நடைப்பெற உள்ள சமய - சமுதாய நல்லிணக்க மாநாட்டுக்கான வரைப்படமும்..
QR CODE- ம் இணைத்துள்ளேன் மாநாட்டுக்கு வருவோர் பயன்ப்படுத்தி கொள்ளவும்.!
#சோழமண்டல_மாநாடு | #VanniyarSangam | #SocialJustice
கும்பகோணம் சோழமண்டல மாநாட்டின் மேடை அமைக்கும் பணியின் மேல் பகுதியில் வீர வன்னிய மகாராஜா அக்னியில் தோன்றி வருவதைப் போல ஜூவாலை எரிவதை 21.2.2025 நள்ளிரவு 12.00 மணிக்கு பரிசோதனை செய்து எரியச் செய்தபோது...
தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தமிழ் சமூகநீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
இந்நிகழ்ச்சியில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ, இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் இரவி.பச்சமுத்து, அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன் ஜி, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ்.செல்வகுமார், பறையர் பேரவை தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் நாடார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம் தலைவர் அண்ணா.சரவணன், யாதவ மகாசபை மாநில செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில இணைப்பொதுச் செயலாளர் வீ.தமிழரசன், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு அவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.!
கிருஷ்ணகிரியில் கத்திமுனையில் இளம்பெண்
கூட்டுப்பாலியல் வன்கொடுமை: பெண்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி!
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலைக்கு தமது உறவினருடன் சென்ற திருப்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கஞ்சா போதையில் இருந்த 4 மனித மிருகங்களால் கத்தி முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து நலை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கவை.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுகளை நடந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவது குறித்து தமிழகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை தான் நிலவுகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்.
பெண்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்பதையே மீண்டும் , மீண்டும் கூறி வருகிறது. கிருஷ்ணகிரி கொடூரத்த்தில் சம்பந்தப்பட்டவர்கள் கூட துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதுமட்டும் அரசின் கடமை அல்ல... பெண்களை சீண்டினால் கடுமையான நடவடிக்கை பாயும் என்ற சட்டப்படியான அச்சத்தை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது தான் அரசின் முதல் கடமை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கு இரு அம்சங்கள் தான் முதன்மைக் காரணம் ஆகும். அவற்றில் முதலாவது குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருப்பது. இரண்டாவது, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்பாடின்றி தொடர்வது ஆகும்.
கஞ்சா போதையில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் மிருகங்கள்; அவர்கள் எந்த நேரமும் வெடித்து பேரழிவை ஏற்படுத்தக் காத்திருக்கும் வெடிகுண்டுக்கு ஒப்பானவர்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்து பெண்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது.
தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதைப் போக்க வேண்டும். அதற்காக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@tnpoliceoffl
உழைத்தவர்களுக்கு ஊதியம் இல்லை! வேலையே செய்யாதவர்களுக்கு ரூ.14 கோடி சம்பளம் வழங்கிய அரசு! ராமதாஸ் பகீர்!
#PMK#Ramadoss#RuralEmploymentScheme
https://t.co/x659B79AIi
சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு...
பாட்டாளி சொந்தங்களே..!
படை திரண்டு வாருங்கள்..!
பாதுகாப்பாக வாருங்கள்..!
பாட்டாளி சொந்தங்களுக்கு #மருத்துவர்_அய்யா@drramadoss அவர்கள் மடல்...!
நாள்:23.02.2025
நேரம்: மாலை 3 மணி
இடம்: தாராசுரம் ,கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு பாட்டாளி சொந்தங்களே படை திரண்டு வாருங்கள் ! பாதுகாப்பாக வாருங்கள் !
பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் ஐயா மடல் 💥
இடம் : கும்பகோணம் , தாராசுரம்
நாள் : 23.02.2025