Nothing is more important than the welfare and future of our youth!
We have decided to set up fast-track courts to ensure swift and stringent punishment for those involved in paper leaks. Have directed the concerned authorities and officials to take all necessary steps in this regard. This continues our series of steps for safeguarding the interests of students.
Those who try to harm the future of our youth will not be spared.
देश के युवाओं का हित और उनका भविष्य हमारी सर्वोच्च प्राथमिकता है।
पेपर लीक के सभी मामलों में दोषियों को जल्द से जल्द कठोर दंड देने के लिए, केस के त्वरित निस्तारण के लिए फास्ट ट्रैक कोर्ट्स का गठन किया जाएगा। इस संबंध में निर्देश दे दिए गए हैं कि संबंधित विभाग आवश्यक कार्रवाई सुनिश्चित करें।
विद्यार्थियों के हितों को सुरक्षित करने के लिए, सरकार द्वारा लिए जा रहे निर्णयों की श्रृंखला में ये एक महत्वपूर्ण कदम है।
युवाओं के भविष्य के साथ खिलवाड़ करने वाले किसी भी व्यक्ति को बख्शा नहीं जाएगा।
திரு.அண்ணாமலை அவர்களின் அறிக்கை தெளிவாகவே உள்ளது.நீட் தேர்வு சமூகநீதியை உறுதி செய்கிறது என நம்புகிறேன் ஆனால் அதன் செயலாக்கத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை மறுக்க முடியாது.இந்த போராட்டத்தில் மக்கள் கோபம் உள்ளது ஆனால் இந்த போராட்டத்தை அரசுக்கு எதிரான சக்திகள் கைப்பற்றி விட்டார்கள்.போராட்டத்தை மேற்கொண்டவர்களுக்கு இதில் கூடுதல் பொறுப்பு உள்ளது..மத்திய அரசு இந்த போராட்டத்தில் இருக்கும் அடிப்படை நியாயத்தை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தையை துவங்கியிருக்க வேண்டும்.அரசு அமைப்புகளுக்கு எதிராக இளைஞர் சமூகம் செல்வதும், அதன் மீது நம்பிக்கை இழப்பதும் சரியில்லை என தெளிவான பிரச்சனையின் வேரினைத் தொட்டு பேசியுள்ளார்..
வெளிநாட்டு அமைப்புகள் இந்தியா மீதான யுத்தத்தை பல்வேறு வகைகளில் மேற்கொள்கிறதா என்றால் சந்தேகமே இல்லாமல் செய்கிறார்கள் என்பதே பதில்..ஒரு நிலையான, பலமான அரசு இந்ததியாவில் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம், அதை எதிர்த்து இந்திய அரசு வலுவான யுத்தத்தை நிகழ்த்துகிறது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை..
ஆனால், என்றுமே உள்நாட்டு மக்கள் பிரச்சனைகளை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.வேளாண் சட்டம் ஒரு மாபெரும் புரட்சிதான் நாம் வேகமாக செயல்படுத்த வேண்டிய திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும்..அந்த சட்டத்தை எதிர்த்து ஜாட் லாபிகளும், வலுவான சீக்கிய அமைப்புகளும் ஒன்று திரண்டு போராடினர்..பாஜக கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளம் தன் கூட்டணியை முறித்துக் கொண்டது..மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்..பஞ்சாபில் நீண்ட காலமாக துணை நின்ற ஒரு கூட்டணியை சமன்படுத்த முடியாமல் போனது..
சர்வதேச சதிகள், பல ஊடுருவல்கள் எல்லாமே நடந்தன.ஒரு கட்டத்தில் நாட்டின் நலன் கருதி பிரதமர் அந்த சட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்..நீதிமன்றம் கூட அதன் அமலாக்கத்திற்கு தடை விதித்தது.ஆனால், போராட்டக் குழு எதையும் கேட்கவில்லை.ஒரு ஜனநாயக புனித நாளில் செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியான நிஷான் சாஹிப்பை அத்து மீறி பறக்கவிட்டதை எந்த இந்தியனும் மறந்திருக்க முடியாது..இந்த நாட்டின் ஆன்மாவை நேசிக்கும் எல்லாருக்கும் அது அழிக்க முடியாத கருப்பு தினம்..
CAA எதிர்ப்பு போராட்டங்களின் இறுதி நிலை கூட என்னவாக முடிந்திருக்கும் என்று நமக்குத் தெரியாது.அப்போது நடந்த டெல்லி கலவரம்தான் அதன் இறுதி என்று நம்மால் சொல்லியிருக்க முடியாது.ஒருவேளை, கோவிட் தொற்று அந்த நேரத்தில் இல்லை என்றால் அந்த போராட்டங்கள் எந்த வடிவை அடைந்திருக்கும் தெரியாது..
ஆனால், வேளாண் சட்டங்கள் போலவோ, CAA போலவோ ஒரு சட்டமியற்றுதலில் ஏற்படும் எதிர்வினை அல்ல நீட்தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான மனநிலை..
2021 - 2024 - 2026 என மூன்று காலகட்டங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது..முதல் இரண்டு முறையும் அது நாடு முழுவதுமாக நடக்கவில்லை என தேர்வு ரத்து செய்யப்படவில்லை.ஆனால் 2026 நீட் தேர்வை NTA வே ரத்து செய்துவிட்டது.இது மிக முக்கிய பிரச்சனையாக மாறிவிட்டது..
தேர்வாணையங்கள் மற்றும் அரசு மீதான எதிர்ப்பு மனநிலைக்கு நாடுதழுவி இது வழிவகுத்தது..
