சன் நெட்வொர்க் குழுமத்தின் நகைச்சுவை தொலைக்காட்சி சேனலான ஆதித்யா சேனலில் விடுதலைப் போராட்ட வீரரும், சுதேசி தந்தையுமான செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அவமதிக்கும் வகையில் ஏளனமாக பேசிய இரண்டு பெண்களையும், அவர்களது அவதூறு பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவிக்காமல் அந்நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களையும், அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஆதித்யா சேனல் நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த மோசமான செயலுக்கு ஆதித்யா சேனல் நிர்வாகமும், சன் நெட்வொர்க் குழுமமும், நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும் விடுதலை போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அவமதிக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளரை ஆதித்யா சேனலில் இருந்து பணி நீக்கம் செய்யவேண்டும்.
மேலும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தியாகி திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை அவதூறாக பேசிய பெண்கள் இருவர் மீதும், அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஆதித்யா சேனல் நிர்வாகத்தின் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
Two weeks ago, I was at a Summit on Natural Farming in Coimbatore, which left a lasting impression on my mind. Expressed a few thoughts on it in this LinkedIn Post, with a clarion call to people across India to increase natural farming. Have a look.
https://t.co/6WnWCMERvm
@LinkedIn