🟡 TATA vs Maruti எந்த காரில் safety அதிகம்?
🟡 8 மாணவர்கள் விபத்திற்கு பின் பலரும் KIA மாருதி கார்கள் பாதுகாப்பற்றது எனவும் TATA கார்கள் பாதுகாப்பானவை எனவும் பேசுவதால் இந்த விழிப்புணர்வு பதிவு 📌
காரில் விபத்து ஏற்படுவது எப்படி?
🥁 கார்கள் மரத்திலோ வேறு வாகனத்திலோ மோதும் போது வெளிப்புற பொருட்களால் பெரும்பாலும் காருக்குள் இருப்பவர்களுக்கு மரணம் சம்பவிப்பது இல்லை
மோதிய வேகத்தில் திடீரென கார் நிற்பதால் காருக்குள்ளேயே உடல் அடிபடுவதால் தான் மரணம் அடைகிறார்கள்
📌 "Not by external impact but by internal impact"
🟡 இதனால் அம்பாசிடர் கார்களில் 60km வேகத்தில் சென்று புளிய மரத்தில் மோதினாலே சாவு நிச்சயம்
இதை தடுக்க மூன்று விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது
1. சீட் பெல்ட் - அடிபடாமல் இருக்க நம் உடல் நகர்வை கட்டுப்படுத்தும்
2. Air Bag - 90% தலையில் அடிபட்டு மரணிப்பது தான் காரணம் என்பதால் தலையை காக்க Air Bag
3. இது தான் மிக முக்கிய அம்சம்
காரில் BIW எனப்படும் வெளிப்புற பாகங்களை BH steel எனப்படும் நொறுங்கும் தன்மை கொண்ட இரும்பு எஃக்கின் மூலம் வடிவமைத்தல்
அதாவது காரின் வெளிப்புற steel விபத்தின் போது impact energy ஐ உட்கிரகித்து நொறுங்கி விடும். உள்ளே இருக்கும் நபர்களுக்கு அந்த impact energy யால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் 💥
அம்பாசிடர் கார்கள் மரத்தில் மோதினால் காரின் வெளிப்புற steel எதுவும் ஆகாவிட்டாலும் உள்ளே இருக்கும் ஆள் காலி. ஆனால் மாருதியில் steel நொறுங்கி இருக்கும் உள்ளே இருக்கும் ஆள் லேசான காயத்துடன் தப்பிப்பார்
📌 நம்முடைய 2W bike helmet கூட இதே போல தான் செயல்படும். ஹெல்மட் உடைந்து energy ஐ கிரகித்து நம் தலையை காப்பாற்றும்
ஆனால் மாருதி கார்கள் எளிதாக நொறுங்குவதையும் டாடா கார்கள் நொறுங்காமல் இருப்பதையும் வைத்து பல வீடியோக்கள் பகிரப்பட்டு டாடா கார்கள் பாதுகாப்பானவை என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்
ஆனால் அது உண்மை இல்லை
எளிதில் நொறுங்கும் கார்கள் தான் பாதுகாப்பானவை
🟡 அடுத்ததாக Crash test எனப்படும் கார் சோதனை வேகம் வெறும் 64kmph வேகத்தில் மட்டுமே நடைபெறும்
அதாவது 64kmph வேகதை விட அதிகமாக சென்றால் எந்த வித உத்திரவாதமும் எந்த காரிலும் இல்லை. அது Land rover ஆக இருந்தாலும் சரி
🟡 இன்னொன்று, crash test கள் பெரும்பாலும் நிற்க வைக்கப்பட்டுள்ள ஒரு இரும்பின் மீது மோதி பரிசோதிக்கப்படும்
அதனால் காரின் chasis நேரிடையாக அதில் மோதி காரின் முன் பாகம் மட்டுமே crash test இல் உடையும்
🟡 ஆனால் நம் ரோடுகளில் ஏற்படும் விபத்தில் பேருந்தும் சரி லாரியும் சரி பின்புறம் காரை விட உயரமாக இருப்பதால் chasis ஐ தடுத்து நிறுத்த எந்த வழியும் இல்லாமல் ஒட்டு மொத்த காரும் நொறுங்கும்.
🥁 இதனால் BMW, Benz என்று எப்படிபட்ட காரில் 100km+ வேகத்தில் சென்று லாரிக்கு அடியில் மோதினால் மொத்த காரும் அப்பளமாக நொறுங்கி எல்லாருக்கும் சாவு நிச்சயம்
🟡 அடுத்து மிக முக்கியமாக நமது ஊரில் தயாரிக்கும் பெரும்பாலான பேருந்து & லாரிகளின் ground clearance மிக அதிகம், காரணம் மோசமான சாலைகள் + மழை காலத்தில் வெள்ள நீர் புகுந்துவிடும் என்பதால்.
(சென்னை கார்பரேஷன் பேருந்துகளின் tender இல் பேருந்தின் ground clearance அதிகமாக இருக்க வேண்டும் என்று தனியாக ஒரு criteria இருக்கும்)
இதனால் மற்ற நாடுகளை விட நம் ஊர் பேருந்தும் லாரியும் மிக மிக ஆபத்தானவை ☠️
விபத்துகளில் இருந்து தப்பிக் ஒரே வழி 64kmph வேகத்தை மட்டுமே target ஆக வைத்து ஓட்டுவது தான்
“அந்தப் பெண் சொல்கிறார், தான் காதலித்த பையனைப் பற்றி, “அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது” என்று. ஆனால், அப்பா அம்மா பார்க்கிற பெண்ணைக் கட்டாமல், இன்னொரு பெண் மீது ஆசை கொண்டு, அதைத் தீவிரக் காதலாகவும் வளர்ந்திருக்கிறான்? இந்தப் பொண்ணு பின்னாடி நாக்கைத் தொங்கப் +
எத்தனை வலிகள் வந்தாலும் ..
எத்தனை கண்ணீர் விழுந்தாலும் ..
உடைந்து போகும்
தருணங்களிலும்
உயிரோடு நின்றுகொண்டிருக்கிறேன் ..
காரணம் .. !
என் குழந்தைகள் .. ❤️