புதுச்சேரி மாநில முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி ஐந்தாம் முறையாக இன்று பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடன் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவது உள்பட உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. மாநில முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனுக்கான அந்த முயற்சிகளில் புதுவை அரசு வெற்றி பெறுவதற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
@CM_NRangaswamy
தமிழக மக்களின் நலன் - உரிமைகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கும் அவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளாக மிக மோசமான ஆட்சியை நடத்தி வந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தது. திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு மகத்தானது. திமுகவுக்கு எதிரான அலையை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அறுவடை செய்யும்; அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால், தமிழக மக்களின் விருப்பமும், தீர்ப்பும் வேறாக அமைந்திருக்கிறது. மக்களின் இந்த முடிவை பா.ம.க. ஏற்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே மக்களின் நலன்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதியாக போராடி வருகிறது. இனி வரும் காலங்களிலும் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களத்தில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பா.ம.க - கூட்டணி கட்சிகளுக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@EPSTamilNadu@NainarBJP@TTVDhinakaran@GK__Vasan@jaganmoorthy_m
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.வின் தலைவர் விஜய் அவர்களுக்கு
வாழ்த்து!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதற்காக தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ
‘கரகம் ஏந்தி வரோம்
பரம்பரை வாழணுமே
நெருப்பில் ஆடி வரோம்
தீமை பொசுங்கணுமே
வரங்கள் தா தேவி பாஞ்சாலி!’
சித்திரை முழுநிலவு மாநாட்டை சிறப்பிக்க நம் குலம் காக்கும் ‘திரௌபதி அம்மன் ‘பாடல் நாளை (வெள்ளி) 10.00 மணிக்கு வெளியீடு !
#இனமேஎழுஉரிமைபெறு#சித்திரைமுழுநிலவுமாநாடு
#திரௌபதிஅம்மன்பாடல்
முனைவர் சௌமியா அன்புமணி கைது!
பாலியல் குற்றவாளி திமுகவை சேர்ந்தவர் என்பதால் - அமைதியாக போராட அனுமதி மறுப்பா?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராட்டம் நடந்த வருகை தந்த, பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களை திமுக அரசின் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
#PMK #SowmiyaAnbumani #AmINext
திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் மாநில மாநாட்டில், மருத்துவர் அய்யா மற்றும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருடன் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.! @drramadoss | @draramadoss
திருவண்ணாமலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், ஒட்டுமொத்த உலகிற்கும் உணவு படைக்கும் கடவுளர்களான உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற மாபெரும் மாநில மாநாட்டில், மருத்துவர் அய்யா மற்றும் பசுமைத் தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி ஆகியோருடன் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.! @drramadoss | @Sowmiyanbumani
அதானி ஊழல் : தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அதானி சந்திப்பு பற்றி முதல்வர் விளக்க வேண்டும்!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணத்தில், அதானி குழுமம் அமெரிக்காவில் 300 கோடி அமெரிக்க டாலர், அதாவது 25,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைத் திரட்டியதாகவும், இந்த முதலீடுகளை திரட்டுவதற்கு அடிப்படையாக பல்வேறு மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைக் காட்டியதாகவும், அந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பல அமைப்புகளின் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து விட்டு அதை மறைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அந்த ஆவணத்தின் 20 மற்றும் 21-ஆம் பத்திகளில் தமிழ்நாடு மின்சார வாரியமும், அதன் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,’’ ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.
சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.8 லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்சார வாரியம் இலாபத்தில் இயங்கவில்லை என்பதை பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மின்சார வாரியத்திற்கு காரணம் அதானி குழுமம் போன்ற நிறுவனங்களிடமிருந்து கையூட்டு வாங்கிக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவது தான். ஆட்சியாளர்களின் லாபம் மற்றும் சுயநலத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளுவதையும், அப்பாவி மக்கள் மீது மின்கட்டண சுமையை சுமத்துவதையும் அனுமதிக்க முடியாது.
கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?
அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
@CMOTamilnadu
#Adani
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, எந்த தந்தையாவது மகன்களுக்கு போதைப் புகட்டுவரா? மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்!
தமிழ்நாட்டில் போதையை ஒழிக்க வேண்டும்; போதைப் பழக்கங்களில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு காணொலியில், ‘’தமிழ்நாட்டின் இளைஞர், மாணவர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஓர் உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது தான். ஆனால், அது முரண்பாடுகளின் மொத்த உருவம் ஆகும்.
ஒருபுறம் போதையின் பாதையில் யாரும் போகக்கூடாது என்கிறார்; ஆனால், செல்லும் பாதை நெடுகிலும் போதைப்பொருட்களின் விற்பனை தலைவிரித்தாடுகிறது; மாணவர்களைக் கூட மதுக்கடைகள் வா, வா என வரவேற்கின்றன. போதையை வெறுப்பவர்களைக் கூட போதைக்கு அடிமையாகும் அளவுக்கு திரும்பும் இடமெல்லாம் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை உறுதி செய்திருக்கும் தமிழக அரசு, போதையில் பாதையில் செல்லக்கூடாது என்று வேண்டுகோள் விடுப்பதை விட இரட்டை வேடம் இருக்க முடியாது.
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் குடும்பத்தில் ஒருவனாக, தந்தையாக வேண்டுகோள் விடுப்பதாக கூறியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அவருக்கு ஒரே ஒரு வினா, எந்த தந்தையாவது மகன்கள் குடிக்க மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பார்களா? ஆனால், நீங்கள் தமிழ்நாட்டில் 4774 மதுக்கடைகள், 1500 மனமகிழ் மன்றங்கள், 20 ஆயிரம் சந்துக் கடைகளை திறந்து வைத்திருக்கிறீர்களே? மகன்கள் செல்லும் பாதையில் முள்கள் கூட கிடக்கக் கூடாது என்பது தான் தந்தையர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், தமிழகத்தின் தந்தையாக திகழ வேண்டிய நீங்கள், எல்லா பாதைகளிலும் கஞ்சாவில் தொடங்கி எல்லா போதைப் பொருட்களும் விற்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கிறீர்களே? இது நியாயமா?
போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும் என்று கூறியிருக்கிறீர்கள். உங்களின் இந்த விருப்பமும், அக்கறையும் உண்மையென்றால் உடனடியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள், போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள். இல்லாவிட்டால் தமிழ்நாட்டு இளைஞர்கள் செல்லும் பாதை இருட்டாகத் தான் இருக்கும்; அதைத் தவிர்க்க முடியாது.
@mkstalin@CMOTamilnadu
தமிழ்நாட்டில், 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு பேராபத்து வருவதை தடுக்கவும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தியும், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற நீதியரசர் வீ.பாரதிதாசன் அவர்களை சந்தித்த போது.!