அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு தமிழக முழுவதும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் 🔥
அண்ணன் அண்ணாமலை அவர்கள் கட்சி கட்சி கொடி அறிவிக்கட்டும் அப்பறம் பாருங்க தமிழ்நாடு குள்ள சந்து பொந்துக்குள் எல்லாம் பறக்கும் நம்ம கொடி.💥💯
@annamalai_k#WeTheLeaders 🔥
அண்ணாமலை ஜி ஒரு கருத்தை கூறுகிறார் அதை மோடி ஜி ஏற்றுக் கொள்கிறார் இது பண்பு
அண்ணாமலை ஜி மாநிலத்தில் சில கருத்தை கூறுகிறார் அதை ஜோசப் விஜய் ஏற்றுக் கொள்கிறார் இதுவும் நல்ல பண்பாடு
இனி வரிசையாக வாருங்கள் அண்ணாமலை ஜி அவர்களை குறை கூறுபவர்கள்
தம்முடைய சிஷ்யன் அண்ணாமலையின் ஆக்க பூர்வமான நேர்மறையான யோசனையை ஏற்றுக் கொண்டார் மோடி.
"Gen Z தலைமுறையிடம் பேசுங்கள்,அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் " என்று மத்திய பாஜக அரசுக்கு இன்டியா டுடே வட்ட மேஜை மாநாட்டில் அண்ணாமலை யோசனை சொன்னார்.
"2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலின் போது இந்தியாவின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் "Gen Z" (முதல்முறை வாக்காளர்கள்) தலைமுறையினரே மிக முக்கியமான தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள்" என்றார் அண்ணாமலை.
அண்ணாமலையின் அந்த யோசனையில் இருந்த உண்மையை உணர்ந்த மோடி நேற்று அதைச் செயல் வடிவத்தில் தந்து விட்டார்.
தமது மத்திய அமைச்சர்களுக்கும் அரசுச் செயலாளர்களுக்கும் "Gen Z தலைமுறையினரை நேரடியாகச் சந்தித்துப் பேசி அவர்களுடைய கருத்துக்களையும் கோரிக்கைகளையும்
புரிந்து கொள்ள வேண்டும்..அவர்களுடைய தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்."
என்று மிகத் தீவிரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் மோடி.
இதன் படி "தினம் ஒரு அமைச்சர்,தினம் ஒரு பல்லைக்கழகம்" என்ற திட்டம் தீட்டப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.
சுருக்கமாகக் கூறினால், தமிழ்நாட்டில் அண்ணாமலை "We the leaders " என்ற பெயரில் எந்த 'இளைஞர் மையப்படுத்தப்பட்ட" அரசியலைச் செய்ய நினைக்கிறாரோ, அதே உத்தியைத்தான் இப்போது அகில இந்திய அளவில் பிரதமர் நரேந்திர மோடியும் கையில் எடுத்துள்ளார்.
அண்ணாமலையின் கணிப்பு எவ்வளவு துல்லியமானது என்பதற்கு மோடியின் தற்போதைய நடவடிக்கையே எடுத்துக்காட்டு.
மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து ஏன் தனித்து நிற்கிறார் மோடி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
அதே சமயம் அண்ணாமலையை ஏன் மிக உயரத்தில் வைத்துப் பார்க்கிறார் மோடி என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.." என்ற வரியில் இருக்கும் உண்மைக்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
மத்திய பாஜக அரசின் குறைகளைச் சொல்லி அவற்றைச் சரிப்படுத்தத் தேவையான யோசனைகளையும் சொன்ன அண்ணாமலையைக் கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்த தமிழக பாஜக வினரின் தற்போதைய நிலைமையைச் சற்றே நினைத்துப் பாருங்கள்.
இந்தத் தமிழக பாஜக வினர் எந்த மட்டத்தில் இருக்கிறார்கள், அண்ணாமலையும் மோடியும் எந்த மட்டத்தில் இருக்கிறார்கள்?
தமிழக பாஜக வினர் நேர்மறையான அரசியலைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். அதில் உயர்வுநவிற்சி என்பது ஒரு துளி அளவும் இல்லை. உண்மையை மட்டுமே வைத்துச் சொல்கிறேன்.
அண்ணாமலையிடம் இருக்கும் நேர்மையையும் அறிவாற்றலையும் திறமையையும் தொலை நோக்குப் பார்வையையும் எவராலும் மறுக்க முடியாது.அவர் உயர உயரப் போவதை எவராலும் தடுக்கவும் முடியாது.
