வைகோ ஒரு உண்மையின் அடையாளம்
எங்களது சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்து விட்டு வாருங்கள் என முதல்வர் விஜய் என்னிடம் சொன்னார் ஆனால் நான் முடியாது என்று மறுத்தேன் ஆனால் நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் அவர்களை வெற்றி பெற வைப்பது எனது கடமை என முதல்வர் விஜய் என்னிடம் கூறினார் வைகோ ஒப்புதல் வாக்குமூலம்
So முதல்வர் விஜய் தான் மற்ற கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை எழுத்து வருகிறார் அவர்களாக யாரும் வரவில்லை?
மிக அருமையான மாற்று அரசியல்!
தொண்டர்களின் அராஜகமும் தலைமையின் மௌனமும் பொதுமக்களின் கோபமும்
கட்சி நிர்வாகிகள் அராஜகம் செய்வதும் அதிகாரிகள் பயந்து சம்மதிப்பதும், ஒருபுறம் இருக்கட்டும். இதைவிடப் பெரிய கொடுமை தலைமையின் மௌனம். தன் கட்சித் தொண்டர்கள் பொதுமக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று கண்டிக்க வேண்டிய தலைவர்கள், இதைத் தட்டிக் கேட்காமல் மௌனமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்தத் தலைமையைக் கொண்டாடி, புதிய மாற்றத்தை நோக்கிப் பயணிப்பதாக நம்பிய பொதுமக்கள், இப்போது இந்த அசிங்கமான செயல்களுக்கு எப்படி நியாயம் சொல்வது என்று யோசிக்க வேண்டிய சங்கட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சுட்டிக்காட்டி விமர்சித்தபிறகு இப்போது பலகையை எடுத்துவிட்டாலும் இது எப்படி நடந்தது? காவல் நிலையமே கட்சியின் விளம்பரப்பலகை ஆவதா? இதைச் செய்யத்துணிந்தவர்களுக்கும் உடந்தையாய் இருந்தவர்களுக்கும் பின்விளைவு எதுவும் இல்லை என்றால், இதைச் செய்ய லைசன்ஸ் உண்டு என்கிற புரிதல் ஏற்படாதா? காவல் நிலையமா, கட்சி அலுவலகமா, ரசிகர் மன்றமா என்றே தெரியாத நிலை வந்துவிடுமா?
என்னவொரு அவலம்!
இதற்கெல்லாம் உடன்படாத எத்தனையோ பொதுமக்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். அவர்களை மதித்து ஆட்சி நடத்துங்கள். அவர்களின் குரலாய் உங்கள் கட்சித் தொண்டர்களுக்குக் கண்டிப்பான வழிகாட்டுங்கள்.
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
இன்றைய முக்கிய செய்திகள் :
விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து மின்சாரத்தை வயர்லெஸ் முறையில் பூமிக்கு கடத்தும் திட்டத்தின் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது சீனா
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காலை மதியம் மாலை என மூன்று வேளையிலும் அரசு பள்ளிகளில் காயத்ரி மந்திரம் பாட வேண்டும் என உத்தரவு
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் பவானியில் வீட்டில் தனியாக வசித்து வந்த 74 வயது மூதாட்டியை தாக்கி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 2 போதை இளைஞர்கள்
"சமூகச் சுதந்திரத்தை நீங்கள் அடையும் வரை, சட்டத்தின் மூலம் வழங்கப்படும் எத்தகைய விடுதலையும் உங்களுக்குப் பயன் இல்லாததே." — டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்
#பயணிதரன்#அறிவுக்கருவிகள்#வாழ்வெனும்பயணம்
ஒரு பேமிலிக்கு சிலிண்டர் 30-45 நாட்களுக்கு தான் வரும். இப்ப 45 நாள் கழிச்சுதான் அடுத்த சிலிண்டர் புக் பண்ண முடியும் என்றால், புக் ஆகி டெலிவரி ஆகறதுக்கும் 15-20 நாள் ஆகுது.
