தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
கடந்த 16 நாட்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தினந்தோறும் கைது செய்து, திமுக அரசு தனது சர்வாதிகார முகத்தை வெளிப்படுத்தி வருகிறது.
நேற்று கைது செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 7 பேர் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாதது, திமுக ஆட்சியின் ஜனநாயக விரோத போக்குக்கு எடுத்துக்காட்டு.
ஆட்சிக்கு வருவதற்கு முன் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என திமுக கொடுத்த வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற முடியாத முதல்வர் @mkstalin, தனது நிர்வாகத் தோல்வியை மறைக்க, காவல்துறையை ஏவி ஆசிரியர்களை அச்சுறுத்துகிறார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றத் துப்பில்லாத திமுக அரசு, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் ஆசிரியர்களை கைது செய்து, அவர்களின் குரலை அடக்கலாம் என்று நினைப்பது வெட்கக்கேடு. ஆசிரியர் சங்க நிர்வாகிகளை கைது செய்து மறைத்து வைத்தால் போராட்டம் நீர்த்து போய்விடும் என்ற திமுகவின் செயல்பாடு, ஜனநாயகத்தை திமுக எவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறது என்பதற்கான சாட்சி.
உடனடியாக கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும், சங்க நிர்வாகிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காவல்துறையை வைத்து மக்களை அச்சுறுத்தும் திமுகவின் எதேச்சதிகார அரசியலுக்கு தமிழக மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்.
#NewsTamil24x7NewsUpdate | புத்தாண்டிலும் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு புத்தாண்டிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள்
சென்னையில் தொடர்ந்து 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களால் பரபரப்பு
#chennai#Teachers#Protest#NewYear
#NewsTamil #Tamilnews #NewsTamil24x7
சென்னையில் ஏழாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள் இடைநிலை ஆசிரியர்கள். புத்தாண்டான இந்த நாளில்கூட அவர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களை இப்படி ரோட்டில் முழங்காலிட்டும், பிற வகைகளிலும் போராட வைத்து வேடிக்கை பார்ப்பதுதான் இந்த ஆட்சியின் லட்சணமா? முதல்வர், அமைச்சர்கள் என நீங்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டைக் கொண்டாடி வரும்போது, உங்களுக்கு வாக்களித்த இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சொல்லமுடியாத வேதனைகளோடு போராடி வருகிறார்கள்.
போராடும் ஆசிரியர்களை திமுக அரசு பலவந்தமாகக் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற முழக்கத்தை ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒரு விடியல் எப்போது? தேர்தல் வாக்குறுதியில் அவர்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டு, இன்று அதற்காக அவர்கள் போராடும் உரிமையைக் கூட சர்வாதிகாரமாக ஒடுக்கி வருகிறது திமுக அரசு.
இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். அனைத்து தரப்பு ஊழியர்களையும் அடிப்படை உரிமைக்காக அன்றாடம் போராட வைத்துக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
கஞ்சா வித்தவன்,பாலியல் பொறுக்கி,லஞ்சம் வாங்குனவன் எல்லாம் நல்லா இருக்கான் வாழ்வாதாரத்துக்காக அறவழியில் போராடுற ஆசிரியரை சமூககுற்றவாளி மாதிரி இழுத்துட்டு போறதெல்லாம் பார்க்கும் போது இவனுங்களுக்கு ஓட்டு போட்டு இந்த பாவத்தில நமக்கும் பங்கு இருக்குனு நினைக்கும் போது மனசெல்லாம் பதறது
பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கட்டில் ஏறிய தி.மு.க-வின் முகத்திரை மீண்டும் ஒருமுறை கிழிந்திருக்கிறது. "சம வேலைக்கு சம ஊதியம்" என வாக்குறுதி அளித்துவிட்டு, இன்று வீதியில் நின்று போராடும் ஆசிரியர்களை இன்றும் கைது செய்திருக்கிறது இந்த விடியாத அரசு.
5 ஆண்டுகளாகியும் தீராத கோரிக்கைகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் - இதுதான் திமுகவின் சாதனை. கோரிக்கைகளைச் செவிமடுக்கத் திராணியற்ற முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆசிரியர்களைச் சிறைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? அடக்குமுறையை ஏவி ஆசிரியர்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஜனநாயக விரோதம்.
#DMKFails