கண்டிக்கிறேன்
டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் தொடர்பாக சிபிஐ எம் மாணவர் அமைப்பான எஸ் எஃப் ஐ யின் அகில இந்திய இணைச் செயலாளர் ஆயிஷே கோஷை டெல்லி காவல் துறை கைது செய்ய முயற்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. ஒருபுறம் வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் எனக் கூறிக்கொண்டே இன்னொரு புறம் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் மோடி அரசின் இரட்டை வேடம் இதில் அம்பலமாகியுள்ளது.
மேகாலயா எம்.பியுடன் சந்திப்பு
மேகாலயா மாநில முதலமைச்சரின் சகோதரரும் மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டிருப்பவருமான திரு ஜேம்ஸ் பாங்சங் கொங்கால் சங்மா ( James Pangsang Kongkal Sangma ) அவர்களை டெல்லியில் இன்று தலைவர் @thirumaofficial அவர்களும் நானும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினோம். மறைந்த பி.ஏ.சங்மா அவர்களின் புதல்வர் அவர். அவரது தேசிய மக்கள் கட்சி (NPP) வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளது. அதனால் தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
பிராமண கடப்பாறையில் திமுக கொடி, கொடி கட்டி பறக்குது...
இன்றைய இளைஞர்கள் கருணாநிதி அவர்களையும், ரயிலையும் தொடர்புப்படுத்தி விவாதம் செய்து வருகின்றார்கள் என்றால் அதற்கு விதை போட்டது சீமான்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக கருணாநிதி அவர்களை முன்னிறுத்தி இன்றைய இளைஞர்கள் பெரும் விவாதம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் சீமான்.
தந்தை பெரியார் அவர்களுக்கு தெலுங்கு முத்திரை குத்தி மொழி ரீதியான ஒரு வெறுப்புணர்வை தந்தை பெரியார் அவர்கள் மீது ஏற்படுத்தியவர் சீமான்.
திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்றிருந்த சித்தாந்தத்தை இரு கூறுகளாக பிரித்து, தமிழ் தேசியத்தை பார்ப்பனியத்தோடு இணைத்து பார்ப்பன கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடிப்பேன் என விவாதத்தை கிளப்பியவர் சீமான்.
ஆனால் அவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு பிராமண கடப்பாரையில் திமுக தன்னுடைய கொடியை கட்டி மக்கள் மத்தியில் கொடிசைக்கிறது திமுக..
விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பலர் விஜய் அவர்களை RSS'ஆக இருக்க கூடுமோ என சந்தேகித்த வேளையில், அந்த சந்தேக கூறுகள் அனைத்தையும் விஜய் அவர்கள் தன் செயல்பாடுகள் மூலம் தெளிவுபடுத்தியதால் தான் இன்று விஜய் அவர்களை விசிக கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றார்கள். ஆனால் இன்றளவும் கூட சீமான் அவர்கள் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் தான் இயங்குகின்றார் என்பதை திமுக அறிந்தும் கூட திரு.சீமானோடு உறவாடுவது என்பது தனக்குத்தானே திமுக மூடு விழா கொண்டாடுவதை போன்றதாகும்.
திமுகவின் கொள்கை தடுமாற்றத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
- இரா.இளம்பெருவழுதி
கடந்த அரசுகளைப் போல் தட்டிக்கழிக்காமல் சாதிய ஆணவப் படுகொ**லைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற தற்போதைய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
#thiruma_army@CMOTamilnadu
கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா?
நேற்றைய கூட்டணியை பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால்
இன்றைய கூட்டணியை பற்றி
நாளைதான் சொல்ல வேண்டி வரும் என்றாகாதா?
“ANYONE CAN BE ACCUSED
EVERYONE ACCUSED DESERVE
A FAIR TRAIL”
நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா ?
அல்லது தன்னை நம்பி சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா?
ALLIANCE INTEREST ?
OR
THE INTEREST OF PEOPLE ?
WHICH MUST BE THE LARGER INTEREST ?
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் இயற்றக் கோரி சட்டப்பேரவையில் விசிக சார்பில் வலிமையாகக் குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
கடந்த 18-03-2026 அன்று, தோழர் எவிடென்ஸ் கதிர் மற்றும் தோழர்களுடன் ஆணையத்தின் முன் ஆஜராகி, ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தின் தேவை குறித்த ஆவணங்களை அளித்தோம். மீண்டும் கடந்த வாரம் (25-06-2026) (ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன்) ஆணையத்தை சந்தித்து முறையிட்டுள்ளோம்.
ஆணையத்தை நாங்கள் இருமுறை சந்தித்த இந்த 3 மாத இடைவெளியில், தமிழ்நாட்டில் 8 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்பட்டதாக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதே உறுதியுடன் இப்போது தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
எத்தனை அச்சுறுத்தலை தந்தாலும் எங்கள் உரிமையை நிலைநாட்டாமல் விட மாட்டேன் என்று களத்தில் நின்றவர் மேலவளவு முருகேசன்...
ஜூன் 30 மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தோழர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மார்ந்த வீரவணக்கம்...🙏
@thirumaofficial
நன்றி
மாநகராட்சிகளின் துப்புரவுப் பணிகளைத் தனியார் மயமாக்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எமது தலைவர் @thirumaofficial அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி 🙏🏿
பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாழடைந்து இருந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், தேர்தலில் நாம் அளித்த வாக்குறுதியின்படி புதுப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இன்று (07.06.26) காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். அவர்கள் வழங்கிய மனுக்களின் மீது அந்தந்த துறையிரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.
@thirumaofficial
குழப்பமான ஒரு அரசியல் சூழல் நிலவுது…. தேர்தல்ல தனிப்பெரும் கட்சியா ஜெயிச்சவங்க சார்பா அடுத்து என்ன செய்ய போறோம் னு தங்கள் தரப்பு விளக்கமோ அதிகாரபூர்வமான அறிவுப்போ இல்ல தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பும் இல்ல..
அப்ப கடைசிவரைக்கு மோடி மாதிரி முகத்த மட்டும் காட்டி அரசியல் பண்றது தான் ப்ளான் போல… மத்ததெல்லாம் இன்ஸ்டால நண்பா நண்பீஸ் பாத்துப்பாங்க..
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி விசிக வெற்றி வேட்பாளர் அண்ணன் ஜோதிமணி அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்குகள் கேட்டு லால்பேட்டை நகரில் பரப்புரை பயணம்.
#AloorShanavas#ElectionCampaign