**
இதுதான் தலைமைத்துவம் 🔥
நான் இலவச மின்சாரம் தருவதாக வாக்குறுதி கொடுத்து இருந்தால் தலைப்பு செய்தியில் வந்துருப்பேன்., ஆனால் நான் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச சூரிய ஆற்றலை வழங்க முடிவு செய்தேன்.
சூரிய மின்சக்தி திட்டம் தற்போது 50 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. இது பல குடும்பங்களின் மின்சாரக் கட்டணத்தை பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளதோடு, உபரி மின்சாரத்தை விற்பனை செய்து அவர்கள் வருமானம் ஈட்டவும் வழிவகுத்துள்ளது.
-பிரதமர் நரேந்திர மோடி ஜி
அபிஜித் தீப்கே இனிமேல் இவருடன் இன்டர்வியூவுக்கே வரமாட்டார் 🚨😂
ரிப்போர்டர்:
அபிஜித் சார், இந்தியாவுக்கு இளம் பிரதமர் வேண்டும் என்றும், நரேந்திர மோடி அதற்குத் தகுதியானவர் இல்லை என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?
அபிஜித் தீப்கே:
பாருங்க... இந்தியா ஒரு இளம் நாடு. நம்முடைய சராசரி வயது 28–29. ஆனால் மோடிக்கு 75 வயது. இளைஞர்களின் பிரச்சினைகளை வயதான தலைவர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? நமக்கு இளமைத் துடிப்பு வேண்டும்.
ரிப்போர்டர்:
சரி. அப்படியானால் ஒரு விஷயம் சொல்லுங்கள் — அவரைத் தேர்ந்தெடுத்தது யார்? நீங்கள் பேசும் அதே இளம் வாக்காளர்கள்தானே! 2014, 2019, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இந்திய மக்கள் அவருக்கு தெளிவான பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள்.
அபிஜித் தீப்கே:
நான் தேர்தலைப் பற்றி பேசவில்லை. அவருடைய தகுதியைப் பற்றிப் பேசுகிறேன். அவர் ரீல்ஸ் போடுகிறார்... இன்ஃப்ளூயன்சர் மாதிரி நடந்து கொள்கிறார்...
ரிப்போர்டர்:
அப்படியா? ஒரு தலைவர் சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களுடன் தொடர்பு கொண்டால் அவர் தகுதியற்றவராகிவிடுகிறாரா? அப்படியானால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொரு இளம் தலைவரும் அரசியலை விட்டு வெளியேற வேண்டுமா?
மேலும், நீங்களே சமூக ஊடகங்களால்தானே பிரபலமானீர்கள்? அதுவும் தவறா?
அபிஜித் தீப்கே:
இல்லை... இல்லை... நான் சொல்வது என்னவென்றால், அவர் பதவியை விட்டுவிட்டு முழுநேர இன்ஃப்ளூயன்சராக இருக்கலாம்.
ரிப்போர்டர்:
சுவாரஸ்யம்!
நீங்கள் பல ஆண்டுகள் ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றியிருக்கிறீர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் வயதாகிக் கொண்டிருந்தபோது இதே கருத்தை அவரைப் பற்றியும் சொன்னீர்களா?
அல்லது பாஜக தலைவராக இருந்தால் மட்டும் இந்த விதி பொருந்துமா?
ஏன் இந்தத் தேர்ந்தெடுத்த விமர்சனம்?
அபிஜித் தீப்கே:
நான் அமைப்பைப் பற்றிப் பேசுகிறேன். பேப்பர் லீக் நடந்திருக்கிறது... வேலையின்மை இருக்கிறது...
ரிப்போர்டர்:
பேப்பர் லீக் என்பது நிச்சயமாக தீவிரமான பிரச்சினை. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் போராட்டங்களுக்குப் பிறகு கல்வி அமைச்சர் பதவி விலகினார். அதுதானே பொறுப்பேற்பு?
இப்போது சொல்லுங்கள்...
இந்த அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை இலவச வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு இணைப்புகள், வங்கிக் கணக்குகள் மற்றும் தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன?
இந்த எண்ணிக்கைகளை மறுக்க முடியுமா?
அல்லது பிரச்சினைகளை மட்டும் பேசிவிட்டு, நடந்த வேலைகளைப் பற்றி பேசாமல் இருப்பீர்களா?
அபிஜித் தீப்கே:
வேலைகள் நடந்திருக்கின்றன... ஆனால் இளைஞர்கள் விரக்தியில் இருக்கிறார்கள்...
ரிப்போர்டர்:
இளைஞர்களின் விரக்தி உண்மையான பிரச்சினைதான்.
ஆனால் விரக்தியில் இருப்பது மட்டும் ஒருவரை அடுத்த பிரதமராக்கிவிடாது.