இடைப்பட்ட நாளில் எப்படி சமைப்பாங்க?
இதுல கேஸ் தட்டுப்பாட்டை எளிதா சமாளிச்சிட்டாங்களாம் இந்த பாஜக ஆட்சி
It is time to construct a high-level bridge across the River Cauver at Mukkombu in Trichy!
✅Improve regional connectivity between Coimbatore, Karur, Namakkal, Salem, and Trichy
✅To support economic and logistics movement
@duraivaikooffl@ArunNehru_DMK
Fatty Liver-ங்கிறது வெறும் லிவர் பிரச்சனை மட்டும் இல்ல மக்களே! இது ஒரு 'Spillover' அலர்ட்! 😱🚨
நம்மில் பலரும் 'ஃபேட்டி லிவர்' (Fatty Liver) வந்தா, "அது என்ன... கொஞ்சம் கொழுப்பு ஏறியிருக்கு, டயட் இருந்தா சரியாயிடும்"னு ரொம்ப சாதாரணமா நெனைக்கிறோம். ஆனா உண்மை என்ன தெரியுமா?
நம்ம உடம்புல கொழுப்பு சேமிக்க வைக்கிற இடம் (தோலுக்கு அடியில இருக்கிற Subcutaneous fat) ஃபுல்லானதுக்கு அப்புறம், அந்த எக்ஸ்ட்ரா கொழுப்பு மத்த உறுப்புகளுக்கு "ஸ்பில் ஓவர்" (Spillover) ஆக ஆரம்பிக்கும். இதைத்தான் மருத்துவத்துல Ectopic Fat Deposition-ன்னு சொல்றாங்க.
லிவர்ல கொழுப்பு இருந்தா வேற எங்கெல்லாம் பதுங்கியிருக்கும்? இதோ லிஸ்ட்:
⚠️ வயிற்றுப் பகுதி (Visceral Fat): இதுதான் எல்லாத்துக்கும் ஆரம்பம்! நம்ம வயித்துக்குள்ள இருக்கிற குடல் மற்றும் முக்கிய உறுப்புகளைச் சுத்தி இந்த நச்சுக்கொழுப்பு (Visceral Fat) சேரும். இதுதான் மெட்டபாலிக் பிரச்சனைகளுக்கு மெயின் காரணம்.
❤️ இதயம் (Heart): இதயத்தைச் சுத்தியும் (Epicardial fat), இதயத் தசைகளுக்குள்ளயும் கொழுப்பு சேரும். இது ஹார்ட் அட்டாக் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்புக்கு (Arrhythmia) வழிவகுக்கும்.
🍩 கணையம் (Pancreas): லிவர்ல கொழுப்பு இருந்தா கண்டிப்பா கணையத்துலயும் கொழுப்பு சேர வாய்ப்பு அதிகம் (Fatty Pancreas). இது இன்சுலின் சுரப்பைப் பாதிச்சு 'டைப் 2 நீரிழிவு' வர முக்கிய காரணமா இருக்கு.
🛡️ சிறுநீரகம் (Kidney): கிட்னியோட 'சைனஸ்' (Renal Sinus) பகுதியில கொழுப்பு படியும்போது, அது ரத்த அழுத்தத்தை (BP) ஏத்தி, நாளடைவில் கிட்னி பாதிப்புக்கும் வழிவகுக்கும்.
😴 நாக்கு மற்றும் கழுத்து (Tongue & Neck): இது ரொம்ப முக்கியம்! நாக்குல அதிகப்படியான கொழுப்பு சேரும்போது, தூங்கும்போது மூச்சுப்பாதையை அடைக்கும். இதனாலதான் 'தூக்கத்தில் மூச்சுத்திணறல்' (Sleep Apnea) மற்றும் குறட்டைப் பிரச்சனை வருது. கழுத்தைச் சுத்தி கொழுப்பு சேர்றதும் இதே ஆபத்துதான்.
