கோவை வடக்கு தொகுதியின் பாஜக வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அக்கா திருமதி @VanathiBJP. MLA அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள். தாமரைக்கு வாக்களிப்போம்
@BJP4India@BJP4TamilNadu
@SavukkuOfficial அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளைத் தவிர்த்து
தமிழ் மாநில காங்கிரஸ் - 5
புதிய நீதிக் கட்சி- 2
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் -2
இந்திய ஜனநாயக கட்சி - 2
திருமாறன் ஜி -1
மேலும் சில கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 37 முதல் 40 தொகுதிகளில் தாமரையை களம்
இன்றைய தினம் கோவை புலியகுளம் விக்னேஷ் மஹாலில் எனது தலைமையில் இயங்கும் கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களான சுயம், வளம், மோடியின் மகள் ஆகியவற்றின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ராஜ்சபா எம்.பி-யும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத் தலைவருமான திருமதி. @sharmarekha அவர்களும், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர், சம்பா பப்ளிஷிங் கம்பெனி இயக்குநர் திரு. R.S.மாருதி அவர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வளம் திட்டத்தில் கனரா வங்கி சுய வேலை வாய்ப்புத் திட்டத்துடன் இணைந்து ஆரி, எம்ராய்டரி பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ்களும், சுயம் திட்டத்தின் கீழ் 406 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும், தாயின் அரவணைப்பில் வளரும் 36 பெண் குழந்தைகளுக்கு மோடியின் மகள் திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டு கல்வி நிதியாக தலா ரூ.10,000 வழங்கப்பட்டது.
விழாவில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிர், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக சிறு விளையாட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தது. #kovai #kovaimakkalsevaimaiyam