வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நமது விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக,
அண்ணா அறிவாலயத்தில் இன்று (27.02.2026) தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை வணங்கி.
!
தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டிற்கு எதிரான ஆதிக்கவாதிகளையும், அடிமைகளையும் 2026-ல் வீழ்த்தி, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய அயராது உழைப்போம்! கழகம் 7-வது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்பதை நம் உழைப்பின் மூலம் உறுதிசெய்வோம்!
#DMK4TN
வேலூர் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் @dmk_youthwing அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் உருவாக்கப்பட்டு - கழகத்தின் முதன்மை அணிய���க உயர்ந்து நிற்கும் இளைஞரணியில் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் பொறுப்புக்கு வந்துள்ள - பொறுப்பில் தொடர்கிற நிர்வாகிகளை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இளைஞரணியினர் கழகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பணி ஆற்ற வேண்டும். தலைவர் அவர்கள் தொடங்கி வைத்துள்ள #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பில் முழுமையாக பங்கேற்று அதன் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் அறிவுறுத்தினோம்.
மண் - மொழி - மானம் காக்க 2026-இல் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெல்ல நம் இளைஞர் அணியினர் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று உரையாற்றினோம்.
@katpadidmk @APNandakumarMLA @AbdulmalikDmk @Prabhugajendran @rajaingersal3
#Success = #NaanMudhalvan
இதன் அடுத்த பாய்ச்சலான, #வெற்றி_நிச்சயம் திட்டத்தால், வாய்ப்புகளை இழந்த 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான கதவுகளைத் திறக்கிறோம்!
“#நான்_முதல்வன்” என்று நீ��்கள் ஆளுமைகளாக அமரும் ஒவ்வொரு தருணத்திலும், நான் முதல்வராக என் மக்களுக்கு இந்தத் திட்டத்தை உருவாக்கினேன் எனப் பெருமை கொள்கிறேன்!
@naan_mudhalvan @Udhaystalin
Empowering Tamil Nadu’s journey towards a 1 trillion-dollar economy, #UmagineTN2025 leverages the transformative power of IT. With AI, blockchain, and emerging technologies, it fuels start-up growth, redefines governance, and champions sustainability.
A confluence of visionaries and innovators, it’s a powerhouse of collaboration and progress. The future is being imagined here!
@ptrmadurai@umaginechennai
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின் போது, இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் செயல்படுத்தப்பட்டுள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ தொடர்பாக மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணன் காந்திராஜன் மற்றும் அண்ணன் ஈஸ்வரன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் கூடுதலான எண்ணிக்கையில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுமா என்பதுவே அவர்களின் கேள்வியின் மையக்கருத்தாக இருந்தது.
தமிழ்நாடெங்கும் இது தொடர்பாக பெறப்பட்டுள்ள கோரிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்துக் கொண்டு சேர்த்துள்ளதை எடுத்துரைத்தோம்.
நம் முதலமைச்சர் அவர்களின் அனுமதியைப் பெற்று, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதிதாக விண்ணப்ப��க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திட்டத்தின் விதிகளை பூர்த்தி செய்யும் மகளிர் அனைவருக்கும், உரிமைத்தொகை வழங்குவதற்கு 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம் பதிலுரையில் தெரிவித்தோம்.
தமிழர் திருநாளின் இனிமை இல்லமெங்கும் நிறைந்திடப் பொங்கல் பரி���ுத் தொகுப்பை விநியோகித்த கையோடு, இந்த மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகையினை, தை பிறக்கும் முன்பாக, இன்றே என் சகோதரிகளின் கணக்கில் வரவு வைத்திட உத்தரவிட்டுள்ளேன்!
பொங்குக இன்பம்!
பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் சாமானியரா, கட்சி ஆதரவாளரா, காவல் ஆய்வாளரா, அதிகாரம் பொருந்தியவரா என்றெல்லாம் இந்த அரசு பார்க்காது... யாராக இருந்தாலும் கடுமையான, உச்சபட்ச தண்டைனையைச் சட்டப்படி பெற்றுத் தருவோம்!
வாச்சாத்தி, தருமபுரி தொடங்கி பொள்ளாச்சி வரை சந்தி சிரித்த ஆட்சி நடத்திய கட்சியின் 'சார்கள்' பெண்கள் பாதுகாப்பு பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம்! சென்சிட்டிவான ஒரு வழக்கில், குறுகிய நோக்குடன் செயல்பட்டு, அரசியல் லாபத்துக்காக நம் மாணவர்களின் கல்வியைப் பாழாக்க வேண்டாம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அமைத்த, சென்னை மாநகரின் முதல் தாவரவியல் பூங்காவான `செம்மொழி பூங்கா’வில் 4-வது சென்னை மலர் கண்காட்சியை ஜனவரி 2- ஆம் நாளன்று நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார்.
ஜனவரி 19-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியைச் சிறப்பாக ஏற்பாடு செய்து, பராமரித்து வரும் ��ோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினருக்கு வாழ்த்துகளும் பாராட்டும்.
`ஊட்டியே இங்கு வந்தது போல் உள்ளது’ என்று பொதுமக்கள் பூரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியை, காணத் தவறாதீர்கள்!
#ChennaiFlowerShow2025 @MRKPanneer @tnhorticulture
கழகத் தலைவர் - மாண்புமிகு ���ுதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகிய அமைப்புகளுக்கு இள��ஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை நியமித்து வருகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொண்டோரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள், உரிய பரிந்துரைகள், தற்போதைய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அமைப்புகளுக்கான நிர்வாகிகள��� அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை தெற்கு, விழுப்புரம் வடக்கு, கடலூர் மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களுக்கு இளைஞர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
#கழக_இளைஞர்_அணி @Subramanian_ma @cvganesan1 @DrPSekarDMK @Joel_Dmk @Dmkmalik1 @PrabhakarRaja88 @anand3kannan @m_s_ganeshkumar
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ஐயா அவர்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன்.
@iumltnofficial
அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் @rajbhavan_TN. கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
"தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!