‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் இன்று.
‘தமிழர்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று கூட பெயர் சூட்ட முடியவில்லையே’ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ்ப்பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, ‘தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க... வாழ்க...' என்ற உறுப்பினர்களின் முழக்கத்தால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.
அந்த இனிய தினத்தை தமிழ்நாடு நாளாக திராவிட மாடல் ஆட்சியில் நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!
தமிழ் வெல்க!
தமிழ்நாடு வாழ்க!!
#தமிழ்நாடு_நாள்
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
#Policerecruitment
சப்-ரிஜிஸ்ட்ரார் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை? தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, அதைச் சுட்டிக்காட்டியவர்களைக் கைது செய்யும் போக்கு ஏன்?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்...
குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற #MonsoonSession குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!
#Parliament #MekedatuDam #Cauvery #DeltaFarmers #DMK
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.
காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும்,
*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,
*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,
*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்
எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் இன்று.
தமிழ்நாடெங்கும் மூடப்பட்ட 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து, மதிய உணவு திட்டம் - இலவச சீருடை - பாடப்புத்தகங்கள் என கல்வி வளர்ச்சிக்கும்,
தொழில்துறை வளர்ச்சி - அணைகள் உருவாக்கம் என தமிழ்நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கும் காமராசர் ஆற்றிய பங்களிப்புகள் மகத்தானவை.
சென்னை மெரினா சாலைக்கு காமராசர் அவர்களின் பெயரை சூட்டியது - குமரியில் நினைவு மண்டபம் அமைத்தது - காமராசரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக நடைமுறைப்படுத்தியது என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காமராசருக்கு பல்வேறு பெருமைகளைச் சேர்த்தார்கள்.
கலைஞர் அவர்கள் வழியில், நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள், நம் திராவிட மாடல் ஆட்சியின் போது, காமராசர் கல்லூரி மேம்பாட்டுத்திட்டம், பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்துக்கு அடித்தளம் அமைத்ததற்காக காமராசர் அவர்களுக்கு திருவுருவச்சிலை - திருச்சியில் காமராசர் பெயரில் மாபெரும் அறிவுலகம் என காமராசரின் புகழை மென்மேலும் போற்றினார்கள்.
கல்விக்கண் திறந்த காமராசர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
#Kamarajar
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தவெகவினர் என்றால் ஒரு நீதி, மற்றவர்கள் என்றால் ஒரூ நீதியா?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்...
#ரீல்ஸ்வேண்டாம்_நீதிவேண்டும்
ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
#TVKFails
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
#நீதி_வேண்டும் #Custodial_Death
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!
#DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது பண்பாட்டையும் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றைத் திரிபுவாதங்களால் திசைதிருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த்தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை!
மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றினைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம்!
வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்!
#தென்காசி #மலையடிப்பட்டி
விமர்சனமே செய்யக்கூடாது என்கிற அளவுக்கு விஜய் என்ன அவதாரமா?
ஆணவத்தால் ஆடியவர்களின் கடைசி காலம் எப்படி இருந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். ரொம்ப ஆடாதீங்க..
விஜய் என்ன அவதாரமா?
சமூக வலைத்தளத்தில் களமாடும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற கழக உடன்பிறப்பு ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தும், விஜய்யை அவர் விமர்சித்து விட்டார் என்ற புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டது ஈவு இரக்கம் துளியுமற்ற தவெக அரசின் காவல்துறை.
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மாற்றுத்திறனாளி தங்கமணியை கொடூரமாக அலைக்கழித்திருக்கிறார்கள். அவருடைய நிலையைப் பார்த்து நீதிமன்றமே ஜாமீன் வழங்கி உள்ளது.
முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு விஜய் பேசிய பீப் வார்த்தைகளை விட மோசமாக இன்னொருவர் விமர்சனம் பண்ணி விட முடியுமா?
விஜய் என்ன அவதாரமா?
சமூக வலைத்தளத்தில் களமாடும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணி என்ற கழக உடன்பிறப்பு ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அறிந்தும், விஜய்யை அவர் விமர்சித்து விட்டார் என்ற புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டது ஈவு இரக்கம் துளியுமற்ற தவெக அரசின் காவல்துறை.
மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மாற்றுத்திறனாளி தங்கமணியை கொடூரமாக அலைக்கழித்திருக்கிறார்கள். அவருடைய நிலையைப் பார்த்து நீதிமன்றமே ஜாமீன் வழங்கி உள்ளது.
முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு விஜய் பேசிய பீப் வார்த்தைகளை விட மோசமாக இன்னொருவர் விமர்சனம் பண்ணி விட முடியுமா?
விமர்சனமே செய்யக்கூடாது என்கிற அளவுக்கு விஜய் என்ன அவதாரமா?
ஆணவத்தால் ஆடியவர்களின் கடைசி காலம் எப்படி இருந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். ரொம்ப ஆடாதீங்க..