நீங்கள் இளம் தலைமை வேண்டும் என்கிறீர்கள். சரி.
அப்படியானால் உங்கள் தரப்பிலிருந்து மூன்று இளம் தலைவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்.
ஒரு மாநிலத்தை நிர்வகித்திருக்க வேண்டும்.
லட்சக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட்டை கையாண்டிருக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களை கையாண்ட அனுபவம் இருக்க வேண்டும்.
பல தேர்தல்களில் வென்று மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு இளம் தலைவரின் பெயரையாவது சொல்ல முடியுமா?
அபிஜித் தீப்கே:
அதற்கான இடத்தை நாங்கள் உருவாக்க வேண்டும்...
ரிப்போர்டர்:
அதைத்தான் நானும் சொல்கிறேன்!
முதலில் கடினமாக உழைத்து அந்த இடத்தை உருவாக்குங்கள். தேர்தலில் வென்று மக்களின் நம்பிக்கையைப் பெறுங்கள்.
சமூக ஊடகத்தில் உட்கார்ந்து கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் தகுதியற்றவர் என்று அறிவித்துவிடாதீர்கள்.
ஜனநாயகம் என்பது யார் அதிக சத்தமாகப் பேசுகிறார்கள் என்பதால் முடிவு செய்யப்படுவதில்லை.
யாருக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதால்தான் முடிவு செய்யப்படுகிறது.
இப்போதைக்கு இந்திய மக்கள் தங்களுடைய பதிலை மூன்று முறை சொல்லிவிட்டார்கள்.
உங்கள் கருத்து உங்களுக்கு இருக்கலாம்.
ஆனால் அது இன்னமும் ஒரு கருத்து மட்டுமே!
அபிஜித் தீப்கே:
😶😶😶
ரிப்போர்டர்:
அவ்வளவுதான் சார்... அடுத்த கேள்விக்கு போகலாமா?
அபிஜித் தீப்கே:
முழுமையான அமைதி... 😶😂
😜😜😜😜😜
Prakash Ramasamy பதிந்திருந்த ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு கமெண்ட்டில்!
ரிபப்ளிக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ரீதர் வேம்பு பற்றி பேசிய மோடி :-
"ஸ்ரீதர் வேம்பு அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார். நமது தொழில்முனைவோர் 'தேசம் முதலில்' என்ற சிந்தனையோடு செயல்பட்டு, நாட்டின் தேவைகளைப் புரிந்து தங்களின் இலக்குகளை நிர்ணயிக்கும் போது, நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன, நாடும் வளம் பெறுகிறது. ஸ்ரீதர் வேம்பு என்ன சாதித்திருக்கிறார்?
நான் சமீபத்தில் பிரான்சில் உள்ள 'விவாடெக்' மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு சுமார் 1.5 முதல் 2 லட்சம் இளைஞர்கள் கூடியிருந்திருப்பார்கள். பிரெஞ்சு அதிபரும் நானும், இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகளைப் பார்ப்பதற்காகப் பல்வேறு அரங்குகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் 'ஜோஹோ' அரங்கிற்குச் சென்றோம்.
அங்கு கூடியிருந்த ஐரோப்பிய இளைஞர்களின் கூட்டத்தைப் பார்த்து நான் வியப்படைந்தேன், பெருமிதமும் கொண்டேன். இந்த புதிய உலகளாவிய அதிசயத்தைப் புரிந்துகொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். ஒருவேளை, பிரான்சில் நான் நேரில் கண்ட அளவிற்கு, இந்தியாவில் இதைப்பற்றி அந்தளவுக்கு விவாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்..."
@svembu தமிழகத்தில் பிறந்தது தான் அவருக்கு பின்னடைவு.. 🙏
அமித்ஷா ஜி இன்று இளைஞர்களுக்கு சொன்னது!👇
எனக்கு முன்பு சர்க்கரை நோய் இருந்தது!
மே 2020 முதல் இன்று வரை என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளேன்.
என் தூக்கத்தை முறைப்படுத்தினேன், குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்தினேன், முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை செய்தேன்!
இது எல்லாம் எனக்கு மிகப்பெரிய நன்மையைத் தந்துள்ளது.
இன்று, நான் எந்தவிதமான ஆங்கில மருந்துகள் மற்றும் இன்சுலின் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
இளைஞர்கள் அனைவரும் தங்களது உடலுக்காக இரண்டு மணி நேரம் உடற்பயிற்சிக்கும், மூளையின் ஓய்விற்காக ஆறு மணி நேரம் தூக்கத்திற்கும் ஒதுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.