தமிழகத்தில் கட்சிகள் போடும் நீட் ஒழிப்பு கோஷத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.அவர்கள் கேட்பது இந்த அமைப்புகளின் மீதான நம்பகத்தன்மையையும், இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்பதே..மறுதேர்வும், யாரோ சில பேர் தண்டிக்கப்படுவதும் மட்டுமே தீர்வாகிவிடுமா என்ற கேள்வி எல்லா தளத்திலும் வந்தது..நிற்க.
துறைரீதியான அமைச்சரான தர்மேந்திர பிரதான், ஏற்கனவே, வடஇந்தியா முழுக்க புதிய UGC விதிகள் விவகாரத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகிக் கொண்டிருந்தார்.அதில் மோடி அரசும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகிக் கொண்டிருந்தது..இறுதியில் நீதிமன்றமே புதிய UGC விதிகளுக்கு தடை விதித்தது..இதை ஒட்டி நீட் வினாத்தாள் கசிவு, மறுதேர்வு என்பது அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதான தீவிர குற்றச்சாட்டாக எல்லா தரப்பிலும் முன் வைக்கப்பட்டது.
இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், RTI போன்றவற்றை தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தும் போலி சட்டப் போராளிகளை எல்லாம் கரப்பான்கள், அட்டைகள் என்று விமர்சித்தார்.இதை திரித்து அவர் அரசை நோக்கி கேள்வி எழுப்பும் இளைஞர்களை கரப்பான்கள் என்கிறார் என தீப்கே போன்றவர்கள் எழுந்து வந்தார்கள்.பாஜகவை நக்கல் செய்வது போல கரப்பான் ஜனதா கட்சி என்றெல்லாம் பகடி செய்தனர்..அவர்கள் மிக எளிமையாக மக்களிடம் உள்ள நீட் தேர்வுத்தாள் கசிவு பிரச்சனையை கையிலெடுத்தனர்..(1)
Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In the last 5 years, the NEET UG question paper has leaked thrice. Imagine the amount of pressure that it puts on students, who had to go through the examination process yet another time when the system that was supposed to bring in uniformity was failing. Yet there was no accountability, and I believe strongly that it was that moment that brought in a shift in the minds of the students to take to the streets to cry their hearts out.
Protest is a fundamental right in a Democracy. The pertinent question, however, is this: why did the BJP-led Central Government take so long to initiate a dialogue with the protestors? Why was meaningful engagement delayed until the protest had escalated to a flashpoint? What kept you waiting?
The students and the people who are leading them also have a responsibility here. It is natural that when a protest stays on for weeks, people with vested interests will take the stage to air views that are either completely irrelevant to the initial demands of the protests or would try to completely hijack it to serve their agenda. If you remain silent and let these people with vested interests further their agenda, then you are deviating from your core objectives. Please do not let it happen!
I urge the BJP-led Central Government to engage in meaningful dialogue, uphold transparency, and take swift, appropriate action to address the concerns at hand. The strength of any nation lies in the confidence its youth place in its institutions. If our students lose faith in the fairness and credibility of our education system, we are jeopardising the future of our nation.
இவர்கள்தான் மாணவர்களாம்! மாணவர்களின் லட்சணத்தைப் பாருங்கள்.
இவர்களுக்குத்தான் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்கிறார்களா?
எந்த மாணவன் தேசியக் கொடியைக் கையில் வைத்துக்கொண்டு இந்திய நாட்டிற்கும், காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்களை தீயிட்டு எரிப்பான்? அடித்து நொறுக்குவான்? "செங்கோட்டையை தகர்ப்போம்", "நேபாளம் போல பாராளுமன்றத்தை எரிப்போம்", "காஷ்மீருக்கு மீண்டும் அந்தஸ்து வழங்க வேண்டும்" என்று பேசுவான்?
இவர்கள் ஆரம்பத்தில் நீட்டுக்கு எதிரான போராட்டம் என்றார்கள். ஆனால், இவர்களின் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதாகவும், இந்து மதத்திற்கு எதிரானதாகவும், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்கள் எழுப்புவதாகவும், கம்யூனிஸ்ட் நக்சல் தலைவர்களின் படங்களை ஏந்தி போராட்டம் நடத்துவதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் உண்மையில் மாணவர்களா? அல்லது மாணவர்கள் என்ற போர்வையில் செயல்படும் தேச விரோத சக்திகளா?
இத்தகைய செயல்களுக்கு ஆதரவாக யார் செயல்பட்டாலும், அவர் எந்த உருவில் இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றமும், சட்ட அமலாக்க அமைப்புகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.சி. திருமாறன் ஜி
தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர்
புதுக்கோட்டை மாவட்டம், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்தின் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளைச் சேர்ந்த பணியாளர்களின் பணிக்காலம் கடந்த 31.12.2025 உடன் முடிவடைந்த நிலையில், 01.01.2026 முதல் 31.12.2027 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி தமிழக அரசுக்கு ஏற்கனவே கடந்த மார்ச் 20, 2026 அன்று முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
பணிக்கால நீட்டிப்புக்கான அரசாணை இதுவரை வழங்கப்படாததால், பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான ஊதியம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு, ஏப்ரல், மே, ஜூன் 2026 ஆகிய 3 மாதங்களுக்கான ஊதியம் மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான ₹66.52 லட்சம் நிதியை விடுவிக்க ஏற்கனவே கடந்த மே 12, 2026 அன்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரையிலும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்ட ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் குடும்பங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, காலதாமதமின்றி அவர்கள் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து அரசாணை வெளியிடுவதுடன், நிலுவையில் உள்ள ஏப்ரல், மே, ஜூன் மாதங்களின் ஊதியத்திற்கான நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
தேனி மாவட்டத்தில் WTL-இன் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்வில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர்
🔥
மாறுவோம் மாற்றுவோம்
@annamalai_k@WTLFoundation
நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!