💪 தசைகள் (Muscles): நம்ம தசை செல்கள்ல கொழுப்பு படியும்போது (Intramyocellular lipids), உடம்பு இன்சுலினைச் சரியா பயன்படுத்த முடியாமப் போகும். இதனாலதான் சீக்கிரம் சோர்வு வருது.
🧠 மூளை (Brain): ஃபேட்டி லிவர் இருக்கிறவங்களுக்கு பக்கவாதம் (Stroke) வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்னு ஆய்வுகள் சொல்லுது.
நல்ல விஷயம் என்னன்னா:
ஃபேட்டி லிவர் என்பது ஒரு "Early Warning Signal". இதையெல்லாம் நாம ஆரம்பத்திலேயே கவனிச்சு, சரியான உணவு முறை (குறைவான கார்போஹைட்ரேட்), முறையான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமா தாராளமா குணப்படுத்த முடியும்!
Dr. V. Hariharan, MD, (PhD), Diet Consultant.
உங்க லிவர் ஆரோக்கியமா இருந்தா, உங்க மொத்த உடம்பும் ஆரோக்கியமா இருக்கும். அலட்சியமா இருக்காதீங்க!
விழிப்புணர்வு பதிவு
CPR செய்வது எப்படி? (சுருக்கமாக)
1. *சுயநினைவு சரிபார்க்கவும்*: தட்டி, “நலமா?” எனக் கேட்கவும்.
2. *உதவிக்கு அழைக்கவும்*: 108-க்கு ஃபோன் செய்யவும்.
3. *சுவாசம் சரிபார்க்கவும்*: இல்லை என்றால் CPR தொடங்கவும்.
7 ஆண்டாகக் கிடப்பில் முசிறி - சென்னை புதிய ரயில் வழித்தடம்: விரைந்து செயல்படுத்தப்படுமா மக்களின் கனவுத் திட்டம்?
#முசிறி - #சென்னை இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டத்திற்கான முதற்கட்ட ஆய்வை ரயில்வே வாரியமே முன்வந்து நடத்தியும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் இன்றி இத்திட்டம் கடந்த 7 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தெற்கு மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்ல திருச்சி - #விழுப்புரம் (கார்டு லைன்) மற்றும் #தஞ்சை - #மயிலாடுதுறை (மெயின் லைன்) என இரண்டு பிரதான வழித்தடங்கள் மட்டுமே உள்ளன. பெருகி வரும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து காரணமாகக் கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைத் தவிர்க்க, 2018-ஆம் ஆண்டு ரயில்வே வாரியம் தாமாக முன்வந்து திருச்சி - முசிறி வழியாகச் சென்னைக்குப் புதிய வழித்தடத்தைத் திட்டமிட்டது.
Follow us 𝕏 | ⓕ @TNRailinfo
திட்டமிடப்பட்ட வழித்தடம்: இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், ரயில்கள் திருச்சியிலிருந்து முசிறி, #உப்பிலியபுரம், #தம்மம்பட்டி, #ஆத்தூர், #கள்ளக்குறிச்சி, #திருக்கோவிலூர், #திருவண்ணாமலை மற்றும் #காஞ்சீபுரம் வழியாகச் சென்னையைச் சென்றடையும். இது சென்னைக்கான 3-வது முழுமையான மாற்றுப் பாதையாக அமையும்.
ஏன் இந்தத் திட்டம் முக்கியமானது?
பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சி: இதுவரை போதிய வளர்ச்சி பெறாத தமிழகத்தின் உள்மாவட்டங்களான பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகம், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக இது உந்துசக்தியாக இருக்கும்.
கூட்ட நெரிசல் குறைப்பு: பிரதான வழித்தடங்களில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு இது நிரந்தரத் தீர்வாக அமையும்.
