தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் ஆளுமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு மறைந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசத்தை அனுபவித்தார். அவரது மீசைமுடிகள் காவல்துறையால் சுட்டுப் பொசுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். என்றபோதும் பிரிட்டிஷ் ஏகாபத்திய எதிர்ப்புப் போரில் உறுதியாக நின்றார்.
விடுதலைக்குப் பின்பு விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக களத்தில் நின்றார். தென்மாவட்ட சாதிக்கலவரத்தில் தன் மாமனார் கொல்லப்பட்டபோதும் நல்லிணக்கப்பணிகளில் கவனம் செலுத்தினார். தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்.
அவரது 60 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையை சிறப்பு செய்யும் வகையில், பாராட்டு விழா நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி ரூபாயை அவருக்கு வழங்கியது. அதை அப்படியே கட்சி நிதிக்கு திருப்பித் தந்தார்.
பொதுவுடைமை இயக்கப் போராளியான தோழர் நல்லகண்ணு தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள்மீது பெரும் மதிப்பு கொண்டவர். முத்தமிழறிஞர் கலைஞருடன் ஆழமான நட்பு கொண்டவர். “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று கலைஞரால் பாராட்டப்பட்டு, அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தோழர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி சிறப்பித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட 10 லட்சத்துடன் தன் சொந்தப் பணமான ஐயாயிரம் ரூபாயையும் சேர்த்து, பத்து லட்சத்து ஐயாயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
பொதுவாழ்க்கையில் எளிமையும் போராட்டக் குணமுமே தோழர் நல்லகண்ணுவின் அடையாளங்கள். மக்களுக்காக உழைத்த மகத்தான தலைவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.
தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையின் தலைநகராக மாற்றியிருக்கும் #திராவிட_மாடல் அரசு சார்பில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி கோவை ஆர்.எஸ்.புரத்தில் சுமார் ரூ 10 கோடியில் Astro Turf வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தை இன்று திறந்து வைத்தோம்.
இரவிலும் போட்டிகளை நடத்தும் வகையில் மின்கோபுர விளக்குகளுடனும், அனைத்து நவீன வசதிகளுடனும் 7 ஏக்கரில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை போன்று இனி கோவையிலும் நடைபெற இருப்பதில் மகிழ்கிறோம்.
இந்த ஸ்டேடியத்தை கோவையைச் சேர்ந்த ஹாக்கி வீரர், வீராங்கனைகள் சிறந்த முறையில் பயன்படுத்தி, புதிய சாதனைகள் படைக்க என் அன்பும், வாழ்த்தும்.
@RRajakannappan@V_Senthilbalaji@GPR4CBE@K_Eswarasamy
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டலில் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டிற்கான உட்கட்டமைப்புகளை அடுத்தக்கட்டத்திற்கு மேம்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில், சென்னை, செங்கல்பட்டு, சேலம், இராமநாதபுரம் மாவட்டங்களில் மொத்தம் ரூ.48.76 கோடி மதிப்பீட்டில் பல்வேறு விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினோம்.
🎉சேலம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ11.40 கோடி மற்றும் ரூ12.35 கோடி மதிப்பில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம் மற்றும் புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதை,
🎉செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கீரப்பாக்கத்தில் ரூ 17 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான துப்பாக்கிச் சூடு பயிற்சி அகாடமிக்கான உட்கட்டமைப்பு பணிகள்,
🎉சென்னை நேரு விளையாட்டரங்கில் ரூ 8 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி மகிழ்ந்தோம்.
விளையாட்டுத் துறையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட #திராவிட_மாடல் அரசின் பணிகள் என்றென்றும் தொடரும்!
@SportsTN_@RRajakannappan@thamoanbarasan@PKSekarbabu@SalemRRajendran@TRBRajaa@kvmuthuramaling@Atulyamisraias #JMeghanathaReddyIAS
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் விளையாட்டுத் துறை சார்பில் Tamil Nadu Champions Foundation மூலம் நிதியுதவி செய்து வருகிறோம்.
இதன்படி, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகும் வகையில், தம்பிகள் மானவ், ஆதர்ஷ் ராம், ஃபியோடர் ஆதித்தன், தர்ஷன், யோபின், தங்கைகள் ராகஸ்ரீ, சாதனா ஆகியோருக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட ரூ.2.80 இலட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினோம்.
அதே போல, நீச்சல் வீரர் தம்பி அபிஷேக்கிற்கு மலேசியா சென்று பயிற்சி பெற உதவியாக ரூ.35,000க்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று வழங்கினோம்.
இந்த வீரர், வீராங்கனைகள் அனைவரும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க எனது அன்பும் வாழ்த்தும்!
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026!
புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு #திராவிடப்_பொங்கல் களைகட்டட்டும்!
உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என #DravidianModel 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்! #LetterToBrethren #HappyNewYear2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அண்ணன் தளபதி @mkstalin மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் இளந்தலைவர் @Udhaystalin அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இரா.கி.பேட்டை கிழக்கு ஒன்றியம் இரா.கி.பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினோம்.
உடன் :-
மாவட்ட கல்வி அலுவலர்,
திரு.பா.சம்பத்
(இரா.கி.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர்)
திரு.மா.இரகு
(இரா.கி.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர்)
தலைமையாசிரியர்,
இருபால் ஆசிரிய பெருமக்கள்,
மற்றும் கழக நிர்வாகிகள்.
#விலையில்லா_மிதிவண்டி
#DMK4TN
#tiruttanimla
தியாகத்தின் பெருவாழ்வு: தோழர் #நல்லகண்ணு ஐயா 101-ஆவது பிறந்தநாள்
விடுதலைப் போராட்ட வீரராகவும், விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாகவும் திகழ்ந்து, இன்றளவும் நமக்கு வழிகாட்டும் நூற்றாண்டு நாயகர், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சியான, எண்ணற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தாங்கள் - நல்ல உடல்நலத்துடன் நீண்டநாட்கள் நிறைவாழ்வு வாழ்ந்திட விழைகிறேன்.
#ThozharNallakannu101