என்றும் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தது திமுகதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மக்கள் மன்றத்திற்குத் தெளிவாகத் தெரிந்த இந்த உண்மைகள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாமல் போனது வியப்பளிக்கிறது. சட்டமன்றம் என்பது கடந்த கால நிகழ்வுகளை வைத்துப் பரஸ்பரம் பழி சுமத்துவதற்கான இடமாக இல்லாமல், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கான ஜனநாயக மேடையாகத் திகழ வேண்டும்.
— SDPI மாநிலத் தலைவர் திரு. முகமது முபாரக் அவர்கள்
#WATCH | அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு உதவிய இயக்கம்!
ஏட்டளவில் மட்டும் செயல்படக்கூடிய இயக்கம் தி.மு.க அல்ல! அடித்தட்டு மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கிற இயக்கம் தி.மு.க. குடிசையில் இருப்பவர்கள் கோபுரத்தை எட்டக்கூடிய வகையில் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி, தாழ்த்தப்பட்டவர்களை விண்ணுயரச் செய்த இயக்கம் தி.மு.க.
- சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர் கோவி.செழியன் பேச்சு!
#KoviCheziyan | #DMK | #TNAssmebly | #KalaignarSeithigal
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!
- கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத த.வெ.க. அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கொந்தளிப்பை உணர்த்துவதாக அமைந்திருந்தது.
கழக உடன்பிறப்புகளோடு உழவர் பெருமக்களும் பொதுமக்களும் பங்கெடுத்து தங்களது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை மிகக்கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சித்தார்.
"நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவுமில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் அமைச்சர்களோ முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
காவிரி பிரச்னையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்துவிட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்பும் வகையில் இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை அவரை அராஜகமாக கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவரைக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது த.வெ.க. அரசு. பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலமாக உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்.
நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். அப்போது கேபினெட் தகுதி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்க வேண்டும். ஆனால் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, 'கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்' என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. 'உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!
ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார். ட்வீட் போட்டால், வீடியோ பேசினால் கைது செய்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்களைப் போராட விடவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது அராஜகமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. சென்னை மெரினா கடற்கரையே பூட்டி வைக்கப்பட்டது பாசிசத்தின் உச்சம். விவசாயிகள் தன்னெழுச்சியாகப் போராடியதை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் போரடியதாகச் சொல்லப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை செய்யச் சென்ற திராவிடர் கழக வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் விவசாயிகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய, அதில் பங்கெடுத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது கைது நடவடிக்கையைப் பாய்ச்சியது த.வெ.க. அரசு.
இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் சில தலைவர்கள், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் உதயநிதிக்குக் கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர்.
ஆட்சிக்கு வந்தது முதல் வாக்குறுதிகளை நிறைவேற்ற நினைக்காமல், ரீல்ஸ் கிரியேட்டராக மட்டுமே வலம் வரும் முதலமைச்சர் விஜய், தனது பொறுப்பை உணர்ந்து இனியாவது செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்!
ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!
#தொடைநடுங்கி_அரசு
சினிமா முடிந்தது; ஆக்டிங் முடியவில்லை!
“முதலமைச்சர் சினிமாவில் இருந்து விலகியிருக்கலாம். ஆனால் இன்னும் சினிமா செயல்பாடுகளில் இருந்து முழுமையாக விடுபடவில்லை. குட்டிக்கதைகள் சொல்லியும், லாவணி கச்சேரி போலவும் அரசியல் நடத்தக்கூடாது. இது மீண்டும் பூமராங்காக திரும்பிவிடும். இதுபோன்ற அரசியல் மோதல்களால் நாட்டின் அரசியல் வளர்ச்சியும், பொது ஒழுக்கமும் பாதிக்கப்படும்.”
- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி.
#DravidarKazhagam #KVeeramani #TVKFails #DVACRaid #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
தவெக மின்வெட்டுத்துறை அமைச்சருக்குக் கிடைத்த பல்பு!
தவெக ஆட்சியில் நடக்கும் தொடர் மின்வெட்டை மறைக்கவும், தங்களின் நிர்வாகத் திறமையின்மையைத் திமுக மீது பழிபோடவும் தவெகவின் மின்வெட்டுத்துறை அமைச்சர் அவசர அவசரமாக மின்சார வாரியம் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால், தவெக வெளியிட்ட அந்த அறிக்கையே இப்போது அவர்களுக்கு Self Goal ஆக மாறி, முகத்தில் கரியைப் பூசியுள்ளது!
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான 2021-2026 திமுக ஆட்சியின் மிகச்சிறப்பான நிர்வாக ஆளுமைக்கு இந்தத் தரவுகளே சாட்சி,
2016-21 அதிமுக ஆட்சியில் வெறும் ரூ.3,20,140 ஆக இருந்த மின்வாரிய வருவாயை, 2021-26 திமுக ஆட்சி ரூ.4,97,996 ஆகப் பல மடங்கு உயர்த்திப் பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளது!
அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் சரிந்து ரூ.58,534 ஆக இருந்த பற்றாக்குறையை, திராவிட மாடல் ஆட்சி தனது நிதி மேலாண்மையால் ரூ.34,447 ஆகக் குறைத்து மின்சாரத்துறையை வலுப்படுத்தியுள்ளது!
திமுகவின் மீது அபாண்டமாகப் பழிபோடலாம் என்று நினைத்து, திராவிட மாடல் அரசின் சிறப்பான நிர்வாகத் திறனையும், நிதி ஒழுக்கத்தையும் தங்கள் சொந்த அறிக்கை மூலமாகவே ஊருக்குப் பறைசாற்றிய தவெக அமைச்சரின் அறிவுக்கூர்மையை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது!
அப்பாக்களின் தினம் இன்று!
உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்!
#FathersDay-இல் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!
ஒரு ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிரான்ஸில் வேலை பார்க்கிறார், அரசுப் பள்ளி மாணவி ஐஐடி-க்குள் நுழைகிறார், எத்தனையோ பேர் UPSC வெல்கிறார்கள்! இதெல்லாம் வெறும் சாதனை அல்ல, #நான்_முதல்வன் தந்த சமூக நீதி! பக்கங்களை மாற்றினாலும் மக்களின் நெஞ்சில் இருக்கும் நன்றியை மாற்ற முடியாது!
பத்திரிகைச் செய்தி
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம்
இன்று (20-06-2026), மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற நேரலை குறித்து, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
"கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன.
அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.
இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும்.
நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.
'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.
இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.
ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டமன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும்இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு வெங்காயமும்
இல்லாத, வேலைக்கும்
உதவாத வெள்ளை அறிக்கை என்னும் பெயரில்
பிள்ளை அறிக்கை விடும் பிதற்றல் காரர்களே;
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கிற்கு ஒரு வெள்ளை அறிக்கை விடுவீர்களா?
நாண் அற்ற வில்லாய் கிணற்றில் போட்ட கல்லாய் முடங்கி கிடக்கும் C. M. சார்
Silent மோடியிலிருந்து
Active மோடுக்கு வருவது எப்போது? 😡
@mkstalin@Udhaystalin
#MKStalin
#DMK
#TVKFails