எளிதான இணைப்பு: திருச்சியில் இருந்து கரூர் செல்லும் பாதையில் குளித்தலை - முசிறியை இணைப்பது மிகவும் எளிதானது என்பதால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் பெரிய சிக்கல்கள் இல்லை என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகநாத் கூறுகையில், வழக்கமாக மக்கள் கோரிக்கை விடுத்தே ரயில் திட்டங்கள் வரும், ஆனால் ரயில்வே வாரியமே முன்வந்து ஆய்வு செய்துவிட்டு தற்போது இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
எனவே, திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை வலியுறுத்தி இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
@TrichyTreasures@Tvmalaiupdates
கைகால் விளங்காமல் போனால் அவ்வளவு தானா? ஒண்ணுமே செய்ய முடியாதா? 🤔
ஸ்ட்ரோக் (Stroke) என்பது, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் டக்கென அடைத்துக் கொள்வது. எந்த மூளைப்பகுதி பாதித்திருக்கிறதோ, அதற்குண்டான உடல் பாதிப்பு இருக்கும். சிலருக்கு ஒரு கால் மட்டும் செயல்படாது, சிலருக்கு இடது பக்க உடம்பே செயல்படாது. சிலருக்குப் பேச்சு மட்டும் போகும்.
பிரஷர் இருப்பவர்கள் அதைக் கட்டுக்குள் வைக்கத் தவறுவதுதான் 75% ஸ்ட்ரோக்குகளுக்குக் காரணம். 🩸 மேலும் கிராமப்பகுதிகளில் தான் இது அதிகம். பிரஷர் இருப்பதே தெரியாமல் இருப்பது, அதைப்பற்றிய புரிதல் இல்லாமை, சரியாக மருந்து எடுக்காமை ஆகியவற்றால் இது நேர்கிறது.
படுபயங்கர தலைவலி அல்லது கைகால் வலுவிழந்து போகுதல் போன்ற அறிகுறிகள் வந்த நாலரை மணி நேரத்தில் (Golden Hour) மருத்துவமனை வந்து விட்டால், உடலில் எந்தச் செயல் குறைபாடும் இல்லாமல் தப்பித்து விடலாம். ✨
ஆனால் 40% நபர்கள், லேட்டாக மருத்துவமனைக்கு வந்ததால் ஊனமுறுகிறார்கள். ஸ்ட்ரோக் வந்த 24-48 மணி நேரத்திற்குள் செயல்படாத உடல் பாகங்களுக்குப் பயிற்சிகள் ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் பக்கவாதம் சரியாகி விடும். இன்றும் கூட சாலையில் கையைத் தாங்கிக் கொண்டு இருப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இவர்கள் எல்லாரும் கைகால்கள் மறுபடி செயல்படச் சரியான பயிற்சி எடுக்காதவர்களே.
மூளைக்கு Neuro Plasticity என்ற விஷயம் உள்ளது. 🧠 அதாவது ஒயரிங் பாதிக்கப்பட்டதால் தானே பக்கவாதம் வந்தது? பயிற்சி செய்தால் புது வயரிங் ஏற்பட்டு, பழைய மாதிரி நார்மலாகி விடலாம்.
என் கிளினிக்கிற்கு வந்த சிலரிடம் பேசும்போது ஆச்சரியமாக இருக்கும். 2-3 வருடங்களுக்கு முன் ஸ்ட்ரோக் வந்தது, இன்னும் சரியாகவில்லை என்பார்கள். ஒழுங்காகப் பயிற்சிகள் செய்திருந்தால் ஆறு மாதத்திலேயே நார்மலாகி இருக்க முடியும். அதை விட்டு விட்டு 2-3 வருடம் ஒன்றுமே செய்யாமல் இருந்தால், எப்படி சரியாகும்?
"பிசியோதெரபி செய்தீர்களா?"
"ஆமா சார். ஒரு மாசம் வீட்டுக்கு வந்தாரு, மசாஜ் எல்லாம் தந்தாரு, சரியாகலன்னு நிறுத்திட்டோம்."
"நிறுத்தி?"
"நிறுத்திட்டோம்."
"இப்பவும் அப்படியே கைகால் விளங்காம இருக்கீங்க." 😔
பிசியோதெரபி என்றால் மசாஜ் செய்வார்கள் என்றுதான் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. பிசியோதெரபி என்றால் உங்களை வேலை செய்ய வைப்பது. விளங்காத காலை வைத்து நடக்கப் பழகுவது, செயலற்ற கைகளை நீங்களே மடக்க முயற்சிப்பது, அவ்வளவே. அவர் சொல்லிக் கொடுக்கும் ஒரு 'Coach' மட்டுமே. மாதக்கணக்கில் நீங்கள்தான் பயிற்சி செய்ய வேண்டும். 💪
'Basic Instinct' படத்தில் நடித்த ஷரோன் ஸ்டோன் (Sharon Stone), அவரது 42-வது வயதில் ஸ்ட்ரோக் வந்து, 1% தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் இருந்தவர். அதிலிருந்து மீண்டு, ஒரு கை, ஒரு கால் விளங்காமல் போனாலும் கடினப் பயிற்சி செய்து, முற்றிலும் குணமடைந்து, அடுத்த சில வருடங்களில் மீண்டும் சினிமாவில் சாதித்தார். 🎬
வெறும் 1% வாய்ப்புள்ள நபர் மீண்டு வர முடிகிறது என்றால் நம்மாலும் முடியும். ஸ்ட்ரோக் வந்து பல வருடங்கள் ஆனாலும் சரி, இப்போது நினைத்தாலும் பயிற்சி செய்து பழைய மாதிரி நடக்க முடியும்.
முடியாது என்று நினைத்தால், முடியாது தான். ✅
சாலையில் யாராவது இப்படி கஷ்டப்படுவதைப் பார்த்தால், அவர்களுக்குச் சரியான பிசியோதெரபி பற்றி எடுத்துச் சொல்லுங்கள். 'இனிமேல் சரியாகாது' என்ற எண்ணத்தை மாற்ற உதவுங்கள்.
நம்பிக்கை பாதி மருந்து, பயிற்சி மீதி மருந்து! 🔥
Dr. V. Hariharan, MD, (PhD) 👨⚕️
Diet Consultant & Metabolic Scientist
🤔 "பணம் வாழ்க்கையில் ஒரு பொருட்டே இல்லைன்னு ரஜினி, அனிருத் மாதிரி ஆட்கள்லாம் சொல்றாங்களே சார்?" என்று இளம் நண்பர் ஒருவர் என் கருத்தைக் கேட்டார்.
நான் சொன்னேன்: "ஆமாம், சூப்பர் ஸ்டார்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் இதைச் சொல்லி வருகிறார்கள். ஆனால், அந்தத் தத்துவத்தை நம்மிடம் பணம் 'வாங்குபவர்கள்' சொல்ல வேண்டும்.
💰 பள்ளிக்கூடம், பெட்ரோல் பங்க், வீட்டு உரிமையாளர், மருத்துவர் என எல்லோரும் "பணம் ஒரு பொருட்டே இல்லை, சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்ல வேண்டும். கடைக்காரர்கள், “பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும், உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள்,” என்று சொல்லவேண்டும்.
அல்லது அந்தப் பெரும் நட்சத்திரங்கள், தங்களுக்குப் பணம் 'தரும்' தயாரிப்பாளர்களிடமோ, ரசிகர்களிடமோ "பணம் எதற்கு? நான் இலவசமாக நடிக்கிறேன், ரசிகர்கள் டிக்கட் வாங்காமல் இலவசமாகப் படம் பார்க்கட்டும்," என்று சொல்ல வேண்டும்.
அப்படி நடக்கிறதா? இல்லையே?
📈 ஆகவே, முதலில் நன்றாகச் சம்பாதியுங்கள், சேமியுங்கள், முதலீடு செய்யுங்கள். பணத்தின் பயனற்ற தன்மையைப் பற்றிப் புலம்பும் அளவுக்குப் பணக்காரர் ஆன பிறகு, நீங்களும் அதைப் பற்றிப் பேசலாம். முதலில் செல்வம் வளர்ப்பது முக்கியம்,” என்றேன்.
#PersonalFinance #MoneyTalks #FinancialWisdom #RealityCheck
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்